14.12.12

என்ன(டா) மணக்கும் அங்கே?

என்ன(டா) மணக்கும் அங்கே?

பக்தி மலர்

தேன் மணக்கும் , பால் மணக்கும், பன்னீர் மணக்கும் மலை என்று பழநிமலையை வியந்து பாடியுள்ளார் சுசீலா அம்மையார். அவர் பாடினால் மணக்காமல் போகுமா? யார் பாடினாலும் மணக்கும் என்றாலும். அவர் தேன் குரலுக்குச் சொந்தக்காரர். ஆகவே அவர் பாடியுள்ளார். நிச்சயம் மணக்கும்!!! கேட்டுப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------
பாடலின் காணொளியைக் கேட்பதற்கு உரிய சுட்டி  (URL) கீழே உள்ளது

http://www.youtube.com/watch?v=VzLRxB8xWKo&playnext=1&list=PL45770567534DB4BA&feature=results_video
-----------------------------------------------------------------------
பாடல் வரிகள்:

தேன் மணக்கும் தேவன் மலை

தேன் மணக்கும் தேவன் மலை
பால் மணக்கும் பாலன் மலை
பன்னீர் மணக்கும் பக்தர் மலை
அது பாலமுருகன் வாழும் பழநிமலை
(தேன் மணக்கும்)

சிவகுரு நாதனின் சிறந்த மலை
செல்வங்கள் நிறைந்திடும் அறிவு மலை
தந்தைக்கு குருவாய் அமர்ந்த மலை
கந்தன் தத்துவம் விளங்கிய சுவாமிமலை
(தேன் மணக்கும்)

சேவலும் மயிலும் ஆடும் மலை
வேலன் சூரனை வென்ற செந்தூர்மலை
திருமணக் காட்சியும் தந்த மலை
அது திருப்பரங்குன்றென்னும் அழகு மலை
(தேன் மணக்கும்)

அடியார்க்கு அருள் தந்த தெய்வ மலை
ஆறுமுகன் வாழும் தணிகைமலை
பாவலர் போற்றிடும் நல்ல மலை
முருகன் பழமாய்க் கனிந்திடும் சோலைமலை
(தேன் மணக்கும்)

தேன் மணக்கும் தேவன் மலை
பால் மணக்கும் பாலன் மலை
பன்னீர் மணக்கும் பக்தர் மலை
அது பாலமுருகன் வாழும் பழநிமலை

பாடலாக்கம்: கனகா கிருஷ்ணன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++   

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good morning sir, Nice song.

    Naal en seyyum,
    vinai thaan en seyyum,
    ennai naadi vantha kol en seyum,
    kodunkootren seyum,
    kumaresariru thaalum chithambum chathangayum thandayum shanmugantholum, kadambamum enaku munne vanthu thondridune!!!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    எல்லாம் மணக்கும்
    பழனியிலே
    முருகா முருகா முருகா
    நன்றி

    ReplyDelete
  3. அருமையானப் பாடல் அதிலும் தேன்குரல் என்பது அத்தனைப் பொருத்தம் கேட்டு....

    சிந்தையில் இன்புற்றேன் மனம் செழிக்கத் தெம்புற்றேன்!!!
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    குமரனை நினைத்தால் கொட்டும் கவிதை
    குகனை பணிந்தால் பொங்கும் கருணை
    குன்றுதோறும் அமர்ந்தகுரு அவனை -மனம்
    குளிர போற்றிடுவோம் தினமே.


    ஞானத்தின் சொரூபன் ஞானப் பழமவன்
    ஞானிகளின் குருவும் அவன்
    ஞானமார்க்கம் அருளும் கடவுள் அவன்
    ஞாலம் போற்றும் தேவனவன்

    இஸ்கந்த இவான் இஸ்லாத்தில் அவனே
    அலெக்சாண்டரும் ஆவான் கிருஸ்துவத்தில்
    ஸ்கந்தன் என்ற மகாபிரபுவே என்றும்
    இத்தனை பெயராக இனிமையுருகிறான்

    எத்தனை கோடிபுண்ணியம் செய்திருக்கணும் இறைவா
    இஸ்கந்தா இப்படிநானுனை யலைக்க
    எத்தனைமுறை அழைத்தாலும் எந்தன் நெஞ்சம்
    இனித்திடுமே தேனாய் இளங்குமாரா!

