27.12.12

கவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே! காலமிருக்குது பின்னே!

கவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே! காலமிருக்குது பின்னே!

இன்றைய கவிதைகள் பகுதியை பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------------------------------
காடு வெளையட்டும் பொண்ணே!

நாயகி:
சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப்பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்தமுறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பு
உள்ளே மறைஞ்சிருக்கு - அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில்மூழ்கி முத்தை யெடுக்கும்
வழிகாட்டி மரமான
தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் - ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்!

நாயகி:
அட
காடு வெளௌஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே

நாயகி:
மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே - பசி
வந்திடக் காரணமென்ன மச்சான்?

நாயகன்:
அவன்
தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி!

நாயகி:
பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு - இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

நாயகன்:
தினம்
கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

நாயகி:
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

நாயகன்:
இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது - சேரிக்கும்
இன்பம் திரும்புமடி!

நாயகி:
நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் - மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்?

நாயகன்:
நாளை வருவதை எண்ணி எண்ணி - அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி!

நாயகி:
அட
காடு வெளௌஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்!
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்!

 - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்




(இந்தப் பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதலில் தான் வேலைபார்த்த ‘ஜனசத்தி’ என்னும் பொதுவுடமைக் கட்சியின் நாளிதழில் எழுதியிருந்தார். திரையுலகிற்கு வந்தபிறகு சிறிது மாற்றம் செய்து புரட்சித் தலைவரின் ‘நாடோடி மன்னன்’ திரைப்பட்த்திற்கு எழுதிக்கொடுத்தார். ஆண்டு 1958 படத்தில் இப்பாடலை திரு.T.M.செள்ந்தரராஜனும், நடிகை திருமதி. பானுமதியும் பாடியிருப்பார்கள்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை:

அறிவிப்பு:

நேற்று நான் எழுதிய பதிவிற்கு, நிறைய மின்னஞ்சல்கள்  வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் படித்துவிட்டு,  உங்களில் அதிகமான பேர்கள் சொல்லியுள்ள கருத்தின்படி நடக்கலாம் என்றுள்ளேன். நீங்கள்தான் (மாணவக் கண்மணிகள்) எனக்கு முக்கியம். நல்லதொரு அறிவிப்பை இன்னும் 4 தினங்களில் பதிவில் வெளியிடுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++====
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. Guru vanakkam!!
    Thanks for sharing sir.

    ReplyDelete
  2. வழக்கமாக சுழல விடுவது
    வகுப்பறையின் அய்யர் அந்த

    பணியினை தாங்கள் கொண்டு
    பதிவிட்ட இன்றைய பதிவினை

    சுவைத்து மகிழ்ந்தபடியே
    "சுள்" என்று ஒரு வருகை பதிவு

    2013 அறிவிப்புகளை எதிர்பார்த்தபடி
    20-13 க்காக காத்திருக்கின்றோம்
    (நியுமராலஜி படி பொதுப் பலன்களையும் சேர்த்தே)

    ReplyDelete
  3. பட்டுக்கோட்டையாரின் படத்துடன், அவருடைய முக்கியமான பாடலை முழுமையாகக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொதுவுடைமை தத்துவத்தில் தோய்ந்தவர். அவருடைய பல கவிதைகளில் பொதுவுடைமை கருத்துக்களே மேலோங்கியிருக்கும். அவர் காலத்தில் உச்சத்தில் இருந்த திரைப்பட பாடலாசிரியர்களுக்கிடையே எழுஞாயிறாகத் தோன்றி, அரிய கருத்துக்களைச் சொல்லி மக்களைக் கவர்ந்தவர். அவருடைய பாடல்களில் 'பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப் பயணம் போரேண்டா, அங்கு படிக்க வேண்டியது நிறையவே இருக்கு படிச்சுட்டு வாரேண்டா' எனும் பாடல் பள்ளிக்கல்வியை விட அனுபவக் கல்வியின் அவசியத்தை உணர்த்தியது. அவர் சிறு வயதிலேயே மாண்டுவிட்ட போதும், அமரத்துவம் வாய்ந்த அவரது கவிதை வரிகள் அவர் எழுதிய பாடல்களின் வாயிலாக இன்னமும் உயிர்ப்போடு இருந்து வருகிறது. மிக அருமையானதொரு பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. ////Blogger KJ said...
    Guru vanakkam!!
    Thanks for sharing sir.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ////Blogger அய்யர் said...
    வழக்கமாக சுழல விடுவது
    வகுப்பறையின் அய்யர் அந்த
    பணியினை தாங்கள் கொண்டு
    பதிவிட்ட இன்றைய பதிவினை
    சுவைத்து மகிழ்ந்தபடியே
    "சுள்" என்று ஒரு வருகை பதிவு
    2013 அறிவிப்புகளை எதிர்பார்த்தபடி
    20-13 க்காக காத்திருக்கின்றோம்
    (நியுமராலஜி படி பொதுப் பலன்களையும் சேர்த்தே)/////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  7. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    பட்டுக்கோட்டையாரின் படத்துடன், அவருடைய முக்கியமான பாடலை முழுமையாகக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger Thanjavooraan said...
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொதுவுடைமை தத்துவத்தில் தோய்ந்தவர். அவருடைய பல கவிதைகளில் பொதுவுடைமை கருத்துக்களே மேலோங்கியிருக்கும். அவர் காலத்தில் உச்சத்தில் இருந்த திரைப்பட பாடலாசிரியர்களுக்கிடையே எழுஞாயிறாகத் தோன்றி, அரிய கருத்துக்களைச் சொல்லி மக்களைக் கவர்ந்தவர். அவருடைய பாடல்களில் 'பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப் பயணம் போரேண்டா, அங்கு படிக்க வேண்டியது நிறையவே இருக்கு படிச்சுட்டு வாரேண்டா' எனும் பாடல் பள்ளிக்கல்வியை விட அனுபவக் கல்வியின் அவசியத்தை உணர்த்தியது. அவர் சிறு வயதிலேயே மாண்டுவிட்ட போதும், அமரத்துவம் வாய்ந்த அவரது கவிதை வரிகள் அவர் எழுதிய பாடல்களின் வாயிலாக இன்னமும் உயிர்ப்போடு இருந்து வருகிறது. மிக அருமையானதொரு பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி.////

    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com