7.11.13

Astrology: திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்



Astrology: திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்

Astrology: 22ஆம் எண் புதிருக்கான பதில்!

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான, முக்கியமான பதில்:

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இது!
Example horoscope for Denial of Marriage
ஜாதகிக்கு திருமணம் நடைபெறவே இல்லை.

ஏழில் சூரியனுடன், ராகு கூட்டாக உள்ளதாலும், அத்துடன் சுக்கிரன் நீசமாகி எட்டாம் வீட்டில் அமர்ந்ததாலும் ஜாதகி திருமணமே ஆகாதவர்
என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னவர் திருமதி ஜனனி முருகேசன். அவருக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள் (The native will be a unmarried as sun in 7th house in the combo of raghu which is very unfavorable position for marriage.Also the sukran is neecham in 8th house. என்று தனது பின்னூட்டத்தில் சொல்லி உள்ளார். அனைவரையும் அதைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்)

அதைப்போலவே திரு,ராமசாமி அவர்களும், திருமதி தனலெட்சுமி அவர்களும், திரு. kaven (கெளரி சங்கர்)அவர்களூம் ஜாதகிக்கு மண வாழ்க்கை கிடையாது என்பதை அடித்துச் சொல்லியுள்ளார்கள். அவர்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

இடைச் சேர்க்கை: காலை 12.15 மணிக்கு
திருமதி ராதா ஸ்ரீதர் அவர்களும்  சரியான பதிலை எழுதியுள்ளார். இதை அவர் சுட்டிக்காட்டியபோதுதான் என் கவனத்திற்கு வந்தது. Oversight mistake.  அவருக்கும் எனது பாராட்டுக்கள்
------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கணிசமான அளவு, தங்களுக்கு இன்னும் திருமணமாகாததைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதாக இருக்கும். “சார், எனக்கு எவ்வளவோ முயன்றும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணமாகும்?” என்று கேட்டிருப்பார்கள்.

முற்காலத்தில் - அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிற்குப் 18 வயதானால், பெற்றவர்கள் முட்டிமோதி அவளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார்கள். ஆண்களுக்கு 21 வயதானால் போதும் செய்து வைத்துவிடுவார்கள்

இன்றையப் படிப்பு, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால், பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் வயது தள்ளிக்கொண்டே போகிறது. 25 வயது வரை பெண்களும், 30 வயதுவரை ஆண்களும் திருமணமாகாதது குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லை.

32 வயதைத் தாண்டினால்தான் கவலைப்பட ஆரம்பிக்கின்றார்கள்.

சிலருக்கு 35 வயது தாண்டியும் திருமணமாகவில்லை என்றால், யோசிக்க வேண்டிய விஷயம். அது அபாய கட்டம். குறிப்பாகப் பெண்களுக்கு அது சிக்கலான கட்டம்.

சில பெண்கள் திருமணமாகாமலேயே - அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது உண்டு.

ஜாதகத்தைப் பாருங்கள்.


இது ஒரு பெண்ணின் ஜாதகம். அம்மணி நன்றாகப் படித்தவர். வாத்தியாராகப் பணி செய்தவர். அவருக்குத் திருமணமே கூடி வராமல் போய்விட்டது. கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஏழாம் வீட்டில் ராகு. ஏழாம் வீட்டுக்காரன் சூரியனும் அந்த வீட்டிலேயே உள்ளான. ராகுவுடன் சேர்ந்து அவனும் கெட்டுள்ளான். 10ல் இருக்கும் சனிஷ்வரன் 10ஆம் பார்வையாக ஏழாம் வீட்டைப் பார்க்கிறார். அவர் லக்கினாதிபதியாக இருந்தாலும், 7ல் விழுகும் அவரது பார்வை தீமையானதுதான். placement, association & aspect of 4 malefic (including ketu) planets, 7th house is totally afflicted. ஏழாம் வீடு முழுதாகக் கெட்டு விட்டது.

அத்துடன் பாக்கியத்தைத் தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் - அந்த வீட்டிற்கு - பாக்கியஸ்தானத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளார். அது அவருக்குத் தீய வீடு. அத்துடன் பாக்கியத்திற்கு 12ஆம் அதிபதி புதனும் அங்கேயே உள்ளார். அது சாதகமான அமைப்பு அல்ல!

ஆகவே ஜாதகப்படியே ஜாதகிக்குத் திருமணத் தடை உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு ஆறுதல், லக்கினாதிபதி சனி, 11ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து10ல் உள்ளார். ஆகவே

ஜீவனத்திற்குக் குறை ஏற்படவில்லை. ஜாதகி தன் காலிலேயே நின்று டீச்சர் வேலை செய்து வாழ்நாளைக் கெளரவமாக ஓட்டினார்

7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
---------------------------------------------------------------------------------------------------
பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இது போன்ற அலசல் பாடங்கள், கேள்விகளுடன் உள்ள புதிர்ப் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் எல்லாம் வகுப்பறையில் இனி வராது. Galaxy2007 வகுப்பில் மட்டுமே வரும். இதை உங்களின் மேலான தகவலுக்காகச் சொல்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. திருமணத் தடைக்கான மூன்று முக்கிய அம்சங்களை அழகாக எடுத்துக் கூறி மனதில் பதிய வைத்து விட்டீர்கள்.

    ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்வும் ஒரு கேலக்ஸி போன்றே பல நுட்பங்களை உடைத்தது. சோதிடத்தின் துணையுடன் இத்தகைய கேலக்ஸிகளை ஆராய தங்களின் கேலக்ஸி வகுப்பறை ஒரு உன்னதமான இடமாக இருக்கப் போகிறது.

    -நன்றி ஐயா.

    ReplyDelete
  2. கேலக்சியில் பதிவு செய்ய முயற்சித்தோம்
    சரிபார்ப்பு குறியீட்டு எண் கேட்கிறதே

    அதனை பெறுவது எப்படி?
    அதை தோழர்கள் சொன்னால்

    தகுதியும்
    அனுமதியும் கிடைக்குமானால்

    தொடர்கிறோம் புதிய கணக்கு
    தொடங்கியபடி..

    ReplyDelete
  3. மூன்று வர்ணத்தில் உள்ள
    மலரின் குறிப்பு தான் என்ன?

    சிகப்பு க்குரிய கிரகம் தெரியும்
    மஞ்சள் க்குரியவர் இப்போ அறிந்ததே
    நீலம் பற்றி சொல்ல வேணுமா

    மற்ற இருவரை காணவில்லையே
    மறைந்துள்ளதன் காரணம் என்ன?

    ReplyDelete
  4. ayya vanakam: Entha jathakathil guru,sani erandum
    simmathil erunthal en jahakam.ennaku thirumanam natanthathu viruppa thirumanam.anal,
    kulanthi ethuvarai ellai.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com