18.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 9

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 9

ஜோதிடத் தொடர் - பகுதி 9

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
புனர்பூச நட்சத்திரம் 1,,2,,3ஆம் பாதங்கள்   (மிதுன ராசி)

இது குரு பகவானின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. ஹஸ்தம்
6. சித்திரை
7. சுவாதி
8. அனுஷம்
9. கேட்டை
10. பூராடம்
11. திருவோணம்
12. அவிட்டம்
13. சதயம்
14. உத்திரட்டாதி
15. ரேவதி

ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (1/12 position to the  rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் புனர்பூசம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

ஆயில்யம், பூரம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது!

திருவாதிரை, பூசம், மகம், மூலம் ஆகிய 4 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)


அன்புடன்
வாத்தியார்
 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9 comments:

  1. Good morning sir. Attendance marked.

    ReplyDelete
  2. இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ப்ரேகிங்க் நியுஸே இது தான் ஆனந்தமுருகன்.

    நொஸ்ராடாமஸின் கணிப்ப்பால் இது வரை வானில் வெளிப்படாத ஃபீக்கஸ் நட்சத்திரம் 21-12-12 அன்று தோன்ற இருக்கிறது. அது காட்சி அளிக்கும் போது
    பூமியில் பெரிய மாற்றங்கள் நிகழும் எனவும் பஞ்சம், இயற்கை சீற்றம், யுத்தம் போன்ற அழிவுகளை அது ஏற்படுத்துமாம்.

    இந்த நட்சத்திரத்தின் காந்தப்புயல் பாதிப்பு சூரிய குடும்பத்துக்கு அதிக அளவு இருக்குமாம்.

    ஃபீக்கஸ் நட்சத்திரம் பற்றி விஞ்ஞானிகளின் கருத்தும் கொஞ்சம் இதை ஒத்ததாகவே உள்ளது.

    விஞ்ஞானிகளின் சொல்வது; 2012 ம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காந்தப்புல பாதிப்பு சூரிய குடும்பத்தை பாதிக்கும்.
    இதனால் பூமி தனது வட,தென் துருவங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும்.

    ஆக இரண்டுக்கும் முடிச்சு போட்டு உலகம் பர பரத்துக்கொண்டு இருக்கிறது வரும் 21 தேதியை உலகம் ஆவலோடு எதிர் பார்க்கிறது த்ரில் இல்லைஎன்றால் வாழ்க்கை சுவைக்காதே. சஸ்பென்சோடு நாட்கள் நகர்கிறது பார்ப்போம் 21 ந்தேதியை.

    ஆனால் அதற்கு முன் தான் அறிவிப்பு வந்து விட்டதே தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று. சந்தோஷமாய் கொண்டாடுவோம்.

    ReplyDelete
  3. வருகை பதிவுடன்
    வலமாக வரும் இந்த பாடல்

    பதிவிற்றேற்றாற் போல்
    பத்திரமாக சுவைக்க...

    நான் என்ன சொல்லிவிட்டேன்
    நீ ஏன் மயங்குகிறாய்?
    உன் சம்மதம் கேட்டேன்
    ஏன் தலைகுனிந்தாயோ?

    செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி - கொண்ட
    மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
    சுகம் ஊறி விட்டதடி
    முகம் மாறி விட்டதடி

    ReplyDelete
  4. ///Blogger kmr.krishnan said...
    Present sir! Thank you Sir!////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  5. ////Blogger KJ said...
    Good morning sir. Attendance marked.////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  6. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  7. /////Blogger thanusu said...
    இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ப்ரேகிங்க் நியுஸே இது தான் ஆனந்தமுருகன்.
    நொஸ்ராடாமஸின் கணிப்ப்பால் இது வரை வானில் வெளிப்படாத ஃபீக்கஸ் நட்சத்திரம் 21-12-12 அன்று தோன்ற இருக்கிறது. அது காட்சி அளிக்கும் போது
    பூமியில் பெரிய மாற்றங்கள் நிகழும் எனவும் பஞ்சம், இயற்கை சீற்றம், யுத்தம் போன்ற அழிவுகளை அது ஏற்படுத்துமாம்.
    இந்த நட்சத்திரத்தின் காந்தப்புயல் பாதிப்பு சூரிய குடும்பத்துக்கு அதிக அளவு இருக்குமாம்.
    ஃபீக்கஸ் நட்சத்திரம் பற்றி விஞ்ஞானிகளின் கருத்தும் கொஞ்சம் இதை ஒத்ததாகவே உள்ளது.
    விஞ்ஞானிகளின் சொல்வது; 2012 ம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காந்தப்புல பாதிப்பு சூரிய குடும்பத்தை பாதிக்கும்.
    இதனால் பூமி தனது வட,தென் துருவங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும்.
    ஆக இரண்டுக்கும் முடிச்சு போட்டு உலகம் பர பரத்துக்கொண்டு இருக்கிறது வரும் 21 தேதியை உலகம் ஆவலோடு எதிர் பார்க்கிறது த்ரில் இல்லைஎன்றால் வாழ்க்கை

    சுவைக்காதே. சஸ்பென்சோடு நாட்கள் நகர்கிறது பார்ப்போம் 21 ந்தேதியை.
    ஆனால் அதற்கு முன் தான் அறிவிப்பு வந்து விட்டதே தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று. சந்தோஷமாய் கொண்டாடுவோம்/////.

    ஆமாம். அந்தத் த்ரில் இல்லை என்றால், வாழ்க்கை சப்’பென்று ஆகிவிடும். 21ஆம் தேதிக்குப் பிறகு வேறு ஏதாவது ஒரு த்ரில்லை எதிர் நோக்குவோம். நன்றி தனுசு!

    ReplyDelete
  8. /////Blogger அய்யர் said...
    வருகை பதிவுடன்
    வலமாக வரும் இந்த பாடல்
    பதிவிற்றேற்றாற் போல்
    பத்திரமாக சுவைக்க...

    நான் என்ன சொல்லிவிட்டேன்
    நீ ஏன் மயங்குகிறாய்?
    உன் சம்மதம் கேட்டேன்
    ஏன் தலைகுனிந்தாயோ?
    செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி - கொண்ட
    மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
    சுகம் ஊறி விட்டதடி
    முகம் மாறி விட்டதடி/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com