4.3.12

பொறுப்பவளும் தடுப்பவளும்!

மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 6 பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன.
படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------
1






கட்டுரை: சைடு பிஸினெஸ்
ஆக்கம்.கே.முத்துராம கிருஷ்ணன், லால்குடி

தமிழகத்தில், குறிப்பாக இலால்குடியில் சுமார் எட்டு மணிநேரம் மின்தடை அமுலிலுள்ளது. 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்பது போல மின்சாரம் இருந்தால் இணையம் காணவில்லை,இணைய இணைப்பு இருந்தால் மின்சாரம் இல்லை.

என்னுடைய யு பிஎஸ் இன்றைக்கெல்லாம் 15 நிமிடத்திற்கு மேல் தாங்காது.கொஞ்சம் நீட்டினாலும் 'கீய்ங் கீய்ங்' என்று கண் திறக்காத நாய்க்குட்டி போல கற்ற‌த் துவங்கிவிடும்.அதனால் கணினியிடமிருந்து என்னைப் பிய்த்து எடுத்து புத்தகம், மற்ற அச்சிட்ட தாள்களின் மீது கவனத்தை, கண்களை திருப்ப வேண்டிய கட்டாயம்.

அந்தக் கட்டாயத்தால்தான் 2009ம் ஆண்டு வெளியான கலைமகள் தீபாவளிமலர் கண்களில் பட்டது. அதில் பாக்கியம் ராமசாமி எழுதிய 'சைடு பிஸினெஸ்' என்ற கதை+கட்டுரை படிக்கத் தூண்டியது.பிரபல வாரப் பத்திரிகையான குமுதம்  இதழில் 'அப்புசாமி சீதா பாட்டி'சீரியல் எழுதிப் புகழ் பெற்றவர் பாக்கியம் ராமசாமி. அது அவருடைய புனைப் பெயர்தான். அந்தக் காலத்தில் ஆண் எழுத்தாளர்கள் பெண் புனைப் பெயர்கள் வைத்துக் கொள்வது சகஜமாக இருந்தது.'சுஜாதா' என்பவருடைய உண்மைப் பெயர் ரெங்க‌ராஜன். மனைவி பெயரில் எழுதினார்.

ஜெயகாந்தன் எப்போதுமே கொஞ்சம் தன் மனதில் பட்டதை 'பட்'டென்று பொது மேடையில் போட்டு உடைத்துவிடுவார்.பெண் பெயரில் எழுதும் ஆண் எழுத்தாளர்களை அவர் 'நபும்சக'(அரவாணிகள்) எழுத்தாளர்கள் என்று கடும் கோபத்துடன் குறிப்பிடுவார்.அதுகிடக்கட்டும்.

பாக்கியம் ராமசாமி குமுதம் இதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.அவருடைய உண்மைப்பெயர் திரு ஜ.ரா. சுந்தரேசன் ஆகும். எடிட்டர் எஸ் ஏ பி அண்ணாமலை, ரா கி ரெங்கராஜன், ஜ ரா சுந்தரேசன் ஆகிய மூவரும் சேர்ந்து வெகுஜனப் பத்திரிகைகளும் லட்சக்கணக்கில் விற்க முடியும் என்று காட்டிய ஜாம்பவான்க‌ள் ஆவர். 'அரசு' பதில் மூவரும் சேர்ந்து எழுதியது என்பவர்களும் உண்டு.

'சைடு பிஸினெஸ்' என்ற பாக்கியம் ராமசாமி கதையில், பலரும் சைடு பிஸினெஸ் செய்து சம்பாதிப்பதைப் பார்த்து தானும் ஆசைப்பட்டு ஊரில் இருந்து 500 தேங்காய் வரவழைத்து விற்க முயற்சி செய்து தேங்காய் எல்லாம் அழுகி நாற்றமடித்து, அழுகிய தேங்காயைக் குழி தோண்டிப் புதைத்து ... என்று அவர் சைடு பிஸினெஸ் செய்து அசடு வழிந்ததை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார். இறுதி வாக்கியமாக 'சைடுபிஸினெஸ் எல்லோருக்கும் செய்ய முடிவதில்லை' என்று தனக்கு வந்த ஞானோதயத்தையும் கூறி முடித்துள்ளார்.

அதைப் படித்தவுடன் வழக்கம் போல் நான் பார்த்த'சைடு பிஸினெஸ்'காரர்கள் எல்லாம் நினைவுக்கு வந்தார்கள்.

நான் கோவையில் இருந்து தஞ்சைக்குப் வந்த‌ புதிதில் என்னைவிட வயதில் மிக மூத்தவர் ஒருவருக்கு 'வெண்ணை' என்ற பெயரை அவர் பெயருக்கு முன்னால் வைத்து அழைத்து வந்தார்கள். நான் அப்பாவித்தனமாக அவரிடம்,"நீங்கள் பேசும் போது வெண்ணையைப் போல நயமாகப் பேசுவீர்களோ? அதனால்தான் உங்களுக்கு அந்த அடைமொழியோ?" என்று எதார்த்தமாகக் கேட்டுவிட்டேன்.வந்தது பாருங்கள் அவருக்குக் கோபம்."நீ என்னை வெண்ணைன்னு கூப்பிட்டா நான் உன்னை  மொண்ணைன்னு கூப்பிடுவேன்"என்று கத்தத் துவங்கிவிட்டார்.

அவர் நகர்ந்த பின்னர் மற்றவர்களிடம் அவர் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டேன். "அதுவா? அவர் வெண்ணை வியாபாரத்தை சைடில் செய்வதால் அவருக்கு அடையாளம் வெண்ணை" என்றார்கள். அப்புறம் அவரிடம் வெண்ணை வாங்கி அவருடைய கோபத்தைத் தணித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இன்னொருவர் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மடியாக, விதவைப் பாட்டிகளால் தயாரிக்கப்படும் 'பிராமணாள் அப்பளம்' என்று ஒவ்வொருவரிடமும் கூறிக் கூறி விற்பார். (கல்லிடைக்குறிச்சியில், பத்தமடைப்பாய் வியாபாரம் படுத்துவிட்டதால் அப்பள வியாபாரத்தில் முஸ்லிம் சமுதாயம் இறங்கிவிட்டது என்ற செய்தி பலருக்கும் தெரியாது. இது பரம ரகசியம். யாரிடமும் சொல்லாதீர்கள்)

அப்பளம் விற்பவருடைய டெக்னிக்கே ஒரு அலாதியானது.

அவர் ஒரு ரேடியோ செய்தி ரசிகர். "இன்று நாசர் வீட்டைவிட்டு வெளியிலேயே வரவில்லையாம். ஜலதோஷம் என்று காரணம் சொல்லப்பட்டாலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்தான் காரணம் என்று பிபிஸி சொல்கிறான்" என்பார்

"நியூஸ் தெரியுமோ?" என்பார். 'என்ன?' என்றால் 'டிகாலுக்கு ஒரு காதலி இருக்கிறாளாம் அவர்களுக்குள் சண்டையாம்' என்பார்.உள்ளூர் செய்தி,
இந்தியா சம்பந்தப்பட்ட நியூஸ் எதுவும் சொல்ல மாட்டார்.

நம்மிடம் நாம் அறியாத நியூஸ் சொன்னதற்காகவும், நாம் கேட்டதற்காகவும் பிரதியாக நாம் அவரிடம் 'மடி அப்பளம்' வாங்க வேண்டும் என்பது அவர் எதிர்பாப்பு. நாம் வாங்காவிட்டால், 'தொண்டைகிழிய உலகச் செய்தியை அரைமணி சொல்லியிருக்கிறேன்; ஒரு கட்டுகூட‌ வாங்காமல் போகிறான் சார் கஞ்சன்!" என்று அடுத்த ஆளிடம் பேசத் துவங்குமுன் சொல்லுவார். அவர் பாவம், உலகச் செய்தியயும் கேட்டுக் கொண்டு 'மடி அப்பளமு'ம் வாங்கிக் கொள்வார். தன்னைப் பற்றியும் அடுத்தவர்களிடம் 'கஞ்சன்'என்று சொல்லிவிடுவாரோ என்ற் அச்சம் தான் காரணம்.

மேற்கண்ட இருவரை போல பலர் துணிவியாபாரம், பட்டுப்புடவை இன்ஸ்டால்மென்டு வியாபாரம், காப்பிப்பொடி வியாபாரம் என்று செய்வார்கள். இதில் காப்பிப்பொடி வியாபாரத்தை தொழிற்சங்க‌த்தின் செயலாளரின் அண்ணன் வந்து செய்தார். காப்பிப்பொடியின் தரம் எப்படியிருந்தாலும் எல்லோரும் வாங்கிக்கொண்டார்கள். வாங்காதவர்களுக்கு சங்கத் தலைவரின் அருட்பார்வை கிடைக்காது போய்விடுமே என்று கவலைதான் காரணம்.

'பிஸினெஸ் வரைத்தன்று பிஸினெஸ்  அஃது செய்வாரின்
பின்னணி வரைத்து" என்பது கிறள்.

'சைடு பிஸினெஸ் மன்னன்' என்று சொல்லுமளவுக்குக் கொடிகட்டிப் பறந்தார் ஒருவர்.

'இலாபமில்லாமல் பங்கீட்டு முறையில் சமையல் எண்ணை மில்லிலிருந்தே நேரடியாகக் கொள்முதல் செய்து பிரித்துக் கொள்வோம்' என்று கூறி களத்தில் இறங்கினார்.ஒரு சமயத்தில் சுமார் 100 டின்கள் வரை மாதத்தின் முத‌ல் நாளில் காலியாகும் படி வியாபாரம் பெருகியது.அந்தப் பகுதியில் உள்ள சுமார் 500 குடும்பங்களைச் சார்ந்த்தோர் ரேஷ‌ன் கடைக்குசெல்வது போல் பாத்திரமும் கையுமாகப் போய் வருவதைப் பார்க்கலாம்.

முன் பதிவு செய்யாமல் போனால் எண்ணை கிடையாது. 'அடுத்தமாதம் பதிவு செய்து கொண்டு வாருங்கள்' என்று சொன்னால் பரவாயில்லை.
'எண்ணையில்லை போ போ போ'  என்று பட‌படப்புடன் விரட்டப் படுவோம். இருந்தாலும் அவர் வீட்டின் முன் கால்கடுக்கக் காத்திருந்து எண்ணை வாங்குவார்கள்.அது அவர் செய்த பூர்வ ஜன்ம புண்ணியமோ?

எண்ணை மட்டுமல்ல. சீசனில் வருடாந்திர மளிகைப் பொருட்கள் வரவழைத்து அளந்து போடுவார். "துவரம்பருப்பு தூத்துக்குடியில் இருந்து வருகிறது. குறைந்த அளவுதான் வரவழைக்கிறேன். முதலில் வருபவர்களுக்கு முதலில் வழங்கப்படும்.பதிவு செய்யாதவர்களுக்குக் கிடையாது. அப்புறம் வருத்தப்படகூடாது' என்று கறாராகப் பேசியே ஆர்டர் பிடிப்பார். எனக்கு 30 கிலோ எனக்கு 40 கிலோ, என் அக்காள் இல்லத்திற்கு 50 கிலோ என்று ஆர்டர் குவியும். ஒரு சில நாட்களில் ஒரு லாரி லோடு  போன இடம் தெரியாமல் மறைந்துவிடும்.அப்படியே அரியலூர் மிளகாய், உளுந்து, மைசூர் புளி என்று அவ்வப்போது வியாபாரம் சூடுபிடிக்கும்."போனா வராது பொழுது சாய்ஞ்ச்சால் கிடைக்காது" என்று தெருவில் கூவி விற்பார்களே அதே டெக்னிக்தான் கடைப்பிடிப்பார்.

மேற் சொன்னவை அவர் இல்லத்தில் நடக்கும் வியாபாரம்.அலுவலகத்தில் மண்டியில் இருந்து பழங்கள் வரவழைத்து வினியோகம் நடக்கும்.அலுவலக நேரத்திலேயே நடக்கும் வியாபாரத்தை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனேனில் லாப நோக்கம் இன்றி பிரித்துக் கொள்ளுத‌ல் என்ற சேவை(?) மனப்பானமைதான்!

தீபாவளி சமயத்தில் சிவகாசி பட்டாசு அலுவலகத்திலேயே இரண்டு லாரி லோடுகள் இறக்கப்ப‌ட்டு வினியோகம் நடக்கும். அதில் இருக்கும் தீ விபத்து ஆபத்தைப் பற்றி யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள்.ஒரு மூலையில் பட்டாசு அடுக்கப்பட்டு இருக்கும். அதற்கு அருகிலேயே அடுப்பு மூட்டி லட்டு, மைசூர்பாகு, பாதுஷா என்று தயாராகும்.அலுவலகம் முழுதும் எண்ணெய்ப் புகையும் ஸ்வீட் செய்யும் மண்மும் பரவி நிற்கும். எந்த அதிகாரியும் இதனைத் தடை செய்யவில்லை. மாறாக அவர்களும் 'ஒன்று இரண்டு' யூனிட் பட்டாசு, ஸ்வீட் ஆர்டர் கொடுத்து இருப்பார்கள்.

"கழுதைவிட்டையைப் பாக்கெட் போட்டு இவன் விற்றால்கூட எல்லோரும் க்யூவில் நிப்பானுங்களே" என்று சில கொள்ளிக் கண்ணன்கள் அவர் காதுபடவே சொன்னாலும் அவர் காதில் போட்டுக்கொள்ள மாட்டார் அவர். கொக்குக்கு ஒன்றே மதி!

இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல கந்துவட்டி மன்னர்கள் சைடு பிஸினெஸ் செய்வார்கள். சீட்டு விளையாடுபவர்கள், உற்சாக பான கேஸ் ஆகியவர்களுக்கு வேண்டுமென்றே வலியுறுத்திக் கடன் கொடுத்துவிட்டு வட்டியை சம்பளத்து அன்று கழுத்தில் துண்டைப் போட்டு வாங்குவார்கள்.

கடன் வாங்கியவர்கள் 'கந்துவட்டி கனவான்'களிடமிருந்து எஸ்கேப் ஆவதற்குச் செய்யும் தந்திரங்களை எழுதினால் அது ஒரு நீண்ட கதையாகும்.

ஜப்பான்காரர் இதைப்படித்துவிட்டு சைடுபிஸினெஸில் வெற்றி அடையாதவனின் 'பெட்டைப் புலமபல்' என்று சொல்லக்கூடும்.சொன்னால் சொல்லட்டும். அதற்கெல்லாம் பயந்து நம்ம புலமபல் நிற்காது ஓய்!

வாழ்க வளமுடன்!

ஆக்கியோன்:கே முத்துராமகிருஷ்ணன்(இலால்குடி)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

கவிதை : அவளும் இவளும்
ஆக்கம் தனுசு

அவள்
நான் பார்த்த முதல் அழகி
இவள்
என்னைப் பார்த்த பேரழகி

அவள்
என் உயிர் காக்கும் தோழி
இவள்
எனக்காக உயிர் கொடுக்கும் தோழி

அவள்
என் வாழ்கைக்கு வெளிச்சம் தந்த பெரும் நிலவு
இவள்
என் வாழ்கையை வண்ணமாக்கிய வானவில்.

