24.8.12

கவிதைச் சோலை: வெற்றியும் தோல்வியும்!





1

சிவனாண்டி மகன் மலையாண்டி!

பக்திமலர்

வருவான்டி தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி - அவன்
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி - அவன் தான்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சிவனாண்டி மகனாகப் பிறந்தான்டி - அன்று
சினம் கொண்டு மலை மீது அமர்ந்தான்டி
நவலோக மணியாக நின்றான்டி - என்றும்
நடமாடும் துணையாக அமைந்தான்டி - அவன் தான்டி,
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

பாலபி ஷேகங்கள் கேட்பான்டி - சுவை
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி
காலாற மலை ஏற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று - சொல்லி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சித்தர்கள் சீடர்கள் பல கோடி - அவன்
செல்வாக்கு எவற்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப் புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

பாடலாக்கம் : கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
படம்:  தெய்வம்
வருடம்: 1972ம் ஆண்டு
-------------------------------------------
2




கவிதைச் சோலை: வெற்றியும் தோல்வியும்!

காடுசென் றேகொண்ட மனைவியைத் தோற்றவன்
    காகுத்தன் என்ற கதையும்
      காடுசெல் லாமலே களத்திலே தோற்றவன்
    கண்ணனால் வென்ற கதையும்
வீடுகண் டேபிறன் மனைவியைச் சேர்ந்தவன்
    மேனிப்புண் கொண்ட கதையும்
      வெற்றியும் தோல்வியும் தேவர்க்கும் உண்டென்ற
    வேதத்தைச் சொல்ல விலையோ!
மாடுவென்றா லென்ன மனிதன் வென்றா லென்ன
    வல்வினை வெற்றி மயிலே!
      மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
                   - கவியரசர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++=======

11 comments:

  1. கவியரசர் கண்ணதாசனுக்கு நம் முன்னோர்களுடைய கவிதைகளும் உந்துதலாக இருந்து வந்திருக்கிறது என்பது இந்தக் கவிதையின் மூலம் தெரியவருகிறது. வள்ளலாரின் கவிதைகளின் தாக்கம் இதில் தெரிகிறது. துன்பங்கள் மனிதர்க்கு மட்டுமல்ல, தேவர்க்கும் உண்டு என்கிறார் அவர். நல்ல கவிதை. சூலமங்கலம் சகோதரிகளின் குரல் முதல் பாடலைப் படிக்கும்போது நம் செவிகளில் ஒலிக்கிறது. நல்ல பதிவு.

    ReplyDelete
  2. அய்யா காலை வணக்கம் .

    ReplyDelete
  3. தஞ்சை சகோதரர் சொல்வதனை வழி மொழிகிறோம்..

    துன்பங்கள் தேவர்களுக்கும் உண்டு
    என்றே சாத்திரங்கள் சொல்கின்றன.

    ("முக்தி என்றோர் நிலை சமைத்தாய்" என்ற பாரதி முழங்கியதை நினைவுகூர்ந்து)

    முக்தி என்பதே மனிதனுக்குத் தான்
    தேவர்களும் மனிதனாக பிறந்தே முத்தி பெற வேண்டும் என்பதே சாத்திரக் கூறு

    "தேவர்களும் வாழ்த்துவர்
    தாம் வாழ" என்கிறது திருநெறி

    மனிதனை அடையாளம் காட்டும் பாடலினை
    மன்றத்தில் சமைத்த உமக்கு நன்றி

    முத்தையாவின்
    முத்தான பாடலுக்கு தலை வணங்குகிறோம்

    ReplyDelete
  4. குருவிற்க்கு வணக்கம்
    அருமையாண முருகன் பாடல்,
    கவிபேறசு கவிதை,
    நன்றி

    ReplyDelete
  5. /////Blogger Thanjavooraan said...
    கவியரசர் கண்ணதாசனுக்கு நம் முன்னோர்களுடைய கவிதைகளும் உந்துதலாக இருந்து வந்திருக்கிறது என்பது இந்தக் கவிதையின் மூலம் தெரியவருகிறது. வள்ளலாரின் கவிதைகளின் தாக்கம் இதில் தெரிகிறது. துன்பங்கள் மனிதர்க்கு மட்டுமல்ல, தேவர்க்கும் உண்டு என்கிறார் அவர். நல்ல கவிதை. சூலமங்கலம் சகோதரிகளின் குரல் முதல் பாடலைப் படிக்கும்போது நம் செவிகளில் ஒலிக்கிறது. நல்ல பதிவு.////

    உங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி கொபாலன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்//////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger அய்யர் said...
    தஞ்சை சகோதரர் சொல்வதனை வழி மொழிகிறோம்..
    துன்பங்கள் தேவர்களுக்கும் உண்டு
    என்றே சாத்திரங்கள் சொல்கின்றன.
    ("முக்தி என்றோர் நிலை சமைத்தாய்" என்ற பாரதி முழங்கியதை நினைவுகூர்ந்து)
    முக்தி என்பதே மனிதனுக்குத் தான்
    தேவர்களும் மனிதனாக பிறந்தே முத்தி பெற வேண்டும் என்பதே சாத்திரக் கூறு
    "தேவர்களும் வாழ்த்துவர்
    தாம் வாழ" என்கிறது திருநெறி
    மனிதனை அடையாளம் காட்டும் பாடலினை
    மன்றத்தில் சமைத்த உமக்கு நன்றி
    முத்தையாவின்
    முத்தான பாடலுக்கு தலை வணங்குகிறோம்//////

    கருத்துப் பகிர்விற்கும், தலை வணங்கிய மேன்மைக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  8. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்க்கு வணக்கம்
    அருமையாண முருகன் பாடல்,
    கவிபேரசு கவிதை,
    நன்றி//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger krishnababuvasudevan said...
    Paddam ezutuvathu illaiyea//////

    இப்போது எழுதிக்கொண்டிருப்பதெல்லாம் பாடமாகத் தெரியவில்லையா? என்ன சொல்ல வருகிறீர்கள் சாமி?

    ReplyDelete
  10. "வருவாண்டி மலையாண்டி தருவாண்டி..." என்ற நல்ல பாடலின் சுட்டி இதோ.
    http://www.youtube.com/watch?v=GjemmQyCrsM

    நன்றிகள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com