30.3.12

Devotional செலவு இல்லாத உயர்ந்த மேடை!

 
ஆடுவதற்குத் தயாராக இருக்கும் முருகப் பெருமான்
Devotional செலவு இல்லாத உயர்ந்த மேடை!

செலவில்லாமல் அததனை பெரிய மேடை அமைத்து, அதில் ஆடுவதற்குக் கந்தனையே கூட்டிவ்ந்தால் எப்படி இருக்கும்? கவிஞர் ஒருவரின் உயர்வான
கறபனைக்கு, அமர்க்களாமாகக் குரல் கொடுத்துப்பாடியிருக்கிறார் சீர்காழியார். நீங்கள் கேட்டு மகிழ அப்பாடலை இன்று வலை ஏற்றியிருக்கிறேன்.

இப்பாடலைநினைவுகூர்ந்து வலை ஏற்றப் பரிந்துரை செய்த நம் வகுப்பறை மாணவி தேமொழிக்கு, உங்கள் சார்பாக நம் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------

சிந்தனையில் மேடைகட்டி
கந்தனையே ஆடவைத்தேன்
செந்தமிழில் சொல்லெடுத்து
எந்தனையே பாடவைத்தான்

(சிந்தனையில் மேடைகட்டி)

தணிகைமலைமேல் அமர்ந்தான்
தத்துவமே பேசுகின்றான்
பழநிமலை தேடிவந்தான்
பரம்பொருளாய் காட்சிதந்தான்

(சிந்தனையில் மேடைகட்டி)

செந்தூரில் கோயில்கொண்டான்
சிங்கார வேலைக்கண்டான்
அழகர்மலை சோலைநின்றான்
ஆடும்மயில் ஏறிவந்தான்

(சிந்தனையில் மேடைகட்டி)

பரங்குன்றில் ஆட்சிசெய்தான்
பாமாலை சூடிக்கொண்டான்
சாமிமலை வாசல்வந்தான்
காவடிகள் கோடிகண்டான்

(சிந்தனையில் மேடைகட்டி)

காணொளி
http://youtu.be/rBnJW-wnqMw
 Our sincere thanks to the person who uploaded the video


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

29 comments:

  1. 'சிந்தனையில் மேடைகட்டி
    கந்தனையே ஆடவைத்தேன்
    செந்தமிழில் சொல்லெடுத்து
    எந்தனையே பாடவைத்தான்'

    பாட்டினுக்குப் பொருளானான்
    பக்தர்களின் பரவசத் திரளானான்
    இசையிலே மயங்கி நின்றான்
    இன்முகமும் காட்டி நின்றான்

    (சிந்தனையில் மேடைகட்டி)

    ஆனந்தம் வேண்டிநின்றோம் - அழகு
    ஆறுமுகன் வந்து அருளிச் சென்றான்
    தேவர் குறைத் தீர்த்தவனை - தீரா
    பக்தியோடு தேடியோருக்கே
    மூவரோடு வந்து இங்கே
    முக்தியும் தந்து அருள்வானே!

    (சிந்தனையில் மேடைக் கட்டி)

    ஆஹா அற்புதமானப் பாடல் நான் முதன் முதலில் இப்போது தான் கேட்கிறேன் என்று நினைக்கிறேன்...
    பரிந்துரைத்த சகோதரியார் அவர்களுக்கும்... பதிவிட்ட ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..

    ReplyDelete
  2. திருமலை தென்குமரி படத்தில் இடம்பெற்ற இப்பாடலைக்கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன. படிவிட்டமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்.

    என்ன ஒரு அருமையான பாடல் அதுவும் எம்பெருமான் திரு செந்தில் ஆண்டவனை பற்றி என்றால் சும்மாவா ?
    நன்றி அனைத்து உள்ளம்களுக்கும்.

    ReplyDelete
  4. நன்றி ஐயா
    :))))))))))

    ReplyDelete
  5. அறுபடை வீடுகளையும் நினைவூட்டும் பாடலை அளித்த வாத்தியாருக்கு நன்றி!

    ReplyDelete
  6. மிக அற்புதமான பாடல். கடைசிவரியில் 'காவடிகள் கோடி கண்டான்' என்றிருக்க வேண்டும். பதிவிட்டமைக்கு நன்றி. பரிந்துரைத்த தேமொழிக்கும் நன்றி

