12.4.13

பட்டுக்கோட்டையார் அதையும் எழுதியிருக்கிறாரா?


பட்டுக்கோட்டையார் அதையும் எழுதியிருக்கிறாரா?

காதல் பாடல்களையும், தத்துவப் பாடல்களையும் மட்டுமே பட்டுக்கோட்டையார் எழுதியுள்ளதாக பலர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். இல்லை, அவர் பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்

இன்றைய பக்தி மலரை, கவிஞர் பட்டுகோட்டை திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------
கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா 


(தில்லை)

எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா 


(தில்லை)

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா 


(தில்லை) -
பாடலாக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
படம்: சௌபாக்கியவதி (1957)
இசை: பி. நாகேஸ்வரராவ்

------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/qUORRGYe1y4
Our sincre thanks to the person who uploaded the song in the net!




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

14 comments:

  1. அய்யா வணக்கம் .

    ReplyDelete
  2. அற்புதமானப் பாடல் அருமையான இசை
    அழகான காட்சிகள்....

    சிவ சக்தியின் சங்கமமமாக பேரின்பத்தின் சன்னதிக்கு இட்டுச் செல்லும் சிற்றின்ப வாயில்!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. நிலவை பாடாத கவிஞன் இல்லை
    நிலவை பாடவில்லை எனில்

    அவன் கவிஞனே இல்லை என
    அப்படி ஒரு வழக்கு உண்டு

    ஆண்டவனை பாடாத கவிஞர்
    ஆரேனும் இருக்கு முடியமா?

    //பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்//

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

    என்ற திருவாச வரிகளினை அல்லவா
    எல்லோருக்கும் நினைவூட்டும்

    ReplyDelete
  4. வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அற்புதமான பாடல் தந்தமைக்கு நன்றிகள்.
    -peeyes

    ReplyDelete
  5. sir i could not find the article related to gemstone.

    ReplyDelete
  6. sir I could not find the article on gemstone..

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்
    தங்களின் பதிவுகள் அரிய ஆக்கங்களாகும்.ஆரம்பத்திலிருந்து இ
    றுதி வரை விறு விறுப்பானவை.அளப்பரியவை. பட்டுக்கோட்டையாரைப் பற்றி சிறுகட்டுரை தங்கள் பதிவில் பார்க்க விரும்புகிறோம்.சமயம் வரும்போது பதிவிடவும்,
    நன்றி

    ReplyDelete
  8. ////Blogger Gnanam Sekar said...
    அய்யா வணக்கம் .////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger ஜி ஆலாசியம் said...
    அற்புதமானப் பாடல் அருமையான இசை
    அழகான காட்சிகள்....
    சிவ சக்தியின் சங்கமமமாக பேரின்பத்தின் சன்னதிக்கு இட்டுச் செல்லும் சிற்றின்ப வாயில்!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  10. /////Blogger அய்யர் said...
    நிலவை பாடாத கவிஞன் இல்லை
    நிலவை பாடவில்லை எனில்
    அவன் கவிஞனே இல்லை என
    அப்படி ஒரு வழக்கு உண்டு
    ஆண்டவனை பாடாத கவிஞர்
    ஆரேனும் இருக்கு முடியமா?
    //பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்//
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
    என்ற திருவாச வரிகளினை அல்லவா
    எல்லோருக்கும் நினைவூட்டும்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  11. ////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அற்புதமான பாடல் தந்தமைக்கு நன்றிகள்.
    -peeyes/////

    நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  12. //////Blogger Rajasekaran said...
    sir I could not find the article on gemstone..

    ஜாதகம்தான் முக்கியம். நவரத்தினக் கற்கள் போட்டுக்கொள்வதால் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடாது. நன்மைகள் அடைமழை போல வந்து கொட்டாது.
    அப்படி நடக்கும் என்றால் சந்தையில் உள்ள கற்களை எல்லாம் பணக்காரர்கள் வாங்கி வைத்துக்கொண்டு மேலும் பணக்காரர் ஆக முயற்சி செய்வார்கள். இருப்பதிலேயே பெரிய கல்லாக வாங்கி முகேஷ் அம்பானி போட்டுக் கொண்டு விடுவாரா இல்லையா? யோசித்துப் பாருங்கள். நான் நவரத்தினக் கல் எதையும் அணிந்து கொள்ளவில்லை. அதனால அதைக் குறைத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். லக்கின நாதனுக்காக ஒரு கல், ராசி நாதனுக்காக ஒரு கல், தசா நாதனுக்காக ஒரு கல், புத்தி நாதனுக்காக ஒரு கல் என்று எத்தனை கற்களைப் போட்டுக்கொள்வீர்கள்? சொல்லுங்கள்

    ReplyDelete
  13. ////Blogger சர்மா said...
    ஐயா வணக்கம்
    தங்களின் பதிவுகள் அரிய ஆக்கங்களாகும்.ஆரம்பத்திலிருந்து இறுதி வரை விறு விறுப்பானவை.அளப்பரியவை. பட்டுக்கோட்டையாரைப் பற்றி சிறுகட்டுரை தங்கள் பதிவில் பார்க்க விரும்புகிறோம்.சமயம் வரும்போது பதிவிடவும்,
    நன்றி////

    நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் சுவாமி!

    ReplyDelete
  14. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!...குரு அருளும் திரு அருளும் நம்மைத் தொடர்ந்து வருவதாக!...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com