அவள்
என்னுள் கலந்திருக்கும் மூச்சுக்காற்று
இவள்
எனக்காகவே மூச்சு விடும் தென்றல்காற்று

அவள்
என்னை அணைத்த ஆரம்பக் கல்வி
இவள்
என்னை கவர்ந்த மேல்கல்வி

அவள்
தவறுகளை பொறுத்த திருமகள்
இவள்
தவறுகளை தடுத்த தெய்வமகள்

அவள்
எனக்கு மட்டுமேயான குறிஞ்சி மலர்
இவள்
எனக்காகவே அமைந்த பூங்காவனம்

அவள்
என்னை பாடும் தாலாட்டு
இவள்
நான் தீட்டும் கவிதை

அவள்
தேவைக்கு வந்த மருந்து
இவள்
எனக்கான தலை வாழை விருந்து

அவள்
என்னுள் வாழும் மனசாட்சி
இவள்
நான் ஆளும் அரசாட்சி

அவள்
என்னை கௌரவப்படுத்திய சிம்மாசனம்
இவள்
தலையில் சூடிய மணிமகுடம்

அவள்
என் சரித்திரத்தின் உயிரெழுத்து
இவள்
நான் சரித்திரமாக வந்த மெய்யெழுத்து.

அவள்
ராஜ்ஜியம் தந்த மகாரானி
இவள்
ஆட்சியை தந்த பட்டத்துரானி

அவள்
எனக்கான மலைத்தேன்
இவள்
திகட்டாத கொம்புத்தேன்

அவள்
அன்பில் இலக்கணம்
இவள்
பண்பின் பெரும் சிகரம்

அவள்
நிறைந்து விளங்கும் முப்பால்
இவள்
நிறைந்து தளும்பும் தீம்பால்

அவள்
மாதங்களில் மார்கழி
இவள்
காலங்களில் வசந்தம்

அவள்
சுவையில் முத்தமிழ்
இவள்
திகட்டா முக்கனி

அவள்
கோடையில் வரும்மழை
இவள்
குளிறில் கிடைக்கும் கதகதப்பு

அவள்
என்னை பெற்றெடுத்த தாய்
இவள்
எனக்குக காதலியாய் வந்த் தாரம்.
-தனுசு-                  

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
3


சிறுகதை: மன நிறைவு
ஆக்கம் தில்லி உமா

அடுக்களையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்த காமாட்சியின் முகத்தையே ஹாலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த நீலகண்டன் ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்தார்.  ம்ஹூம், இதை இப்படியே விடக்கூடாது, யோசித்தவாறே அடுக்களையில் நுழைந்தார்.

காமாட்சி, என்ன இன்னும் இரண்டாந்தரம் காப்பி கலக்கலியா?

'ஆஹா, இதோ கலக்கறேன்'. சூடாக பதில் வந்தது.

'ஏன் என்னவோ போல இருக்கே, உடம்பு சரியில்லையா?' வாயைப்பிடுங்கினார்.

என் உடம்புக்கு என்ன?  கல்லாட்டமா நன்னாதான் இருக்கேன், எனக்குதான் ஒரு கேடும் வர மாட்டேங்கறதே?  அதனாலதானே கார்த்தாலேர்ந்து ராத்திரி வரைக்கும் வேலைக்காரி மாதிரி உழைக்க முடியறது.

'இப்ப என்ன ஆச்சு?' பரிவுடன் கேட்டார்.

ஏன் நீங்க இந்த ஆத்துலதானே இருக்கேள்?  ஒய்வு ஒழிச்சல் இல்லாம நான் வேலை பண்றது கண்ணுக்குத் தெரியறதுதானே?

இதை எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது நேரம் குழம்பியவர் தொடர்ந்தார்.

ஏன் காமாட்சி, நானும் உனக்கு முடிஞ்சவரை உதவிண்டுதானே இருக்கேன்?

கடைக்குப்போறது, வெளிவேலை பார்த்ததுண்டா ஆச்சா?  மீதி என் தலைலதானே செய்யணும்னு எழுதியிருக்கு.

சரி மருமகளை கொஞ்சம் செய்யச்சொன்னா ஆச்சு, உனக்கும் உதவியா இருக்கும், கொஞ்சம் ஓய்வும் கிடைக்கும்.

இதற்காகவே காத்திருந்தவள் போல் ஆரம்பித்தாள்.

'என்ன செய்யச்சொல்றது அவளை?  சுறுசுறுப்பே கிடையாது, ஒரு வேலை தெரியல, சமையல் சுத்தமா வரல.  கல்யாணமாகி வந்து நாலு மாசம் ஆச்சு, தான் சாப்பிட்டுக்கிளம்பி ஆபீசுக்கு போகத்தான் அவளால முடியறது' எரிச்சலுடன் தொடர்ந்தாள்.

எனக்கும் வயசாறது, சரி எல்லா வேலையும் செய்யவேண்டாம்.  ஏதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் செய்யலாமே, அதுகூட அவாத்துல கத்துக்குடுக்கல.

சரி நீதான் கத்துக்குடேன், அதனால என்ன இப்போ?

அது சரி, அவ என்னிக்கு சமையல் கத்துண்டு சமைக்கறது?  சமையல் வேண்டாம், பாக்கி சுத்து வேலையாவது செய்வாள்னா, அதுவும் கிடையாது.  நாளைக்கே நான் போயிட்டேன்னா இவ எப்படி சமாளிப்பா?

ஏன் காமாட்சி, அவதான் என்ன செய்யட்டும்னு கார்த்தால எழுந்து கேக்கறா இல்லையா?  நீ இத இத இப்படி பண்ணுன்னு சொல்லவேண்டியதுதானே?

கேட்டாப் போதுமா?  சொல்லிகொடுத்தா கத்துண்டு செய்யத் தெரிய வேண்டாமா?  நானும் இந்த ஆத்துக்கு பதினேழு வயசுல கல்யாணமாகி வந்தேன்.  என்ன செய்யணும்னு உங்க அம்மாகிட்ட கேட்டுண்டா நின்னேன்?  நானா புரிஞ்சுண்டு செய்யல?  அப்ப உங்காத்துல உங்க தம்பி, அண்ணா, தங்கைகள்னு எவ்ளோ பேர் இருந்தா?  அப்படியும் நான் சமாளிக்கலியா?  கார்த்தால நாலு மணிக்கு எழுந்து ஆரம்பிச்சா ராத்திரி பத்தரை வரைக்கும் எத்தனை வேலை இருக்கும்?  இப்ப நாம நாலு பேருதான்.  அதுக்கே திணறினா எப்படி?   கண் பார்த்தா கை செய்யவேண்டாம்?

எல்லாரும் ஒரேமாதிரி இருக்கமாட்டா இல்லையா?  அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு?  அவ படிப்பு, அது முடிஞ்சு வேலைன்னு இருந்துட்டா.  நீ இருந்த காலம் வேற காமாட்சி.  எட்டாவதோட படிப்ப நிறுத்திட்டா உங்காத்துல.  உங்க அம்மா, பாட்டியோட சேர்ந்து செஞ்சு உனக்கு எல்லா வேலையும் பழக்கமாயிடுத்து.  இப்போ அப்படியில்லையே.

என்ன மருமகளுக்கு வக்காலத்தா?  அப்போ கடைசிவரை நான் வேலை செஞ்சிண்டே இருக்கணும்னு சொல்ல வரேள், அதானே?

இவள் இப்படிப்புலம்புவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.  பதினேழு வயதில் இந்த வீட்டில் நுழைந்ததிலிருந்து இந்த நிமிடம் வரை ஒய்வு ஒழிச்சல் இல்லாத வேலை.  அப்போது பெரிய கூட்டுக்குடும்பம்.  காலையில் வாசல் தெளிக்க எழுவதிலிருந்து இரவு சாப்பாடு வரை அம்மாவுடன் அத்தனை வேலையும் சேர்ந்து செய்வாள்.  'இவள் சின்னப்பெண், எப்படி சமாளிக்கப்போகிறாள்' என்று ஆரம்பத்தில் புலம்பிய பாட்டி வாயாலேயே ஒரே மாதத்தில் 'பேஷ் பேஷ்' என்று பாராட்டு வாங்கியவள்.  அதன்பின் ஒவ்வொருவராக திருமணம் ஆகிச் சென்றபின்னும், எல்லாரும் வருவதும் போவதுமாக வீடு எப்போதும் 'ஜே ஜே'வென்று இருக்கும்.  அதன்பின் குழந்தைகள் வளர்ப்பு, திருமணம் என்று தொடர்ந்த உழைப்பு.  இப்போது சற்றே ஒய்வு வேண்டும் என அவள் ஆசைப்படுவதில் தவறில்லைதான்.  ஆனால் அதை வெளிப்படுத்தும், எதிர்பார்க்கும் விஷயத்தில்தான் சறுக்குகிறாள்.

சிறிது நேர யோசனைக்குப்பின் நீலகண்டன் தொடர்ந்தார் 'நான் அப்படி சொல்லலை.  மருமகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்மாத்து வழக்கத்தை எல்லாம் பொறுமையா கத்துக்கொடுன்னு சொல்றேன்'.

எங்கே ஏதாவது சொல்லிக்கொடுக்கலாம்னா எதையாவது கொட்டறதும், உடைக்கறதுமா இருந்தா எப்படி?

அவளுக்கும் எதையாவது தவறாகச் செய்துவிடுவோமோன்னு பதற்றம், பயம் இருக்குமில்லையா?  இன்னும் கொஞ்ச நாள் போனால் தானே எல்லாம் செய்ய ஆரம்பிச்சிடுவா.

இந்த முறை காமாட்சி எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.  பதிலேதுமில்லை.

நல்லவேளையாக இதை எதுவும் மருமகளுக்கு எதிராகக் காண்பித்துக் கொள்ளவில்லை.  அதன்பின் சரி செய்வது இன்னும் கடினமாகிவிடும் என்றுதான் இவ்வளவு தவிக்கிறார்.

சரி இங்க வா வந்து உட்காரு சித்த நேரம் பேசிண்டிருக்கலாம்.

வந்து உட்கார்ந்தவள் முகத்தில் எரிச்சல், கோபம் அப்படியே இருந்தது.  எதுவும் பேசவில்லை.

நீலகண்டனே தொடர்ந்தார்.

நான் படிச்ச ஒரு குட்டிக்கதை சொல்லவா உனக்கு?

இப்போதும் மௌனமே பதில்.

மௌனத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார் 'சரி சொல்றேன் கேளு.  ஒரு ஊரில ஒரு அரசன் இருந்தான்.  அவன் தாயாரிடம் அவனுக்கு அளவுகடந்த பாசம்.  அரண்மனையில் எல்லா வேலைக்கும் ஆள் இருந்தார்கள்.  ஒருமுறை அரசன் காட்டுப்பகுதிக்குப் போனான்.  அப்போ அவன் கண்ட காட்சி அவனை வியக்க வெச்சுது.  அங்கே ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் எல்லா வேலையையும் செய்துகொண்டு இருந்தாள்.  ஒரு வாரமா இதை அரசன் கவனிச்சுண்டே இருந்தான்.  சில மாதங்கள் கழித்து அவன் திரும்ப அந்தப்பக்கம் போனப்போ அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது.  அப்போதும் அவள் அந்த குழந்தையை ஒரு மரத்தடியில் தூளியில் போட்டுவிட்டு வேலை செய்துகொண்டிருந்தாள்.  இதைப்பார்த்த அரசன் ஒரு முடிவுக்கு வந்தான்.  அரண்மனைக்கு வந்தவன் தன் தாயாரிடம் இதையெல்லாம் சொல்லிவிட்டு அவரிடம் வேலை பார்த்த அத்தனை வேலையாட்களையும் வேலையைவிட்டு நிறுத்தினான்.  இனிமேல் நீயே எல்லா வேலையையும் பார்த்துக்கோன்னு சொல்லிட்டான்.  சில  நாட்கள் வேலைப்பளுவால் அம்மாவைப்பார்க்க வர இயலாத அவன் திரும்ப வந்து பார்த்தப்போ தன்னோட அம்மாவுக்காக ஆசையா அமைத்துக்கொடுத்திருந்த தோட்டத்தில எல்லா செடிகளும் வாடி வதங்கி இருந்ததைப்பார்த்தான்.  அதிர்ச்சியுடன் அம்மாவிடம் காரணம் கேட்டபோது அவள் சொன்னாள் 'காட்டில் இருக்கும் மரம் செடிகளுக்கு யாரும் நீர் ஊற்றுவது கிடையாது, அப்படியிருக்க இந்த செடிகளுக்கு மட்டும் எதற்கு நீர் ஊற்றவேண்டும், வீண் செலவு என நான்தான் நீர் ஊற்றவில்லை'.  அரசனுக்கு தன் தவறு புரிந்தது, திரும்ப எல்லா வேலையாட்களையும் பணியில் அமர்த்தினான்'.

சொல்லி முடித்துவிட்டு மனைவியின் முகத்தைப்பார்த்தார்.  கோபம், எரிச்சல் குறைந்து கொஞ்சம் சிந்திப்பது புரிந்தது.  அவளே பேசட்டும் என மௌனம் காத்தார்.

காமாட்சியே மௌனத்தைக் கலைத்தாள் 'நீங்க சமத்காரமா பேசி எனக்குப் புரிய வைக்கிறதெல்லாம் சரிதான்.  ஆனா நீங்க என்னை விட்டுட்டு மருமகளுக்கு இவ்ளோ தூரம் வக்காலத்து வாங்கறதுதான் கோபம் வருது'.

அதுக்குக்காரணம் உன்மேல் இருக்கிற அன்பு, அக்கறைதான் காமாட்சி.  இதுவரை நீ உன்னோட எல்லா பாத்திரங்களையும் நிறைவா செய்திருக்க, ஒரு மருமகளா, அம்மாவா, மகளா, மனைவியா எல்லாத்துலயும் உனக்கு கிடைச்ச பாராட்டுகள் அதிகம்.  எதுலயும் நீ இதுவரை தோற்றதில்ல.  இப்போ மாமியார் பாத்திரத்துல தோல்வியடைஞ்சிடுவியோன்னு கவலையா இருக்கு, அதான் உனக்குப் புரிய வைக்க முயற்சி செய்யறேன்.

சொல்லிவிட்டு அவள் முகத்தைப்பார்த்தார்.  அவள் முகம் இப்போது சாந்தமாக இருந்ததைக்கண்டு அவருக்கு நம்பிக்கை பிறந்தது.  அவளைப்பற்றி இந்த முப்பது வருட திருமண வாழ்க்கையில் நன்கு புரிந்துவைத்திருக்கிறார்.  தான் செய்வது தவறு என அவளுக்குப் பிடிபட்டுவிட்டால் அதைத் திருத்திக்கொள்ள என்றுமே தயங்கியது கிடையாது.

அவள் சிந்தனையைக் கெடுக்க விரும்பாதவராய் புன்னகையுடன் எழுந்தவர் சொன்னார் 'சரி உனக்கும் சேர்த்து நானே காப்பி கலந்து எடுத்துண்டு வரேன்'.