    ReplyDelete
  7. /////Blogger ஜி ஆலாசியம் said...
    'சிந்தனையில் மேடைகட்டி
    கந்தனையே ஆடவைத்தேன்
    செந்தமிழில் சொல்லெடுத்து
    எந்தனையே பாடவைத்தான்'
    பாட்டினுக்குப் பொருளானான்
    பக்தர்களின் பரவசத் திரளானான்
    இசையிலே மயங்கி நின்றான்
    இன்முகமும் காட்டி நின்றான்
    (சிந்தனையில் மேடைகட்டி)
    ஆனந்தம் வேண்டிநின்றோம் - அழகு
    ஆறுமுகன் வந்து அருளிச் சென்றான்
    தேவர் குறைத் தீர்த்தவனை - தீரா
    பக்தியோடு தேடியோருக்கே
    மூவரோடு வந்து இங்கே
    முக்தியும் தந்து அருள்வானே!
    (சிந்தனையில் மேடைக் கட்டி)
    ஆஹா அற்புதமானப் பாடல் நான் முதன் முதலில் இப்போது தான் கேட்கிறேன் என்று நினைக்கிறேன்...
    பரிந்துரைத்த சகோதரியார் அவர்களுக்கும்... பதிவிட்ட ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..////

    நல்லது. உங்களின் நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. ////Blogger பிரகாசம் said...
    திருமலை தென்குமரி படத்தில் இடம்பெற்ற இப்பாடலைக்கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன. பதிவிட்டமைக்கு நன்றிகள்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger அய்யர் said...
    முருகா... முருகா..////

    முருகா என்றதும் உருகாதா மனம்!

    ReplyDelete
  10. ////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்.
    என்ன ஒரு அருமையான பாடல் அதுவும் எம்பெருமான் திரு செந்தில் ஆண்டவனை பற்றி என்றால் சும்மாவா ? நன்றி அனைத்து உள்ளங்களுக்கும்.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger தேமொழி said...
    நன்றி ஐயா
    :))))))))))////

    நல்லது சகோதரி!

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    அறுபடை வீடுகளையும் நினைவூட்டும் பாடலை அளித்த வாத்தியாருக்கு நன்றி!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக அற்புதமான பாடல். கடைசிவரியில் 'காவடிகள் கோடி கண்டான்' என்றிருக்க வேண்டும். பதிவிட்டமைக்கு நன்றி. பரிந்துரைத்த தேமொழிக்கும் நன்றி/////

    தட்டச்சுப் பிழை. திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. சாமியார்; அடப்பாவி...... நான் போலி சாமியாருன்னு தெரியாம என்னை சொர்கத்தின் வசதி வாய்ப்பை தெரித்துக் கொள்ள சொல்கிறானே ...இந்த மேலோகத்து ஆபிசர் எல்லாம் இப்படிதான வேலை பார்ப்பார்களோ .

    ReplyDelete
  15. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    இப்பாடலை கேட்பதற்கு
    வாய்ப்பளித்தமைக்கு
    நன்றி!!

    ReplyDelete
  16. ஆஹா அற்புதமானப் பாடல் நான் முதன் முதலில் இப்போது தான் கேட்கிறேன்.......

    ReplyDelete
  17. ///thanusu said...
    சாமியார்; அடப்பாவி...... நான் போலி சாமியாருன்னு தெரியாம என்னை சொர்கத்தின் வசதி வாய்ப்பை தெரித்துக் கொள்ள சொல்கிறானே ...இந்த மேலோகத்து ஆபிசர் எல்லாம் இப்படிதான வேலை பார்ப்பார்களோ .///

    ஹ...ஹ..ஹா...இது நல்லா இருக்கு...சாமியார்னாலே நிலைமை இப்பிடின்னு ஆயிடுச்சி.

    சாமியார்: பார்த்தேங்கோ தேவா, ஆனா ரம்பா, ஊர்வசி, மேனகா ஃபெசிலிட்டி பற்றிய விவரம் ஒண்ணும் காணோமே...

    ReplyDelete
  18. முதன் முறை கேட்கிறேன். நல்ல பாடல். தேடித்தந்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  19. நல்லா ஞாபகம் இருக்கின்றது
    ஏற்கனவே கேட்ட பாடலாக - ஆனால்
    இவ்வளவு அருமையாக ரசித்ததில்லை அப்போது
    வருந்துகின்றேன் என் அலசியத்தை என்னி இப்போது...

    மிக்க நன்றி அய்யா..

    ReplyDelete
  20. மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. எந்த சுகமும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. கிடைத்தாலும் நீடித்தது நிற்ப்பது இல்லை. ஒவொவொரு உள்ளமும் இப்பூவுலகில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து ஏங்கி தவித்துக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கின்றது.

    ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் அவர்களின் வாழ்வின் தேவைக்கு உட்பட்டு இருந்தால் அதை நியாபடுத்தலாம். இறைவனும் மனம் கனிந்து வழங்குவான், சிலருக்கு கருணையை காட்டவில்லை என்றல் பாழ் போன மனம் ஏங்கி தவித்தே துடி துடித்து துயருறும்.

