2.6.13

முருகனுக்கு ஒரு விழா! முத்தான திருவிழா!


முருகனுக்கு ஒரு விழா! முத்தான திருவிழா!

எங்கள் ஊரில் உள்ள, எங்கள் (பங்காளிகளுக்குச் சொந்தமான) முருகன் கோவிலில் 3 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது. 3.6.2013
திங்கட் கிழமை முதல் 5.6.2013 புதன்கிழமைவரை அத்திருவிழா நடைபெறும். முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் என்று மூன்று நாட்களும் அமர்க்களமாக இருக்கும்.

முதல் நாளன்று சுமார் 3,000 பேர்கள் கலந்து கொள்வார்கள்

மூன்று நாட்களுக்கும் அன்னதானம் (3.6.2013), நகரவிருந்து (4.6.2013, பங்காளிகளுக்கு விருந்து (5.6.2013) என்று சுவையான உணவும் உண்டு.

விழாவிற்கு எங்கள் தந்தைவழி உறவினர்கள் (மொத்தம் 413 பேர்கள்) பெரும்பாலவனர்கள் வந்து ஒன்று சேர்ந்து கலந்து கொள்வார்கள்.

அத்துடன் நகர மக்களும் நகரத்தார், நாட்டார் என்ற இனபேதமின்றிக் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து மகிழ்வார்கள். முருகப் பெருமானும் விதம் விதமான அலங்காரத்தில் அருள் பாலிப்பார்

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இவ்விழா நடைபெறுகிறது

அந்த விழாவில் 3 புத்தகங்கள் வெளியிடப்பெற்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அதில் வாத்தியார் தொகுப்பாளராக
இருந்து பணியாற்றிவரும் முகவரிப்புத்தகம் ஒன்றும், வாத்தியார் எழுதிப் பதிப்பித்த ‘சனீஷ்வரன் படித்த பள்ளிக்கூடம்’ என்ற புத்தகமும்
(சனீஷ்வரனைப் பற்றிய இரண்டு கதைகள் அடங்கிய புத்தகம் - பக்கங்கள் 48) வாத்தியாரின் நண்பரும் பங்காளியுமான திரு.இராம.கிருஷ்ணன அவர்கள் எழுதிய ‘ஆன்மீகத் திரட்டு என்ற புத்தகமும் வெளியிடப்பெற்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
------------------------------------------------
சரி, சொல்லவந்த செய்திக்கு வருகிறேன்

அந்த மூன்று தினங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வாத்தியார் தனது சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதால், வகுப்பறைக்கு மூன்று நாட்கள் விடுமுறை.

அடுத்த வகுப்பு 6.6.2013 வியாழனன்று நடைபெறும்
அனைவரும் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்கள்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. முருகன் திருவருள் முன்னின்று காக்க!.. வேலும் மயிலும் துணையாகும்!... வேதனைகள் எல்லாம் தூளாகும்!... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!... வீரவேல் முருகனுக்கு அரோகரா!...

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு,
    மிக் மகிழ்வுடன் தங்களுக்கு வாழ்த்து க்கூறி விடை கொடுக்கிறோம். த்ங்கள் சுற்றம் உறவினர் மற்றும் ச்முதாயத்தவரிகளுடன் இனிதே இறைவனை ப்பணியுங்கள்.மகிழ்வுடன் விழாவினை கொண்டாடினால் இருக்கும் சிறு சிறு நோயும் மறைந்து விடும்
    தங்களை நேசிக்கும் தங்கள் அன்பான வாசகர்கள் மற்றும் வகுப்பறை மாணவர்கள் அனைவரின் நலத்துக்கும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்,

    ReplyDelete
  3. இலவச வெளியீடான ஐயாவின் புத்தகமும், திரு ராமகிருஷ்ணனின் புத்தகமும்
    அடியேனுக்குக் கிடைக்குமா?

