12.5.12

Short Story பக்குவம்

Karwar Bridge on Kali River
அடியவன் எழுதி, சென்ற மாதம், மாத இத்ழ் ஒன்றில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை. ஒன்றை நீங்கள் படித்து மகிழ, இன்று வலையில் ஏற்றியுள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------                                
சிறுகதை;   பக்குவம்                   

திரைப்படங்களில் அன்பே உருவாக அம்மா பாத்திரத்தில் வரும் நடிகை கண்ணாம்பாவைப்போல இதுவரை காட்சியளித்த தன் மூத்த சகோதரி அலமேலு ஆச்சி அவர்கள், இப்போது வில்லி பாத்திரங்களில் நடித்த சுந்தரிபாயைப் போல காட்சி கொடுத்தார்கள் சின்னைய்யாவிற்கு!

அசாத்திய கோபம் வந்தது.

கோபத்திற்குக் காரணம் சின்னையாவின் மூத்த மகள் சாலா என்ற விசாலாட்சியைத் தன மகன் சிவனடியானுக்கு மணம் செய்து கொள்ள அவர்கள். மறுத்து விட்டார்கள்.சொந்தத்தில் வேண்டாமாம். வெளியில் பெண் பார்த்து செய்து கொள்ளலாம் என்றிருக்கிறார்களாம்.

ஆச்சியின் மகன் பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்தவன். பிறகு அமெரிக்காவில் எம்.எஸ்.படிப்பில் ஒரு கலக்குக் கலக்கி, தரவரிசையில் முதலாவதாகத் தேறி, மைக்ரோசாப்ட் நிறுவனமே அவனை அழைத்து வேலை போட்டுக்கொடுத்துவிட்டது. இந்திய மதிப்பில் ஆண்டிற்கு ஐம்பது லட்ச ரூபாய் சம்பளம்.

ஆச்சி அவனுக்குப் படிப்பிற்காக செலவழித்த பணத்தையெல்லாம் மூன்றே மாதங்களில் அனுப்பி வைத்துவிட்டான். அவனுக்குத்தான் தன் பெண்னைக் கட்ட வேண்டுமென்று சின்னய்யா அதீதமான கனவுகளோடு இருந்தார்.

சின்னைய்யாவின் அந்த ஆறு ஆண்டுக் கனவு, குண்டு வைத்ததுபோல சிதறிவிட்டது.

ஆச்சியின் மறுப்பைக் கேள்வியுற்ற சின்னைய்யா, தன் அண்ணன் முத்தையா செட்டியாருடன் தர்க்கம் செய்யத் துவங்கிவிட்டார்.

"ஏன் சொந்தத்தில் வேண்டாமாம்? அதைச் சொன்னார்களா? நீங்கள் கேட்கவில்லையா?"

"கேட்டு என்னடா ஆகப் போகிறது? விடு. நாம், நம் சாலாவிற்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து இன்னும் இரண்டு மாதங்களுக்குள் திருமணம் செய்து விடுவோம்!"

"ஆகா, செய்வோம். இப்போது பிரச்சினை அதுவல்ல! நம் தாய பிள்ளைகள் எல்லாம், நாம் அங்கேதான் செய்யப்போகிறோம் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இல்லை என்று தெரிந்தால், அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள்? அவர்களுக்கு என்ன் பதில் சொல்வது? நம் குடும்ப ஒற்றுமை சிதைந்து விட்டது போல அல்லவா தெரியும்?"

"அவர்கள் கேட்டால், பிள்ளைகள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்"

"ஏன் பொய் சொல்ல வேண்டும்? வெளியில் செய்தால், பெரிய இடமாகப் பார்த்துச் செய்யலாம். பையனுக்கு அள்ளிக் கட்டிக் கொண்டு வரலாம் என்ற்
நினைப்பில், எங்கள் பெண்ணை வேண்டாமென்று சொல்லி விட்டார்கள் என்று உண்மையைப் போட்டு உடைக்க வேண்டியதுதான்!"

"நீ தேவை இல்லாதாதை எல்லாம் பேசாதே! ஆச்சி ஒன்றும் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் இல்லை. கீழையூரில் உள்ள பத்து ஏக்கர் விவசாய பூமியை நாம் விற்றுப் பணம் பண்ணியபோதுகூட, ஒன்றும் சொல்லாமல், எதுவும் கேட்காமல் ஆச்சி வந்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போகவில்லையா?"

அதற்குமேல் சின்னைய்யா ஒன்றும் பேச்வில்லை. அமைதியாகி விட்டார்.

உண்மையான காரணத்தை முத்தையா அண்ணன் ஊகம் செய்து வைத்திருந்தார்கள். சின்னய்யாவின் மனைவி சற்றுப் பொல்லாதவள். சற்று அல்ல, உண்மையிலேயே பொல்லாதவள். அவளுடைய வாய்க்கு, உறவினர்கள் அததனை பேரும் பயம். பயம் என்று சொல்வதைவிட வெறுப்பு என்று சொல்லலாம். கண்டால் ஒதுங்கிப்போய் விடுவார்கள்.

தேவையில்லாத பிரச்சினைகள், ச்ண்டைகள், பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் மனைவியை விட்டுக்கொடுக்காமல், சின்னய்யாவும் முன்னே நின்று வாதம் செய்து தன் மனைவியின் கட்சியை நியாயப் படுத்திய சம்பவங்களும் நிறைய உண்டு.

அதெல்லாம் அலமேலு ஆச்சிக்கும் தெரியும். அதனால்தான் சம்பந்தம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்கள். திருமணம் செய்தால் இரண்டாவது நாளே தங்கள் வீட்டிற்குள் அவள் நுழைந்து நாட்டாமை செய்யத்துவ்ங்கி விடுவாள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

பெரியவர்களுக்குள் உள்ள மனக் கசப்பின் காரணமாக, உண்மையிலேயே இணைய வேண்டிய ஜோடி இணையாமல் போய்விட்டது.

அத்தை மகனை மணந்துகொண்டு, அமெரிக்க மண்ணில் குடும்பம் நடத்த வேண்டிய சாலா, உத்தர கர்நாடகாவில், ஹலியால் என்னும் சின்ன கிராமத்தில் குடும்பம் நடத்த வேண்டியாதாகிவிட்டது.

எந்த ஊராக இருந்தால் என்ன? நான்கு சுவற்றிற்குள் எல்லா ஊரும் ஒன்றுதான் என்று சொல்லும் அளவிற்கு சாலா பக்குவப்பட்டுவிட்டாள்.

இந்தச் சின்ன வயதில் அந்தப் பக்குவம் எப்படி வந்தது?

அதுதான் காலதேவனின் கருணை! ஒரு கதவை அடைத்த அவன், இன்னொரு கதவைத் திறந்து விட்டான். ஒரு நல்ல வழியையும் காண்பித்து வைத்தான்.

என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பதைப்போல, அதைச் சுவாரசியமாகச் சொல்ல நானும் ஆர்வமாக உள்ளேன்!

தொடர்ந்து படியுங்கள்!
               
