31.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 15

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 15

ஜோதிடத் தொடர் - பகுதி 15

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
உத்திர நட்சத்திரம் 1ஆம் பாதம் மட்டும் (சிம்ம ராசி)

இது சூரியனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் திருவோண நட்சத்திரம் மகர ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

பூசமும், ஆயில்யமும் கடக் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். சிம்மத்திற்குக் கடகம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஏக நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் (average) உண்டு.  என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை, அவிட்டம் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

  1. அய்யா காலை வணக்கம்

    ReplyDelete
  2. வருகை பதிவு (மட்டும்)

    ReplyDelete
  3. //Blogger அய்யர் said...

    வருகை பதிவு (மட்டும்)//

    சுழல விட இன்று(ம்) பாடல் ஏதும் கிடைக்க வில்லையா? நான் வேண்டுமானால் எடுத்துக் கொடுக்கட்டுமா.

    ReplyDelete
  4. ஐயா, செவ்வாயின் நட்சத்திரங்களான சித்திரை,அவிட்டம் பொருந்தாதது எனில் மிருகசீரிஷத்திற்கும் அதிபதி செவ்வாய்தானே? நன்றி ஐயா.

    ReplyDelete
  5. ///சுழல விட இன்று(ம்) பாடல் ஏதும் கிடைக்க வில்லையா? ///

    பாடல் இருக்கு.. பதிவிட
    பயமாக இருக்கு.. (தடையை நினைத்து)

    தொடர்ந்து
    தொடருகிறோம்..

    ReplyDelete
  6. ///Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger அய்யர் said...
    வருகை பதிவு (மட்டும்)/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  8. /////Blogger Ak Ananth said...
    //Blogger அய்யர் said...
    வருகை பதிவு (மட்டும்)//
    சுழல விட இன்று(ம்) பாடல் ஏதும் கிடைக்க வில்லையா? நான் வேண்டுமானால் எடுத்துக் கொடுக்கட்டுமா.////

    ஆகா, கொடுங்கள். வேண்டாம் என்று சொல்லவா போகிறார்?

    ReplyDelete
  9. ////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Blogger Geetha Lakshmi A said...
    ஐயா, செவ்வாயின் நட்சத்திரங்களான சித்திரை,அவிட்டம் பொருந்தாதது எனில் மிருகசீரிஷத்திற்கும் அதிபதி செவ்வாய்தானே? நன்றி ஐயா./////

    உத்திர நட்சத்திரத்திற்கு மட்டும் மிருகசீரிஷம் பொருந்தும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பெற்றுள்ளது. எதனால் குறிப்பிட்டார்கள் என்பது தெரியவில்லை.
    ஆனால் அம்மூன்றுமே செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் ரஜ்ஜூ தட்டும். எதற்கு ரிஸ்க் என்று நினைப்பவர்கள் அதை விலக்கிவிடலாம்!

    ReplyDelete
  11. ////Blogger அய்யர் said...
    ///சுழல விட இன்று(ம்) பாடல் ஏதும் கிடைக்க வில்லையா? ///
    பாடல் இருக்கு.. பதிவிட
    பயமாக இருக்கு.. (தடையை நினைத்து)
    தொடர்ந்து
    தொடருகிறோம்../////

    ஒட்ட்கத்தைக் கட்டிக்கொண்டால் மட்டுமே தடை வரலாம்!:-)))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com