3.1.13

கவிதைச் சோலை: இனமேது சொல்லடா!

கவிதைச் சோலை: இனமேது சொல்லடா!

இன்றைய கவிதைச் சோலையை கவியரச்ர் கண்ணதாசனின் கவிதைகளில் இரண்டு அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++

                              1

சுடுகாட் டெலும்புகளைச்
சோதித்து பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்த எலும் பில்லையடி!
எந்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!
ஒருநாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி!


                              2

போகந் திரண்டு வரும்போது
புத்தி மயக்கம் சுகமென்பான்
மேகந் திரண்டு வரும்போதோ
மெய்ஞ் ஞானந்தான் பெரிதென்பான்
யோகந் திரண்ட சன்யாசி
யோனிப் பையை நஞ்சென்பான்
நாகந் திரண்ட கலையென்னும்
நஞ்சை நவில்வதுவோ?


- கவியரசர் கண்ணதாசன்

------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7 comments:

  1. கவியரசின் அற்புதக் கவிதை...
    அதன் பொறியில் பற்றிய வரிகள் இவை!

    ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவைச்சொல்லி
    ஓட்டு வாங்கிப் பிழைப்போர் இருக்கும் வரை
    ஒருபோதும் உயராது வாழ்வதடி......

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. அன்புடையீர் வணக்கம்! கவிஞர் கண்ணதாசன் வரிகளுடன் இந்த ஆண்டு உமது தொடக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Good morning sir. Thanks for sharing.

    ReplyDelete
  4. அரசியலிலும் அரசாண்ட கோமான்
    அந்த குறிப்பிட்ட வரிகளில் ..

    கவிஞர் "வடநாடு" என எதை
    குறிப்பிடுகிறார் என தெரியவில்லை

    சாதி பிரிவுகள் வேண்டும் ஆனால்
    சாதி வேற்றுமை தான் கூடாது

    அய்யரின் கருத்து இதுவே..
    அன்பு தோழர் குடியாரின் கருத்தும் இதுவே

    இரண்டாவது கவிதையின்
    இரண்டாவது வரிகள் புரியவில்லை

    இன்றைய வகுப்பில்
    இந்த பாடலினை சுழல அனுமதியுங்கள்

    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
    இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா

    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
    இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா


    ReplyDelete
  5. மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்ட இந்த பாடல் நன்று. ஓரிரு வார்த்தைகள்தான் விளங்கவில்லை.

    ReplyDelete
  6. கவிஞர் தேசீய நீரோட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்ட பின்னர் எழுதிய கவிதையோ? 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' கோஷத்திற்கு மாற்றாகச் சொன்னதோ?மொழி, இனம், நிலம் ,நாடு ,நிறம், பாலினம்,சாதி இவற்றால் வரும் பிரிவினைகளைக் களையச் சொல்வது கவியரசரின் நோக்கமோ? அவருடைய சொல்லாட்சிக்குக் கேட்க வா வேண்டும்.நன்றாக‌ உள்ளது.

    நண்பர் அய்யர் என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிறார்.பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்.
    இது போன்ற தவிர்த்து இருக்க வேண்டிய விவாதங்களலேயே இப்போது நமது
    மாணவர் மலரை இழந்து வாடுகிறோம்.

    //சாதி பிரிவுகள் வேண்டும் ஆனால்
    சாதி வேற்றுமை தான் கூடாது

    அய்யரின் கருத்து இதுவே..
    அன்பு தோழர் குடியாரின் கருத்தும் இதுவே//

    இது ஐயர் கூறுவது. இதில் குடியார் என்பது லால்குடியார் ஆகிய நான்தான்.

    'சாதிப்பிரிவுகள் வேண்டும்' என்பது என்(குடியார்) கருத்து அல்ல.வேண்டுமா வேண்டமா என்ற கேள்விக்கே இடமில்லாமல், அது முன்பும், இப்போதும் நாளயும்,இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்பதுதான் யதார்த்தம்.இதில் என் கருத்தால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. என் கருத்தைக் கேட்டு சாதிப் பிரிவினைகள் வரவில்லை.

    சாதிப் பிரிவினைகளை நான் சார்ந்த சமூகம்தான் ஏற்படுத்தியது என்று யாராவது சொல்லும் போது, அதனை மறுத்து எதிர்வினை ஆற்றுகிறேன். அவ்வளவே.பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்ற நிலையினை மாற்ற என்னால் ஆன பங்களிப்பைச் செய்கிறேன்.

    சாதியை எதிர்த்துப் பிரசாரம் பல்லாண்டுகளாக நடந்தும் நடைமுறை எதார்த்தத்தில் பெரிய மாறுதல் வந்து விடவில்லை. எனவே மேடை அலங்காரமாக முற்போக்கு என்று வெட்டிப் பேச்சு பேச வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு.

    நமது சமூகங்களில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகின்றன.ஒரு சமயத்தில் சாதி அடையாளங்கள் முற்றிலும் தொலைந்து விடலாம். அதுவும் சாத்தியமே. ஆனால் சாதி இருந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளப் போகும் பிற‌ வேற்றுமைகள் என்ன என்ன குழப்பங்களைக் கொண்டு வருமோ?! யார் கண்டது? நல்ல மாற்றங்கள் வந்தால் வரவேற்கவும், தீமையான மாற்றங்கள் வந்தால் அதனை எதிர்கவும் உண்டான‌
    ஆன்ம பலத்தினை ஆண்டவன் நமக்கு அருளட்டும்.













    ReplyDelete
  7. நண்பர்களே! எனக்கு இந்தப் பிரச்சினையில் அதிக ஞானம் கிடையாது எனினும் என் கருத்து மகாகவி பாரதியிடமிருந்து பெற்றதுதான். 'பாரதியார் கட்டுரைகள்'எனும் நூல் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட2007 மறுபதிப்பில் 'சமூகம்' எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள "நாற்குலம்" அதன் உட்பிரிவு சாதுர்வர்ணயம் கட்டுரையையும், அதனையடுத்து வரும் "ஜாதிக்குழப்பம்" எனும் கட்டுரையையும் அதன் உட்பிரிவான "ஜாதிபேத விநோதங்கள்" பகுதியையும், நிறைவாக ஓர் உபநிஷத்தின் கருத்து எனும் தலைப்பில் "யார் பிராமணன்?" இந்தக் கட்டுரைகளைப் படித்தால் நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும் என்பது என் எண்ணம். படித்தபின் தங்கள் விவாதங்களைத் தொடரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com