அவர் அடுக்களைக்கு சென்றதும் காமாட்சி அம்மாளின் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. இந்த மனுஷருக்காகவாவது நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஆக வேண்டும் என்ற மன நிறைவு அது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4



சிறுகதை: பத்தும் செய்த பணம்
ஆக்கம்: தனுசு

கந்தசாமியும் கோபியும் பால்யகால நண்பர்கள் இன்று வயது அறுபதை கடந்து இருந்தாலும் எங்கே சென்றாலும் வந்தாலும் ஒன்றாகவே போவதும் வருவதுமாக இருப்பார்கள். அவர்களின் ஊரில் கூடும் வார சந்தை மிகவும் பிரபலம் .சுற்றிலும் உள்ள ஊர்காரர்கள் வந்து கூடும் மிகப்பெரிய சந்தை .அந்த சந்தை இன்று நடக்கிறது. காலையில் கிளம்பினால் சந்தையில் சுற்றிவிட்டு தங்களின் நண்பர்களையும் பார்த்துவிட்டு அப்படியே வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்கிக் கொண்டு மாலையில் தான் வீடு திரும்புவார்கள் .இன்றும் அப்படியே சந்தைக்கு கிளம்பினார்கள்.

சந்தையில் எப்போதும் அதிகமாக பணம் புரளும் என்றாலும் சிறிய தொகையாக இருந்தாலும் கிராமவாசிகளுக்கு அது மிகப் பெரிய தொகையாகவே தெரியும் கிராமத்தில் கை ஏந்தும் பிச்சைகாரனுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் அது அவனுக்கு பெரியது. பட்டணத்தில் ஹோட்டலில் நமக்கு பரிமாறும் சர்வருக்கு டிப்ஸாக தந்தால் அந்த பத்து ரூபாய் அவனுக்கு சிறியது. பணத்திற்க்கு இடமே மதிப்பு தருகிறது .கசங்கிய தாளுக்கும் மதிப்பு குறையாது கந்தலாக இருந்தாலும் மதிப்பு குறையாது. பணம் பணம் தான். அதிலும் கிராமத்தாருக்கு இந்தப் பற்று கொஞ்சம் அதிகம்.

இருவரும் சந்தைக்கு கிளம்பினார்கள் ,அப்போது கந்தசாமியிடம் தன்னிடம் உள்ள ஒரு ஆயிரம் ரூபாய் தாள் கிழிந்திருப்பதைப் பற்றி கோபி சொல்கிறார்.
அன்று காலையில் அவரின் மகன் தந்து விட்டு போன ஐந்து ஆயிரம்  ரூபாயில் ஒரு ஆயிரம் ரூபாய் தாள் கிழிந்திருந்ததை காட்டுகிறார்

"இங்க பாரு இந்த ரூவாதான் கிழிஞ்சிருக்கு" - லேசாக கிழிந்திருப்பதை பார்த்து பெரிதாக கவலை படுகிறார்.

கந்தசாமியோ ஒரு கூல்பார்ட்டி "கிழிந்துதானே இருக்கு அதனால என்ன அத மாத்திட்டா போச்சு " கோபிக்கு ஆறுதல் தருகிறார்

"நாம இப்போ சந்தைக்கு தானே போகிறோம் அதை அங்க மாத்திக்கலாம்  அந்த ரூபாயை தனியாக எடுத்து வை"

ஆயிரம் எனபது இருவருக்கும் பெரிய தொகை. கோபியிமன் மகன் பக்கத்துக்கு நகரத்தில் பணிசெய்து பெற்றோருக்கு மாதா மாத பணம் அனுப்பிவிடுவான் அவர்களின் சாப்பாட்டுக்காக. ஒரே பிள்ளை மிகவும்  பாசமாக இருப்பார் அந்த மகனும் பாசமாக இருப்பார்.

சந்தையில் காமராஜின் அரிசி கடைக்கு வருகிறார்கள். இந்த காமராஜ் இவர்களின் தெருவை சேர்ந்தவர். நண்பரும் கூட.

"என்ன காமராஜ் சௌக்கியமா? யாபாரம் எப்படி நடக்குது?" கந்தசாமி கோபியும் ஒன்றாகக் கேட்டார்கள்

"ம்....ம் ..... இப்பதானே சந்தை தொடங்கி இருக்கு.போனவாரம் பரவில்லை .அப்புறம்.... நீங்க ரெண்டுபேரும் சவுக்கியமா?"இவரும் நலம் விசாரித்தார்.

"காமராஜ் நாங்க ரெண்டு பேரும் சந்தைக்கு போகிறோம் கையில நிறைய பணம் இருந்தா எங்கேயாவது தவறிடும் நீ ஒரு ஒத்தாசை பண்ணனும் " கந்தசாமி கேட்டார்.

"என்ன ஒத்தாசை சொல்லுங்க உங்களுக்கு இல்லாததா?"

"இந்த ஆயிரம் ரூபாயை நீ வைத்துக்கொள் சாயங்காலம் திரும்பி வரும்போது வாங்கிக்கொள்கிறோம் "பணத்தை எடுத்து நீட்டுகிறார் .

"இவ்வளவுதானே கொடுத்துட்டு போங்க சாயங்காலம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் "அந்த கிழிந்த பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் சந்தைக்கு கிளம்பினார்கள்

அரிசிக்கடையில் காமராஜ் தன் கடையின் வாடகை கொடுக்க குறையும்  பணத்தைப்பற்றி யோசித்துகொண்டு இருக்கையில் இந்த பணம் வரவே இதையும் சேர்த்து வேலை செய்யும் பையனை அழைத்து,

" தம்பி இந்த மூனு ஆயிரம் பணத்தை கொண்டு போய் வாடகை பணம் என்று கடை ஓனர் சண்முகம் அய்யாவிடம் கொடுத்து வாடகை பில்லையும் மறக்காமல் வாங்கிவா" கடை பையனை அனுப்பி வைத்தார். பையன்  கிளம்பினான் பணத்துடன்  அதில் அந்த கிழிந்த தாளும் இருந்தது.

கடை ஓனர் சண்முகம் வீட்டில் பக்தி மணமணக்க தெய்வபாடல்களாக ரேடியோவில் ஒலித்துக் கொண்டு இருந்தது.

" சார் "என்று குரல் கொடுத்தான் பையன்

.அவனை எதிர்பார்த்தே காத்திருந்த கடை உரிமையாளர் " வா ... தம்பி வா வா .. என்ன காமராஜ் அனுப்பினாரா"  அவரின் கண்கள் அவனின் கையையும் சட்டைப் பாக்கெட்டையும் பார்த்தது .

"ஆமா சார் இந்தாங்க வாடகை பணம். பில்லை கொடுங்க நான் உடனே  கிளம்புனும் இன்னைக்கு சந்தை நெறைய கூட்டம் வரும்" -பையன்அவசரப்படுத்தினான்.
.
பணமும் பில்லும் கை மாறியது. கடை ஓனர் வீட்டுக்குள் பார்வையை விட்டு மனைவியை அழைத்தார்
 .
" சரி இந்த பணத்தில் நான் போய் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்கியாறேன்.நீ ஆகா வேண்டியதப் பாரு" -சொல்லிவிட்டு மளிகை கடையை நோக்கி கிளம்பினார் அவருடன் அந்த கிழிந்த தாளும் கிளம்பியது.

மளிகை கடையில், அதன் முதலாளியின் மகள்தான் இருந்தார். இனிமையாக பேசக் கூடியவர் தேவையான சாமான்களை சொல்லிவிட்டு , மொத்த தொகை எவ்வளவு என்று கேட்டார்.

"மூணு ஆயிரம் நெருக்கி இருக்கு இன்னும் தாண்டவில்லை" என்றார்.

"என்னம்மா நீ இருக்க அப்பா இல்லையா? சண்முகம் கேட்டார்

"உள்ளேதான் இருக்கார் சரக்கு இறங்குது. சந்தை அன்னைக்கு அப்பாவுக்கு உதவியா நானும் கடைக்கு வந்துவிடுவேன்" தன் வருகையின் விளக்கம் தந்தார்

சண்முகம் டென்ஷனில் இருந்தார் அவரின் கவலை பட்ஜெட் மூன்று ஆயிரத்தை தாண்ட கூடாது என்பது. சாமான்களை வாங்கி கொண்டு பணத்தை தந்தார். மறக்காமல் மீதியையும் வாங்கி கொண்டு கிளம்பினார் .கடை வாடகை பணம் இப்போது மளிகை சாமானாக மாறி மளிகை கடை கல்லாவில் விழுந்தது.அதில் அந்த கிழிந்த தாளும் கலந்தது

அடுத்த வாடிக்கையாளரைப் பார்த்தார் மளிகை கடைக்காரர்.அது கடைக்கு  சரக்கு ஏற்றி வரும் லாரி டிரைவர் அந்த டிரைவரைப் பார்த்து

" ஏனப்பா டிரைவரே சரக்கை சீக்கிரமா கொண்டுவாங்கன்னு எத்தனை தடவை  சொல்றது வியாபார நேரத்தில் கொண்டு வரிங்க நான் வியாபாரத்தை  பார்க்கிறதா இல்லை சரக்கு இறக்குரத பார்க்கிறதா நாளையிலிருந்து  சீக்கிரமா லோடு அடிக்கிறதா இருந்தால் சொல்லு இல்லைன்னா நான் வேற ஆளை பார்த்துக்கிறேன்"  -சிடுசிடுப்பாய் சொன்னார் மளிகை கடை காரர்.

"வேணுமுன்னு ஒன்னும் இல்லைங்க சார்....லாரி டயர் படுத்துகிச்சி....அதனாலத்தான் லேட், நாளையிலிருந்து சரியான நேரத்தில் வந்துவிடுகிறேன் " காரணத்தை நாசுக்காக சொன்னார் டிரைவர் .

"சரி போய் லோடு பணத்தை வாங்கிக்கொள்"

"யம்மா டிரைவருக்கு ஆயிரத்து அறுநூறு பணம் கொடுத்திரு"மகளைப் பார்த்து சொன்னார் '

"சரிப்பா "

"சார் ஒரு ஆயிரம் சேர்த்து கொடுத்தல் நாளைக்கு கழித்துக் கொள்ளலாம் ,லாரிக்கு ஒரு டயர் வாங்கணும் "விண்ணப்பம் வைத்தார் டிரைவர்

"சரி வாங்கிக்கொள் ,யம்மா இன்னும் ஆயிரம் சேர்த்து கொடுத்திடு "

டிரைவர் நிம்மதி அடைந்தார் .பணமும் கைக்கு வந்தது அதில் அந்த கிழிந்த தாளும் இருந்தது .

டிரைவர் வீட்டில் டிரைவர் தன் மனைவி பாவனாவைப் பார்த்து "நான் லாரி டயர் மாற்ற போகிறேன் இந்த ஆயிரத்து ஐ நூறில் நீ ஐநூறு செலவுக்கு வைத்தக் கொண்டு மீதி ஆயிரத்தை பால் காரருக்கு கொடுத்துடு அப்பத்தான் குழந்தைக்கு சரியான நேரத்தில் பால் கிடைக்கும்" தன் குழந்தையை பொறுப்பாக கவனிக்கும் தந்தையாக சொன்னான் .

கைமாறிய பணத்தில் அந்த கிழிந்த ஆயிரம் ரூபா தாளும் இருந்தது .

டிரைவர் கிளம்பி போனதும் பால்காரரின் வருகைக்கு காத்திருந்தார் பாவனா மாலை நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது .

"சார் பால்"பால்காரன் வந்ததுக்கு அடையாளமாக குரல் வந்தது .

பால்காரர் மிகவும் ஜாலி டைப் மைனர் போல் வந்தேண்டா பால்காரன் என்ற பாடல் முனுமுனுப்பில் தான் இருப்பார் மாப்பிள்ளை, மச்சான் என்ற அடைமொழிகளும் உண்டு.

"இந்தாங்க பால்பணம் ஆயிரம் வரவு வைத்துக் கொள்ளுங்கள் ,மீதியை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் "பால் கணக்கிலும் பணக் கணக்கிலும் கவனமாக இருந்தார் அவர் .

பணம் கிடைத்த சந்தோஷத்தில் பால்காரன் பணத்தை வாங்கி பாக்கட்டில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.கிடைத்த பணத்தை வீட்டுக்கு தேவையான அரிசியும் மற்றவையையும் வாங்க சந்தையை நோக்கி கிளம்பினான்.அந்த கிழிந்த பணம் அவன் பாக்கெட்டில் இருந்தது .

காமராஜின் அரிசிக் கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாய் இருந்தது .

"வாப்பா பால மச்சான் சவுக்கியமா"

"நல்ல இருக்கேன் அண்ணே ஒரு மூட்டை அரிசி கொடுங்கள்"

"என்ன வந்த உடனே கிளம்பிகிறாய் "

'அண்ணே இன்னைக்கு சந்தை உங்களுக்கு பிசியாக இருக்கும் எனக்கும் வேலை இருக்கு நாளைக்கு வருகிறேன் ஆர அமர பேசுவோம் சரியா "

"நீ சொன்னா சரிதான்" பேச்சை முடிவுக்கு கொண்டு வந்த அவர் அரிசியை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி கல்லாவில் போட்டு கொண்டு மீதியை எடுத்துக் கொடுத்தார் . அந்த கிழிந்த ஆயிரம் ரூபாய் கல்லாவில் தஞ்சம் அடைந்தது .

மாலை முடிந்து இரவு வந்தது சந்தைக்கு உள்ளே சென்ற கந்தசாமியும் கோபியும் அரிசிக் கடைக்கு வந்தார்கள்.

அவர்கள் வந்ததைப் புரிந்துக் கொண்டு கல்லாவில் கையை விட்டு ஒரு ஆயிரம் ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார் .

கையை நீட்டி வாங்கிய கந்தசாமி லேசாக சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி புறப்பட்டார் கோபியோடு.

"ஏனப்பா சிரிக்கிறாய்" கந்தசாமியைப் பார்த்து கோபி கேட்டார்

"நாம் ஒன்று நினைக்க இறைவன் ஒன்று நினைக்கிறான் .காலையில் நாம் கொடுத்த அந்த பணம் காமராஜ் வியாபாரத்தில் போடாமல் அப்படியே வைத்திருந்து நாம் வந்த போது நம்மிடமே திருப்பி தந்திருக்கிறார் .நியாயஸ்த்தன் நம்முடைய பணத்தை அவர் வியாபாரத்தில் போடவே இல்லை நான் நினைத்தது அவர் இந்த பணத்தை வியாபாரத்தில் போட்டு புழங்குவார் நம்முடைய பணம் யாருக்காவது போய்விடும், நமக்கு வேறு நல்ல தாள் கிடைத்துவிடும் என்று எண்ணினேன் ஆனால் நம்முடைய பணமே நமக்கு திரும்ப கிடைத்துள்ளது அதுதான் சிரித்தேன் இந்தா உன்னுடைய கிழிந்த ரூபாய் பத்திரமாக வை அடுத்த வாரம் செலவு செய்துவிடலாம் ".

அவருடைய அந்த பணம் காமராஜை விட்டு போய் பல கை மாறி வந்ததை அறியாமல் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள் இருவரும்.
 .
"அதாவது இந்த பணத்தை காமராஜ் யாவாரத்துல போட்டு புரட்டிவிடுவார்,நாம கொடுத்தபணம் மாறி வேற பணம் நமக்கு கிடைத்துவிடும் அப்படிதானே நினைத்தாய்" கோபி கேட்டார்.