                     +++++++++++++++++++++++++++++++++++++++++

முத்தையா அண்ணன் அனுபவஸ்தர். பல விஷ்யங்களை யதார்த்தமாகச் சொல்லுவார். செட்டிநாட்டில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை நலிந்துபோய் விட்டதைச் சொல்லுவார். எல்லா வீடுகளிலும் முன்பு போல ஆறு அல்லது எட்டுப் பிள்ளைகள் இல்லாமல், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்றாகிவிட்ட நிலைமையை வருத்த்த்துடன் சொல்லுவார். மேலும் அந்த
ஒன்று இரண்டு குழந்தைகளையும் ஊருக்குக் கூட்டிக் கொண்டுவந்து, அங்கேயுள்ள பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், உறுவுகளையும் எடுத்துக் காட்டாத அவலத்தைச் சொல்லுவார்.

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த அம்மான் வீட்டு, அத்தை வீட்டு உறவு முறைகளில் திருமணம் செய்யும் நிலைமை தங்கள் காலத்திலே குறைந்து விட்டதையும் சொல்லி, தற்போது சுத்தமாக இல்லாமல் போய்விட்ட நிலைமையையும் வருத்தமாகச் சொல்லுவார்.

தன் தம்பி மகள சாலாவிற்கு வரன் தேடுவதில் தீவிரமாகக் களம் இறங்கியவர், முதல் வேலையாக, அவளுடைய புகைப்படம், ஜாதகம் மற்றும் சுயவிவரங்களை சென்னையில் உள்ள திருமண சேவை மையத்திற்கு அனுப்பி, இணையத்தில் வலயேற்ற்றம் செய்ய வைத்தார்.

சாலா, திரைப்பட நடிகை பிரியாமணியைப்போல அழகான தோற்றத்துடன் இருப்பாள். சிவந்த நிறம்.அளவெடுத்துச் செய்தது போன்ற நாசிகள் மற்றும் அதரங்கள். கணினி விஞ்ஞானத்தில்  பொறியியல் படித்தவள்.

தொடர்பு எண்ணாகத் தன் அலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார்.

வலையேற்றிய முதல் வாரத்திலேயே, ஏகப்பட்ட விசாரிப்புக்கள். வந்தவற்றை வடிகட்டி, தாய், மகன் என்று இருவர் மட்டுமே இருந்த ஒரு குடும்பத்தாரை வரச் சொல்லியிருந்தார். வந்து பாருங்கள். பெண்ணைப் பிடித்திருந்தால், மற்றவற்றைப் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

மாப்பிள்ளைப் பையன் உத்தர கர்நாடகாவில் ஹலியால் என்னும் கிராமத்தில் உள்ள பெரிய சர்க்கரை ஆலை ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.

பொறியியல் படித்துவிட்டு, அதற்கும் மேலே மேல் படிப்பாக பயோ டெக்னாலஜி பட்டப் படிப்பும் படித்திருக்கிறான். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம். தந்தை இல்லை. தில்லி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசியராக இருந்தவர், இரண்டாண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டிருந்தார். தாயார் சமஸ்கிருதம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் முதுகலைப்  பட்டம் பெற்றவர்.

சுயமாக மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தில்லியில் உள்ள பதிப்பகத்தார்கள் அவருடைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரண்டொரு பல்கலைக் கழங்களில் அவருடைய நூல்கள் பாடமாகவும் வைக்கப்ப்ட்டுள்ளன. ஆச்சியின் எழுத்திற்கு, ஆண்டிற்கு மூன்று லட்ச ரூபாய்களுக்குக் குறையாமல் சன்மானம் வந்து கொண்டிருக்கிறது.

'என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"  என்று அலைபேசியில் கேட்ட போது, ஆச்சி அவர்கள் சொன்ன அசத்தலான பதிலாலதான் முத்தையா அண்ணன், அவர்களைத் தெரிவு செய்திருந்தார். "எங்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று ஆச்சி அவர்கள் சொன்ன பதிலால்தான் திருமணம் உடனே கூடி வந்தது.

கோவை சாரதாம்பாள் கோவிலில் பெண் பார்க்கும் வைபவம் நடந்த்து.

பத்து அல்லது பதினைந்து நிமிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பிறகு  உங்கள் சம்மதததைச்  சொல்லுங்கள் என்று பையனையும், பெண்ணையும் பக்கத்து மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார் முத்தையா அண்ணன்,

வாழ்க்கையில் இணையப்போகும் நடேசனும் சாலாவும் அங்கேதான் முதன் முதலில் சந்தித்தார்கள்

நடேசன் மெல்லிய குரலில் பேசினான்.

"எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?"

உங்களை என்று மரியாதை கொடுத்துப் பேசியதில் சாலாவிற்குப் பரம சந்தோஷம்.

"ம்ம்.. பிடித்திருக்கிறது" என்று அழுத்தமாகச் சொன்னவள், வயதிற்கே உரிய குறும்புடன் கேட்டாள் " பிடிக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். என் தாயாரிடம் சென்று, நாளைக்கு முடிவைச் சொல்வோம் என்று சொல்லிவிடுவேன். இந்த இடத்தில் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்."

"பெண்கள்மேல் அவ்வளவு கரிசனமா?"

"பெண்கள் என்றில்லை எல்லோரிடமும் எனக்குக் கரிசனம் உண்டு. என் உணர்வுகளுக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அதுபோல மற்றவர்களின் உணர்வுகளையும் நான் மதிக்கத் தவறுவதில்லை!"

இந்தப் பதிலால், சாலாவிற்கு அவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

தொடர்ந்து அவன் பேசினான். "நான் இருக்கும் ஊர் சின்ன கிராமம். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பசுமையான கிராமம். காளி என்னும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஊரும் மக்களும் ஜில்லென்று இருப்பார்கள். உங்களுக்கு கிராம வாழ்க்கை பிடிக்குமல்லவா?"

"ஏன் கேட்கிறீர்கள்?"

"பிடிக்கவிட்டால், உங்களுக்காக வேலையை உதறிவிட்டு, பெங்களூரில் குடியேற நான் தயாராக இருக்கிறேன். பெங்களூரில்,மல்லையா முழுமத்தில் எனக்கு உடனே வேலை கிடைக்கும்."

"மனதிற்குப் பிடித்துவிட்டால், மனதிற்குப் பிடித்தவர்களோடு இருந்தால் எல்லா இடங்களும் ஒன்றுதான்"

"well said" என்று சந்தோஷமாகச் சொன்னவன், அடுத்துக்கேட்டான். "உங்களுக்கு வேலைக்குச் செல்லும் எண்ணம் இருக்கிறதா?"

"இல்லை. பின்னால் தேவைப்பட்டால் செல்லலாம் என்று உள்ளேன். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது."

"அலைச்சல் இல்லாமல் வீட்டில் இருந்து கணினி மூலம் செய்யும் பணிகள் ஏராளமாக உள்ளன. உங்களுக்கு வீட்டில் சும்மா இருப்பது போரடிக்கு மென்றால், என் தாயார் செய்வதைப் போல நீங்கள் வீட்டில் இருந்தே ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாம்."