    திருவிழா சென்று வந்து விருந்து பற்றி சொல்லுங்கள். 'ஸ்பெஷல் ஐட்டம்' உண்ணும் போது என்னையும் நினைத்துக் கொள்ளவும்.

    தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இலவச வெளியீடான ஐயாவின் புத்தகமும், திரு ராமகிருஷ்ணனின் புத்தகமும்
    அடியேனுக்குக் கிடைக்குமா?

    திருவிழா சென்று வந்து விருந்து பற்றி சொல்லுங்கள். 'ஸ்பெஷல் ஐட்டம்' உண்ணும் போது என்னையும் நினைத்துக் கொள்ளவும்.

    தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சனீஷ்வரன் படித்த பள்ளிக் கூடம் என்ற கதை பழைய பாடங்களில் 6 பகுதிகளாக பதிவேற்றியிருந்தீர்கள். இப்போதுதான் அது புத்தக வடிவில் வெளிவருகிறது என்று நினைக்கிறேன். அந்த கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன்.

    ReplyDelete
  6. /////Blogger துரை செல்வராஜூ said...
    முருகன் திருவருள் முன்னின்று காக்க!.. வேலும் மயிலும் துணையாகும்!... வேதனைகள் எல்லாம் தூளாகும்!... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!... வீரவேல் முருகனுக்கு அரோகரா!.../////

    நல்லது. நன்றி. உங்களின் முருகபக்தி வாழ்க! வளர்க!

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    வருவாய்
    அருளவாய்
    குகனே!

    ReplyDelete
  8. ////Blogger சர்மா said...
    ஆசிரியருக்கு,
    மிக மகிழ்வுடன் தங்களுக்கு வாழ்த்துக் கூறி விடை கொடுக்கிறோம். தங்கள் சுற்றம் உறவினர் மற்றும் சமுதாயத்தவரிகளுடன் இனிதே இறைவனைப் பணியுங்கள்.மகிழ்வுடன் விழாவினை கொண்டாடினால் இருக்கும் சிறு சிறு நோயும் மறைந்து விடும்
    தங்களை நேசிக்கும் தங்கள் அன்பான வாசகர்கள் மற்றும் வகுப்பறை மாணவர்கள் அனைவரின் நலத்துக்கும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்,/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சர்மா!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    இலவச வெளியீடான ஐயாவின் புத்தகமும், திரு ராமகிருஷ்ணனின் புத்தகமும்
    அடியேனுக்குக் கிடைக்குமா?
    திருவிழா சென்று வந்து விருந்து பற்றி சொல்லுங்கள். 'ஸ்பெஷல் ஐட்டம்' உண்ணும் போது என்னையும் நினைத்துக் கொள்ளவும்.
    தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்./////

    பொறுத்திருங்கள். அனுப்பிவைக்கிறேன்! உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger Ak Ananth said...
    சனீஷ்வரன் படித்த பள்ளிக் கூடம் என்ற கதை பழைய பாடங்களில் 6 பகுதிகளாக பதிவேற்றியிருந்தீர்கள். இப்போதுதான் அது புத்தக வடிவில் வெளிவருகிறது என்று நினைக்கிறேன். அந்த கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன்./////

    ஆமாம். அத்துடன் ‘எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்’ (சனீஷ்வரன்) என்ற கதையும் உள்ளது மொத்தம் 48 பக்கங்கள்.

    ReplyDelete
  11. /////Blogger Sattur Karthi said...
    Good Morning Sir/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  12. செம்மான் மகளைத் திருடும் திருடன் - ஆஹா!... என்ன அருமையான அலங்காரம்!.. நீங்கள் கொடுத்து வைத்தவர் ஐயா!..கடல் கடந்து இருக்கும் எமக்கு காலையில் நல்ல தரிசனம் தந்தான் முருகன்... நேரில் கண்டு வணங்க நாலாயிரம் கண் படைத்திலனே..அந்த நான்முகனே!...முருகா.. முத்துக்குமரா...எல்லாரையும் காத்தருள் புரிவாய்.. செந்திலாதிபனே!...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com