"அதேதான்" இருவரும்வீட்டை நோக்கி நடந்தார்கள்.

நீதி : பெட்டியில் வைக்காமல் சந்தைக்கு வந்த ஒரே ஒரு கிழிந்த ஆயிரம் ரூபாய் தாளே ஒரே நாளில் பலரது தேவைகளை பூர்த்திசெய்துவிட்டு திரும்பவும் அவரது கைக்கே வந்து விடும் போது சுவிஸ் போன்ற வங்கிகளில் வெட்டியாக தூங்கும் பல்லாயிரம் கோடி புழக்கத்திற்கு வந்தால் எத்தனை ஆயிரம் பேரின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் .

நன்றி :"பணம்" என்ற பழைய திரைப் படத்தில் N.S கிருஷ்ணனும் T.A.மதுரமும் சம்பந்தப் பட்ட காட்சியிலிருந்து உருவான ஆக்கம்.
ஆக்கம் -தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Queen Anne


கட்டுரை: வம்சம்
ஆக்கம்: தேமொழி

அரசி ஆன் என்ற பெயரில் ஐரோப்பிய வரலாற்றில் பல அரசிகள் இருந்தனர்.  ஆனால் இங்கிலாந்தின் பேரரசி ஆன் என்பவர்தான் பொதுவாக பலருக்கும்
நினைவிற்கு வருபவர்.  அதிலும் இங்கிலாந்தின் பேரரசி ஆன் (Anne, The Queen of Great Britain - 6 February 1665 - 1 August 1714) அம்மையாரின் பெயர் சொன்னால் பெரும்பாலானோருக்கு அவரைப் பற்றிய பலப் பலவிதமான செய்திகள் நினைவுக்கு வரும்.

- இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் இணைந்து முதன் முதலாக உருவாகிய கிரேட் பிரிட்டனின் முதல் பேரரசி

- இங்கிலாந்தில் இரு கட்சிகள் நடத்தும் அரசியலுக்கு வழி வகுத்தவர்

- இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சட்டத்தை தடை செய்த கடைசி அரசி.  இவருக்கு பிறகு அரச குடும்பத்தினர் பாராளுமன்றத்தின் முடிவை எதிர்க்கும்
அதிகாரம் இழந்துவிட்டனர்

- இவர் காலத்தில்தான் லண்டனின் செயின்ட் பால் தேவாலயம் (St Paul's Cathedral, London) கட்டி முடிக்கப் பட்டது

- அரசி இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் ஆட்சி செய்தார்; உள்நாட்டு அரசியலில் முகியத்துவம் வாய்ந்தது: இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒரே பாராளுமன்றமாக இணைந்து இயங்க ஆரம்பித்தது;
உலக வரலாற்றில்: ஸ்பெயினின் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டு ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டின் வாரிசுரிமைப் போரை ( War of the Spanish Succession) முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலக அளவில் இங்கிலாந்தை ஒரு வல்லரசாக உருவகப் படுத்திக் காண்பித்தார், இவர் காலத்தில் திறமை வாய்ந்த தளபதியின் கீழ் பல போர்களில் இங்கிலாந்து தொடர்ந்து வெற்றி பெற்றது

- கட்டிடக் கலையில், கட்டிடத்தின் மேல் முகப்பில் முக்கோண முகப்பும், சுவர்களில் தொடர்ந்து வரிசையான ஜன்னல்களும் உள்ள கட்டிடங்களினால் "குயீன் ஆன் ஸ்டைல் ஆர்கிடெக்ட்சர் " (Queen Anne style architecture) என்று அவர் கால கட்டிடக்கலை பெயர் பெற்றது

- வளைந்த கால்களையுடைய, மென்மையான திண்டுகள் வைத்து தைத்த, வசதியான, எடை குறைந்த, மெல்லிய, கலை அழகுள்ள வேலைப்பாடுகள்
நிறைந்த இருக்கைகளும், படுக்கைகளும், பஞ்சனைகளும், ஆசனங்களும்  "குயீன் ஆன் ஸ்டைல் ஃபர்னிசச்சர் " (Queen Anne style furniture) என்று
பெயர் பெற்றன

- ஸ்பெயினின் வாரிசுரிமைப்போர் அமரிக்காவிலும் நடந்தது.  அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள், செவ்விந்தியர்கள் உதவியுடன் அமெரிக்க மண்ணில் இருந்த ஃப்ரான்ஸ் படையுடன் போரிட்டு வெற்றி பெற்றனர்.  அப்போரை அமெரிக்க வரலாறு "குயீன் ஆன்னின் போர்" என்றுதான் குறிப்பிடுகிறது.  அரசியின்

நினைவாக "மேரிலாண்ட்" மாநிலத்தில் "குயீன் ஆன் கவுண்டி"(Queen Anne County) என்ற ஒரு மாவட்டமும், மற்றும் அந்நாட்டில் ஆங்காங்கே அவர்
பெயரில் சில ஊர்களும் வீதிகளும் கட்டிடங்களும் உள்ளன

- இவர் நட்பின் கதையும் மிகவும் பிரபலமானது.  சிறு வயது முதல் "ஸாரா"  என்னும் பெண் இவரது உற்ற தோழியாய் விளங்கினார்.  அரச பரம்பரையில்
பிறக்காத தோழியின் குலப் பின்னணியை அவர் ஒரு பொருட்டாக ஒருநாளும் கருதியதேயில்லை.  அந்தத் தோழியிடம் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார் என்ற நிலையில் இருந்தார்.  அரசியான பின் தன் தோழியின் கணவரை ராணுவத் தளபதியாக்கினார்.  தளபதியும் மிகத் திறமையானவர்.

பலபோர்களில் வெற்றி பெற்று அரசியின் அரசாட்சியை உறுதியாக்கி அரசிக்குப் பெருமை பல சேர்த்தார்.  அரசியும் மனமகிழ்ந்து தோழிக்கும் அவர்
கணவருக்கும் பரிசுகளாகக் குவித்தார்.  பட்டங்களாக அள்ளி வழங்கினார்.  தோழி ஸாராவின் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த நட்பினால்
பயனடைந்தார்கள்.  பல நல்ல பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  ஆனால் தோழி ஸாராவிற்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம்.  அரசிக்கு கிடைத்த
மற்றொரு தோழியிடம் அரசி அன்பு காட்டுவதினால் பொறாமை கொண்டார்.  பொது இடத்தில் அரசி என்றும் பாராமல் வாயாடினார்.  அரசியை அவமதித்துப்
பேசினார்.  அரசிக்கு வந்தது கோபம்.  ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார்.  சாராவின் கணவர் நாட்டிற்காகவும்தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார்.  அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)

- Cricket is not illegal, for it is a manly game - என்ற பொன்மொழியை உதிர்த்தவர்

- பிற்காலத்தில் கடல் கொள்ளைக்காரனாக மாறிய அரசியின் கடற்படை மாலுமி கருந்தாடி (Blackbeard) அரசியின் மீது கொண்ட அபிமானத்தினால் தன்
கப்பலுக்கு "குயீன் ஆன்னின் சபதம்"  (Queen Anne's Revenge) என்று பெயர் சூட்டினான்.

- ஏன் ஒரு பூவிற்கு (Queen Anne's lace) கூட அரசியின் பெயர் உண்டு

எது எப்படியானாலும் எல்லாவற்றிக்கும் மேலாக அரசி ஆன் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது இவர் ஸ்டூவர்ட்" வம்சத்தின் கடைசி அரச வாரிசு என்பதே.  14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்காட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து நாடுகளை ஆண்ட   ஸ்டூவர்ட் வம்சத்தின் அரசாட்சி இவருடன் முடிந்தது என்பது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வரும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது.

அரசி ஆன் தனது 37 ஆவது வயதில் (1702) இங்கிலாந்தின் அரசியானார், இவர் தன் 49 வயதில் நோயுற்று இறக்கும் வரை 12 ஆண்டுகள் அரசாட்சி
செய்தார். ஆனால் இவருக்கு அரசபரம்பரை வாரிசுரிமைப்படி அரசியாகும் வாய்ப்பு இருந்ததோ மிக மிக சொற்பம்.  ஆனாலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயரலாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆளும் அரசியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அரசி ஆன், ஸ்டூவர்ட் "Stuarts" of England and "Stewarts" of Scotland பரம்பரையில் பிறந்த இளவரசர் ஜேம்ஸ்க்கும், அவர் மனைவி ஆன் ஹைடுக்கும் பிறந்தார்.  பிறந்தது முதலே கண்களில் நீர் தொடர்ந்து வழியும் ஒரு கண் நோயில் ஆரம்பித்து, அம்மை, கீல்வாதம், வாழ்நாள் முழுவதும் இரத்த
சம்பந்தப் பட்ட நோய் (porphyria)  என தொடர்ந்து நோயினால் பாதிக்கப் பட்டவண்ணமே இருந்தார்.  பிறந்தவுடன் கண் நோயைக் குணப்படுத்த
ஃப்ரான்ஸ்ஸில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  ஆனால் பாட்டி இறந்தவுடன் 6 வயதில் நாடு திரும்புவதற்குள் தாயும்
இறந்து விட்டிருந்தார்.  இவர் பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் ஆறு குழந்தைகள் ஆறு வயது தாண்டுவதற்குள் இறந்துவிட மிஞ்சியது ஆனும் அவர் தமக்கை மேரி மட்டுமே.

அரசுரிமை ஏற்கப் போகும் இளவரசர்களுக்கு வழங்கப்படும் படை, போர் பயிற்சி, சட்டக் கல்வி போன்ற கல்விகள் கற்று கொடுக்கப் படாமல் மற்ற பிரபுக்களின் பிள்ளைகள் போல் இசை, இலக்கியம், மதம் போன்ற கல்வி கற்று வளர்ந்தார்.  இவர் வளர்ந்த காலத்தில் இவர் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.  நாடும் அரச குடும்பமும் புராட்டஸ்ட்டண்ட் கிறிஸ்துவ மதப் பிரிவை தீவிரமாக தழுவி வந்தனர். அத்துடன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவினரை வெறுத்து எதிர்த்து வந்தனர்.

அரச குல வழக்கப்படி நாட்டின் அரசியல், அயல் நாட்டின் நட்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இவர் அக்கா மேரி நெதர்லாண்ட் இளவரசர்
வில்லியமிற்கும், இளவரசி ஆன் டென்மார்க் இளவரசர் ஜார்ஜிற்கும் திருமணம் செய்து கொடுக்கப் பட்டனர்.  ஜார்ஜும் ஆனும் இறுதிவரை மிக அன்புடன் குடும்பம் நடத்தினர்.  ஜார்ஜ் அறிவும் திறமையும் குறைந்தவர், பெரிய குடிகாரர் எனப் பெயர் வாங்கினாலும் அன்பான, அழகான, மனைவிக்கு துரோகம் நினைக்காத நம்பிக்கைக்குரிய கணவர் எனப் போற்றப் பட்டார்.   பிற்காலத்தில் கணவர் மறைந்தவுடன் ஆன் மிக மனமுடைந்து போனார்.

இதற்கிடையில் நாட்டிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசராக இருந்த ஆனின் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் இறந்தார்.  அவரது பட்டதரசிக்கு
குழந்தையில்லை.  ஆனால் ஒரு குத்துமதிப்பாக அரசருக்கு இருந்த 14 ஆசை நாயகிகளும் (வரலாற்று அறிஞர்களின் கணக்குப்படி) அவர்கள் மூலம்
முறைதவறிய வழியில் பிறந்த(illegitimate) 14 பிள்ளைகளும் அரசாளும் தகுதி இல்லாததால் ஆட்சியுரிமையை இழந்தார்கள். இதனால் ஆனின் அப்பா
ஜேம்ஸ் அரசரானார்.  இவர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதுடன் நில்லாமல் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணையும் மறுமணம் செய்திருந்தார்.

புதிதாக பதவியற்ற அரசருக்கு ஒரு மகனும் பிறந்தான்.  இங்கிலாந்து மக்களும், பாராளுமன்றமும் ஒரு கத்தோலிக்க அரச குடும்பத்திற்கு அரசுரிமை போனதை விரும்பவில்லை.

டென்மார்க் இளவரசர் வில்லியமை மணந்து சென்றுவிட்ட ஆனின் அக்கா மேரியை படையெடுத்து வரும்படி அழைத்தனர். பெரியமகளும் மருமகனும்
படையுடன் வந்து இங்கிலாந்து மன்னரை நாட்டிலிருந்து துரத்தினர்(Glorious Revolution of 1688).  அரசி ஆன் தன் அக்காவிற்கு துணை போனதுடன்
நிராதரவான தந்தைக்கும் உதவவில்லை.  மீண்டும் நாட்டில் புராட்டஸ்ட்டண்ட் மன்னராட்சியாக வில்லியமும் மேரியும் இணைந்து அரசாண்டனர்.  மேரிக்கு மூன்று கருச் சிதைவிற்குபின் குழந்தையே பிறக்காமல் போனது.  வாரிசற்ற அக்காவிற்குப் பிறகு தனக்கும் தன் சந்ததியினருக்கும் அரசுரிமை கிடைக்கக் கூடும் என்ற திட்டத்தினாலும் ஆன் தன் தந்தைக்கு உதவாமல் இருதிருக்கக் கூடும்.  எப்படியோ மகள்களின் துரோகத்தினால் அப்பா ஜேமேஸ் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து போனார்.   அம்மை நோய் தாக்கி தன் 32 ஆவது வயதில் அக்கா மேரி இறந்தார்.  அவர் கணவர் அரசர் வில்லியமிற்கு மறுமணத்தில் ஆர்வம் இல்லை.  எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் மனைவியைத் தொடர்ந்து அவரும் மறைந்தார்.  அவருக்குப் பின் ஆன் இங்கிலாந்தின் அரசியானார்.

அரசி ஆன் ஒரு முறை இருமுறையல்ல பலமுறை கர்ப்பமுற்றார்.  சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 17 முறை கருத்தரித்தார். இவற்றில் 6 குழந்தைகள்
இறந்தே பிறந்தன. அரசிக்கு 6 முறை கருச்சிதைவும் ஏற்பட்டது, அவற்றில் இரண்டு கருச்சிதைவுகள் இரட்டையர்களாகப் பிறக்க வேண்டிய கர்ப்பம். எனவே 8 குழந்தைகள் இவ்வாறு கருச்சிதைவு மூலம் உலகைப் பார்க்காமலே போய் சேர்ந்தனர். அரசியின் பிரசவங்களிலும் சில குறைப் பிரசவங்களாகப் போயின.

அதனால் உயிருடன் உலகிற்கு வந்த குழந்தைகளில் 2 குழந்தைகள் பிறந்த இரண்டுமணி நேரத்திற்குள் இறந்து போயினர். மற்றும் 2 சிறுமிகள் அரசியின்
கணவருக்கு அம்மை நோய் வந்தபொழுது, அந்நோய் அவர்களுக்கும் தொற்றி தங்களது இரண்டாவது பிறந்தநாளைப் பார்க்கமலே இறந்தனர்.

