5.7.13

வேலுண்டு வினையில்லை முருகா!

 

’முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்”

             - நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படைப் பாடல்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
வேலுண்டு வினையில்லை முருகா!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை  “வேலுண்டு வினையில்லை முருகா!”  என்னும் பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------- 
பாடலின் காணொளி வடிவம்!
 http://youtu.be/Bmf2jGVhgaM
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++=====

6 comments:

  1. நல்ல அர்த்தமுள்ள இனிமையான பாடல் வேலுண்டு வினையில்லை முருகா. அந்த திருமுருகாற்றுப்படைப் பாடலும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. நல்ல அர்த்தமுள்ள பாடல்.

    ReplyDelete
  2. ////Blogger Ak Ananth said...
    நல்ல அர்த்தமுள்ள இனிமையான பாடல் வேலுண்டு வினையில்லை முருகா. அந்த திருமுருகாற்றுப்படைப் பாடலும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. நல்ல அர்த்தமுள்ள பாடல். ////

    உங்கள் விருப்பத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி ஆனந்த்! நீங்கள் ஒருவர்தான் இன்று பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். வாரம் ஒரு நாள் (நாளாவது) பழநி அப்பனை நினைக்க வேண்டும். பாடலைக் கேட்க நேரமில்லாதவர்களுக்காக, முருகப்பெருமானின் படத்தையும் போடுகிறேன். அதையாவது பார்க்கட்டும் என்றுதான்.

    வேப்பிலை சுவாமி என்ன ஆனார் என்று தெரியவில்லை! இன்றுடன் 3 நாட்கள் சென்று விட்டன!

    ReplyDelete
  3. யாரும் பின்னூட்டம் இடவில்லை என்பது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டுள்ளதால் நேரமின்மை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ நீங்கள் அதை வெளியிடவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் வெள்ளிக் கிழமையே இந்தப் பாடலை படித்தேன், பார்த்தேன். பிறகு பின்னூட்டம் இட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டு பின்னர் மறந்தும் போனேன். பிறகுதான் சனியன்று ஞாபகத்திற்கு வந்து இந்த பின்னூட்டம் இட்டேன்.

    ReplyDelete
  4. ///Blogger Ak Ananth said...
    யாரும் பின்னூட்டம் இடவில்லை என்பது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டுள்ளதால் நேரமின்மை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ நீங்கள் அதை வெளியிடவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் வெள்ளிக் கிழமையே இந்தப் பாடலை படித்தேன், பார்த்தேன். பிறகு பின்னூட்டம் இட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டு பின்னர் மறந்தும் போனேன். பிறகுதான் சனியன்று ஞாபகத்திற்கு வந்து இந்த பின்னூட்டம் இட்டேன்./////

    நல்லதைச் செய்தீர்கள்! நன்றி!

    ReplyDelete
  5. பதிவிட்டமைக்கு நன்றி அய்யா. சுப்பிரமணிய குருநாதன் புகழ் பாடுவதன்றி வேறெது ஆத்மா சுகம் தரும்.....
    உங்கள் ஜோதிட பாடங்கள் இரண்டு மூன்று வருடம் படித்தவன், உங்கள் எழுத்து கோர்வைக்காகவே விடாமல் படித்து வந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வளவு நாட்டமில்லை!! இன்றைய பொழுதுகளில் ஞான தண்டபாணி பதிவுகள் மட்டும் மிக பிடிக்கும்....

    ReplyDelete
  6. /////Blogger Arun Kumar. S said...
    பதிவிட்டமைக்கு நன்றி அய்யா. சுப்பிரமணிய குருநாதன் புகழ் பாடுவதன்றி வேறெது ஆத்மா சுகம் தரும்.....
    உங்கள் ஜோதிட பாடங்கள் இரண்டு மூன்று வருடம் படித்தவன், உங்கள் எழுத்து கோர்வைக்காகவே விடாமல் படித்து வந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வளவு நாட்டமில்லை!! இன்றைய பொழுதுகளில் ஞான தண்டபாணி பதிவுகள் மட்டும் மிக பிடிக்கும்..../////

    உண்மைதான். உங்கள் மனம் கனிந்து விட்டது. பக்குவம் அடைந்து விட்டீர்கள். தண்டாயுதபாணியின் அருள் கிடைத்துவிட்டது.

    வாரம் ஐந்து நாட்களும் குமரனுக்காக பதிவுகள் எழுதுவதற்கு நான் தயார். படிப்பதற்கு உங்களையும், வேப்பிலை சுவாமியையும் விட்டால் வேறு அன்பர்கள் இருக்க மாட்டார்கள்!
    அதை நினைத்துப் பார்த்தீர்களா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com