"என் தந்தையின் விருப்பத்திற்காகத்தான் படித்தேன். ஓடி ஓடி வேலைக்குச் செல்லும் டவுன் பஸ் வாழ்க்கையில் என்க்கு விருப்பம் இல்லை. குடும்பப் பெண்ணாக வீட்டோடு இருப்பதில்தான் எனக்கு விருப்பம்"

"நல்லது" என்று சொன்னான். இருவரும் திரும்பி வந்து தங்கள் சம்மதத்தைச் சொன்னார்கள்

அடுத்த மாதமே ஒரு நல்ல முகூர்த்த நாளில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

                        +++++++++++++++++++++++++++++++++++++++++

இப்பொழுதெல்லாம் மண்டபத்தில்தான் திருமணம். சாமான் பரப்பும் வேலையும் கிடையாது. எல்லாவற்றிற்கும் கணக்குப்பண்ணி ரொக்கமாகக்  கொடுத்து விடுகிறார்கள். திருமணம் முடிந்த நான்காவது நாளே நடேசன் ஊருக்குக் கிளம்பிவிட்டான்.

தாயாரை நேரடியாக ஹலியாலிற்கு ரயில் ஏற்றிவிட்டவன் தன் புது மனைவியுடன் பெங்களூர், சித்ரதுர்கா, சிருங்கேரி, ஜோக் ஃபால்ஸ் என்று ஒருவாரம் ஓகோ எந்தன் பேபி..வாராய் எந்தன் பேபி என்ற பாடலை தன் மனதிற்குள் முனுமுனுத்தபடி தங்களுடைய தேனிலவைக் கொண்டாடிவிட்டு ஹலியாலிற்கு வந்து சேர்ந்தான்.

பதினைந்து நாட்கள் விஷேச விடுப்பில் வந்திருந்தவன் மீண்டும் பணிக்குச் செல்லத் துவங்கினான்.

அவன் வேலை பார்க்கும் சர்க்கரை ஆலை மிகவும் பெரியது.நாளொன்றிற்கு சுமார் ஐயாயிரம் டன் கருமபை அரைத்து சீனியாக மாற்றும் திறனுடையது. சர்க்கரைப் பாகிலிருந்து வரும் கழிவில் ஆலகஹால் எடுத்து விற்பனை செய்யும் பிரிவும் உள்ளேயே இருக்கிறது. கரும்புச் சக்கைகள்க்கூட வீணாக்காமல் இயந்திரங்களே காயவைத்து நொடியில் தூள் தூளாக்கிக்
கொடுத்துவிடும் பிரிவும் இருந்தது. அந்ததூள்களை எல்லாம் முன்பு காகித ஆலைக்காரர்கள் காத்திருந்து வாங்கிக்கொண்டு போவார்கள். இப்போது புதிய தொழில் நுட்பத்தில் அவற்றை  எல்லாம் எரிபொருளாக்கி, பெரிய பெரிய கொதிகளன்களில் நீராவியாக்கி, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்க்ள். தங்கள் உபயோகத்திற்கு உள்ளது போக
மீதமாகும் மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டில் பத்து மாதம் சுறுசுறுப்பாக இயங்கும் ஆலையில், கரும்பு சீசன் இல்லாத இரண்டு  மாதங்களில் பராமரிப்புப் பணிகள் நடக்கும்.

தொழிற்சாலை அருகில்தான் வீடு. காலை ஒன்பது மணிக்கு வேலைக்குப் போனால், மாலை ஆறுமனிக்குத்தான் நடேசன் வீட்டிற்குத் திரும்புவான். சாலாவிற்கு நடேசனைப்  பிடிததைப்போலவே அவனுடைய தாயாரையும் பிடித்துவிட்டது. மிகவும் அன்பானவர்கள். அடைமழையாக அன்பைப் பொழிவார்கள்.

சாலாவிற்கு சமையல் செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். வீட்டில் உள்ள தையல் மிஷினில் தைப்பதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். கன்னடம் பேசுவதற்குப் பயிற்சி கொடுத்தார்கள்.

வீட்டு மேல் வேலைகளுக்கு ஆள் இருந்ததினால், பகலில் நிறைய் நேரம் கிடைக்கும். மொழிபெயர்ப்பில் தன் மாமியாருக்கு சாலா உதவத் துவங்கினாள். மாலை நேரத்தில் அந்த ஊரில்  இருக்கும் ஒரே கடைவீதிக்குச் சென்று திரும்புவார்கள். பணி முடிந்து நடேசன் வந்தவுடன் அருகில் இருக்கும் அனுமார் கோவிலுக்கு அவனுடன் சாலா போய் வருவாள். நேரம் போவதே
தெரியாமல் ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருந்தது.

ஆறு மாதங்கள் சென்றதே தெரியவில்லை!

                        +++++++++++++++++++++++++++++++++++++++++++++

முதன் முதலில் சாலாவின் பெரியப்பா முததையா அண்ணன்தான் சாலாவைப் பார்க்கப் புறப்பட்டு வந்தார். கோவை போத்தனூர் சந்திப்பில் கொச்சுவெளி  விரைவு ரயிலில் ஏறியவர், அடுத்த நாள் மதியம் ஒரு மணிக்கு ஹீப்ளி நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஹலியால் 40 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. அவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக சாலா தன் கணவனுடன் வாடகைக் கார் ஒன்றில் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள்.

பெரியப்பாவைப் பார்த்தவுடன் அவளுக்கு அளவில்லாத சந்தோஷம். அவர் பெட்டியில் இருந்து இறங்கியவுடன் ஓடிச் சென்று அவருடைய கைகளை வாஞ்சையுடன் பிடித்துக்கொண்டாள்.

கிருஷ்ணா ஸ்வீட்ட்ஸ் மைசூர் பாகு, அடையார் ஆனந்தபவன் ரசமலாய் இனிப்பு, லாலாகடை மிக்சர், ஹாட் சிப்ஸ்ஸின் நேந்திரம்பழச் சிப்ஸ்,எல்லாம் ஒரு பெட்டியில், தேன் குழல் டின் ஒன்று என்று இரண்டு சாமான்கள், மேலும் பெரிய பலாப் பழம் ஒன்று. வெள்ளைக்கார் இட்லி அரிசி 25 கிலோ மூட்டை ஒன்று என்று ஏகத்துக்கும் லக்கேஜ்.

"எதற்கு பெரியப்பா இதெல்லாம்?"

"எல்லாம் உனக்குத்தான்டி ராசாத்தி!"

"உங்களின் அன்பிற்கு அளவே இல்லை!"

"அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை!"

போர்ட்டர் ஒருவரைப் பிடித்து, லக்கேஜ்களை எல்லாம் வாடகைக் காரில் ஏற்றும் முமமரத்தில் இருந்தான் சாலாவின் கணவன் நடேசன்

முத்தையா அண்ணனும் சாலாவும் பேசிக்கொண்டே நடைமேடையைக்  கடந்து காரை நோக்கிச் சென்றார்கள்.

"இதற்கெல்லாம் பதிலுக்கு நீ ஏதாவது தர வேண்டும்."