மிஞ்சிய ஒரே ஒரு மகன் வில்லியமும் நாளொரு மேனியும் பொழுதொரு நோயுமாக, நோஞ்சானாக தீவிர மருத்துவ கவனிப்பில் வளர்ந்து வந்தான்.
அவனுக்கு உடல் நலக்குறைவுள்ள தோற்றமும் இருந்தது.  1700 ஆம் ஆண்டு தனது பதினொன்றாம் வயது பிறந்தநாளை கோலாகலமாய் ஆடிப் பாடி
கொண்டாடினான்.  உடனே நோய்ப்படுக்கையில் விழுந்த இளவரசன் சிலநாட்களில் உயிரை விட்டான்.  சவப்பரிசோதனையில் அவன் மூளையில்
நீர்கோர்த்திருந்தது (hydrocephalus)  தெரிய வந்தது.

தன் 18 வயதில் திருமணம் செய்து கொண்ட அரசி ஆன் தன் 35 ஆவது வயதில் தனது வாரிசாக வந்திருக்க வேண்டிய 19 மக்கட் செல்வங்களையும்
இழந்தார்.  முயற்சி திருவினையாக்கும் என்பது அரசியைப் பொறுத்தவரை குழந்தை பெறுவதில் பொய்த்துப் போனது.

ஆனால் வில்லியமும் அரசி ஆனும், பாராளுமன்றத்தின் உதவியுடன் புராட்டஸ்ட்டண்ட் குல மன்னராட்சி மட்டுமே இங்கிலாந்தில் தொடரும்படி சட்டம் (Act of Settlement 1701) இயற்றினார்கள்.  இதனால் வாரிசற்ற அரசி ஆனுக்குப்பின் அவரது மாற்றாந்தாயின் மகன், கத்தோலிக்க கிறிஸ்துவரான அவரது சகோதரனுக்கு ஆட்சியுரிமை கிடைக்கவில்லை.  அரசாட்சியை மீட்க அந்த சகோதரன் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.   அவர்களின்

தந்தை வழிப் பாட்டியின் வழிவந்த மற்றுமொரு ஒன்றுவிட்ட "ஹேநோவர்"  வம்ச (Hanover) புராட்டஸ்ட்டண்ட் சகோதரன் ஜார்ஜிற்கு அரசாட்சி
கிடைத்தது.  அத்துடன் ஸ்டூவர்ட் வம்ச ஆட்சியும் இங்கிலாந்தில் முடிந்தது.

முப்பத்துஏழாவது வயதில் பதவிக்கு வந்த பொழுதே அரசி ஆன் தன் குழந்தைகள் அனைவரையம் இழந்திருந்தார்.  பிறகு அடுத்த சில ஆண்டுகளில் கணவரும் நோயுற்று மறைந்தார்.  பன்னிரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்தாலும் அரசி ஆன் பதவியேற்ற அன்றே சீரழிந்த உடல் நலத்தினால் நடக்க முடியாமல் பல்லகில் தூக்கி வரப் பட்டார்.  இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளுக்கு நாள் அவர் உடல் நலம் மேலும் கெட்டு "கவுட்" (gout) நோய் முற்றி, அதனால் உடல் மிகவும் பெருத்துப் போய் நடக்கவே இயலாமல் போனார்.  சூடான இரும்பினால் சுடப்படுவது, உடலை ரத்தம் சிந்த செய்வது போன்ற சில குரூர மருத்துவத்திற்கும் ஆளானார்.  அவர் இறந்த பொழுது ஊதிப்போன உடலை அடக்கம் செய்ய சதுர வடிவ சவப்பெட்டி தேவைப் பட்டது.

இங்கிலாந்து அரசிகளான விக்டோரியா, மேரி, எலிசபெத் போன்றோர் போற்றப் படுவது போல ஏனோ இவரது அரசாட்சிக்காகப் இவர் போற்றப் படவில்லை என்று கருதுபவர் உண்டு.  ஆனால் இவர் உடல் நலக்குறை வினால் அமைச்சர்களின் தாக்கம் ஆட்சியில் அதிகம் இருந்ததும் பாராட்டு கிடைக்காமல் போனதற்கு  ஒரு காரணம்.  அனைவரையும் இழந்தபின், உடல் உபாதையில் வருந்திய அரசி ஆன் கடைசிக் காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக மாறி கடவுளிடம் கவனத்தை மிகவும் திருப்பினார்.  தனது சந்ததிகள் அனைவரும் தனக்கு முன்னமே அழிந்து போனதற்கு காரணம் தான் தன் தந்தைக்கு செய்த துரோகமும், அதனால் தந்தை தனக்கிட்ட சாபத்தின் விளைவு என்றும் எண்ணினார்.

அறிவியலும் மருத்துவமும் சொல்லும் காரணங்கள்; அரசி ஆனின் ரத்தம் Rh நெகடிவ் Rhesus factor negative) வகை, அவரது கணவருக்கு Rh பாசிடிவ்

வகை Rhesus factor positive) என இருந்திருக்கக் கூடும்.   இதனால் நோயினை எதிர்ப்பது போல் அரசியின் உடலின் எதிர்ப்பு சக்தி Rh positive கொண்ட கருக்களை அழித்துவிட்டது.  இதே காரணம் இவர் அக்காவின் கருச் சிதைவுகளுக்கும் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.   ஆனால் இந்தக்
காரணம் சரியல்ல என்பவரும் உண்டு.  இந்த எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு பிரசவத்திற்கு பிறகும் மோசமாகவே வாய்ப்புள்ளது.  ஆனால் அரசிக்கு ஏழாவதாக பிறந்த மகன் உயிருடன் இருத்திருக்கிறான்.  அதனால் இது சரியான காரணமாக இருக்கமுடியாது என்பது மறுப்பவர்களின் வாதம்
மற்றொரு காரணமாகக் கூறப்படுவது, அரசிக்கு இருந்த தோலை சீரழிக்கும் "லூப்பஸ்" என்னும் தோல் சம்பந்தப் பட்ட நோயும் ( lupus erythematosus)
அதன் விளைவாக தவறாக செயல் பட ஆரம்பித்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் (auto-immune disease).  இதன் விளைவாக அரசியின் கருக்கள்
உடலுக்கு அன்னியம்மாக, சம்பந்தமில்லாதவைகளாகக் கருதப்பட்டுத் தாக்கி அழிக்கப் பட்டிருக்கக் கூடும் என்றும் "பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்" (British
Medical Journal) ஆராய்சிக் கட்டுரை ஒன்று கருதுகிறது.

அரச குலத்திற்கு கிடைக்காத மருத்துவ வசதியா?  இருந்தும் எதுவும் அரசிக்கும் அவர் குழந்தைகளுக்கும் பயன் படவில்லை.  அரசியின் ஆன்மீக விளக்கமோ, அறிவியலின் ஆராய்ச்சி விளக்கமோ விதம் விதமாக பல காரணங்களைக் காட்டினாலும், ஆசிரியர் ஐயாவின் ஆரூட கோள் கணிதமும் இந்த இழப்புகளுக்கு மற்றுமொரு காரணம் சொல்லக் கூடும்.

வேண்டும் என்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பான்
வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளி தருவான்
ஆண்டவனார் திருஉள்ளதை யார் அறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே .......
--- கண்ணதாசன்

ஆக்கம்: தேமொழி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


அகமும் புறமும் ஒன்றே - அதை 
அறிவாய் மனமே நன்றே!

ஆக்கம்: ஆலாசியம்

அகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை 
அகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை
அபிராமி யவளே இருக்கையிலே; இங்கே 
அபிராமியில்லா தொன்றை காண்பதேது?

உலகிலே பாலூட்டும் எந்தப் பிராணியானாலும்அது பிறந்த உடனே யாரும் சொல்லாமல் அறிவதுஅது கடவுளாக நினைத்து அதிகம் நேசிப்பதுதனது தாயின் அமுது கொட்டும் கொங்கைகளைத் தான் என்பதை நாம் அறிவோம். அதை பலரும் இது வரைப் பெரிதாக யோசிக்க வில்லையென்றால் இப்போது யோசிக்கலாம்.
இதில் ஒரு பேரானந்தமான விஷயம் இருக்கிறது... தாயின் மடியில் குழந்தை இருக்கிறதுஅந்தத் தாயும் அமுதூட்டப் போகிறாள். அப்போது அந்த கொங்கைகள் பூரிப்பில் இயற்கையாகவே பொங்கி வழியும்இது நாம் அறிந்ததே. இருந்தும், அதைப் பேரானந்தம் என்றேனே!!?... 

அதுஅந்தக் குழந்தையை, தனது கொங்கைப் பாலைக் கொடுக்கப் போகும் முன்புஅப்போது அந்தத் தருணத்திலே அந்தத் தாய் அந்தக் குழந்தையை அன்பால் குளிப்பாட்டி, ஆனந்தப் பேரலையில் தாலாட்டி, கண்ணே மணியே, அமுதே என்றெல்லாம் கூறி, கொஞ்சுவாளே!... ஆம், அந்தத் தாயின் குரலில், மனதில், வார்த்தைகளில், அப்படி ஒரு அன்பும், கருணையும் பொங்கும். அது மட்டுமா? அவள் மார்பிலே பாலும் சேர்ந்தல்லவா பொங்கும்.

அப்போது, அக்கணம்  அவளின் முகத்திலே தெரியுமே ஒரு ஆனந்தம். அது ஆனந்தம்; அதைக் காணும் போதும் நமக்கும் ஆனந்தம்.
சரி, பேரானந்தம்!

ஆமாம்அது தாயானவள் தனது மார்புக் கச்சையை தளர்த்தி, தனது மார்பகத்தை குழந்தையின் வாயோரம் கொண்டு செல்ல முயலும் போது; அந்தக் குழந்தை தனது தலையை முயற்சித்தவாறு வாயைப் பிளந்துக் கொண்டு தாயின் அமுதக் குடத்தின் காம்போரம் நகரமுடியாமல் தவிக்குமேஅப்போது அந்தத் தாய் அன்போடு கருணையோடு இரத்தின; முத்து வார்த்தைகளை உதிர்த்தவாறு; அதன் வாயில் முலைக் காம்பை வைத்தப் போது பார்க்க வேண்டுமே! அந்தக் குழந்தை அத்தனை வேகமாக, அமுதை உறிஞ்சிஉறிஞ்சி மூச்சுத்  திணறக் குடிக்குமே அது குழந்தைக்கும், தாயிற்கும் பேரானந்தம்.

அப்போது, கொங்கையில் பால் வடியும் போது; அதாவது அது தனது உயிரின் மேலான தனது செல்லத்திற்கு உணவாகியதோடு! அதுவரை, அவளின் மார்பு இறுக்கம் பெற்று இருந்த ஒரு சிறு கடுப்பு, வலி மெதுவாக தளருமே அப்போது அந்தத் தாய் பெறுவது இரட்டைப் பேரானந்தம்...

அந்தத் தருணத்தில் இந்த அழகான நிகழ்வுகளையெல்லாம் அருகிலே அமர்ந்து அமுதையே உண்டவனைப் போல பேரானந்தத்தில் திளைத்து; இத்தனை இனியக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டு;  பக்கத்தில் இருக்கும் அந்தக் கணவனைப் பார்த்து அந்தத் தாய் ஒரு புன்சிரிப்பு தருவாளே அது இன்னும் பெரியப் பேரானந்தம்.
அத்தோடு நிற்பதில்லை, அந்தக் குழந்தை அமுதை உண்ட பொழுது அப்படியே அள்ளி அந்தக் குழந்தையின் உச்சியை முகந்து முத்தமிட்டு, அருகில் இருக்கும் தனது கணவனிடம்; கரங்களில் அலுங்காமல், குலுங்காமல் சேர்த்து; அப்போது, அந்தக் கணவனின் முகத்தில் தெரியும் மகிழ்சியையும் ஒருசேர அனுபவிப்பாளே அது பேரானந்தத்திலும் பேரானந்தம்.   

அன்னையின் கொங்கைகள் அன்பு, கருணை கலந்துஅமுது கொடுக்கும் தெய்வ சந்நிதியாகும் அந்தக் குழந்தைக்கு. அன்னையும் அமுதூட்டுகிறாள் எப்போது? குழந்தையது பசித்து; சிணுங்கும் போது, பசியதைத் தாங்காமல் அழும்போது...என்ன வேலை செய்துக் கொண்டிருந்தாலும் அதை அப்படியேப் போட்டு விட்டு ஓடி வந்து அள்ளி இறுக்க அணைத்து, முத்தமெல்லாம் தந்து, அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே அமுதூட்டுகிறாள்... தன்னால் தாமதமோ?. அதனால் தான், எனதுயிரான என் பிள்ளையது இவ்வளவு கதறுகிறதோ என்றெல்லாம் எண்ணி சங்கடத்தில் அந்தக் குழைந்தையோடு சேர்ந்தே சில நேரம் இவழும் அழுது விடுவதுண்டு. 
பசித்து அழுதால் தானா? அமுதூட்ட வருவாள்....இல்லை அவளுக்கும் தெரியும் அவள் மடி கனக்கும், காம்பு பெருத்து, அதிலே அமுதும் சொல்லாமல் வடியும். அப்போதே தெரியும் என் குழந்தைக்குப் பசிக்கிறது என்று, அமுதூட்டும் நேரம் வந்து விட்டது என்று...இவையாவும் ஒன்று சேர்ந்தாற்போல் எதேச்சையாக தானாக ஒரே சமயத்தில் நடக்கும்.  
**********************************************************************************
சரி இப்போது அடுத்தப் படிக்கு ஏறுவோம்....

பெரும்பாலும் பக்திப் பாடல்களில் நாம் கூறும் அகப் பொருள் பொதிந்த கருத்துக்களை தாங்கிய பாடல்களை நாம் பல இடங்களில் வாசித்து இருக்கிறோம். அதற்கு ஆண்டாளின் திருப்பாவையிலும், திருமொழி, அபிராம பட்டரின் அபிராமி அந்தாதி. (ஒரு செய்யுளின் கடைசி வார்த்தையையே மறு பாடலின் முதல் வார்த்தையாக கொண்டு வருவது அந்தாதி). இன்னும் சொன்னால் நமது பாரதி வரைக்கும் அதைக் காணலாம்.

அதை சரிவர புரிந்துக் கொள்ளாமையாலும், அதன் தார்ப்பரியம் உண்மையான அர்த்தம் இவைகள் தெரியாமலும் இன்னும் சொன்னால் அவைகளை யாரும் அவ்வளவு தெளிவாக  விளக்கி கூற முயலாமையும், முயன்றும் முடியாமையும், முடிந்தும் பலருக்கு அது புரியாமையும் இருப்பது தான் இப்போதைய நிலைமையும்.
ஒன்றை மட்டும் இங்கே கூற வேண்டும், எதையுமே தவறாகவே புரிந்துக் கொள்பவர்களை எதைக் கூறினாலும் நான் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கும்.... கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறேன் என்று கூறுபவர்களை யாரும் எழுப்ப முடியாது ஆக,அவர்களை இங்கே மறப்போம்.

இங்கே தரப்பட்டுள்ள அபிராமி அந்தாதிப் பாடல்களையும், கவியரசுவின் கருத்தையும் படித்துப் பாருங்கள்...

5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!

37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!

38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.

42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!

78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.

85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.

93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

82: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?
****************************************************************************
இவைகள் சிற்றின்பப் பாடல்களா? இல்லைப் பேரின்பப் பாடல்களா? இவைகள் தாம் பெரும்பாலும் அபிராமி அந்தாதியிலே நாம் கூறும் அகப் பாடல்களாகத் தோன்றுபவை. 

