26.10.12

தர்மம் தலை காக்கும்!


இசைஞானி பாடிய இனிமையான பாடல்
பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
our sincere thanks to person who uploaded this video clipping



+++++++++++++++++++++++++++++++++++++++++
“தர்மம் தலை காக்கும்: தக்க சமயத்தில் உயிர் காக்கும்”

மாணவக் கண்மணிகளுக்கு,

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே. முத்துராமன் அவர்களின் கடிதத்தை உங்கள் பார்வைக்கு அப்படியே கொடுத்துள்ளேன்
படித்துப் பார்த்து உங்களால் முடிந்த பொருள் உதவியைச் செய்யுங்கள்.

நமது வகுப்பறைக்குச் சராசரியாகத் தினமும் 4,000 பேர்கள் வருகிறார்கள். அவர்களில் 10 சதவிகதம் பேர்களாவது நன்கொடை கொடுத்து ஒரு நல்ல செயலுக்கு, ஒரு கிராமத்துக் குழந்தைகள், இலவசமாகக் கணினி பயிலுவதற்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

பணம் அளவல்ல. உங்களால் முடிந்த தொகையை, அவருக்கு அனுப்பலாம். அவரின் தொடர்பு மின்னஞ்சல் முகவரி அவரின் கடிதத்தில் உள்ளது.

 ரூபாய் 100, அல்லது 200, அல்லது 500, அல்லது ரூ.1000 என்று உங்களால் முடிந்த பணத்தை அவர் கொடுக்கும் வங்கி எண்ணிற்கு (Through NEFT) அனுப்பி வைக்கலாம் அல்லது மணியார்டர் மூலம் அனுப்பிவைக்கலாம். சராசரியாக தலைக்கு ரூ.250 அனுப்பினால் கூட அது லட்சத்தைத் தொடும். அதுதான் என் எதிர்பார்ப்பும். வகுப்பறையின் சார்பில் அதை, சேரும் அந்தப் பணத்தில் அந்தப்  பளிளிக்கு வேண்டிய கணினிகளை (சுமார் 3 அல்லது 4 கணினிகளை) வாங்கிக்கொடுத்து விடுவார். பண உதவி செய்தவர்களின் பெயரை நீங்கள் விரும்பினால் ஒரு நாள் வகுப்பறையில் தனிப் பதிவாக வலை ஏற்றுகிறேன்

ராமபிரானுக்கு அணில் உதவி செய்ததைப்போல, உங்களால் முடிந்த தொகையை அந்த மடத்தில் உள்ள பள்ளிக்குக் கொடுக்கலாம்.

நீங்கள் கொடுக்கும் பணம், உங்கள் தர்மக் கணக்கில் வரவாகும். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகளில் சொன்னால், “தர்மம் தலை காக்கும்: தக்க சமயத்தில் உயிர் காக்கும்” அதை நீங்கள் உங்கள் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்.

 ----------------------------------------------------
இடைச்சேர்க்கை:

ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நற்பணிக்குக் கொடை கொடுத்தவர்களின் பெயர் மட்டுமே வலை ஏற்றப்படும். தொகையைப் பற்றிய் (கொடுத்த பணத்தைப் பற்றிய விவரம்) குறிப்பு இருக்காது. அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே!

திரு.கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களுக்கு நீங்கள் மின்னஞ்சலில் செய்தி அனுப்பினால் (அதாவது கொடுக்கும் விருப்பம் பற்றிய செய்தியை எழுதினால்) அவர் உங்களுக்கு தனது வங்கிக் கணக்கு விவரத்தையும், மணியார்டர் அனுப்ப விரும்புவர்களுக்கு தனது வீட்டு முகவரியையும் தெரியப்படுத்துவார்!

அன்புடன்
வாத்தியார்


++++++++++++++++++++++++++++
Over to K.M.R.K's letter dated 23.10.2012

அன்புள்ளம் கொண்டவர்களே,

ஒரு சில மாத‌ங்களுக்கு முன்னால் பின் மதிய நேரத்தில் கணினி முன் அமர்ந்து 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்று'க் கொண்டு இருந்தேன்.அப்போது என் கை பேசி அழைத்தது. திறந்து நான் 'ஹலோ' சொல்லும் முன்னரே 'ஹரி ஓம்' என்று மறு முனையில் இருந்து குரல் கேட்டது.அட! வித்தியாசமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து அமர்ந்தேன்.

மறுமுனையில் இருந்து "நான் சுவரூபானந்தா பேசுகிறேன். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலிருந்து சன்னியாசம் பெற்றுக் கொண்ட‌ துறவி."

ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயரைக் காதால் கேட்டவுடனேயே மனம் கனிந்துவிட்டது.திருப்பராய்த்துறை தபோவனம் என்றவுடன் 'பெரியசுவாமி' என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படட ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரைப் பற்றிய நினைவு ஓடியது.அடியேன் சிறுவனாக இருந்தபோது பெரியசுவாமிகளின் முன்னால் விவேகானந்தரின் சிகாகோ உரையைப் பேசிக் காண்பித்துப் பாராட்டைப் பெற்றது நினைவுக்கு வந்தது.பெரிய சுவாமிகள்தான் தென் தமிழகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தை வளர்த்து எடுத்தவர். 7 கல்லூரிகள் 70 பள்ளிகள் அவருடைய ஊக்கத்தால் தோற்றுவிக்கப்பட்டன.