"உங்களுக்குத் தருவதற்காக ஒன்று வைத்திருக்கிறேன். ஆனால் அதைப்பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும்". என்று சொன்னவள் தன்னுடைய வயிற்றைத் தன் கைவிரலால் தொட்டுக் காண்பித்தாள்

"ஆகா..மாதமாக இருக்கிறாயா? சொல்லவே இல்லையே! எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? சொல்லியிருந்தால் அங்கே வீட்டில் உள்ள மற்றவர்களும் சந்தோஷப் பட்டிருப்பார்களே!"

"அடுத்த மாதம் சொல்லலாம் என்று இருந்தேன்!"

"என்ன பிள்ளையடி வேண்டும்? பழநிஅப்பனைப் பிரார்த்தனை செய். அப்படியே கொடுப்பான்"

"ஆண் குழந்தைதான் வேண்டும். இறையருளால் அப்படிப் பிறந்தால் உங்கள் பெயரைத்தான் பிள்ளைக்கு வைப்பதாக இருக்கிறேன்"

"முத்தையா’ என்றா?"

"ஆமாம்"

"முததையா, ராமையா, கருப்பையா என்ற் பெயர்களெல்லாம் எண்கணிதப்படி ராசியான பெயர்கள் இல்லையாம். ஏ.ஹெச் என்ற் எழுத்துக்களில் பெயர்கள் முடியக்கூடாதாம். ஆகவே முத்தப்பன் என்று பெயர் வைப்போம் அல்லது முருகப்பன் என்று பெயர் வைப்போம். அப்பன் என்று முடியும் பெயர்கள் எல்லாம் ராசியான பெயர்கள்தான்!"

"உள்ள ராசி இருந்துவிட்டுப்போகட்டும் நான் முத்தையா என்றுதான் பெயர் வைப்பதாக உள்ளேன்"

"சரி உன்னிஷ்டம்" என்று சொன்னவர் காருக்கு அருகில் வந்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டு முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். சாலா தன் கணவனுடன் காரில் ஏறிக்கொள்ள, மூவரும் ஹலியாலை நோக்கிப் பயணித்தார்கள்.

                    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வடை, பாயாசம் மற்றும் ஆச்சியின் மகிழ்ச்சியான உபசரிப்புடன் விருந்து சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட்ட முத்தையா அண்ணன ரயிலில் வந்த களைப்புத் தீர நன்றாகப் படுத்து உறங்கிவிட்டார். எழ்ந்த போது மாலை மணி ஆறாகி விட்டிருந்தது.

இடைப்பலகாரத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டவர் காப்பியை மட்டும் குடித்துவிட்டு, சாலாவுடன் அருகில் உள்ள அனுமார் கோவிலுக்குச் சென்றார்.

சென்றவர் தரிசனத்தை முடித்துவிட்டு, சுற்றுப் பிரகாரத்தில் இருந்த கடப்பாக்கல் பெஞ்சில் அமர்ந்தார். சாலாவும் அருகில் வந்த அமரப் பேச்சுக் கொடுத்தார்.

"இந்த ஊர் பிடித்துப் போயிருக்கிறதா ராசாத்தி?" என்றார்.

"ஊரில் என்ன இருக்கிறது பெரியப்பா? நீங்கள் சொல்வது போல ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால்,புரிதலோடு இருந்தால், நான்கு சுவற்றிற்குள் எல்லா வீடுகளும் ஒன்றுதான். எல்லா ஊர்களும் ஒன்றுதான்!"

"கரெக்ட், அத்தை வீட்டில் உன்னைக் கட்டிக்கொடுக்க முடியாமல் விட்டுப்போனதில் உன் அப்பாவைப்போல எனக்கும் வருத்தம்தான். ஆனால் உனக்குத் துளிக்கூட வருத்தம் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் எனக்கு இதுவரை பிடிபடாமல் இருக்கிறது"

"நான் எதற்காக வருத்தப்பட வேண்டும்? எனக்கு அததை மேல் இப்போதும் பிரியம் உண்டு. உங்களைப்போல அவர்களும் நல்லவர்கள். ஆனால் அய்த்தான்மேல் நான் எந்தவித விருப்பமும் வைக்கவில்லை. மற்றவர் களைப்போல நட்ப்போடுதான் பழ்கினேன். அதனால் என்னை வேண்டாமென்று அவர்கள் சொன்னபோது நான் ஏமாற்றம் அடையவில்லை!"

"வேண்டாம் என்று சொன்னபோது உன் அப்பாவிற்கு வந்த கோபத்தில் ஒரு துளிகூட அவர்கள் மீது உனக்கு வரவில்லையா? உண்மையைச் சொல்!"

"உண்மையைச் சொன்னால் நான் படிக்கின்ற காலத்தில் எங்கள் மேம் (பேராசிரியை) அடிக்கடி சொல்வார்கள். நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் என்பார்கள். நீங்கள் விரும்புகின்ற நிறுவனத்தில் வேலை தேடிக் காத்துக் கிடப்பதைவிட, உங்களை விரும்பி வேலை கொடுக்கும் நிறுவனத்தில் மகிழ்ச்சியோடு வேலைக்குச் சேர்ந்துகொள்ளுங்கள் - அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும் என்பார்கள். அதே தியரிதான் திருமணத்திற்கும். நாம் விருப்பிப்போய் என்னை மணந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதைவிட, நம்மை விரும்பி வந்து பெண் கேட்பவர்களை மணந்து கொள்வதுதான் சரியென்று பட்டது".

நிதர்சனமான உண்மை. சாலாவின் இந்த பதிலால் முத்தையா அண்ணன் அசந்து விட்டார். எத்தனை பக்குவம் இந்தப் பெண்ணிற்கு. நான்கு லட்சம் செலவழித்துப் படிக்க வைத்தது வீண் போகவில்லை என்பதை உணர்ந்தார், இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது என்றும் நினைத்தார்.

எல்லாம் பழநி அப்பனின் அருள்.கண்கள் பனித்துவிட்டன. அவர் தன்னிலைக்கு வர வெகு நேரம் ஆனது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===
இன்றைய பொன்மொழி!


THERE IS NO ONE BUSY IN THIS WORLD
IT IS JUST A MATTER OF PRIORITIES
U WILL ALWAYS FIND TIME FOR THE THINGS                      
& PEOPLE U FEEL ARE IMPORTANT

வாழ்க வளமுடன்!

34 comments:

  1. இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது

    .கண்கள் பனித்துவிட்டன.

    பக்குவமான கதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ///ஓடி ஓடி வேலைக்குச் செல்லும் டவுன் பஸ் வாழ்க்கையில் என்க்கு விருப்பம் இல்லை. குடும்பப் பெண்ணாக வீட்டோடு இருப்பதில்தான் எனக்கு விருப்பம்"///
    ஹாங் ...அப்படின்னா வேலைக்குப் போற பொண்ணு "குடும்பப் பெண்" இல்லையா? Sorry; these lines are politically incorrect :(

    ///நடிகை கண்ணாம்பாவைப்போல இதுவரை காட்சியளித்த தன் மூத்த சகோதரி அலமேலு ஆச்சி அவர்கள், இப்போது வில்லி பாத்திரங்களில் நடித்த சுந்தரிபாயைப் போல காட்சி கொடுத்தார்கள்///
    கண்ணாம்பாவையும் சுந்தரிபாயையும் எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல்லியே. பண்டரிபாய்...சி.கே .சரஸ்வதி கூட பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    ///எந்த ஊராக இருந்தால் என்ன? நான்கு சுவற்றிற்குள் எல்லா ஊரும் ஒன்றுதான் என்று சொல்லும் அளவிற்கு சாலா பக்குவப்பட்டுவிட்டாள்.///
    வேற வழி?