திருப்பாவை, திருமொழி, பாரதியின் பாடல்கள் இவைகள் பற்றிய பகிர்வை பின்போ அல்லது பிறகோ பேசுவோம்.
அபிராமி பட்டர், அவர் சக்தி பித்தர், அவர் சித்தமெல்லாம் சிவமே என்று திரிந்து அன்னையின் அருளாலே ஜீவன் முக்தரானார். இவை யாவரும் அறிந்ததே.

அவளைப் பற்றி, நமது முக்தர் சக்தியின் பித்தர்; அவர்களின் பாடல்களில் உள்ளக் கருத்துக்களை தான் வேதாந்த கருத்துக் களோடு பகிர்ந்து அந்தப் பக்திப் பாடல்களில் வடியும் அமுது யாது? என்பதைப் பற்றிய ஒரு சிறு புரிந்துணர்வுக்கு வரப் போகிறோம்.

அதற்கு முன்பு ஒருத் தகவல் இது போன்ற பக்திக் காவியங்கள் / பாடல்கள் யாவும் எழுதுபவரின் ஆன்மாவின் எதிரொலி என்பதே அது.விரிவாகச் சொன்னால்இவர்கள் ஆழ்ந்த ஆன்ம நிலையிலே தான் இவைகளை பாடியுள்ளார்கள். இவர்கள் எப்போதும் அப்படி ஒரு பித்தர்களாகவே, ஒரு மோன நிலையிலேத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்தப் பாடல்களையெல்லாம் அந்த மகான்களின் ஆத்மாக்களின் உன்னத வெளிப்பாடே என்பதையும் மறக்கக் கூடாது.

இங்கே ஐம்புலன்களும், அது தாங்கிய உடலும், இல்லவே இல்லை. அதையும் கடந்த மேலான நிலை. மகாகவி பாரதி கூட அப்படித் தான் பல கவிதைகளைப் பாடி இருக்கிறான் என்பதை இந்த மன்றத்திலே நான் சான்றோடு ஒருக் கட்டுரையை எழுதியிருந்தேன்.

இன்னும் சொன்னால் திருமதி மகாகவியும் அதையே டெல்லி / திருச்சி  வானொலிகளில் உரையாற்றும் போதும் கூறி இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலையிலே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார்.

ஐம்புலன்களையும் அடக்கிஒரு குழந்தையைப் போன்ற ஒரு நிலையிலே இருப்பது தான் உண்மையான பக்தியின் முதல் தகுதியே...அவைகள் வரப் பெறுவதற்கு என்னவெல்லாம் அபிராம பட்டர் செய்து இருக்கிறார் என்பதை அவரின் மற்றப் பாடல்களை படித்தால் நன்கு விளங்கும். 

பாரதியும் பாண்டிச்சேரியில் கடைசி காலங்களில் அப்படித் தான் இருந்திருக்கிறான் என்பதை அறிய முடிகிறது.
மேலதிகத் தகவலுக்கு நமது தஞ்சைப் பெரியவர் பாரதி அடிபொடிபாரதி பித்தர் வெ. கோபாலன் ஐயா அவர்கள் தலைமையில் இயங்கும் பாரதி இலக்கிய பயிலகம் வலைப் பூவில் காணலாம்.

பாரதியின் நாட்குறிப்புகளாகவே அப்பாடல்கள், கட்டுரைகள் வந்திருக்கின்றன. அவனும், இதன் அருமையை; நாமும் அறிய எதை எல்லாம் ஆவணப் படுத்தி இருக்கிறான் என்று எண்ணில் சிந்தை சிலிர்க்கிறது...
அவனை வியக்க வில்லை, காரணம் அவனின் இயல்பான குணம் மது. ஆக, அதில் வியப்பேதும் இல்லை.   
இப்போது நான் கட்டுரையின் முன்பகுதியிலே எழுதிய விசயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.... 
அபிராம பட்டர். அன்னையை சர்வ சதாக் காலமும் எண்ணிக் கொண்டு அவளின் நினைப்பையே சுவாசிக்கிறார்... காண்பனவெல்லாம்  அபிராமி, கேட்பான, பறப்பன, நிற்பன அனைத்தும் அன்னை அபிராமி என்றுத் திரிகிறார். அவளை போற்றுகிறார், இவ்வளவு காலம் நான் வீணடித்தேன், வீணர்களோடு இனியும் சேரேன், சேர்ந்து நான் செய்த பாவமெல்லாம் தொலைப்பாய், என்றெல்லாம் கூறி இறங்கி, உருகி, பணிந்து வணங்கி மன்றாடுகிறார்.
இப்படி இருக்கும் இவரின் மன நிலை எப்படியானதாக இருக்கும்... கர்வம், இல்லை, ஆணவம், அகந்தை இல்லை, காமம் இல்லை, கோபம் இல்லை, இப்படி எந்த அழுக்கும் இல்லாமல் இருக்கும் இவரின் நிலை தான் என்ன வென்றால்!. 

அது தான் வளர்ந்த, உலகம் அறிந்த, கல்வி,கேள்விகள் பெற்ற... இருந்தும் அன்னையாகிய இறைவியின் முன்பு, இறைவனின் இடபாகத்தில் இருக்கும் மகாசக்தியின் முன்பு ஒரு குழந்தை நிலை.

இங்கே இந்தக் குழந்தை, அழுகிறது!
எதற்கு அழுகிறது?, பசித்துப் பசியால் அழுகிறது!  
என்னப் பசி? ஞானப் பசி!...
அப்படிஎன்றால், பசியை போக்க அம்மா வர வேண்டுமே!
அவள் வந்து தனது பிள்ளையை அள்ளி இறுக்க அணைத்து தனது முலைப் பால் தர வேண்டுமே
வந்தாளா? வந்தாள்! 
அள்ளி அணைத்து முலைப் பால் தந்தாளா? தந்தாள்! பிறகு என்ன... 
அன்னை வந்தாள், ஞானப் பசியால் அழுத தனது குழந்தையை அன்போடு அணைத்து கொஞ்சி, அன்பு, கருணை, பாசத்தோடு அறிவையும் கலந்தே தனது அழகிய முலையாலே அமுதமென்னும், ஞானப் பாலை ஊட்டினாள்.
அத்தோடு முடிந்ததா? அது தான் இல்லை, எதற்காக இந்தக் குழந்தை அழுதது!... ஞானத்திற்காக!!. 
அது கிடைத்தது... எப்படி?... 
அன்னை தன் பிள்ளை அழுவதைக் கேட்டு ஓடோடி வந்தாள், ஞானப் பாலைத் தந்தாள், ஆனந்தம் அடைந்தாள்.
அதன் பிறகு அந்தக் குழந்தையை அவனின் தந்தையிடம் அள்ளிக் கொடுத்து அந்தத் தந்தையையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி, அவளும் ஆனந்தத்தில் மூழ்கி அமைதி கொள்கிறாள்.
இப்போது இங்கே இன்னொரு சிந்தனையும் வரும்...

பச்ச பச்சிளங்குழந்தை பைந்தமிழ் கவிபாடியக் குழந்தை
இச்சைஎல்லாம் ஈசனிடியே என்று எக்கணமும் சுவாசித்தே
சைவசித்தாந்தம் சிறக்க செந்தமிழும் செழிக்க அவதரித்தந்த 
சிவசக்தியாய் வையமேகியே ஞானப்பாலூட்டிய குழந்தையே!

இப்போது விளங்கும் ஏன்? சக்தியவள் வந்து பாலூட்டினால் அது எத்தகையது என்று.
இப்போது நமக்குப் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன்...
அப்பனை அடைய நாம் முதலில் யாரை நாடி, யார் மூலம் செல்ல வேண்டும் என்றும்... 
ஏன்? கோவில்களிலே தாயாருக்கு எல்லா பூஜைகளையும் செய்துவிட்டு; அங்கே நம்மை வணங்கச் செய்துவிட்டு, நம்மை அப்பனிடம் அழைத்துச் செல்கிறார்கள் என்றும்...
ஏன்? ஆண்டாளும், அபிராமபட்டரும், பாரதியும்...... 
நப்பின்னையையும், அபிராமியையும், பராசக்தியையும் கொண்டாடினார்கள் என்று. (இருந்தும் ஆண்டாளை நாம் வேறு விதமாக ஆராய வேண்டும்.)

இப்போது இங்கே அபிராம பட்டர் என்னும் குழந்தை, பாடிய இப்பாடல்கள் அகப் பாடல்களா?. 
அதோடு அவர் ஏன்?... அன்னையின் திருக்கொங்கையை இப்படி வரிந்து வரிந்து அழகு படுத்தி அதிலே மயங்கியும், ஈசனும் மயங்கியும் (அதற்கு வேறு காரணம் உண்டு அதை பிறகு பேசுவோம்) இருந்ததாக வர்ணித்தார் என்பதையெல்லாம் யோசித்தால்... 

குழந்தைக்கு எது சொர்க்கம், அது எதை உயிராக, அமிழ்தாக, தெய்வாம்சமாக எண்ணும் என்பதை எல்லாம் நாம் இயல்பாக யூகிக்க முடியும்.

ஒரு குழந்தை தனது தாயோடு மிக நெருங்கிய உறவோடு, பரஸ்பரமான, ஒரு உயிருக்கு உயிரான; ஒரு உணர்வு நிலை கொள்வது என்பது நான் மேலேக் காட்சியாய் விளக்கிய அந்த முலைப்பாலூட்டும் தருணமே (நன்கு கவனிக்கவும் ஒரு பரஸ்பரமான மற்றத் தருணங்களில் அன்பு பகிரும் தாய் மற்றும் குழந்தையின் மன நிலை ஆத்ம சங்கமம் ஒரே நிலையில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதைத் தாய்மார்களும், அவர்களோடு அந்த இனிமையான தருணங்களில், மிகவும் ரசித்துப் பார்த்திருந்த தந்தைமார்களும் நன்கு உணர்வார்கள்)

இன்னும் சொன்னால் அன்னை, தந்தை, குழந்தை மூவரும் ஆத்ம சங்கமிக்கும் பொழுதும் அதுவாகத் தான் இருக்கும் என்பதும் எனது துணிபு..., என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

இதை வேறெங்கும் நான் படித்திலன் இருந்தும் எனது எண்ணம் இது, நீங்களும் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி ஏற்பீர்கள் என்றால், அடுத்தடுத்த கட்டங்களில் பகிரப் போகும் கருத்துக்களில் நாமும் கருத்தொருமித்து கருத்துக்களில் இன்புறுவோம் என்பது திண்ணமென நான் தீர்க்கமாகவே நம்புகிறேன்.  
******************************************************************************
புலனின்பத்திலே சர்வ சதாக் காலமும் உழலும் நம் புத்திக்கு அது அகம் சார்ந்த பொருளாக உரைப்பதில் வியப்பில்லை... 

குழந்தை மனம் வேண்டும், சிறந்த பக்திக்கு இது தான் முதல் தகுதி. அப்படி குழந்தை மனம் கொண்டோரின் எண்ணம், செய்கை நம்மில் இருந்து வேறாகவே தோன்றும், இருக்கும். 
பெண்ணின் முலையை பார்க்கும் ஆணின் மன நிலையை மூன்றாக பிரிக்கலாம், ஒரு சிறியக் குழந்தை பார்க்கும் போதும், ஒரு கணவன் பார்க்கும் போதும், ஞான நிலைக்கு உயரத் துடிக்கும், வளர்ந்த ஒருக் குழந்தைப் பார்க்கும் போது; எண்ணம் உணர்வு எல்லாம் வேறுபடுகிறது.
 இருந்தும் அவை யாவும் சூட்சுமத்தில் ஒன்றே! இது சாதாரண மனிதப் பெண்களுக்கு மாத்திரமல்ல (மாதர்தம் கொங்கைகள் எல்லாம் சிவலிங்ககமாகக் கண்டார் அடியார்கள் என்பான் பாரதி.) பெண் தெய்வங்களுக்கும் பொருந்தும்.ஆக, இனி இப்படி ஒரு காட்சியை காணினும், கேட்பினும், நாமாக பேசினும் அங்கே அன்னை உண்ணாமுலையாளின் அழகிய ஞானப் பால் தரும் கொங்கைகளாகவே இனி நம் அனைவரின் கண்களுக்குத் தெரியட்டும். 

நாம் முன்னோர்கள் இந்தக் கொங்கைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்கள், அதை வியந்தும் உயர்த்தியும் அழகுறவும் பாடி இருக்கிறார்கள். அப்படி அதை பெண்களே உயர்வாகவும், அமுது கொடுத்த தனது உன்னத அங்கமாகவும் கருதியதை அகம் அல்ல புறநானூற்றிலும் காண முடிகிறது. 

போரில் புறமுதுகில் காயம் பட்டு இறந்த தன் மகனைக் கண்டு, கடும் கோபம் கொண்டு. உனக்கு, ஒரு கோழைக்கு; இந்த முலை அல்லவா பால் தந்தது அது எனக்கு வேண்டவே வேண்டாம் அதை  கிள்ளி எறிகிறேன் என்று ஒருத் தாய் கோபமாகப் பேசி; கடைசியில் அந்த முதுகுக் காயம் வேலொன்று நெஞ்சில் பாய்ந்து அது முதுகுக்கு வந்தது என்பதை அறிந்து ஆகா, என் மகன் வீரன் என்று சந்தோசத்திலே மகிழ்கிறாள் என்பதான அப்பாடல்.

பெண்களின் தெய்வாம்சம் அது. கொச்சையாகப் பேச, பார்க்க, யோசிக்க எதுவும் இல்லை. அதனாலே அவைகள் பக்திக் காவியங்களில் பேசப் படுகின்றன. இந்த வரிகளைக் கொண்டு இப்போது அதை அகப் பாடல் என்று எண்ண வேண்டியதில்லை என்பதே எனது எண்ணமும். இதை யாவரும் ஏற்பீர்கள் என்றே நான் நம்புகிறேன்.  
அதோடு, பக்தி செய்வதில் பல நிலை இருக்கிறது....

இறைவனை தாயாய், தந்தையை, தோழியாய் / தோழனாய், காதலனாய் / காதலியாய் இப்படி. 
இந்த ஒவ்வொருப் படியிலும் உயர்ந்து நிற்கும் காதலனாய் / காதலியாய் மிகவும் நெருக்கமான அன்னியோன்யமான நிலை தான் சிறந்தது...

அதைப் பற்றி நிறைய பேசலாம், இருந்தும் அந்த நிலையை நான் கூறும் இந்த மூவரும் முயன்று வெற்றி பெற்றார்கள் எனலாம்.

உதாரணமாக, அபிராம பட்டரே அதை தனது பாடலில் அன்னையை எப்படியெல்லாம் காண்கிறார் என்பதை அவரே பாடி இருப்பதைக்  காணுங்கள்.
அன்னை அபிராமி எத்தகையவளாக எல்லாம் விளங்குபவள் என்பதைகூறுகிறார். 