அவருடைய ஸ்ரீம‌த்பகவத்கீதை உரை நூலும், திருவாச‌கம் மற்றும் தாயுமானவர் உரைக்கோவையும் இல்லாத இல்லங்கள், பள்ளிகள், நூலகங்கள் இல்லை என்ற அளவு லட்சக்கணக்கில் மலிவு விலையில் தபோவன‌ம் வெளியிட்டுள்ளது. தினசரித் தியானம் என்ற நூலும் ஒரு நாளைக்கு ஓர் நற்சிந்தனை என்ற அளவில் கையடக்கமாகப் பலரும் எப்போதும் வைத்துள்ளனர்.

"உங்களுடைய கைபேசி எண்ணை தஞ்சை நாகராஜன் என்ற அனபர் எனக்கு அளித்தார். தங்களைப் பற்றியும் உயர்வாகக் கூறினார்"

என் சிந்தனைகளுக்குக் கடிவாளம் போடுவதுபோல மறுமுனையில் இருந்து சுவரூபானந்தரின் குரல் ஒலித்தது.

தஞ்சை நாகராஜன்! எனக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்.ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் எளிய பணி செய்யும் ஊழியர்.  குணத்திலும், சேவையிலும், பழகுவதிலும், ஆன்மீகத்திலும் முதல் த‌ரமானவர்.சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அவரிடம் நல்லதொரு நூலகம் உள்ளது.அத்தனை நூல்களையும் எழுத்தெண்ணிப் படித்தவர்.ஆனால் வெளியில் தன் அறிவைப் பறை சாற்றமாட்டார். ஆன்மீகப் புத்தகங்கள் பலவற்றையும் அவரிடமிருந்தே நான் வாங்கி வாசித்துள்ளேன். திருமண பந்தத்தில் கட்டுப்படாமல் எந்த பொதுச் சேவையிலும் தன்னால் ஆன உடல் உழைப்பை நல்கக் கூடியவர். 'வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு' என்ற குற‌ளுக்கு நாகராஜன் ஒரு முன்னுதாரணம்.

"நான் இப்போது துறையூரிலிருந்து எட்டுகிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையத்தில் ஸ்ரீலஸ்ரீ பிரமானந்த சுவாமிகள் மடாலயத்தில் உள்ளேன். இங்கு தேனி சித்பவானந்தர் ஆசிரமம் மற்றும் புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடம் அதிபதி ஸ்ரீமத் சுவாமி ஓங்கரானந்தர் அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ண வேதாந்த ஆசிரமம் அமைத்துக்கொள்ள இந்த மடாலயத்தை வழங்கியுள்ளார்கள்"

ஸ்ரீ சுவாமி ஓங்காரானந்தர்! கடந்த 25 ஆன்டுகளுக்கும் மேலாக பகவத் கீதையையும், வேதாந்த பாடங்களையும் பலருக்கும் அழகிய தமிழில் போதிக்கும் மகான்.

"நீங்கள் இங்கு ஒருமுறை வரவேண்டும்.இங்கே ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பணிகளைத் துவங்கிச் சேவைகள் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை. இங்கே வியாழக்கிழமை தோறும் சத்சங்கம் நடக்கும் அந்த சமயம் வாருங்கள் இரவு தங்கி கலந்தாலோச‌னை செய்வோம்." இது மறுமுனையில் சுவாமி சுவரூபானந்தர்.

சரி என்று ஒப்புக் கொண்டு அடுத்த வியாழன் அன்று அந்த ஆசிரமத்துக்கு சரியாக மாலை ஆறுமணிக்குச்  சென்று சேர்ந்தேன்.

நான் சென்று சேர்ந்த சமயம் சுவாமி சுவரூபானந்தர் சத்சங்கம் துவங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு தயாராகக் காத்திருந்தார்கள். அந்தக் கிரமத்து மகளிரும், சிறுவர், சிறுமிகளும் ஒரு சில பெரியவர்களும் ஒவ்வொருவராக வந்து குழுமினார்கள். அவர் அவர்களுக்குத் தெரிந்த பக்திப்பாடல், நாமாவளிகள் எல்லாம் பாடினார்கள். இறுதியில் சுவாமிகளின் சிறிய உரையுடன் வழிபாடு முடிந்தது.

வழிபாடு ஒரு சிறிய கோவிலின் முன்னர் நடந்த்தது. அக்கோவிலின் உள்ள சிவலிங்கத்திற்குப் பெயர் உண்டா என்று வினவினேன்.

'இது ஸ்ரீலஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகளின் அதிஷ்டான ஜீவசமாதிக் கோவில்' என்று விளக்கினார் சுவரூபான‌ந்தர் ஜீவ சமாதியில் இருக்கும் சுவாமிகளின் வரலாறு என்ன? சுருக்கமாகப் பார்ப்போம்.

