16.8.13

கும்மிப் பாடல்

 

கும்மிப் பாடல்

பக்தி மலர்

இராமயணத்தின் பட்டாபிஷேகப் பதிகத்தில் உள்ள எளிய கும்மிப் பாடல் ஒன்றை திருமதி விசாகா ஹரி அவர்கள் தன் இனியகுரலால் பாடும் நிகழ்வு இன்று நமது பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/HdXhhAN19lA
Our sincere thanks to the person who uploaded this song in the net



---------------------------------------------------------------------------------------
 பழைய திரைப்படமான சம்பூர்ண ராமாயணத்திலிருந்து ஒரு அருமையான பாடல் கீழே காணொளியாக உள்ளது. நமக்கு இதை அனுப்பியவர் வேப்பிலை சுவாமி. அனைவரும் கேட்டு மகிழுங்கள். பாடலைப் பாடியவர்.சிதம்பரம்
திரு.C.S.ஜெயராமன் அவர்கள்:


http://youtu.be/s9S_rgnGdTU
Our sincere thanks to person who uploaded this song in the net
-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. வருகை பதிவு
    வழக்கம் போல்

    ReplyDelete
  2. கும்மிப்பாடலையே ராகமாலிகையாகப் பாடியுள்ளார் திருமதி விசாகா ஹரி. அருமையான குரல். நல்ல மனோபாவம். உருக்கும் பாடல்.

    பாடலின் இறுதியில் பாடலை இயற்றியது 'அண்ணா'என்று குறிப்பிடுகிறார்.

    தமிழ்நாட்டில் அண்ணா என்றால் அறிஞர் அண்ணாதான்.எல்லோரும் அறிந்த அண்ணா.

    பலருக்கும் தெரியாத அண்ணாக்கள் உண்டு.

    மஹாத்மா காந்திஜியாலாயே 'அண்ணா' என்று அழைக்கப்பட்டவர் திருச்சியில்
    தக்ஷிணபாரத ஹிந்தி பிரசாரசபாவைத் துவக்கி வழி நடத்திய ஹரிஹரசர்மா ஒரு அண்ணா!

    சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளாக உபநிஷ‌தம், வேதமந்திரங்கள், பூஜாமந்திரங்கள், சந்தியாவந்தனம் ஆகிய பல நூல்களைத் தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளியிட்ட 'அண்ணா'சுப்ரமணிய ஐயர் ஒரு அண்ணா!
    திருச்சி வானொலி நிலையத்தில் குழந்தைகளுக்கு மணிமலர் நிகழ்ச்சிகள் நடத்திய ரேடியோ அண்ணா மற்றொரு அண்ணா!

    விசாகா ஹரி கூறும் அண்ணா பரனூர் மகான் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப் பிரேமி சுவாமிகள்.அண்ணா சுவாமிகளுக்கு இவ்வாண்டு சதாபிஷேகம். அதனை ஒட்டி சென்னை அயோத்தியா மண்டபத்தில் அவரது உபன்யாசம் நடந்து வருகிறது.
    மாலை 7முதல் 9 வரை அதனை அவரது வலைதளத்தில் 'லைவ்' ஆக
    26 ஆகஸ்டு 2013வரை கேட்க முடியும்.

    Link:

    http://srisrianna.com/live-webcast

    ReplyDelete
  3. சம்பூர்ண ராமாயணப்பாடல் மீண்டும் நினைவு படுத்திய வேப்பிலை சுவாமிகளுக்கு நன்றி!

    டீ.கே. பகவதி அவர்களின் சோகமயமான நடிப்பு பாடலை அவரே பாடுவதுபோல் ஒலிக்கிறது.

    எதிரி அயர்ந்து இருக்கும் நேரம் பார்த்து "போட்டுத் தள்ளும்' கலாச்சாரம் இன்று. அன்றோ வலிமை இழந்த எதிரியை 'இன்றுபோய் நாளை வா'என்று கூறும் பண்பாடு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com