    பெண்குழந்தை பிறந்தால்? முத்தம்மா என்ற பெயரோ?

    இந்தக் காலத்து பெண்களின் "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க" மனப்பாண்மை பாராட்டத் தக்கது.

    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா -இதை
    உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா!
    என்ற கதையின் மையக் கருத்து மனதில் பதிந்தது. நன்றி ஐயா. நல்ல கதை.

    ReplyDelete
  3. அருமையான கதை . இந்த பக்குவம் குடும்பங்களில் இருந்தால் . மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . நன்றி அய்யா .

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம் ;

    நல்ல குடும்பத்திற்கு ஓர் நல்ல பெண்
    அமைகிறாள் என்றால் ,அவன் பூர்வபுன்னிய ஸ்தனம நன்றாக அமைத்துள்ளது, 2 விட்டில் குரு இருந்துருக்கவேண்டும் அல்லது குரு பார்வை பெற்றுகவேண்டும்.
    பெண்ணிற்கு 8விட்டில் சந்திரன்
    அமைந்திருக்கவேண்டும் சுக்கிரன் பார்வை பெற்றிருக்கவேண்டும்.

    எல்லாம் அவன் வாங்கிவந்த வரம்.

    எல்லா பெண்ணிற்கும் இது அமையாது குடும்பபென்னிற்குமட்டும்தான்.
    "பக்குவம்" அருமையானது

    நன்றி

    ReplyDelete
  5. "இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது"

    arumayana varigal today we can find only 10% of people like this.

    ReplyDelete
  6. Thank you very much for the good story.

    ReplyDelete
  7. இன்றைய புலம்பல்!!!!!

    கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
    புல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது எக்கலாம் ?

    ReplyDelete
  8. வாத்தியாரின் கைவண்ணத்தில் உருவான நல்ல கதை..
    கதையிலே உணர்ச்சிக் கொந்தளிப்பான இடங்கள் அதிகம் இல்லையா?
    இல்லை.. விவரித்ததில் அந்தத் தன்மைகள் குறைந்து காணப்பட்டனவா?
    இல்லை..கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் தன்மை அப்படிப்பட்டதா என்று புரியவில்லை..

    சென்ற வாரத்திலே எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அவரின் மகள் சுயமாகவே சாதி விட்டு வேறு சாதியிலே திருமணம் செய்துகொண்டதாக சொல்லி உணர்ச்சிப் பிழம்பாகக் கொட்டித் தீர்த்தார் என்னிடம்..

    சிறுவயது முதலே நான் பார்த்து வளர்ந்தவள் என்பதால், அந்தப் பெண் இப்போது எப்படி இருக்கிறாள் என்று அக்கறையிலே விசாரித்தேன்..

    பெற்றவருடன் நடந்த வாக்குவாதத்திலே தலைக்கனம் பிடித்து எடுத்தெறிந்து பேசி, தான் விரும்பிய,தன்னை விரும்பியவனுடன் வாழ, பிறந்த வீட்டாரைத் துறந்து அந்தப் பெண் கையாண்ட முறையின் அதிர்வுகள் அவரின் மனத்தை விட்டு இன்னும் அகலவில்லை என்பதை அவரின் வார்த்தைகள் உணர்த்தின..

    'கேடுகேட்டவள்..எங்கேயோ போய் எப்படியோத் தொலையட்டும்'என்று மனசாரச் சபித்தார்..

    மறுநாள் அவரின் மகனைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துவிட்டு 'அந்தப் பெண்ணைக் காணவில்லை' என்று போலீசிலே புகார் ஒன்றைப் பதிவு செய்து அந்த ஜோடியைத் தேடி காவல் நிலையத்துக்கு வரவழைத்து உண்மையிலே மணமுடித்து பதிவு செய்து மணவாழ்வுரிமையைத் தந்து செயல்பாடாகியிருந்தல் அந்தப் பெண்ணுக்கு ஒரு பாழாகாத எதிர்காலத்துக்கு அச்சாரமாக இருக்குமே என்று
    'உங்கப்பாவிடம் இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது..நீயாவது இந்த வேலையைச் செய்..அந்தப் பெண்ணை நீங்கள் வீட்டிலே சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை..' என்று அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன்..
    அவனும் வேகத்தில் தூக்கிஎறிந்து பேசுவதிலேயே குறியாக இருந்தானே தவிர ஏன் யோசனைகளை யாருக்கும் மண்டைக்குள் ஏறுவதாக இல்லை...

    மொத்தத்திலே அந்தப் பெண்ணின் பக்குவமில்லாத பேச்சும், ஆணவம் கலந்த நடவடிக்கைகளும் காரணமாக குடும்பத்திலிருந்து, பாசப் பிணைப்பு என்பது சுத்தமாக அறுபட்டுப் போயிருந்தது.
    எனக்கும் கூட வாழ்த்த வேண்டிய நேரத்திலே மனதிலே வலியையும் வேதனையையுமே தந்தது..

    ReplyDelete
  9. அழகான கதை.கதை படித்தவுடன், கிட்டத்தட்ட ஒரு குறும்படம் பார்த்த பாதிப்பு. டக், டக் என மாறும் காட்சிகள். இது குறும்படமாக எடுக்கப்பட்டால், இயக்குனருக்கு, 'ஷாட்' பிரிக்கிற வேலை கம்மி. முழு பாஸிடிவ் எபெஃக்ட் உள்ள கதை. பொது மெஸேஜ், 'மனம் போல் வாழ்வு" என்றாலும்,

    //அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை!"//

    //நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் //

    போன்ற வரிகள் நிதர்சன வாழ்வியல் உண்மைகள்.

    எனக்கென்னவோ சாலாவை விடவும், தன் குழந்தைகள் போல், உடன்பிறந்தாரின் குழந்தைகள் மேல் மட்டற்ற பாசம் காட்டும், முத்தைய்யா பெரியப்பாதான் நினைவில் நிற்கிறார்.

    ReplyDelete
  10. ஐயா நல்ல கதை,
    கிடைப்பதைப் பெருமையாக நினைத்தாலே போதும் மனம் திருப்தியடைந்துவிடும்.

    ReplyDelete
  11. அய்யா வணக்கம் வாழ்வின் எதார்தத்தை

    விளக்கும் அருமையான கதை.

    நன்றி

    பவானி கே.ராஜன்

    ReplyDelete
  12. அய்யா வணக்கம் வாழ்வின் எதார்தத்தை

    விளக்கும் அருமையான கதை.