ஸ்ரீபிரமானந்த சுவாமிகள் 1867‍‍‍ல் தஞ்சையில் பிறந்து வளர்ந்து, இங்கே துறையூர் சிக்கதம்பூர் பாளையத்தில் 1921ல் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள். சுவாமிகளின் சிறப்பு என்னவெனில் அவர்கள் வேத வேதாந்தங்களையும், தத்துவங்களையும் நன்றாகக் கற்றுணர்ந்து அதனை பிறருக்கும் உபதேசங்களாகக் கொடுக்கும் ஆற்றலுடையவர்களாக இருந்துள்ளார்கள். தமிழ்,சமஸ்கிருதம்,மராட்டி, தெலுங்கு, வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்யம் உடையவராக இருந்துள்ளார்கள். தஞ்சை வடக்கு ராஜவீதியில் நூலகமும், அச்சுக்கூடமும் நிறுவி நாற்பதுக்கும் மேற்பட்ட வேதாந்த நூல்களுக்கு தமிழில் விளக்கம் அளித்து நூல்களாக வெளியிட்டுள்ளார்கள்.அவ‌ர்கள் தமிழில் மொழி பெயர்த்து விளக்கவுரை எழுதிய மிகப் பெரிய நூல் 'பஞ்சதசி' இது சிருங்கேரி ஸ்ரீவித்யாரண்யர் சமஸ்கிருதத்தில் ஆக்கிய நூல். பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்நூல் திருக்கோவிலூர், ஸ்ரீஞானாந‌ந்த தபோவனத்தாரால்  இரண்டுபாகங்களாக வெளியிடப்ப‌ட்டுள்ளது.

அன்று இரவு அந்த ஜீவ சமாதி கோவில் உள்ள இடத்தில் தங்கினேன். நீண்ட நேரம் சுவரூபானந்தருடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நள்ளிரவுக்குப்பின் கண்ணயர்ந்தேன். கனவுத்தோற்றமாக ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் தோன்றியது.சிறிது நேரம் கழித்து சுவாமி சிதபவாநந்தர் தோற்றம் தெரிந்தது.மீண்டும் ஜடாமுடியுடன் கூடிய ஒரு சாது நடமாடுவது போன்ற‌ தோற்றம் கனவில் வந்தது. காலையில் சமாதிக்கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கே சுவாமி பிரம்மானந்தரின் உருவப் படம் மாட்டியிருந்தது. அது நான் கனவில் கண்ட அதே உருவமே.ஆச்சரியத்தில் அசைவற்று நின்றேன். எனக்கு கனவில் வந்து ஏதோ செய்தியை சொல்வது போலத் தோன்றியது.

சுவாமி சுவரூபானந்தருடன் கலந்தாலோசித்தேன். ஸ்ரீ ராமகிருஷ்ண சம்பிரதாயப்படி ஏதாவது சமுதாயப்பணியையும், ஆன்மீகப்பணியுடன் கலந்து செய்ய வேண்டும்; என்ன செய்யலாம் என்று சிந்தித்தோம். பல யோசனைகளுடன் மறு நாள் விடை பெற்று வந்து விட்டேன்.

ஒரு மகான் வாழ்ந்த இடம். அவருடைய ஜீவ சமாதி இருக்கும் இடம். அத‌னைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் அந்த நிறுவனத்தால் சமூகத்திற்கும் ஏதாவது பயன் இருக்க வேண்டும். என்ன செய்யலாம்?

என் குணம் ஏதாவது ஒரு செய்தி மனதில் விழுந்துவிட்டால் அதைப்பற்றியே தொடர்ந்து சிந்திப்பது. அடுத்து என்ன என்ன என்று மனம்   கேட்டது. கைபேசியில் சுவாமிஜியுடனும் நண்பர்களுடனும் பேசினேன். எனது நெடுநாளைய நண்பர்  திரு முரளீதரன் ‘சேவாலயா’ என்ற தொண்டு நிறுவனத்தைக் கால் நூற்றாண்டாக நடத்தி வருபவர்.(சேவாலயாவைப் பற்றி நம் வகுப்பறையில் 11 ஏப்ரல் 2011 ல் கட்டுரை எழுதியுள்ளேன்) அவரை சென்னையில் இருந்து  அழைத்து வந்து இரண்டு நாட்கள் சிக்கத்தம்பூர் மடாலயத்தில்  தங்க வைத்து ஆலோசனை கலந்தோம். இறுதியாக ஒரு இலவச கணினிப்பயிற்சி மையத்தைத் துவங்குவது என்ற முடிவுக்கு வந்தோம்.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 12 ஜனவரி 2013 அன்று துவங்க உள்ளன. அதனை ஒட்டி இந்த சேவையைத் துவங்க உள்ளோம்.

குக்கிராமமான சிக்கத்தம்பூர் பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவர்கள்  இளைஞர்களுக்குப் பயன்படும் வண்ணம் இந்த மையம் நிறுவப்பட‌ வேண்டும்.

அங்கே இருக்கும் கட்டிடங்களைப் பழுது பார்த்தல், மின்சார இணைப்பு, இன்வர்டர், கணினிகள், மேசை நாற்காலிகள்,  தொடர் செலவுகள் என்று ரூபாய் பத்துலட்சம் மதிப்பீடு செய்துள்ளோம்.

என் வகையாக 4 கணினிகள், ஐந்து மேசைகள், பத்து நாற்காலிகள்  ஆகியவற்றுக்கான தொகையை வசூலித்தோ அல்லது என் சொந்தப் பணத்திலிருந்தோ தருகின்றேன் என்று சுவரூபானந்தருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன்.இது ரூ.1,30,000/= வரை ஆகலாம்.அதற்காக நன்கொடை வேண்டி என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள் வைத்து வருகிறேன். அந்த வகையில் வாத்தியாரிடமும் வந்த போது, அவர்கள் வழக்கமான பெருந்தன்மையுடன் வகுப்பறையில் கட்டுரை வெளியிடுகிறேன் என்று ஆதரவளித்தார்கள்.

