31.7.12

Astrology - Popcorn Post வம்பும், வழக்கும்!

Astrology - Popcorn Post  வம்பும், வழக்கும்!

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினான்கு

வம்பு, வழக்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? வம்பு, வழக்கு என்று எதுவும் இல்லாத நிலைதான் நம்மதியான நிலை!

ஆனால் விதி விடுமா? சிலரை அவர்கள் விரும்பாவிட்டாலும் தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்துவிடும். மனிதர் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும்.

பெரும்பாலான வீடுகளில் சொத்துத் தகராறு இருக்கும். சொத்து என்றாலே சிக்கல்தான் என்கிறீர்களா? நம் பெயரில் இருக்கும் சொத்துக்களில் நாம் இருக்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் முன்னோர்கள் வைத்து விட்டுப்போன சொத்துக்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புக்கள், உறவினர்கள் என்று யார் மூலமாக வேண்டுமென்றாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. வம்பு, வழக்கு ஏற்படலாம்.

ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு - அதாவது வம்பு வழக்குகள் ஏற்பட என்ன அமைப்பு என்றும், ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அதில் நமக்கு வெற்றி கிடைக்க வழியுண்டா என்பதையும் இன்று பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------
1. ஆறாம் வீடுதான் பிரச்சினைகளுக்கு உரிய வீடு
2. ஏழாம் வீடு (லக்கினத்திற்கு ஏழுதான்) எதிர்ப்பையும், முரண்பாடுகளையும் உண்டாக்கும்
3. எட்டாம் வீடுதான் சட்டச் சிக்கல்களால் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அதிகப்படுத்தும். வருத்தங்களையும், அவமரியாதைகளையும் ஏற்படுத்தும்.
4. பன்னிரெண்டாம் வீடுதான் நமக்கு மேற்பட்ட சிக்கல்களால் ஏற்படும் நஷ்டங்களையும், விரையங்களையும் உண்டாக்கும்

ஆக அவைகள் உண்டாகட்டும். அதிலிருந்து நாம் மீண்டு வருவோமா அல்லது வெற்றி பெற்று எல்லாவற்றையும் தூளாக்குவோமா என்பதை பதினொன்றாம் வீடுதான் முடிவு செய்யும்.

பதினொன்றாம் வீடு ஆறிலிருந்து ஆறாம் வீடு. பன்னிரெண்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு. இந்தப் பதினொன்றாம் வீடு அல்லது பதினொன்றாம் அதிபதி வலிமையாக இருந்தால், வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது. நம்மைக் காப்பாற்றும். நமக்கு வெற்றியைத் தேடித் தரும். அதை மனதில் கொள்க!

கிரகங்களில் செவ்வாயும், சனியும் வம்பு, வழக்கு ஏற்படும் காலங்களில் நமக்கு பாதகங்களை உண்டாக்கும் கிரகங்களாகும். புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் நமக்கு அந்நேரங்களில் கை கொடுக்கும் கிரகங்களாகும். அவைகளின் தசாபுத்திகள் அந்த நேரத்தில் நடக்கும் காலமென்றால் வழக்குகள் நமக்கு சாதகமாக முடியும்.

இவைகள் எல்லாம் பொது விதிகள் அதையும் மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. அய்யா வணக்கம்
    நல்ல பதிவு
    regards
    hemalatha murali

    ReplyDelete
  2. அய்யா காலை வணக்கம் .

    ReplyDelete
  3. இன்றைய பாப்கார்ன் பகுதி இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருந்தால் என் போன்றோருக்கு நன்றாக இருந்திருக்கும் அய்யா.

    ///11 ஆம் வீடு ,11 ஆம் அதிபதி வலிமையாக இருந்தால் வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது.///

    எனக்கு 11 ஆம் வீட்டை குரு பார்க்கிறார், 11 ஆம் அதிபதி பத்தில் இருக்கிறார். இது வரை பெரிதாக வம்பு வழக்கு என்று எதுவும் இல்லை. எனக்கு பெரிதாக பிரச்சினை வந்தாலும் ஏதும் ஆகாது என்று இன்றைய பாப்கார்ன் பகுதி சொல்கிறதோ. எல்லாம் இறைவன் செயல். நன்றி அய்யா.