    துயர் உறும் உள்ளத்தின் நிலையை கவிஞர் கண்ணதாசன் தனது பாடலில் எப்படி விவரிக்கின்றார் என்பதை பாருங்கள்...

    " என்ன தவறு செய்தேன் அதுதான்
    எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால்
    வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்
    உலகம் தெரியாதா"

    என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் தண்டனையை அனுபவிப்பது மிகவும் கொடுமையாக தெரியும். அடுக்கடுக்கான துன்பத்தை வாழ்வில் சுமப்போரின் நிலையை பார்த்தல் கல் மனமும் கருணை கொள்ளும் இறைவா உனக்கு கருணையே இல்லையா என்று.

    நல் வழியையும் நல்ல மார்க்கத்தையும் தக்க பெரியோர்களின் வழிகாட்டுதலில் இனிமையாக கடக்கலாம். கரையற்ற அணை நீரற்று போகும் என்பார்கள்.

    இந்த பூவுலகில் பிறவி எடுத்தாச்சு... என்ன செய்ய முடியும் ? பிறவிகடலை நீந்த தெரியாமல் திக்கற்ற படகாய் நடுகடலில் தத்தளிப்பது போல் வாழ்வில் தவித்து கொண்டு இருப்பார்கள்.

    எல்லாவற்றிற்கும் வழி இல்லாமலா இறைவன் நம்மை படைத்து இருக்கின்றான். கடைத்தேறும் வழிகளை வாலி தம் வரிகளில் தீர்க்கமாக சொல்லி இருக்கின்றார்.

    நெஞ்சே! நினக்கொரு நல்வழி
    நான்சொல்வேன்; நித்தமும்நீ
    நஞ்சே நிரம்பிய நீச
    நினைவால் நலிந்தபடி
    துஞ்சேல்; குறிஞ்சித் தலைவன்
    திருத்தாள் துதித்துநின்றால்
    அஞ்சேல் எனவே அருள்வான்;
    அருச்சி அவன்தாளையே!

    'மனமே! உன் நினைவு நல்லதாக அமைய வேண்டும்! விஷம் நிரம்பிய, கவலை நிரம்பிய, துயரம் நிரம்பிய இப்படிபட்ட நீச நினைவுகளை விட்டுவிடு . விழிப்பாய் இரு. முருகப்பெருமானை துதித்து கொண்டு இரு.

    குறிஞ்சித் தலைவனை ஏன் வணங்க வேண்டும்? அந்த திருத்தாளில் ஆன்மா கலந்து இருப்பது தான் முக்தி. 'மனமே! முருகனின் திருவடியை நித்தமும் துதித்து நில்'.

    கவிஞர் வாலி அவர்கள் எழுதிய 'ஆறுமுக அந்தாதி' யில் தமது கவிதை நடையில் முருக கடவுளின் புகழை வரிந்து தள்ளி இருப்பார். வாய்ப்பு கிடைத்தல் அந்த பக்கதி பாக்களை பருகி பாருங்கள். எல்லாம் வல்ல முருக கடவுளின் பேரருள் பெற்று நலமுடன் வாழுங்கள்.

    ReplyDelete
  21. /////Blogger thanusu said...
    சாமியார்; அடப்பாவி...... நான் போலி சாமியாருன்னு தெரியாம என்னை சொர்கத்தின் வசதி வாய்ப்பை தெரித்துக் கொள்ள சொல்கிறானே ...இந்த மேலோகத்து ஆபிசர் எல்லாம் இப்படிதான வேலை பார்ப்பார்களோ ./////

    நாரதருக்கு உள்ள பவரைத் தெரியாமல் இதை எழுதிவிட்டீர்கள்! போலிச்சாமியாரை அவருக்கு அடையாளம் தெரியாதா என்ன?

    ReplyDelete
  22. ////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    இப்பாடலை கேட்பதற்கு
    வாய்ப்பளித்தமைக்கு
    நன்றி!!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ////Blogger udaya kumar said...
    ஆஹா அற்புதமானப் பாடல் நான் முதன் முதலில் இப்போது தான் கேட்கிறேன்.......////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. ////Blogger Arul said...
    முதன் முறை கேட்கிறேன். நல்ல பாடல். தேடித்தந்தமைக்கு நன்றி ஐயா...

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ////Blogger Balamurugan Jaganathan said...
    நல்லா ஞாபகம் இருக்கின்றது
    ஏற்கனவே கேட்ட பாடலாக - ஆனால்
    இவ்வளவு அருமையாக ரசித்ததில்லை அப்போது
    வருந்துகின்றேன் என் அலட்சியத்தை என்னி இப்போது...
    மிக்க நன்றி அய்யா..////

    அததற்கென்று ஒரு நேரம் வரும். இந்தப் பாடலைக் கேட்பதற்கான நேரம் இப்போதுதான் வந்துள்ளதாக எண்ணிக்கொள்ளுங்கள் நண்பரே!