    நன்றி

    பவானி கே.ராஜன்

    ReplyDelete
  13. ////தேவையில்லாத பிரச்சினைகள், ச்ண்டைகள், பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் மனைவியை விட்டுக்கொடுக்காமல், சின்னய்யாவும் முன்னே நின்று வாதம் செய்து தன் மனைவியின் கட்சியை நியாயப் படுத்திய சம்பவங்களும் நிறைய உண்டு.////

    "வாழப் போகிறப் பிள்ளையை தாயார் கெடுத்தது" என்பார்கள்.
    இங்கே இந்தக் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே கெடுக்கா விட்டாலும் அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் போனதற்கு காரணமாகிறார்கள்...

    சரியாப் பொருத்தம் உள்ள தம்பதியர்கள் இப்படி இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்... அதாவது கேட்டதும் இருவருக்கும் ஒரே போல் நல்லதாகத் தெரியும்.


    ////'என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அலைபேசியில் கேட்ட போது, ஆச்சி அவர்கள் சொன்ன அசத்தலான பதிலாலதான் முத்தையா அண்ணன், அவர்களைத் தெரிவு செய்திருந்தார். "எங்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று ஆச்சி அவர்கள் சொன்ன பதிலால்தான் திருமணம் உடனே கூடி வந்தது.////

    சிட்டை கொடுக்கும் காலம்.. இது போல அதை சட்டை செய்யாது போவதில் உயர்ந்த உள்ளத்தை காண முடிந்திருக்கிறது.


    ////"எதற்கு பெரியப்பா இதெல்லாம்?"

    "எல்லாம் உனக்குத்தான்டி ராசாத்தி!"

    "உங்களின் அன்பிற்கு அளவே இல்லை!"

    "அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை!"////

    அசத்தலானது....

    /////"உள்ள ராசி இருந்துவிட்டுப்போகட்டும் நான் முத்தையா என்றுதான் பெயர் வைப்பதாக உள்ளேன்"/////

    நன்றி உணர்வு என்பது எத்தகையது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    கரும்பாலையின் விவரிப்புகள் கொஞ்சம் அதிகம் (கதைக்கு அவ்வளவு அவசியம் இல்லை தான்) இருந்தும் இதற்கு பதிலாக மாமியாருக்கும் மருமகளுக்கும் இன்னும் கொஞ்ச நெருக்கமான உறவு இருப்பதாக அதிலே சில உணர்ச்சிகளைத் தெளித்து இருக்கலாம்....

    பெண்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்க வேண்டிய சூழல் மிகுந்துள்ளது... அவள் பாரதி கண்டப் புதுமைப் பெண்ணாக ஆகா வேண்டும் என்று அல்ல... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே.... அது தான் இன்றைய சூழல். பெரும்பாலான தந்தையர் இதைத் தான் செய்கிறார்கள். என்ன செய்வது. அவர்களின் கடமை அது.

    இருந்தும் பெண் என்பவளும் தன்னை ஒரு சக்திக் கொண்டவளாக மாற்றிக் கொள்ள கல்வி என்பது மிகவும் அவசியமாகிறது... அது தான் பெண்ணிற்கு ஒரு உத்திர வாதம் மிகுந்த ஆயுள் காப்பீடும் கூட. அந்த வகையில் கதாநாயகியை காண்பித்ததும் சிறப்பு...

    இருந்தும்... அவளின் தாயின் குணத்தில் இருந்து பெரிது வேறுபட்டது அபூர்வம்... இருந்தும் அவைகளும் நடக்க வழி இருக்கிறது.

    ஸ்ரீராமனை அறிமுகம் செய்யும் பொது வசிஷ்டரின் மாணவன் என்பதைத் தான் அழுத்தமாக ராஜரிஷி ஜனகனிடம் கூறினானாம்...

    அது போன்று இங்கே... கதையின் நாயகியும் காட்டப் பட்டு இருக்கிறாள்.

    /////"உண்மையைச் சொன்னால் நான் படிக்கின்ற காலத்தில் எங்கள் மேம் (பேராசிரியை) அடிக்கடி சொல்வார்கள். நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் என்பார்கள். நீங்கள் விரும்புகின்ற நிறுவனத்தில் வேலை தேடிக் காத்துக் கிடப்பதைவிட, உங்களை விரும்பி வேலை கொடுக்கும் நிறுவனத்தில் மகிழ்ச்சியோடு வேலைக்குச் சேர்ந்துகொள்ளுங்கள் - அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும் என்பார்கள். அதே தியரிதான் திருமணத்திற்கும். நாம் விருப்பிப்போய் என்னை மணந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதைவிட, நம்மை விரும்பி வந்து பெண் கேட்பவர்களை மணந்து கொள்வதுதான் சரியென்று பட்டது".////

    ஆமாம், வழக்கமான தங்களின் கதாப் பாத்திர உணர்ச்சிப் பெருக்கு குறைந்தே காணப் படுகிறது!!

    பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  14. migavum nalla kathai, valthukkal, innum thodarnthu intha mathiri kathaikal eluthungal, anbudan ungal vasagan
    Sakthi ganesh. TK

    ReplyDelete
  15. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது
    .கண்கள் பனித்துவிட்டன.
    பக்குவமான கதைக்குப் பாராட்டுக்கள்../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. ////Blogger கோவை நேரம் said...
    அருமை/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger eswari sekar said...
    story arumai/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. /////Blogger தேமொழி said...
    ///ஓடி ஓடி வேலைக்குச் செல்லும் டவுன் பஸ் வாழ்க்கையில் என்க்கு விருப்பம் இல்லை. குடும்பப் பெண்ணாக வீட்டோடு இருப்பதில்தான்

    எனக்கு விருப்பம்"///
    ஹாங் ...அப்படின்னா வேலைக்குப் போற பொண்ணு "குடும்பப் பெண்" இல்லையா? Sorry; these lines are politically incorrect :(
    ///நடிகை கண்ணாம்பாவைப்போல இதுவரை காட்சியளித்த தன் மூத்த சகோதரி அலமேலு ஆச்சி அவர்கள், இப்போது வில்லி பாத்திரங்களில்

    நடித்த சுந்தரிபாயைப் போல காட்சி கொடுத்தார்கள்///
    கண்ணாம்பாவையும் சுந்தரிபாயையும் எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல்லியே. பண்டரிபாய்...சி.கே .சரஸ்வதி கூட பலருக்கு

    தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    ///எந்த ஊராக இருந்தால் என்ன? நான்கு சுவற்றிற்குள் எல்லா ஊரும் ஒன்றுதான் என்று சொல்லும் அளவிற்கு சாலா

    பக்குவப்பட்டுவிட்டாள்.///
    வேற வழி?
    பெண்குழந்தை பிறந்தால்? முத்தம்மா என்ற பெயரோ?
    இந்தக் காலத்து பெண்களின் "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க" மனப்பாண்மை பாராட்டத் தக்கது.
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா -இதை
    உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா!
    என்ற கதையின் மையக் கருத்து மனதில் பதிந்தது. நன்றி ஐயா. நல்ல கதை./////

    குடும்ப்த்தாருக்கு சேவை செய்து கொண்டு வீட்டில் இருக்கும் பெண் குடும்பப்பெண். வேலைக்குச் சென்று, பொருள் ஈட்டி குடும்பத்தை வளமாக்கும்

    பெண்ணிற்கு என்ன பெயர் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!:-)))))