இக்கட்டுரையைக் கண்ணுறும்  வகுப்பறை நண்பர்கள் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக அளித்து நல்லதொரு கல்விச் சேவையை துவங்க உத‌விக்கரம் நீட்ட வேண்டும் என்ற்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

உதவ முன் வரும் நண்பர்கள் என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
வகுப்பறை மூலமாகக் கிடைக்கும் நன்கொடைகளைப் பற்றிய விவரங்களை வாத்தியார் அனுமதித்தால், நன்கொடயாளர்களும் சம்மதித்தால் அவர்களுடைய பெயர்களுடன் பட்டியல் வெளியிடலாம்.

ஒரு நற்செயலுக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ரூபாய் உங்களுக்கு பத்து ரூபாயாகப் பெருகித் திரும்பக் கிடைக்கும். எனவே தாராளமாக தங்களால் இயன்றதை அளியுங்கள். வாழ்த்துக்களுடனும் நன்றியுடனும் பெற்று கொண்டு  ரசீது அனுப்பித்தருகிறேன். புண்ணியத்தில் அனைவருக்கும் பங்களிக்கவே இந்த வேண்டுகோள்.

என் மின் அஞ்சல் முகவரி: kmrk1949@gmail.com

வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!!
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

Swami Chithbavanawthar
Brahmananda Bhavanam
Samthi, Temple and Classrooms
Inside the classroom, awaiting for repairs
Swami Omkarananda

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. குருவிற்கு வணக்கம்
    நன்றி,
    அனுப்பும் முகவரி இல்லை ,

    ReplyDelete
  2. '' ------------------------------------------------
    அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    அன்ன யானினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
    --------------------------------------------------- ''
    என்பான் மகாகவி சுப்ரமணிய பாரதி.
    அந்த புண்ணிய காரியத்திற்கு தன்னோடு
    நில்லாமல், அனைவரையும் வந்து கலந்து
    கொள்ள வேண்டிய நமது கே.எம்.ஆர்.கே அவர்களோடு சேர்ந்து..

    இந்த மகா புண்ணியக் காரியத்தில் நமது பங்கையும் நாம் அனைவரும் செய்வோம்
    என்று நானும் எனது சார்பில் உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
    (நிச்சயமாக எல்லா சூழலிலும் தர்ம சிந்தனை உள்ள அனைவரின் நிலைமையும் ஒரே மாதிரி பொருளாதார நிலையில் இருக்காது. அதனால் இயன்றதைத் தரலாம், அதே வேலை பொருள் தந்தவர்களின் பெயரை பட்டியலிடுவது சரியாகுமா! அப்படி வெளியிட்டாலும் தொகையை குறிப்பிடாமல் வெளியிடுவது வேண்டுமானால் செய்யலாம் என்பது எனது எண்ணம்... எங்கே? பட்டியலில் வரும் தொகை நமது சிரமத்தை கூறும்! என்று நினைத்து சிலர் இந்த குறைந்த தொகையை எப்படி அனுப்புவது என்றும் எண்ண முறலாம். அதானல் பெயரோடு நிறுத்தினாலே போதும். அதுவும் அவசியப்பட்டால் தான். இது எனது அபிப்ராயமே.
    நன்றி.

    ReplyDelete
  3. அப்பன் முருகனைப் பற்றிய அமுத கானம்.
    அதுவும் இசைஞானியின் குரல்களிலே...
    அற்புதம் ஐயா! பகிர்விற்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. கிருஷ்னன் சார் உங்களின் தொண்டு உள்ளத்திற்கு, நீங்கள் நினைப்பது ஈடேரும்.

    ReplyDelete
  5. முள்ளிலும் பூக்கள் மலர்வதுண்டு
    புல்லிலும் ஜீவன் வளர்வதுண்டு
    கள்ளியிலும் பூக்கள் உண்டு
    கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு
    சொல்லுக்கும் அர்த்தம் உண்டு
    சொல்லாதற்கும் அர்த்தம் உண்டு

    நாடியோருக்கு அளிக்க மனமுண்டு
    தேடிவந்தோருக்கு கொடுக்க யாதுண்டு
    கலங்கும் நெஞ்சமிங்கே தானுண்டு
    அன்போடு கருணை யுண்டு
    ஏழைக்கு இறங்கும் மனமுண்டு
    அந்தோபாவம் என்றிரங்கும் குணமுண்டு
    அதுவும் தான் ஈகையில் வருவதுண்டு

    இல்லாதவர் பலர் உண்டு
    கல்லாதவர் மிக உண்டு
    பொல்லாதவர் பலர் உண்டு
    யாருமில்லாதவர் தான் யாருண்டு?

    அல்லாவுன் கருணை உண்டு
    அதனாலே ஈகையும் உண்டு
    இருப்போரே நல்லிதயம் கொண்டு
    கொடுப்போம் பொருளிலாரைக் கண்டு...

    அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டுமென
    அவனைத் தொழுது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. இடைச்சேர்க்கை:

    ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நற்பணிக்குக் கொடை கொடுத்தவர்களின் பெயர் மட்டுமே வலை ஏற்றப்படும். தொகையைப் பற்றிய் (கொடுத்த பணத்தைப் பற்றிய விவரம்) குறிப்பு இருக்காது. அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே!