    ReplyDelete
  4. காலை வணக்கம்!
    ஓர் ஐயம்:

    ஆறாம் அதிபதியே பதினொன்றாம் அதிபதியாக இருந்து "வலுவுடன்" இருந்தால்?
    போட்டு பார்த்து, later on காப்பாத்துவாரோ?
    ++++++
    பிரியங்களுடன்
    புவனேஷ்

    ReplyDelete
  5. பகையென்று யாரும் இல்லை... நண்பர்கள் யாவரும் என்றாலும். மிக நெருங்கிய நண்பர்கள் இல்லை உயிர்த் தோழனை விரலை காண்பித்து மட்டுமே காட்டலாம்:):)))

    பாடத்தோடு எனது கடந்தகாலத்தை ஒப்பிடத் தோன்றுகிறது...

    பதினொன்றாம் அதிபதி சுக்கிரன் அங்கேயே ஆட்சி பெற்று இருக்கிறான் கூடவே லக்னாதிபதியும் (குரு) பகைவர்கள் என்றாலும் நீயா? நானா? என்றுப் போட்டிப் போட்டுக் கொண்டு உதவுவார்கள் அல்லவா!... சுக்ரதிசையில் (ஆறுக்கும் இவன்தான் தலைவன்) குரு புத்தியில் சம்பந்தமில்லாது வந்த பிரச்சனையையும் ஊர் கூடி பேசி எனக்கு சாதகமாகவே தீர்ப்பும் வந்தது...
    பாடத்திற்கும் பதிவிற்கும் நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்
    நல்ல பதிவு
    நன்றி

    ReplyDelete
  7. வழக்கு, விவகாரங்களில் பலர் போலியாக ஜோடனை செய்யப்பட்டு மாட்டிக்கொள்வர். அல்லது நம்பிய நண்பர்களின் துரோகத்தினால் தின்பதுக்கு ஆளாவர்.

    அத்தகைய, ஒரு பாவமும் அறியாமல் துரோகம், இழப்புக்கு ஆளான நண்பர்களுக்கு (I hope there are none here):

    நீங்கள் துரோகத்தினால் இழந்த பொருள் - வாழ்க்கை எனும் வாத்தியாருக்கு, கற்றுக்கொண்ட பாடங்களுக்காக நீங்கள் தந்த குருதட்சினை.

    அதே பொருள், தான் இனிமேல் படிக்கப்போகும் பாடத்துக்கு அந்த போலி நண்பன் கொடுத்து வைத்த அச்சாரம் (முன் பணம்).

    ReplyDelete
  8. இன்றைய பாடமும் நன்றே !

    ReplyDelete
  9. என் முன்னோர்கள் தங்களுடைய சந்ததியினர் எவரும் சொத்து தகராறு, வம்பு, வழக்கு என்று தங்களுக்குள் அடித்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொத்து எதையும் சேர்த்து வைத்து விட்டுப் போகவில்லை.

    எனக்கு பிரச்சினைகளை உருவாக்கக் கூடிய 6ம் இடத்தில் அதிகமாக 38 பரல்கள் இருக்கின்றன. இவற்றைத் தீர்க்கக் கூடிய 11ல், கேது, மாந்தி என்று வில்ல(ங்க) கிரகங்கள். Doing good for wrong reason or doing bad for good reason.

    ReplyDelete
  10. /////Blogger Bhuvaneshwar said...
    பிற மொழிகள் வழக்கத்தில் உள்ள இடங்களில் வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் அல்லவா?
    குரு + புதன் இரண்டில். அவ்வளவு தான்.
    இன்னும் கொஞ்சம் நல்ல அமைப்பாக நீங்கள் சொல்லுவது போல அமைந்து இருந்தால் பன்மொழிப்புலவராக இருந்து இருப்பேனோ என்னவோ. இப்போதைக்கு ஆங்கிலமும் தமிழும் தான்///

    சகோதரரின் பின்னூட்டத்தை இப்போது தான் கவனித்தேன்...

    நான் ஞாபக மறதி இல்லாமல் இருப்பேனானால்!!!

    நீங்களும் //3. இரண்டாம் வீட்டுக்காரன், தன்னுடைய வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும் ஜாதகனுக்குப் பன்மொழித்திறமை இருக்கும்///

    இந்த மூன்றாம் பிரிவில் வருவீர்களே... சனி இரண்டுக்குரியவன் பன்னிரெண்டில் இருந்து மூன்றாம் பார்வையாக மகரத்தைப் பார்ப்பேனே!

    நன்றி!

    ReplyDelete
  11. இன்றைய பாடம் அருமை, நன்றி சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com