துணையும்தொழும் தெய்வமும் பெற்ற தாயும்சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும்கருப்புச் சிலையும்மென் பாசாங்குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும்தொழுகின்ற தெய்வமாகவும்பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும்அவற்றின் கிளைகளாகவும்வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும்கரும்பு வில்லும்மெல்லிய பாசமும்அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
நாம் இதுவரை அவர் அன்னையைத் தாயாக பாடியதைப் பற்றி மட்டுமே பேசினோம்..... மற்றவை பிறகு!
இறைவன் யார்?, இறைவி யார்? நான் யார்? என்பதை இங்கே விளக்க வேண்டாம்…. நாம் அறிந்ததே!...
மேலேக் காணும் பலப் பாடல்கள் யாவும், ஒவ்வொன்றும் தனித்தனியான வேதாந்தக் கருத்துக்களை சுமந்து நிற்கிறது
. 
அவைகளை நான் படித்தவைகளைக் கொண்டும், படித்துப் புரிந்தவைகளைக் கொண்டும் மேலும் பேசுவோம்.
இங்கே ஒரு முக்கிய தகவலைச் சொல்லவேண்டும்... நான் அபிராமி அந்தாதியைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதப் போகிறேன் என்று அபிராமி அந்தாதியை படித்து திளைத்து அதன் பெருமைகளை வாய்புறும் போதெல்லாம் பரப்பி வரும் நமது ஐயா!.... தஞ்சைக் கலைக்காவலர் திருவாளர் வெ.கோபாலன் அவர்களிடம் கூறிய போது, நன்றாக எழுதுங்கள் என்றதோடு அதன் அருமையையும், தார்ப்பரியமும் என்ன என்பதை ஒரே வரியில் சொல்லி, மேலும் ஒரு முக்கிய அறிவுரையையும் கூறி யுள்ளார்கள். அவர் கொடுத்த ஒரே ஒரு பொதுவான அறிவுரை. 

"நாம் இறைவனிடம் சொல்லும் சொற்களை இக்ஷிணி தேவதைகள் வான வெளியில் போய்க்கொண்டே 'ததாஸ்து' என்பார்கள் என்கிறார்கள். அப்படியானால், நம் வாயிலிருந்து அவச்சொல் வருவது கூடாது."
இதை ஐயா அவர்கள் என்னிடம் கூறியதன் அர்த்தம் எனக்கு நன்கு புரியும், எனது நலன் என்பது ஒரு புறம் இருக்க
நான் மனதில் தோன்றுவதை வெளியில் பேசும் சுபாபம் உள்ளவன், அதுவும் எப்படி? உணர்ச்சிப் பொங்க, அதை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக, அதை ஆணி அடித்தாற் போல் சொல்லி விடுவேன் என்பதையும் ஐயா அவர்கள் நன்கு அறிவார்கள். இன்னும் சொன்னால் நான் சிறியவன் வயதிலும், அனுபவத்திலும். 
ஆனால், ஐயா அவர்களிடம் நான் கூறியது போல், அவரின் பார்வைக்கு அனுப்பாமலே இந்தக் கட்டுரையை வகுப்பறைக்கு அனுப்பி விட்டேன். (மன்னிக்கவும் ஐயா!....) இருந்தும் அவரின் அந்த அறிவுரையை தலைமேல் கொண்டே இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன்... 

அகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை 
அகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை
அபிராமி யவளே இருக்கையிலே; இங்கே 
அபிராமியில்லா தொன்றை காண்பதேது?

அன்னையவளைப் போற்றி 'ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி'; அன்பால் கனிந்து கசிந்துருகி; அவளின் கருணை மழையிலே நனைந்து; அவளின் ஞானப் பாலை அவள் ஊட்ட அருந்தி; கீதையிலே பரமாத்மாவே கூறியது போல பக்தியின் நான்காம் நிலையினை அடைந்து இறைவனை அடைய வேண்டும் என்பதையே இந்த பேரின்ப அகம் சார்ந்தப் பாடல்கள் மூலம் நாம் அறிய வேண்டியது.

அவனருளால் அவன் தாள் பணிவோம். ஆம், அவனும், அவளும் ஒன்றே என்பதையும் மனதில் கொள்வோம்.
நம் அனைவருக்கும், அன்னை அபிராமி! அருள வேண்டும்!! என்று வணங்கி, அவள் திருப்பாதம் பணிந்துப் போற்றி!!!, மீண்டும் தொடர்வோம் என்று விடை பெறுகிறேன். 
நன்றி வணக்கம்.
அன்புடன்,
கோ. ஆலாசியம்.
சிங்கப்பூர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7




  Work allocation by G.Aananthamurugan

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

84 comments:

  1. என்னுடைய ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.படிக்க இருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

    முதற்காதலியையும் மனைவியும் ஒப்பிட்டு எழுதிய கவிதைதனுசுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது.

    வயதான காலத்தில் மனைவியின் ஆதங்கங்களை காது கொடுத்துக்கேட்க வேண்டும் என்று சொல்லும் உமாஜியின் கருத்தை நானும் கடைப்பிடிக்க விழைகிறேன்.

    ரூபாய் நோட்டின் பயணக் கதையும் சுவையானது. தனுசு எல்லாத் திறமைகளும் உடையவரே.

    ஆலாசியம் மிகவும் ஆழமான கருத்துகளை கூறியுள்ளார். கருத்துச்சொல்லும் அளவுக்கு தத்துவ விசாரமும் படிப்பும் இல்லாதவன் நான்.அவர் சொல்லியுள்ள செய்தியும் மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டியது.பள்ளி கல்லுரிகளில் அதில் வரும் சொற்களையெல்லாம் விளக்க ஆசிரியர்கள் படும்பாடு நான் அறிவேன். இங்கே ஏதாவ‌து சொல்லத் துவங்கி வாங்கிக்கட்டிக் கொள்வேனோ என்று பயமாக உள்ளது.ஆலாசியத்தின் கட்டுரையை முழுதும் பொறுமையுடன் படித்து மகிழ்ந்தேன் என்று மட்டும் கூறி அமைதி கொள்கிறேன்

    ReplyDelete
  2. ஆனந்தமுருகனின் கடவுளர்களுக்கான போர்ஃபோலியோ அலாட்மென்ட் அருமை. சுவையாக உள்ளது.

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,
    எனது ஆக்கத்தை வெளியிட்டதற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. ஆனந்தமுருகன் சார் சூப்பர்...
    உங்களின் பக்கத்தில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
    சதா சிரித்துக் கொண்டே இருப்பார்கள். நன்றிகள் பல.

    ReplyDelete
  5. கிருஷ்ணன் சார் மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது கட்டுரை
    அதோடு கிறளும் சும்மா அதிர்ந்தது...
    பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  6. ///இவள்
    எனக்குக காதலியாய் வந்த தாரம்.////

    பெற்றோரின் ஆசியுடன் அனுமதியுடன் அவர்களின்
    தேடலில் கிடைத்த திரவியம் என்பதை உள்ளுறை
    மறைபொருளாக விளம்பிய விதம் அருமை.

    ஜாக் -அப் ஆ... இல்லை செமி - சப் ஆ....
    நங்கூரம் பாய்ந்ததா?

    பகிர்வுக்கு நன்றிகள் கவிஞரே!...

    ReplyDelete
  7. ////எல்லாரும் ஒரேமாதிரி இருக்கமாட்டா இல்லையா? அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு? அவ படிப்பு, அது முடிஞ்சு வேலைன்னு இருந்துட்டா. நீ இருந்த காலம் வேற காமாட்சி. எட்டாவதோட படிப்ப நிறுத்திட்டா உங்காத்துல. உங்க அம்மா, பாட்டியோட சேர்ந்து செஞ்சு உனக்கு எல்லா வேலையும் பழக்கமாயிடுத்து. இப்போ அப்படியில்லையே.

    என்ன மருமகளுக்கு வக்காலத்தா? அப்போ கடைசிவரை நான் வேலை செஞ்சிண்டே இருக்கணும்னு சொல்ல வரேள், அதானே?////

    நல்லவேளை!.... அப்போ என்னைப் படிக்காதவன்னு சொல்றேள் என்று பாயாமல் போனாள் மாமி... நல்ல மாமி :):)

    பொதுவாக செவ்வாய் (செயல்) பலம் இருந்தால் இப்படி..... அதோடு புதனும் பலமாக இருந்தால் தான் நல்லது...

    ReplyDelete
  8. //// இப்போது சற்றே ஒய்வு வேண்டும் என அவள் ஆசைப்படுவதில் தவறில்லைதான். ஆனால் அதை வெளிப்படுத்தும், எதிர்பார்க்கும் விஷயத்தில்தான் சறுக்குகிறாள்.///

    உழைப்பாளிகளின் பலவீனம்!..

    ReplyDelete
  9. //// அவளைப்பற்றி இந்த முப்பது வருட திருமண வாழ்க்கையில் நன்கு புரிந்துவைத்திருக்கிறார். தான் செய்வது தவறு என அவளுக்குப் பிடிபட்டுவிட்டால் அதைத் திருத்திக்கொள்ள என்றுமே தயங்கியது கிடையாது.

    அவள் சிந்தனையைக் கெடுக்க விரும்பாதவராய் புன்னகையுடன் எழுந்தவர் சொன்னார் 'சரி உனக்கும் சேர்த்து நானே காப்பி கலந்து எடுத்துண்டு வரேன்'.

    அவர் அடுக்களைக்கு சென்றதும் காமாட்சி அம்மாளின் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. இந்த மனுஷருக்காகவாவது நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஆக வேண்டும் என்ற மன நிறைவு அது.////

    மிகவும் அருமை உமா... அசத்திட்டீங்க

    ReplyDelete
  10. பணம் பற்றிய ஆக்கம் மனமெல்லாம் மணம் பரப்பியது நண்பரே!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சகோதிரி தேமொழியாரின் கட்டுரை நல்லப் பலத் தகவல்களைத் தந்தாலும்...
    கடைசியில் வந்த கன்னதாசனாரின் தத்துவம் முத்தாய்ப்பாய் நிற்கிறது.
    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

    ReplyDelete
  12. பலபிழைகளை தந்திருந்தாலும்...
    கண்ணதாசனார் என்பதில் பிழை வத்து
    பெரும் தவறு அனைவரும் பொறுத்து அருள வேண்டும்.

    ReplyDelete
  13. KMRK அவர்களே கந்துவட்டி பிசினஸ் செய்பவர்கள் எல்லோரும் சைடு பிசினஸ் செய்கிறார்களோ இல்லையோ , பெரும்பாலோர் இன்று வட்டிக்கு கொடுப்பதை சைடு பிசினசாகவே செய்கிறார்கள் .

    எப்படியோ இன்றைக்கு நாம் ஒரு வருமானத்தை மட்டுமே நம்பாமல் ஏதாவது ஒரு சைடு பிசினஸ் செய்வது நல்லது என்பதே என் அபிப்பிராயம்.நானும் ஊரில் ரியல் எஸ்டேட் செய்யும் நண்பருடன் முப்பது 30%ஷேரில் இருக்கிறேன் .

    ReplyDelete
  14. எனது இரு ஆக்கங்களையும் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள் .

    ReplyDelete
  15. இன்றைய ஆக்கங்கள் அருமை..
    இன்றைய மலரை கொஞ்சம் லேட்டா பப்ளிஷ் பண்ண வாத்தியாருக்கு என்ன காரணம் ஆச்சோ தெரியவில்லை..எனினும் நன்றி..

    ReplyDelete
  16. ///////ஜப்பான்காரர் இதைப்படித்துவிட்டு சைடுபிஸினெஸில் வெற்றி அடையாதவனின் 'பெட்டைப் புலமபல்' என்று சொல்லக்கூடும்.சொன்னால் சொல்லட்டும்.///////

    இந்தளவுக்கு தரக்குறைவாக மைனர் யாரையும் எப்போதும் விமர்சிக்கமாட்டார் என்றபோதிலும் இப்படி ஒரு இமேஜ் எழும் அளவுக்கு அவரின் போக்கு இருந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.. (நாங்க வந்து மல்லிகார்ஜுனையா மாதுரி..
    வாத்தி'யாச்சார்யா' வுக்கு நல்லாத் தெரியும்.)

    ReplyDelete
  17. பதார்த்தம் பண்ணத் தெரியாத மருமகளை
    சுட்டிய உமாஅவர்களின் கதைஎதார்த்தம்.

    ReplyDelete
  18. ஆலாசியம் கட்டுரையை பத்தி ரொம்ப கேர்ஃபுல்லா விமர்சனம் பண்ணின KMRK
    தனுசு கவிதையிலே பெருசா கோட்டைவுட்டு முழுசாப் படிக்காம கமென்ட் அடிச்சு
    வெண்ணைக் கடைக் காரர் பேரு வெச்சுக் கூப்பிட்டதை உண்மையாக்குகிற முயற்சியிலே
    இப்படி இறங்கியிருந்திருக்க வேணாம்..

    ReplyDelete
  19. இன்றும் எனக்கு வேலை அதிகம். பெருமைக்குச் சொல்லவில்லை. உண்மை. இருந்தாலும் வகுப்பறைப் பாடங்களை மேலோட்டமாவது ஒருமுறை பார்த்து விடுவது என் கடமை. அதன்படி இன்றைய பதிவுகளைப் பார்த்ததும் முதலில் என்னை இழுத்தது ஆலாசியம் அவர்களின் அன்னை பராசக்தி அபிராமி பற்றிய கட்டுரை, அடுத்தது சகோதரி உமாவின் கதை. சகோதரி தேமொழி அவர்களின் கதையைச் சற்று நிதானித்துப் படிக்க எண்ணி விட்டு வைத்திருக்கிறேன்.தனுசுவின் கவிதையையும் ஆழ்ந்த படிக்க வேண்டும். உமா அவர்கள் எதார்த்தமான ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்துச் சம்பவத்தை வைத்து எழுதியிருக்கிறார். உலக மாதர் தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் மாமியார் என்பவர் மருமகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டுமென்பதை நயம்பட தெரிவித்திருக்கிறார். நடை சீராக அமைந்திருக்கிறது. மருமகளும் ஒரு பெண்ணே எனும் எண்ணம் பெரும்பாலான மாமியார்களுக்குக் கிடையாது. மற்றொன்று ஒரு குடும்பத்தில் பெண் என்ற முறையில் அன்பு, மரியாதை, முக்கியத்துவம் இவையெல்லாம் அனுபவித்த மாமியாருக்குத் தனக்கு மருமகள் போட்டி என்பது போல எண்ணத் துவங்குகிறாள். இந்த உறவின் தாக்கமும் அதன் பாதிப்பும் சொந்த முறையிலும் உண்டு. மனம் மாற வேண்டும். மாமியார்கள் என்பவர் தன் காலம் நிறைவடைந்துவிட்டது, இனி எதிர்காலம் இந்த இளம்பெண்ணுக்குத்தான் எனும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் இந்த சர்வதேச மகளிர் தினத்தின் கோட்பாடு. மகாகவி பாரதி ஒரு பாடலில் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்கிறார். இதற்கு பெண்களை இழிவு செய்யும் பழக்கத்தைக் கொளுத்துவோம் என்று பொருள் கொள்வர். ஆனால் ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார் "மாதர், தம்மைத் தாமே இழிவு செய்துகொள்ளும்" என பொருள்பட பேசினார். ஆம் பெண்களுக்கு எதிரிகள் பெண்களே. ஆண்கள் அல்ல. சரி ஆலாசியம் கட்டுரைக்கு அடுத்தபடி வருகிறேன்.