    சிவப்பார்வதிப் பிரியா சிங்கார வேலா
    சிவகுமரா செல்வக் குமாரா
    சிவனார் புதல்வா தேவசேனாதிபதியே -மலரென
    சிவந்தநின் திருப்பாதம் பணிகிறேன்.

    ReplyDelete
  4. Good evening sir,

    pazhani malai muruganaku arahogara.

    good song.

    ReplyDelete
  5. பழனி முருகனைக் கண்முன் நிறுத்தும் பாடல் அருமை! நன்றி ஐயா!

    நன் கொடையாளர் அனைவருக்கும் மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன். தாங்களும் வகுப்பறையில் தகவலாக வெளியிட்டமைக்கு நன்றி!புத்தாண்டு தினத்தன்று
    வாழ்த்துக்களுடன் பெயர் பட்டியல் வெளியிடுவோம்.

    ReplyDelete
  6. ////Blogger KJ said...
    Good morning sir, Nice song.
    Naal en seyyum,
    vinai thaan en seyyum,
    ennai naadi vantha kol en seyum,
    kodunkootren seyum,
    kumaresariru thaalum chithambum chathangayum thandayum shanmugantholum, kadambamum enaku munne vanthu thondridune!!!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    எல்லாம் மணக்கும்
    பழனியிலே
    முருகா முருகா முருகா
    நன்றி////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  8. ////Blogger ஜி ஆலாசியம் said...
    அருமையானப் பாடல் அதிலும் தேன்குரல் என்பது அத்தனைப் பொருத்தம் கேட்டு....
    சிந்தையில் இன்புற்றேன் மனம் செழிக்கத் தெம்புற்றேன்!!!
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    குமரனை நினைத்தால் கொட்டும் கவிதை
    குகனை பணிந்தால் பொங்கும் கருணை
    குன்றுதோறும் அமர்ந்தகுரு அவனை -மனம்
    குளிர போற்றிடுவோம் தினமே.
    ஞானத்தின் சொரூபன் ஞானப் பழமவன்
    ஞானிகளின் குருவும் அவன்
    ஞானமார்க்கம் அருளும் கடவுள் அவன்
    ஞாலம் போற்றும் தேவனவன்
    இஸ்கந்த இவான் இஸ்லாத்தில் அவனே
    அலெக்சாண்டரும் ஆவான் கிருஸ்துவத்தில்
    ஸ்கந்தன் என்ற மகாபிரபுவே என்றும்
    இத்தனை பெயராக இனிமையுருகிறான்
    எத்தனை கோடிபுண்ணியம் செய்திருக்கணும் இறைவா
    இஸ்கந்தா இப்படிநானுனை யலைக்க
    எத்தனைமுறை அழைத்தாலும் எந்தன் நெஞ்சம்
    இனித்திடுமே தேனாய் இளங்குமாரா!
    சிவப்பார்வதிப் பிரியா சிங்கார வேலா
    சிவகுமரா செல்வக் குமாரா
    சிவனார் புதல்வா தேவசேனாதிபதியே -மலரென
    சிவந்தநின் திருப்பாதம் பணிகிறேன்.////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கும், பாடலுக்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  9. ////Blogger vprasana kumar said...
    Good evening sir,
    pazhani malai muruganaku arahogara.
    good song./////

    கந்தா போற்றி! கடம்பா போற்றி! கதிர்வேலா போற்றி!

    ReplyDelete
  10. ///Blogger kmr.krishnan said...
    பழனி முருகனைக் கண்முன் நிறுத்தும் பாடல் அருமை! நன்றி ஐயா!
    நன் கொடையாளர் அனைவருக்கும் மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன். தாங்களும் வகுப்பறையில் தகவலாக வெளியிட்டமைக்கு நன்றி!புத்தாண்டு தினத்தன்று
    வாழ்த்துக்களுடன் பெயர் பட்டியல் வெளியிடுவோம்.////

    நல்லது. நன்றி! அப்படியே செய்வோம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com