    ReplyDelete
  19. /////Blogger sekar said...
    அருமையான கதை . இந்த பக்குவம் குடும்பங்களில் இருந்தால் . மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . நன்றி அய்யா ./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம் ;
    நல்ல குடும்பத்திற்கு ஓர் நல்ல பெண்
    அமைகிறாள் என்றால் ,அவன் பூர்வபுன்னிய ஸ்தனம நன்றாக அமைத்துள்ளது, 2 விட்டில் குரு இருந்துருக்கவேண்டும் அல்லது குரு பார்வை

    பெற்றுகவேண்டும். பெண்ணிற்கு 8விட்டில் சந்திரன்
    அமைந்திருக்கவேண்டும் சுக்கிரன் பார்வை பெற்றிருக்கவேண்டும்.
    எல்லாம் அவன் வாங்கிவந்த வரம்.
    எல்லா பெண்ணிற்கும் இது அமையாது குடும்பபென்னிற்குமட்டும்தான்.
    "பக்குவம்" அருமையானது நன்றி/////

    நல்லது. நன்றி உதயகுமார்!!

    ReplyDelete
  21. ////Blogger arul said...
    "இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது"
    arumayana varigal today we can find only 10% of people like this./////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. ////Blogger seenivasan said...
    Thank you very much for the good story.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ////Blogger Pandian said...
    இன்றைய புலம்பல்!!!!!
    கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
    புல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது எக்கலாம் ?/////

    பாண்டியன் என்னும் பெயரை வைத்துக் கொண்டு புலம்பலா? கஷ்டகாலம்(டா) சாமி!

    ReplyDelete
  24. /////Blogger minorwall said...
    வாத்தியாரின் கைவண்ணத்தில் உருவான நல்ல கதை..
    கதையிலே உணர்ச்சிக் கொந்தளிப்பான இடங்கள் அதிகம் இல்லையா?
    இல்லை.. விவரித்ததில் அந்தத் தன்மைகள் குறைந்து காணப்பட்டனவா?
    இல்லை..கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் தன்மை அப்படிப்பட்டதா என்று புரியவில்லை..
    சென்ற வாரத்திலே எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அவரின் மகள் சுயமாகவே சாதி விட்டு வேறு சாதியிலே திருமணம் செய்துகொண்டதாக

    சொல்லி உணர்ச்சிப் பிழம்பாகக் கொட்டித் தீர்த்தார் என்னிடம்..
    சிறுவயது முதலே நான் பார்த்து வளர்ந்தவள் என்பதால், அந்தப் பெண் இப்போது எப்படி இருக்கிறாள் என்று அக்கறையிலே விசாரித்தேன்..
    பெற்றவருடன் நடந்த வாக்குவாதத்திலே தலைக்கனம் பிடித்து எடுத்தெறிந்து பேசி, தான் விரும்பிய,தன்னை விரும்பியவனுடன் வாழ, பிறந்த

    வீட்டாரைத் துறந்து அந்தப் பெண் கையாண்ட முறையின் அதிர்வுகள் அவரின் மனத்தை விட்டு இன்னும் அகலவில்லை என்பதை அவரின்

    வார்த்தைகள் உணர்த்தின..
    'கேடுகேட்டவள்..எங்கேயோ போய் எப்படியோத் தொலையட்டும்'என்று மனசாரச் சபித்தார்..
    மறுநாள் அவரின் மகனைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துவிட்டு 'அந்தப் பெண்ணைக் காணவில்லை' என்று போலீசிலே புகார்

    ஒன்றைப் பதிவு செய்து அந்த ஜோடியைத் தேடி காவல் நிலையத்துக்கு வரவழைத்து உண்மையிலே மணமுடித்து பதிவு செய்து மணவாழ்வுரிமையைத்

    தந்து செயல்பாடாகியிருந்தல் அந்தப் பெண்ணுக்கு ஒரு பாழாகாத எதிர்காலத்துக்கு அச்சாரமாக இருக்குமே என்று
    'உங்கப்பாவிடம் இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது..நீயாவது இந்த வேலையைச் செய்..அந்தப் பெண்ணை நீங்கள் வீட்டிலே

    சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை..' என்று அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன்..
    அவனும் வேகத்தில் தூக்கிஎறிந்து பேசுவதிலேயே குறியாக இருந்தானே தவிர ஏன் யோசனைகளை யாருக்கும் மண்டைக்குள் ஏறுவதாக

    இல்லை...
    மொத்தத்திலே அந்தப் பெண்ணின் பக்குவமில்லாத பேச்சும், ஆணவம் கலந்த நடவடிக்கைகளும் காரணமாக குடும்பத்திலிருந்து, பாசப் பிணைப்பு

    என்பது சுத்தமாக அறுபட்டுப் போயிருந்தது.
    எனக்கும் கூட வாழ்த்த வேண்டிய நேரத்திலே மனதிலே வலியையும் வேதனையையுமே தந்தது./////.

    சாம்பார் சாதம், புளியோதரை, தக்காளி சாதம் என்றால் காரம் (உணர்ச்சிகள்) இருக்கும். இது சர்க்கரை சாதம் மைனர்!

    ReplyDelete
  25. ////Blogger Parvathy Ramachandran said...
    அழகான கதை.கதை படித்தவுடன், கிட்டத்தட்ட ஒரு குறும்படம் பார்த்த பாதிப்பு. டக், டக் என மாறும் காட்சிகள். இது குறும்படமாக எடுக்கப்பட்டால், இயக்குனருக்கு, 'ஷாட்' பிரிக்கிற வேலை கம்மி. முழு பாஸிடிவ் எபெஃக்ட் உள்ள கதை. பொது மெஸேஜ், 'மனம் போல் வாழ்வு" என்றாலும்,
    //அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை!"//
    //நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் //
    போன்ற வரிகள் நிதர்சன வாழ்வியல் உண்மைகள்.
    எனக்கென்னவோ சாலாவை விடவும், தன் குழந்தைகள் போல், உடன்பிறந்தாரின் குழந்தைகள் மேல் மட்டற்ற பாசம் காட்டும், முத்தைய்யா பெரியப்பாதான் நினைவில் நிற்கிறார்.//////

    உங்களின் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்களூக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. /////Blogger Rajaram said...
    ஐயா நல்ல கதை,
    கிடைப்பதைப் பெருமையாக நினைத்தாலே போதும் மனம் திருப்தியடைந்துவிடும்./////

    நல்லது. நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  27. /////Blogger krajan said...
    அய்யா வணக்கம் வாழ்வின் எதார்தத்தை விளக்கும் அருமையான கதை.
    நன்றி
    பவானி கே.ராஜன்/////

    நல்லது. நன்றி ராஜன்!