    திரு.கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களுக்கு நீங்கள் மின்னஞ்சலில் செய்தி அனுப்பினால் (அதாவது கொடுக்கும் விருப்பம் பற்றிய செய்தியை எழுதினால்) அவர் உங்களுக்கு தனது வங்கிக் கணக்கு விவரத்தையும், மணியார்டர் அனுப்ப விரும்புவர்களுக்கு தனது வீட்டு முகவரியையும் தெரியப்படுத்துவார்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  7. "தர்மம் தலை காக்கும்" இதற்கு நண்பர் ஆலாசியத்தின் கவிதை அத்தனை பொருத்தம் வரிக்கு வரி ரசித்தேன்.

    ஈகை கொண்டோர்
    ஈசனுக்கு இனை.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. வணக்கம்..

    இன்றைய பதிவின் இணைப்பாக
    தோழர் kmrk அவர்களின் கடிதம் வெளியானதை
    கண்டனம் செய்கிறோம்..

    உதவி கேட்டு வரும் கடிதத்தினை பதிவில்
    சேர்ப்பது என்றால் பல 100 உதவிகள் கேட்டு
    பல மாணவர்களிடமிருந்து பல கடிதங்கள் உள்ளன

    அவை அனைத்தையும் அனுமதிப்பது முடிமா?
    அதனை அனுமதிப்பது தான் முறையாகுமா?
    அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என வாத்தியார்
    பரிந்துரை செய்வது நியாயமா?

    மாணவர்களின் ஆக்கத்தை வெளியிடுவதாக இருந்தால்
    அதற்கு இம் முறை தான் சரியென வாத்தியார் கருதினால்
    அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றோம்

    திரு KMRK விரும்பினால்
    தனி மின்னஞ்சலாக எல்லா வகுப்பு மாணவர்களுக்கும்
    அனுப்பலாம் விரும்புபவர்கள் உதவலாம்..

    இது எதிர்ப்பு கடிதம் அல்ல
    நற்சிந்தனை கொண்டு வழங்கும் தகவல்

    உடன் மனதில் ஏற்றி
    அந்த கடிதத்தை நீக்கம் செய்யவேண்டும்

    துறவி என்பவர் ஏன் இதை
    துறக்க வில்லை.. என

    சாமி(யார்) களை பற்றி
    கருத்து சொல்ல வில்லை

    KMRK அவர்களின் கடிதத்தை
    இன்றை பதிவில் இருப்பது சரியாக படி(ய)வில்லை

    ReplyDelete
  10. ///////Blogger அய்யர் said...
    வணக்கம்..
    இன்றைய பதிவின் இணைப்பாக
    தோழர் kmrk அவர்களின் கடிதம் வெளியானதை
    கண்டனம் செய்கிறோம்..
    உதவி கேட்டு வரும் கடிதத்தினை பதிவில்
    சேர்ப்பது என்றால் பல 100 உதவிகள் கேட்டு
    பல மாணவர்களிடமிருந்து பல கடிதங்கள் உள்ளன/////

    அப்படியா? எனக்குத் தெரியவில்லை! உங்களுக்குத் தெரிந்திருக்கிறது! அனுப்பச் சொல்லுங்கள். நியாயமான, உண்மையான, அவசியமான கோரிக்கைகளை ஏந்திவரும் கடிதங்களை பதிவில் வெளியிட நான் தயாராக உள்ளேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///// அவை அனைத்தையும் அனுமதிப்பது முடிமா?
    அதனை அனுமதிப்பது தான் முறையாகுமா?
    அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என வாத்தியார்
    பரிந்துரை செய்வது நியாயமா?///////

    ஏன் முடியாது? கூகுள் ஆண்டவரின் த்யவில் பதிவின் அளப்பரிய அள்வில் (sizeல்) எல்லாம் சாத்தியமே!
    உங்களுக்கு முறையாகப் படுவது எனக்கு முறையில்லாததாகப் படலாம். எனக்கு முறையாகப் படுவது, உங்களுக்கு முறையில்லாததாகப் படலாம். ஆகவே எல்லோரையும் கேட்டு நான் பதிவை நடத்த முடியாது. அதை மனதில் வையுங்கள்! என் மனதிற்கு சரி என்று படுவதைப் பரிந்துரை செய்வதில் என்ன தவறு?

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////மாணவர்களின் ஆக்கத்தை வெளியிடுவதாக இருந்தால்
    அதற்கு இம் முறை தான் சரியென வாத்தியார் கருதினால்
    அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றோம்/////

    மாணவர்களின் ஆக்கங்களுக்கும் (கட்டுரை, கதைகளுக்கும்) இன்றைய கடிதத்திற்கும் என்ன சம்பந்தம்? எதற்காக கொக்கி போடுகிறீர்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள்? தெளிவாகப் புரியும்படியாகச் சொல்லுங்க்ள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///////திரு KMRK விரும்பினால்
    தனி மின்னஞ்சலாக எல்லா வகுப்பு மாணவர்களுக்கும்
    அனுப்பலாம் விரும்புபவர்கள் உதவலாம்..///////

