16.5.13

அனுபவம்: எதெதற்கு எத்தனை முழம்?

 
அனுபவம்:  எதெதற்கு எத்தனை முழம்?

தாங்கள் அனுபவித்து உணர்ந்ததை நம் முன்னோர்கள் நச்’ சென்று நான்கு வரிப் பாடல்களாகத் தந்து விட்டுப்போய் இருக்கிறார்கள். அதில்தான் எத்தனை நீதி உள்ளது. இன்றைய அனுபவப் பகுதியை நீதி வெண்பா பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------

நீதி வெண்பா

"கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்;
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. "


எதெதற்கு எத்தனை தூரம் தள்ளி நிற்க வேண்டும் என்பது இப்பாட்லில் சிறப்பாகச் சொல்லப்பெற்றிருக்கிறது. ஆடு மாடு போன்று தலையில் கொம்புள்ள பிராணிகளிடம் அவற்றின் அருகில் நிற்காமல் ஐந்து முழ தூரம் தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து முழ தூரம் தள்ளி நிற்க வேண்டும். ஒற்றை யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்

ஆனால் அடி, தடி, வம்பு, தும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள வீண் மனிதர்களிடமிருந்து (தீயவர்களிடம் இருந்து) அவர்களின் கண்ணில் படாத தூரத்தில் ஒதுங்கி நிற்பதே நன்மை பயக்கும்! அதுதான் நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல நெறியாகும்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. இதே கருத்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக்கூறுவார்:

    முரட்டுக்காளை,வெறிபிடித்த நாய், குடிகாரன், செல்வந்தன் அல்லது அரசன் இவர்களுடைய பகையை சம்பாதிக்கக் கூடாது. கோவில் காளை எதிரில் வந்தால் ஒதுங்கி நின்று அது சென்ற பின்னால் செல்ல வெண்டும் எதிரில் சென்றால் யார் எவர் என்று பார்க்காமல் தூக்கி வீசிவிடும். வெறிபிடித்த நாயிடம் மாட்டிக்கொண்டால் கடித்துக் குதறிவிடும்.குடிகாரனிடம் வாயைக் கொடுத்தால் நம் பரம்பரையையே இழுத்து அவமானப் படுத்திவிடுவான். செல்வந்தன் நம் குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிடுவான்.

    நல்ல நீதி அளித்ததற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. காலை வணக்கம் அய்யா !

    ReplyDelete
  3. அன்பு வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவு அறிவுரையாக இருந்தது,உண்மையிலேயே
    நச் என்று ஆணித்தரமான வார்த்தைகள்.
    நன்றி.

    ReplyDelete
  4. இதெல்லாம் இன்றைய நவீன கல்வி பயிலும் பிள்ளைகளுக்குத் தெரியாது.. காரணம் சொல்லிக் கொடுக்கப்பட வில்லை. தமிழை ஒழுங்காகக் கற்றுக் கொண்டாலே வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து விடலாம்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com