    ReplyDelete
  28. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ////தேவையில்லாத பிரச்சினைகள், ச்ண்டைகள், பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் மனைவியை விட்டுக்கொடுக்காமல்,
    சின்னய்யாவும் முன்னே நின்று வாதம் செய்து தன் மனைவியின் கட்சியை நியாயப் படுத்திய சம்பவங்களும் நிறைய உண்டு.////
    "வாழப் போகிறப் பிள்ளையை தாயார் கெடுத்தது" என்பார்கள்.
    இங்கே இந்தக் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே கெடுக்கா விட்டாலும் அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் போனதற்கு
    காரணமாகிறார்கள்...
    சரியாப் பொருத்தம் உள்ள தம்பதியர்கள் இப்படி இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்... அதாவது கேட்டதும் இருவருக்கும் ஒரே போல்
    நல்லதாகத் தெரியும்.
    ////'என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அலைபேசியில் கேட்ட போது, ஆச்சி அவர்கள் சொன்ன அசத்தலான பதிலாலதான் முத்தையா
    அண்ணன், அவர்களைத் தெரிவு செய்திருந்தார். "எங்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். உங்கள்
    விருப்பப்படி செய்யுங்கள்" என்று ஆச்சி அவர்கள் சொன்ன பதிலால்தான் திருமணம் உடனே கூடி வந்தது.////
    சிட்டை கொடுக்கும் காலம்.. இது போல அதை சட்டை செய்யாது போவதில் உயர்ந்த உள்ளத்தை காண முடிந்திருக்கிறது.
    ////"எதற்கு பெரியப்பா இதெல்லாம்?"
    "எல்லாம் உனக்குத்தான்டி ராசாத்தி!"
    "உங்களின் அன்பிற்கு அளவே இல்லை!"
    "அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை!"////
    அசத்தலானது....
    /////"உள்ள ராசி இருந்துவிட்டுப்போகட்டும் நான் முத்தையா என்றுதான் பெயர் வைப்பதாக உள்ளேன்"/////
    நன்றி உணர்வு என்பது எத்தகையது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    கரும்பாலையின் விவரிப்புகள் கொஞ்சம் அதிகம் (கதைக்கு அவ்வளவு அவசியம் இல்லை தான்) இருந்தும் இதற்கு பதிலாக மாமியாருக்கும் மருமகளுக்கும் இன்னும் கொஞ்ச நெருக்கமான உறவு இருப்பதாக அதிலே சில உணர்ச்சிகளைத் தெளித்து இருக்கலாம்....
    பெண்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்க வேண்டிய சூழல் மிகுந்துள்ளது... அவள் பாரதி கண்டப் புதுமைப் பெண்ணாக ஆகா வேண்டும் என்று அல்ல... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே.... அது தான் இன்றைய சூழல். பெரும்பாலான தந்தையர் இதைத் தான் செய்கிறார்கள். என்ன செய்வது. அவர்களின் கடமை அது.
    இருந்தும் பெண் என்பவளும் தன்னை ஒரு சக்திக் கொண்டவளாக மாற்றிக் கொள்ள கல்வி என்பது மிகவும் அவசியமாகிறது... அது தான் பெண்ணிற்கு ஒரு உத்திர வாதம் மிகுந்த ஆயுள் காப்பீடும் கூட. அந்த வகையில் கதாநாயகியை காண்பித்ததும் சிறப்பு...
    இருந்தும்... அவளின் தாயின் குணத்தில் இருந்து பெரிது வேறுபட்டது அபூர்வம்... இருந்தும் அவைகளும் நடக்க வழி இருக்கிறது.
    ஸ்ரீராமனை அறிமுகம் செய்யும் பொது வசிஷ்டரின் மாணவன் என்பதைத் தான் அழுத்தமாக ராஜரிஷி ஜனகனிடம் கூறினானாம்...
    அது போன்று இங்கே... கதையின் நாயகியும் காட்டப் பட்டு இருக்கிறாள்.
    /////"உண்மையைச் சொன்னால் நான் படிக்கின்ற காலத்தில் எங்கள் மேம் (பேராசிரியை) அடிக்கடி சொல்வார்கள். நாம் விரும்பியது
    கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் என்பார்கள். நீங்கள் விரும்புகின்ற நிறுவனத்தில் வேலை தேடிக் காத்துக்
    கிடப்பதைவிட, உங்களை விரும்பி வேலை கொடுக்கும் நிறுவனத்தில் மகிழ்ச்சியோடு வேலைக்குச் சேர்ந்துகொள்ளுங்கள் - அப்போதுதான் வாழ்க்கை
    இனிக்கும் என்பார்கள். அதே தியரிதான் திருமணத்திற்கும். நாம் விருப்பிப்போய் என்னை மணந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதைவிட, நம்மை
    விரும்பி வந்து பெண் கேட்பவர்களை மணந்து கொள்வதுதான் சரியென்று பட்டது".////
    ஆமாம், வழக்கமான தங்களின் கதாப் பாத்திர உணர்ச்சிப் பெருக்கு குறைந்தே காணப் படுகிறது!!
    பகிர்வுக்கு நன்றிகள் சார்.////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், நல்லதொரு விமர்சனத்திர்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  29. ////Blogger Sakthi Ganesh said...
    migavum nalla kathai, valthukkal, innum thodarnthu intha mathiri kathaikal eluthungal, anbudan ungal vasagan
    Sakthi ganesh. TK/////

    உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சக்தி கணேஷ்!

    ReplyDelete
  30. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்!

    கருத்தாழமிக்க கதை! நடை மெல்ல வருடிக் கொடுத்தது!சுகமான முடிவு!

    என்ன..ஒவ்வொரு குடும்பத்திலும் அந்த பெரியப்பா போல் ஒருத்தர் கிடைக்க வேண்டும்..அவர் சொல்வதை அனைவரும் விவாதத்தின் பின்னர் ஏற்க வேண்டும்..!

    இது கதையால் நிஜம் என உணர்த்த வேண்டும்!

    ReplyDelete
  31. வழக்கம் போல் மிக அருமையான கதை ஐயா!படித்துமகிழ்ந்தேன்.

    சாலாவைப் போல்தான் நம் நாட்டில் 99% பெண்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நம் நாட்டில் குடும்ப அமைப்பு இன்னும் ஓரளவு சிதையாமல் உள்ளது.

    என் மூத்த மகள் முதலில் குடித்தனம் செய்யப்போனது கோவாவில்.ஆகவே
    அந்த 'வெஸ்டெர்ன் காட்' பகுதி முழுவதும் சென்றுள்ளேன். 20 நாட்கள் கார் பயணமாக எல்லா இடங்களையும் பார்த்துள்ளதால் கதை படிக்கும் போது அங்கேயே இருப்பது போலத் தோன்றியது.

    பெண்பார்க்க கோவையிலும் ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவில். தேனிலவுக்கு சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் ! திட்டமிட்டு எழுதினீர்களா அல்லது எதேர்ச்சையாக வந்ததா?

    சமீபத்தில் சிருங்கேரி சன்னிதானத்தின் 63வது வர்தந்தி(பிறந்த நாள்) சமயம்
    கோவை வந்து அவர்களை நஸ்கரித்தேன்.கோவையில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தார்கள். அவர்களுடைய விஜய யாத்திரையில் இப்போது தென் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

    கதை உண்மைச் சம்பவமானால் ஐயாதான் முத்தையா பெரியப்பா!சரியா?

    ReplyDelete
  32. நல்லதொரு கதை, சாலாவின் பக்குவம் போற்றத்தக்கது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com