    வகுப்பறைக்கு வரும் 4,000 பேர்களின் மின்னஞ்சல் முகவரியும் அவருக்கு எப்படிக் கிடைக்கும்? தெரிந்துதான் இதைச் சொல்கிறீர்களா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////இது எதிர்ப்பு கடிதம் அல்ல
    நற்சிந்தனை கொண்டு வழங்கும் தகவல்
    உடன் மனதில் ஏற்றி
    அந்த கடிதத்தை நீக்கம் செய்யவேண்டும்//////

    ஒரு கிராமத்துப் பள்ளிக்கு உதவி கோரி வந்துள்ள கடிதத்தை நீக்கச் சொல்வதில் என்ன நற்சிந்தனை உள்ளது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////துறவி என்பவர் ஏன் இதை
    துறக்க வில்லை.. என
    சாமி(யார்) களை பற்றி
    கருத்து சொல்ல வில்லை//////

    துறவி என்பவர் எதை எதைத் துறக்க வேண்டும் என்று பட்டியல் கொடுங்கள். உயிரை வைத்துக்கொள்ளலாமா? அல்லது அதையும் துறக்க வேண்டுமா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////KMRK அவர்களின் கடிதத்தை
    இன்றை பதிவில் இருப்பது சரியாக படி(ய)வில்லை//////

    உங்கள் ஒருவருக்கு சரியாகப் படவில்லை. சரி, மற்ற மாண்வர்கள் என்ன சொல்கிறார்கள். பார்க்கலாம்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    என்றும் அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  11. அய்யர் ஏனிப்படி பின்னூட்டம் இட்டுள்ளார்கள்...
    வருத்தம் அளிக்கிறது.

    இன்றையப் பதிவில் ஏழை மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்கிறார்கள் (யார்? அதைப் பற்றிய விளக்கம் பெரிதாகப் படவில்லை), தர்மம் செய்ய விரும்புபவர்கள் அதை செய்யுங்கள்... இது தானே மொத்தமாக கூற வந்த விஷயம்.

    நாட்டின் சுதந்திரத்திற்கு போரிட்ட பலரில் எத்தனையோ துறவிகளும் இருந்தார்கள்...எனினும் இன்று அய்யரின் கருத்தைப் பற்றிய மேலும் விவாதங்கள் தயவு செய்து யாரும் செய்ய வேண்டாம். அய்யரின் பார்வை நமக்கு புரியாமலும் இருக்கலாம்.

    இன்றையப் பதிவு தர்மம் செய்யுங்கள் என்று கேட்கும் ஒரு நற்சிந்தனை உள்ளப் பதிவு.

    அன்னை தெரேசா அவர்கள் தனது தோடு நிறுவனத்திற்கு நிதி கேட்டு வங்கத்தில் வர்த்தககர்களிடம் கையேந்தி இருக்கிறார்கள் அப்போது ஒரு வர்த்தகர் அன்னையின் இந்தியக் கையில் எச்சிலை துப்பி இருக்கிறார். கருணையே மொத்தமும் மான அன்னை இல்லையா!

    உடனே, அதை தனது அங்கியில் துடைத்துக் கொண்டு, இது எனக்கு மகனே, எனது குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்றாளாம். அதை கண்ட அந்த வர்த்தகர் கண்கள் கலங்க மிகவும் வெட்கப் பட்டு, இறங்கி / தன்னிலைக்கு இரங்கி, அன்னைக்கு தன்னால் ஆன, நிதி உதவியை செய்தாராம்!!!.

    ஏழைகளுக்கு உதவ என்னும் அன்பானமானவர்களே தயவு செய்து தங்களால் ஆன, உதவியை செய்யுங்கள். ஒரே ஒரு சிந்தனை, ஒரே ஒரு யோசனை. வேறெதுவும் வேண்டாம். உதவ வேண்டும் என்று மாத்திரமே அந்த எண்ணமாக இருக்கட்டும்.

    இயன்றதை செய்யுங்கள். பிறருக்காக வீதியில் வந்து கேட்பதற்கு ஒரு மனம் வேண்டும். பிறருக்காக நாம் செய்ய முடிய வில்லை. அதனால் செய்பவரோடு சேர்ந்து கொள்வோம்.

    அன்பான வேண்டுகோள் தன்னால் இயன்றதை கொடுத்து உதவுங்கள். தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும். அதெல்லாம் இருக்கட்டும். கொடுத்த பின்பு நம்மைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை நமக்கே தரும்.

    இதற்கு மேலும் நமது தாய் தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் என்று எத்தனையோ பேருக்கு நாம் அறியாது செய்த துரோகத்திற்கு ஒரு பரிகாரமாகவும் இருக்கும்.

    தயவு செய்து இயன்றதை அனுப்புங்கள் அது ஒரு நூறு ரூபாயாக இருந்தாலும் சரி.

    அன்பே சிவம்... கனிந்த அன்பை கருணை மிகுந்த உள்ளத்தை தருவாய் சிவமே...

    ReplyDelete
  12. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி,
    அனுப்பும் முகவரி இல்லை////

    இடைச் சேர்க்கையில் அதற்கான விவரம் உள்ளது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி உதய குமார்!

