23.4.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 24


 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 24

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 24

இதற்கு முன் பாடங்களைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
-------------------------------------------------------
ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!
-----------------------------------------------------
24. கேட்டை

இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் புதனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. கார்த்திகை
2. மிருகசீரிஷம்
3. புனர்பூச்ம்
4. பூசம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. சதயம்

ஆகிய 9 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். விருச்சிக ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம் வீடு.. மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள், மற்றும் புனர்பூசம் 1, 2 & 3ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

விருச்சிக ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு. துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள்.  சித்திரை 3 & 4ம் பாதங்கள். மற்றும் சுவாதி  துலாம் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணி, ஆயில்யம், மகம், மூலம், ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கேட்டை ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் கிடையாது!.

திருவாதிரை, சித்திரை, பூராடம், அவிட்டம், பூரட்டாதிஆகிய 5 நட்சத்திரங்களும் பொருந்தாது.

பரணி, ரோகிணி, பூரம், விசாகம், உத்திராடம்,  திருவோணம், உத்திரட்டாதி ஆகிய 7 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவற்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆயுதங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. ஆசிரியருக்கு அன்பான வணக்கம்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி வருகை
    பதிவுகளுடன்..

    வலமாக வரும் பாடலினை
    வரவேற்று சுவையுங்களளேன்

    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே

    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன்

    ஸ்ருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

    வாலிபங்கள் ஓடும்
    வயதாகக் கூடும்

    ஆனாலும் அன்பு மாறாதது
    மாலையிடும் சொந்தம்

    முடிபோட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது

    அழகான மனைவி
    அன்பான துணைவி

    அமைந்தாலே பேரின்பமே

    மடிமீது துயில சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே

    நல்ல மனையாளின் நேசமொரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே

    கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால் பாடாதம்மா
    சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
    சிரிக்காத நாளில்லையே

    துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
    மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
    என் சோகம் என்னோடு தான்...

    ReplyDelete
  3. இந்த வரிசையில் வரும்
    இப்பகுதியின் கடைசி பத்தியை

    வெட்டி ஒட்டுவதற்கு பதில்
    குட்டி சொல்லும்விதமாய்

    ஒவ்வொரு முறையும்
    வெவ்வேறு மாதிரி எழுதினால்

    சுவைக்கும் தானே..
    அவை அப்படி வருமா?

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  5. /////Blogger சர்மா said...
    ஆசிரியருக்கு அன்பான வணக்கம்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger அய்யர் said...
    பதிவுக்கு நன்றி வருகை
    பதிவுகளுடன்..
    வலமாக வரும் பாடலினை
    வரவேற்று சுவையுங்களளேன்/////

    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன்
    ஸ்ருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
    வாலிபங்கள் ஓடும்
    வயதாகக் கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது
    மாலையிடும் சொந்தம்
    முடிபோட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது
    அழகான மனைவி
    அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே
    மடிமீது துயில சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே
    நல்ல மனையாளின் நேசமொரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே
    கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால் பாடாதம்மா
    சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
    சிரிக்காத நாளில்லையே
    துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
    மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
    என் சோகம் என்னோடு தான்...//////

    பாடலுக்கு நன்றி! அப்படியே எழுதிய கவிஞரின் பெயரையும் சேர்த்துக் கொடுத்திருக்கலாமே!

    ReplyDelete
  7. ////Blogger அய்யர் said...
    இந்த வரிசையில் வரும்
    இப்பகுதியின் கடைசி பத்தியை
    வெட்டி ஒட்டுவதற்கு பதில்
    குட்டி சொல்லும்விதமாய்
    ஒவ்வொரு முறையும்
    வெவ்வேறு மாதிரி எழுதினால்
    சுவைக்கும் தானே..
    அவை அப்படி வருமா?/////

    செய்தால் போயிற்று! நன்றி!

    ReplyDelete
  8. ////Blogger C Jeevanantham said...
    Thank you sir/////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  9. ////Blogger ponnusamy gowda said...
    நன்றியுடன்,
    -peeyes/////

    நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  10. /////Blogger manikandan said...
    வணக்கம் sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  11. //////Blogger Sundarajan Nardarajan said...
    Kalyana malai song ... Nice./////

    விசுவநாதன் நோட் திஸ் பின்னூட்டம்!

    ReplyDelete
  12. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  13. அய்யா எனக்கு கேட்டை நட்சத்திரம். எனக்கு வந்திருக்கும் பெண்ணின் ஜாதகம் அனுஷம் நட்சத்திரம். எனக்கு பெண்ணையும், பெண்ணுக்கு என்னையும் பிடித்திருக்கிறது. ஆனால், ஏக ராசி (விருச்சிகம்) சரியாக வருமா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com