    ReplyDelete
  26. ////Blogger Balamurugan Jaganathan said...
    மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. எந்த சுகமும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. கிடைத்தாலும் நீடித்தது நிற்ப்பது இல்லை. ஒவொவொரு உள்ளமும் இப்பூவுலகில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து ஏங்கி தவித்துக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கின்றது.
    ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் அவர்களின் வாழ்வின் தேவைக்கு உட்பட்டு இருந்தால் அதை நியாபடுத்தலாம். இறைவனும் மனம் கனிந்து வழங்குவான், சிலருக்கு கருணையை காட்டவில்லை என்றல் பாழ் போன மனம் ஏங்கி தவித்தே துடி துடித்து துயருறும்.
    துயர் உறும் உள்ளத்தின் நிலையை கவிஞர் கண்ணதாசன் தனது பாடலில் எப்படி விவரிக்கின்றார் என்பதை பாருங்கள்...
    " என்ன தவறு செய்தேன் அதுதான்
    எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால்
    வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால்
    உலகம் தெரியாதா"
    என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் தண்டனையை அனுபவிப்பது மிகவும் கொடுமையாக தெரியும். அடுக்கடுக்கான துன்பத்தை வாழ்வில் சுமப்போரின் நிலையை பார்த்தல் கல் மனமும் கருணை கொள்ளும் இறைவா உனக்கு கருணையே இல்லையா என்று.
    நல் வழியையும் நல்ல மார்க்கத்தையும் தக்க பெரியோர்களின் வழிகாட்டுதலில் இனிமையாக கடக்கலாம். கரையற்ற அணை நீரற்று போகும் என்பார்கள்.
    இந்த பூவுலகில் பிறவி எடுத்தாச்சு... என்ன செய்ய முடியும் ? பிறவிகடலை நீந்த தெரியாமல் திக்கற்ற படகாய் நடுகடலில் தத்தளிப்பது போல் வாழ்வில் தவித்து கொண்டு இருப்பார்கள்.
    எல்லாவற்றிற்கும் வழி இல்லாமலா இறைவன் நம்மை படைத்து இருக்கின்றான். கடைத்தேறும் வழிகளை வாலி தம் வரிகளில் தீர்க்கமாக சொல்லி இருக்கின்றார்.
    நெஞ்சே! நினக்கொரு நல்வழி
    நான்சொல்வேன்; நித்தமும்நீ
    நஞ்சே நிரம்பிய நீச
    நினைவால் நலிந்தபடி
    துஞ்சேல்; குறிஞ்சித் தலைவன்
    திருத்தாள் துதித்துநின்றால்
    அஞ்சேல் எனவே அருள்வான்;
    அருச்சி அவன்தாளையே!
    'மனமே! உன் நினைவு நல்லதாக அமைய வேண்டும்! விஷம் நிரம்பிய, கவலை நிரம்பிய, துயரம் நிரம்பிய இப்படிபட்ட நீச நினைவுகளை விட்டுவிடு . விழிப்பாய் இரு. முருகப்பெருமானை துதித்து கொண்டு இரு.
    குறிஞ்சித் தலைவனை ஏன் வணங்க வேண்டும்? அந்த திருத்தாளில் ஆன்மா கலந்து இருப்பது தான் முக்தி. 'மனமே! முருகனின் திருவடியை நித்தமும் துதித்து நில்'.
    கவிஞர் வாலி அவர்கள் எழுதிய 'ஆறுமுக அந்தாதி' யில் தமது கவிதை நடையில் முருக கடவுளின் புகழை வரிந்து தள்ளி இருப்பார். வாய்ப்பு கிடைத்தல் அந்த பக்கதி பாக்களை பருகி பாருங்கள். எல்லாம் வல்ல முருக கடவுளின் பேரருள் பெற்று நலமுடன் வாழுங்கள்./////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!'ஆறுமுக அந்தாதி' பாடல் இடம்பெற்றுள்ள நூலின் பெயரைச் சொல்லவில்லையே நீங்கள்?

    ReplyDelete
  27. SP.VR. SUBBAIYA said...
    //// உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!'ஆறுமுக அந்தாதி' பாடல் இடம்பெற்றுள்ள நூலின் பெயரைச் சொல்லவில்லையே நீங்கள்? ///

    அடியேனின் நீண்ட பின்னூட்டத்தை பொறுமையாக படித்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி அய்யா.

    கவிஞர் வாலி அவர்கள் சேயோனின் புகழை அந்தாதி வடிவில் எழுதிய புத்தகத்தின் பெயர் 'ஆறுமுக அந்தாதி'. விகடன் பதிப்பகத்தார் பிரசுரித்து உள்ளார்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com