    ReplyDelete
  13. /////Blogger ஜி ஆலாசியம் said...
    '' ------------------------------------------------
    அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    அன்ன யானினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
    --------------------------------------------------- ''
    என்பான் மகாகவி சுப்ரமணிய பாரதி.
    அந்த புண்ணிய காரியத்திற்கு தன்னோடு
    நில்லாமல், அனைவரையும் வந்து கலந்து
    கொள்ள வேண்டிய நமது கே.எம்.ஆர்.கே அவர்களோடு சேர்ந்து..
    இந்த மகா புண்ணியக் காரியத்தில் நமது பங்கையும் நாம் அனைவரும் செய்வோம்
    என்று நானும் எனது சார்பில் உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
    (நிச்சயமாக எல்லா சூழலிலும் தர்ம சிந்தனை உள்ள அனைவரின் நிலைமையும் ஒரே மாதிரி பொருளாதார நிலையில் இருக்காது. அதனால் இயன்றதைத்

    தரலாம், அதே வேலை பொருள் தந்தவர்களின் பெயரை பட்டியலிடுவது சரியாகுமா! அப்படி வெளியிட்டாலும் தொகையை குறிப்பிடாமல் வெளியிடுவது

    வேண்டுமானால் செய்யலாம் என்பது எனது எண்ணம்... எங்கே? பட்டியலில் வரும் தொகை நமது சிரமத்தை கூறும்! என்று நினைத்து சிலர் இந்த குறைந்த

    தொகையை எப்படி அனுப்புவது என்றும் எண்ண முறலாம். அதானல் பெயரோடு நிறுத்தினாலே போதும். அதுவும் அவசியப்பட்டால் தான். இது எனது

    அபிப்ராயமே.
    நன்றி.//////

    உங்கள் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான அறிவிப்பு இடைச்சேர்க்கையில் உள்ளது! நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  14. /////Blogger ஜி ஆலாசியம் said...
    அப்பன் முருகனைப் பற்றிய அமுத கானம்.
    அதுவும் இசைஞானியின் குரல்களிலே...
    அற்புதம் ஐயா! பகிர்விற்கு நன்றிகள்.////

    வேறு ஒன்றைத் தேடும்போது, அவருடைய பாடல் அதிஷ்டவசமாகக் கிடைத்தது. உடனே பதிவில் ஏற்றியுள்ளேன். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. /////Blogger ஜி ஆலாசியம் said...
    முள்ளிலும் பூக்கள் மலர்வதுண்டு
    புல்லிலும் ஜீவன் வளர்வதுண்டு
    கள்ளியிலும் பூக்கள் உண்டு
    கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு
    சொல்லுக்கும் அர்த்தம் உண்டு
    சொல்லாதற்கும் அர்த்தம் உண்டு
    நாடியோருக்கு அளிக்க மனமுண்டு
    தேடிவந்தோருக்கு கொடுக்க யாதுண்டு
    கலங்கும் நெஞ்சமிங்கே தானுண்டு
    அன்போடு கருணை யுண்டு
    ஏழைக்கு இறங்கும் மனமுண்டு
    அந்தோபாவம் என்றிரங்கும் குணமுண்டு
    அதுவும் தான் ஈகையில் வருவதுண்டு
    இல்லாதவர் பலர் உண்டு
    கல்லாதவர் மிக உண்டு
    பொல்லாதவர் பலர் உண்டு
    யாருமில்லாதவர் தான் யாருண்டு?
    அல்லாவுன் கருணை உண்டு
    அதனாலே ஈகையும் உண்டு
    இருப்போரே நல்லிதயம் கொண்டு
    கொடுப்போம் பொருளிலாரைக் கண்டு..
    அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டுமென
    அவனைத் தொழுது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்/////.

    உங்களுடைய ஈகைத் திருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஆலாசியம்! நம் வகுப்பறையில் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் அததனை உள்ளங்களுக்கும் இந்தப் பாடலையே வாழ்த்தாகச் சமர்ப்பிக்கிறேன்!

    ReplyDelete
  16. /////Blogger thanusu said...
    "தர்மம் தலை காக்கும்" இதற்கு நண்பர் ஆலாசியத்தின் கவிதை அத்தனை பொருத்தம் வரிக்கு வரி ரசித்தேன்.
    ஈகை கொண்டோர்
    ஈசனுக்கு இனை./////

    நல்லது நன்றி. அவருடைய அடுத்த பின்னூட்டத்தையும் பாருங்கள்!

