21.8.12

Astrology - Popcorn Post என்ன(டா) செய்யும் கோச்சாரம்?

Astrology - Popcorn Post என்ன(டா) செய்யும் கோச்சாரம்?

Popcorn Post No.22
பாப்கார்ன் பதிவுகள் - எண்.22

கோள்சாரம் அல்லது கோச்சாரம் என்பது இன்றைய தேதியில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவது ஆகும்! சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து, அதாவது உங்களுடைய சந்திர ராசியை வைத்து அதைப் பார்க்க வேண்டும். எண்ணும்போது ராசியையும் சேர்த்து எண்ண வேண்டும்.

கோச்சார கிரகங்கள் என்ன செய்யும்? தீய கோள்சாரங்கள் தொல்லைகளைக் கொடுக்கும். சிரமங்களைக் கொடுக்கும். சனீஷ்வரன் கோச்சாரத்தில் 8ம் இடம், 12ம் இடம், 1ம் இடம் இரண்டாம் இடங்களில் இருக்கும் காலங்களில் (மொத்தம் 10 ஆண்டு காலம்) தீமையான பலன்களையே கொடுப்பார்.

அப்படி ஒவ்வொரு கிரகமும் கோச்சாரத்தில் அதிகமான தொல்லையைக் கொடுக்கும், அதாவது ஜாதகனுக்கு அதிக அளவில் தீமையான பலன்களைக் கொடுக்கும் இடத்தைப் பற்றி முனுசாமி அதாங்க நம்ம முனிவர், பாடல் ஒன்றின் மூலம் அழகாகச் சொல்லியுள்ளார்

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
கேளப்பா குரு மூன்றில் கலைதானெட்டு
   கேடுசெய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
   சீறிவரும் கரும்பாம்பு நிதியில் தோன்ற
ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
   அப்பனே திசையினுடைய வலுவைப்பாரு
மாளப்பாகுற்றம் வரும் கோசாரத்தாலே
   குழவிக்குதிரியாணங் கூர்ந்து சொல்லே!
              - புலிப்பாணி முனிவர்

குரு - 3ம் இடம்
கலை (சந்திரன்) 8ம் இடம்
சனி - 1ல்
புந்தி (புதன்) - 4ல்
சேய் (செவ்வாய்) - 7ல்
கதிரோன் (சூரியன்) 5ல்
கரும்பாம்பு - நிதியில் - 2ல்
அசுர குரு - சுக்கிரன் - 6ல்
இருக்கும் காலத்தில் அதிகமான தீமைகளைச் செய்வார்களாம்.

அக்காலத்தில் ஜாதகனுக்கு நல்ல தசா/புத்திகள் நடந்தால் ஜாதகனுக்கு இந்தத் தொல்லைகள் அதிகம் இருக்காது. தசா நாதர்கள்/புத்தி நாதர்கள் பார்த்துக்கொள்வார்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++

14 comments:

  1. கோள்சாரப் பாடம் படித்துப் பயனுற்றேன். நன்றி ஐயா!

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யாவுக்கு கோடி நமஸ்காரங்கள்
    இன்றைய பதிவு மிகவும் அருமை.
    சனி மற்றும் செவ்வாயின் சேர்கை பற்றி பல தளங்களில்
    பலவிதமான சேதிகள் வருகிறது.
    இதைப்பற்றி ஒரு பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.

    அன்பும் பணிவும் கொண்ட மாணவன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  3. அய்யா காலை வணக்கம்

    ReplyDelete
  4. கோளைச் சார்வதா..
    GOALயை சார்வதா என நிலைமாறும்

    இன்றையவர்களுக்கான பதிவு
    இனிமையானது..புதுமையானது

    தொல்லை கொடுப்பதற்கும்
    எல்லை உண்டு என சொல்லி

    தந்தமைந்த பாடத்திற்கு
    தருகிறோம் நன்றிகள் வணக்கத்துடன்

    ReplyDelete
  5. குரு அய்யாவுக்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா

    ReplyDelete
  6. திருவாரூர் சரவணன் வாத்தியாரின் பாராட்டுக்களைப் பெற்றதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

    அஷ்ட வ‌ர்க்கம் எக்ஸ்பெர்ட் சரவணன் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. இந்தப் பாடலில் குறிப்பிடப் பட்டுள்ள ஸ்தானங்களில் குறிப்பிட்ட கிரகங்களின் கோச்சாரம் (ஜனன ஜாதகத்திலும்தான்) மிகுந்த தீய பலன்களைக் கொடுப்பதாக பிற்காலத்தில் தோன்றிய ஜோதிட வல்லுனர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இதற்கு புராதன ஜோதிட நூலான ஜாதகப் பாரிஜாதத்தில் 17ம் அத்தியாயம், பாடல்கள் 34,35,36 இவற்றுள் குறிப்பிடப் பட்டுள்ளதை மேற்கோள் காட்டுகிறார்கள்.

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    கோள்சாரப் பாடம் படித்துப் பயனுற்றேன். நன்றி ஐயா!/////

    பயனுற்றேன் என்று எழுதிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger saravanan said...
    அன்புள்ள அய்யாவுக்கு கோடி நமஸ்காரங்கள்
    இன்றைய பதிவு மிகவும் அருமை.
    சனி மற்றும் செவ்வாயின் சேர்கை பற்றி பல தளங்களில்
    பலவிதமான சேதிகள் வருகிறது.
    இதைப்பற்றி ஒரு பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.
    அன்பும் பணிவும் கொண்ட மாணவன்
    ரா.சரவணன்/////

    முன்பே எழுதியிருக்கிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டமைக்காக இன்னும் மேல் விபரங்களுடன் ஒரு கட்டுரை எழுதுகிறேன். தற்சமயம்
    நேரமில்லை. பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  10. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. Blogger அய்யர் said...
    கோளைச் சார்வதா..
    GOALயை சார்வதா என நிலைமாறும்
    இன்றையவர்களுக்கான பதிவு
    இனிமையானது..புதுமையானது
    தொல்லை கொடுப்பதற்கும்
    எல்லை உண்டு என சொல்லி
    தந்தமைந்த பாடத்திற்கு
    தருகிறோம் நன்றிகள் வணக்கத்துடன்////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  12. //////Blogger Udhaya Kumar said...
    குரு அய்யாவுக்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  13. ////Blogger ananth said...
    இந்தப் பாடலில் குறிப்பிடப் பட்டுள்ள ஸ்தானங்களில் குறிப்பிட்ட கிரகங்களின் கோச்சாரம் (ஜனன ஜாதகத்திலும்தான்) மிகுந்த தீய
    பலன்களைக் கொடுப்பதாக பிற்காலத்தில் தோன்றிய ஜோதிட வல்லுனர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இதற்கு புராதன ஜோதிட நூலான ஜாதகப் பாரிஜாதத்தில் 17ம் அத்தியாயம், பாடல்கள் 34,35,36 இவற்றுள் குறிப்பிடப் பட்டுள்ளதை மேற்கோள் காட்டுகிறார்கள்.////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  14. /////Blogger nc sekhar said...
    For Gocharam, please advise if houses to be counted from Chandra Rasi instead of Lagnam. Regards, Sekhar/////

    It is to be counted from the chandra rasi சந்திரன் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்!
    அது அடிப்படைப் பாடம். முதலில் பாடங்களை எல்லாம் படித்து முடியுங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com