    ReplyDelete

  17. ////Blogger ஜி ஆலாசியம் said...
    அய்யர் ஏனிப்படி பின்னூட்டம் இட்டுள்ளார்கள்...
    வருத்தம் அளிக்கிறது.
    இன்றையப் பதிவில் ஏழை மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்கிறார்கள் (யார்? அதைப் பற்றிய விளக்கம் பெரிதாகப் படவில்லை), தர்மம் செய்ய விரும்புபவர்கள் அதை செய்யுங்கள்... இது தானே மொத்தமாக கூற வந்த விஷயம்.
    நாட்டின் சுதந்திரத்திற்கு போரிட்ட பலரில் எத்தனையோ துறவிகளும் இருந்தார்கள்...எனினும் இன்று அய்யரின் கருத்தைப் பற்றிய மேலும் விவாதங்கள் தயவு செய்து யாரும் செய்ய வேண்டாம். அய்யரின் பார்வை நமக்கு புரியாமலும் இருக்கலாம்.
    இன்றையப் பதிவு தர்மம் செய்யுங்கள் என்று கேட்கும் ஒரு நற்சிந்தனை உள்ளப் பதிவு.
    அன்னை தெரேசா அவர்கள் தனது தோடு நிறுவனத்திற்கு நிதி கேட்டு வங்கத்தில் வர்த்தககர்களிடம் கையேந்தி இருக்கிறார்கள் அப்போது ஒரு வர்த்தகர் அன்னையின் இந்தியக் கையில் எச்சிலை துப்பி இருக்கிறார். கருணையே மொத்தமும் மான அன்னை இல்லையா!
    உடனே, அதை தனது அங்கியில் துடைத்துக் கொண்டு, இது எனக்கு மகனே, எனது குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்றாளாம். அதை கண்ட அந்த வர்த்தகர் கண்கள் கலங்க மிகவும் வெட்கப் பட்டு, இறங்கி / தன்னிலைக்கு இரங்கி, அன்னைக்கு தன்னால் ஆன, நிதி உதவியை செய்தாராம்!!!.
    ஏழைகளுக்கு உதவ என்னும் அன்பானமானவர்களே தயவு செய்து தங்களால் ஆன, உதவியை செய்யுங்கள். ஒரே ஒரு சிந்தனை, ஒரே ஒரு யோசனை. வேறெதுவும் வேண்டாம். உதவ வேண்டும் என்று மாத்திரமே அந்த எண்ணமாக இருக்கட்டும்.
    இயன்றதை செய்யுங்கள். பிறருக்காக வீதியில் வந்து கேட்பதற்கு ஒரு மனம் வேண்டும். பிறருக்காக நாம் செய்ய முடிய வில்லை. அதனால் செய்பவரோடு சேர்ந்து கொள்வோம்.
    அன்பான வேண்டுகோள் தன்னால் இயன்றதை கொடுத்து உதவுங்கள். தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும். அதெல்லாம் இருக்கட்டும். கொடுத்த பின்பு நம்மைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை நமக்கே தரும்.
    இதற்கு மேலும் நமது தாய் தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் என்று எத்தனையோ பேருக்கு நாம் அறியாது செய்த துரோகத்திற்கு ஒரு பரிகாரமாகவும் இருக்கும்.
    தயவு செய்து இயன்றதை அனுப்புங்கள் அது ஒரு நூறு ரூபாயாக இருந்தாலும் சரி.
    அன்பே சிவம்... கனிந்த அன்பை கருணை மிகுந்த உள்ளத்தை தருவாய் சிவமே.../////

    வருத்தம் கொள்ளாதீர்கள் ஆலாசியம் அவருடைய கருத்தை அவர் எழுதியிருக்கிறார். நம்முடைய கருத்துக்கள், எண்ணங்கள், மற்றும் செய்ல்களுடன், அனைவரும் ஒத்து வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே அவர் அவராகவே இருக்கட்டும்!!! வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  18. ஜி ஆலாசியம் said...அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டுமென
    அவனைத் தொழுது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

    SP.VR. SUBBAIYA said...நம் வகுப்பறையில் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் அததனை உள்ளங்களுக்கும் இந்தப் பாடலையே வாழ்த்தாக......


    ஒரு சிறு திருத்தம். ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமியர்கள் இரண்டு பெருநாள்களைக் கொண்டாடுகின்றனர். ஒன்று ரம்ஜான், மற்றொன்று பக்ரீத்.

    இதில் ரம்ஜான் என்பது
    30 நாட்கள் நோன்பிருந்து அந்த மாதம் முழுக்க தர்மம் செய்து பின் கொன்டாடும் பெருநாள் ரம்ஜான் பெருநாள் . இந்த மாதம் முழுக்க தர்மம் செய்வதால் இந்த ரம்ஜான் ஈகைத்திருநாள் என்று கொண்டாப்படுகிறது.

    மற்றொன்றான பக்ரீத் இறைவன் கட்டளைப் படி, குர்பானி என்னும் தியாகத்தை நிறைவேற்றி கொண்டாடும் பெருநாள் . இந்த பக்ரீத் தியாகத் திருநாள் என்று கொண்டாப்படுகிறது.

    அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. என்னுடைய வேண்டுகோள் கடித்த்தினை வலையேற்றி உலகின் பல மூலை,முடுக்குக்கெல்லாம் தெரியும் வண்ணம் செய்த ஐயாவுக்கு என் உளம் கனிந்த நன்றி.என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் நன்றி என்ற சொல்வதைத்தவிர?

    ஐயா கூறியுள்ள நானூறு பேரல்ல, 100 பேர் இந்த வேண்டுகோளுக்குச்செவிசாய்த்தாலே நான் மன நிறைவு பெறுவேன்.இன்று 27 அக்டோபர் 2012 மாலை 7 மணி நிலவரப்படி, அந்த வேண்டுகோள் பதிவிட்டபின்னர், எனக்கு வங்கி எண் கேட்டு வந்த மின் அஞ்சல்கள், ஐயாவையும் சேர்த்து 25 பேர்களாகும்.எல்லோருக்கும் பதில் அஞ்சல் அனுப்பியுள்ளேன்.

    உதயகுமார், ஹாலாஸ்யம், தனுசு ஆகியோருக்கு, ஆதரவுக் குரலுக்காக மிக்க நன்றிகள்.அய்யரின் 'டிசன்ட்' குரலுக்கும் நன்றி!இவ்விஷயத்தில் ஐயாவின் சொற்களுக்குக் கட்டுப்படுகிறேன்.







    ReplyDelete
  20. At the time I typing this using my I Pad, am in hospital bed. I'll get back to Mr. KMRK once I discharged.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com