    ReplyDelete
  20. KMRK வின் படைப்புக்களில் மிகவும் சுவாரஸ்யமான படைப்புகள் வரிசையில் சென்றமரும் வகையில் இன்றைய படைப்பும் அடங்கும்.
    எந்த இடத்தைச் சுட்டிச் சொல்லி விளக்குவது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் டாப் டு பாட்டம் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது..
    சைடு பிசினெஸ் என்ற பெயரில் பெரிய பலன்களை எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை..

    எனக்கென்னவோ இந்த வகை முயற்சிகள்
    பலனளிப்பதாய்த் தெரியவில்லை..

    முழுக் கவனம் செலுத்தி நேரடியாக செயலில் இறங்கிச் செயல்படுத்த முடியாத காரணத்தாலேதான் சைடிலே செய்வதாய் பெயர் எடுத்திருக்கிறது 'சைடு பிசினெஸ்'.

    இதே காரணத்தால் ஆன குறைகள் இதிலும் ஏராளம்..

    கட்டுரையில் சொல்லப்பட்ட சிலருக்கு லாபம் கிடைத்திருந்தால் அது ஆச்சரியம்தான்..

    ReplyDelete
  21. அபிராமி அந்தாதி சாதாரண கவிதை அல்ல. பராசக்தியின் மூலமந்திரத்தை உச்சரிக்க உபதேசம் பெற்றுக் கொள்ளாதவர்கள் 'அபிராமி அந்தாதி'யைப் படித்தால் மூலமந்திரம் உச்சாடனம் செய்த பலன் உண்டு என்பர். படித்துப் பாருங்கள், சாதாரண கவிதையா அது? ஒரு பாட்டு எடுத்துக் காட்டு:

    உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை, ஒளிர் மதிச்செஞ்
    சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
    இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனி
    படையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!

    நூற்பயன் அனைவரும் அறிந்த பாடல்

    தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா
    மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமிலா
    இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!

    அபிராமி அந்தாதியைப் படித்து வாருங்கள். பலனைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  22. இன்னும் இருபது வருடம் கழித்து தான் எப்படி இருக்கவேண்டும் என்று உமா ரிகர்சல் பார்த்து எழுதியதாகத் தோன்றுகிறது..

    தெளிவான நீரோடையாக வசனம், எழுத்து நடை அமைந்திருந்தது..

    ப்ராப்பர் ரி -என்ட்ரிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. கே.எம்.ஆர். என்னை இருபது முப்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டார். வேடிக்கை என்னவென்றால், சுமார் ஐநூறு பேர் பணியாற்றிய இடத்தில் பலரும் அவர் சொன்ன சைட் பிசினஸ் காரர்களிடம் வியாபாரம் செய்திருந்தாலும், நான் கடைசிவரை எதையும் வாங்க வில்லை. எண்ணெய் வியாபாரியிடமும் போகவில்லை. வெண்ணை எனக்கு நண்பர்தானே தவிர வியாபாரத்தில் கலந்து கொண்டதில்லை. துணி வியாபாரி பேண்ட், ஷர்ட் கொடுப்பார், நான் கதர் வேட்டி, சட்டைக்காரன் அதற்கும் வழியில்லாமல் போயிற்று. ஆனால் இன்று ஓய்வு பெற்று பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கிறேன். அவர்களில் சிலர் கஷ்டம் அனுபவித்து இறந்து போனார்கள். சிலர் உயிரோடு இருந்து வியாதியாலும், உடல் உபாதைகளாலும் அவதிப் படுகிறார்கள். நமக்கு ஊதியம் தரும் நிறுவனத்துக்கு ஊழியம் செய்யாமல் சொந்த சைட் பிசினஸ் செய்தவர்கள் நலமாக இருக்கவில்லை என்ற உண்மையை இனி சைட் பிசினஸ் செய்யலாமா என்ற எண்ணம் கொண்டவர்கள் விட்டுவிடுவதே மேல். கே.எம்.ஆரும் இந்த செய்தியை யாராவது சைட் பிசினஸ் செய்பவர்கள் இருந்தால் சொல்லி வைக்கலாம். நல்ல பதிவு.

    ReplyDelete
  24. தனுசுவின் கவிதை நன்று..

    கவிதையில் ஆரம்பத்திலேயே தெளிவாக்கி கடைசி வரை இழுக்காமல் இருந்திருந்தால் KMRKவிமர்சனத்தைத் தவிர்த்திருந்திருக்கலாம்.

    //அவள்
    மாதங்களில் மார்கழி
    இவள்
    காலங்களில் வசந்தம்///

    பளிச்சென்று கண்ணில் படும் கண்ணதாசனின் வரிகள்
    "காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலேஅவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி ..."

    தவிர்த்திருந்திருக்கலாம்.

    ReplyDelete
  25. கிழிந்த நோட்டை (பால்கார)மைனர் தலையில் கட்டி அவர் வீட்டில் மனைவி கையில் அந்த நோட்டு மாட்டி கடைசியில் கிழிந்து போன நோட்டாய் மைனரை மாற்றி விடப் போகிறாரோ தனுசு என்று கொஞ்சம் பயந்துகொண்டே படித்தேன்..நல்ல வேளை..அப்படியெல்லாம் செய்யவில்லை..
    நல்ல கான்செப்ட்..விவரித்திருக்கும் இடங்களும் அருமை..நோட்டின் தொடர்ந்த ஃப்ளோ..கடைசியில் சொன்ன மெஸ்சேஜ்.என்று கலக்கியிருந்தார் தனுசு.
    மன்மோகனின் நிர்வாகத்தில் தங்கத்தில் முதலீடு செய்தது லாபம் தந்ததுடன் தங்கத்தின் இறக்குமதியும் கூடியிருப்பதை விவரித்து வாரப் பத்திரிகையில் ஒரு கட்டுரை படித்தேன்.
    நாடுகள்,மக்களின் மனநிலை பொறுத்து முதலீடு, பணப் புழக்கம் என்று ஏகப்பட்ட மாறுதல்கள்..
    ஜப்பானில் 18 காரட் தங்கம்தான்..இல்லையென்றால் பிளாட்டினம்தான்..
    22 ct .வாய்ப்பே இல்லை..

    ஹெர்மெஸ்,லூயிஸ் வுய்ட்டன்,கார்ட்டர், போன்ற இண்டர்நேஷனல் brand ஹான்ட்பேக் அயிட்டங்களுக்கு மார்க்கெட் உள்ள அளவுக்கு தங்கம் அந்த போட்டியில் இல்லை.

    ReplyDelete
  26. மண்டைக் குடைச்சலை ஏற்படுத்தும் வரலாறு என்பது படிக்கும்போது நினைவுக்கு வராமல் சுவாரஸ்யமாய் படிக்கும்படி தேமொழியின் எழுத்தாற்றல் கைகொடுத்தது..

    மார்க் வாங்குவதற்காக மட்டுமே வேண்டாவெறுப்பாக வரலாறு படித்து பழகிப் போன எனக்கு இன்று ஒரு வரலாறு காணாத விருந்தாய் பேரரசி தேமொழியின் ஆன் னின் கதை அமைந்திருந்தது..மனங்கனிந்த பாராட்டுகள்.

    ஆரம்ப வரிகளில் நெதர்லேன்ட் இளவரசர் வில்லியம்சைக் கை பிடித்த அரசி ஆனின்.அக்கா மேரி அடுத்தடுத்த பாராக்களில் டென்மார்க் இளவரசரையும் கைப்பற்றினார் என்ற செய்தி படித்ததும் துணுக்குற்றேன்..என்னடா இது 'கலாபக் காதலன்' கதை போல மேரி ஒரு 'கலாபக் காதலி'யா இருப்பாகளோன்னு நினச்சு பயந்தே போனேன்..அப்புறமா திரும்பப் படிச்சேன்..
    தேமொழிதான் இந்த வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்..

    சமீபத்து தமிழகத்து அரசியல் நடப்புக் காட்சிகளை அன்றே வரலாற்றில் இருந்தது என்று கண்டுகொண்டு அதனை அனைவருக்கும் தக்க சமயத்திலே கொண்டு சேர்த்த தேமொழியைப் பாராட்டுவதே சாலச் சிறந்தது..

    கடைசிப் பாராக்களின் மூலம் உண்மையில் வாரிசுரிமைப் போராட்டம் ஸ்பானிஷ் சம்பந்தப்பட்டதல்ல என்பதும் அது இயற்கையுடனானது என்றும் புரிந்துகொண்டேன்..
    வகுப்பறைப் பேரரசி கதை இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றி பேரரசியைப் பற்றி எழுதிய கதை என்பதால் Rh ஃபாக்டர் பற்றிய பேச்சைக் கிளப்பி விட்டவன் நான் என்கிற அடிப்படையிலே ஆரம்பத்திலேயே நான் இதனைச் சந்தேகித்தேன்..ஆனால் கடைசியில் தெள்ளத் தெளிவாக இந்த டாப்பிக்கை மையமாக வைத்து சொல்லப்பட்டிருக்கும் செய்தியும்
    கடைசி கண்ணதாசனின் வரிகளும் வாழும் தம்பதியினரில் இதே கதிக்கு ஆளாகித் தவிக்கும் பலரின் நிலையையும் தெளிவாக்கும் வரிகள்..

    வாரிசுப் பிரச்சினைகொண்ட தம்பதியினர் பற்றிய அறிவியல் ரீதியிலான விளக்கம் அரைகுறைகளுக்குப் புரியுமோ?இந்த விஷயம் குறித்த தரம்தாழ்ந்த குணநலன்கள் கொண்ட பல சிறார்களுக்கு தேமொழி தனது கனிவான பார்வையில் விளைந்த எழுத்தால் இந்த வகுப்பறையிலே பாடம் நடத்தியது அவரின் உயர்ந்த குணநலனை எடுத்துக் காட்டியிருக்கிறது..

    தேமொழிக்கு, அவரின் தொடர்ந்த எழுத்து முயற்சிக்கு,மிக நீண்ட வரலாற்றைச் செய்தியாக்கித் தரும் ஆர்வத்துக்கு,என் நெஞ்சார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  27. ஆனந்த முருகன் லீட் ப்ரோக்ராமர் என்று ப்ரூவ் பண்ணியிருக்கிறார்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  28. உமா அவர்களின் மனநிறைவு தந்தது "மனநிறைவு".

    வாங்கோன்னா போங்கோன்னா போட்டு குடும்பத்தில் நடக்கும் தினசரி விஷயங்களை கோர்த்து,இடையில் கதைக்குள் ஒரு கதையை வைத்து ,ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஏதோ ஒரு வீட்டுக்குள் இருந்த உணர்வாகவே இருந்தது .

    ReplyDelete
  29. anne அவர்களின் படத்தை பார்த்துவிட்டு தேமொழி வரைந்த ஓவியம் என்று நினைத்தேன் .

    ஆனால் anne அவர்களின் கட்டுரையை படித்தபின் கட்டுரையையே ஓவியமாக வந்துள்ளதை உணர்ந்தேன் .

    British மக்களுக்கு அவர்களின் அரச குடும்பத்தின் மீது விசுவாசமும் மரியாதையையும் இருப்பதை உடன் வேலை செய்யும் ஆஸ்திரேலியர்களிடம் நான் பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
  30. மொத்தத்தில் இன்று
    என் ரத்தத்தின் ரத்தத்தின் கதை
    மூவுலகையும் ஆண்டகதை..
    நாளை நமதே..வெற்றி நமதே..

    ReplyDelete
  31. ஆலாசியம் அவர்களின் நீண்ட ஆக்கம் நிறைய விளக்கங்கள் தந்தது .

    ReplyDelete
  32. ஆனந்த முருகன் அவர்கள் சபரியை நினைவு படுத்தினார் .நன்றாக இருந்தது. இதனை நான் என் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன் .

    ReplyDelete
  33. தமிழ்விரும்பியின் ஆக்கம் குறித்து KMRKவின் கமெண்ட்டை ரிபீட் விட்டுக் கொண்டு

    படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இதே வேளையில்

    நேரமாகிவிட்டபடியால் இன்னும் பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவேண்டியிருக்கிறபடியால்

    நடைபெறவிருக்கின்ற
    வார இறுதித் தேர்தலிலே
    வாக்காளப் பெருங்குடிமக்கள் அனைவரையும்
    'வருக..வருக நல்லாதரவு தருக' என்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருகரங்களையும் கூப்பி வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..

    நன்றி..வணக்கம்.

    ReplyDelete
  34. வணக்கம் ஐயா,
    kmrk ஐயா அவர்களின் கட்டுரை நன்றாகயிருந்தது...
    //'கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்பது போல மின்சாரம் இருந்தால் இணையம் காணவில்லை,இணைய இணைப்பு இருந்தால் மின்சாரம் இல்லை//
    உண்மைதான்...ஒரு புறம் மின்சாரம் இல்லை;மறுபுறம் இணையமும் இல்லை...இதற்கெல்லாம் "சோலார் ஆக்டிவிட்டி" தான் காரணம் என்று சொல்கிறார்கள்...மின்சார தட்டுப்பாடுக்கு 'சூரிய ஆற்றல்' தான் சிறந்த தீர்வாக அமையும்;அதை முழுவீச்சில் செயல்படுத்த அரசுகள் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை...

    "ஸைடு பிஸினஸ்" செய்து எங்கள் உறவினர் ஒருவர் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்...நியாயமான முறையில் செய்யும் தொழிலின் மூலம் நாமும் நாடும் பயன்பெறலாம்...நான் இன்று உணர்ந்துக் கொண்ட பாடம் இது தான்...ஆமாம்,நீங்கள் ஏதேனும் "ஸைடு பிஸினஸ்" செய்யும் முனைப்பில் இன்றைய ஆக்கத்தினை தந்துள்ளீர்களோ?...ஹிஹிஹி...நன்றி ஐயா

    ReplyDelete
  35. ஆலாசியம் said...
    ஜாக் -அப் ஆ... இல்லை செமி - சப் ஆ....

    நங்கூரம் பாய்ந்ததா?

    பாய்ந்துவிட்டது ஆனால் இன்னும் sailing ஆகவில்லை .offshore oil field sea water ல் நுழைய shell கம்பனி இன்னும் அனுமதி தரவில்லை. மீட்டிங் மீட்டிங் மீட்டிங் என்று போய்க் கொண்டு இருக்கிறது ஆகையால்தான் காலையிலேயே வகுப்புக்கும் வரமுடியவில்லை

    ReplyDelete
  36. தேமொழி அவர்களின் ஆக்கம் இன்றும் அருமை...அறிந்திடாத தகவல்களை அழகாய் தந்துள்ளீர்கள்...
    //அரசிக்கு வந்தது கோபம். ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார். சாராவின் கணவர் நாட்டிற்காகவும்தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார். அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)//
    ம்...அதானே...இது என்ன அதிசயம்...தோழிக்கள் கதை என்றால் ஒரே மாதிரி நடக்கின்றதே!!!....அன்று நடந்தது இன்றும் நடந்திருக்கிறதே...இதற்காகவே 'சங்கரன்கோவிலில்' பிரச்சாரத்தில் இருக்கும் 'மைனர்' அவர்கள் 'ஃப்லைட்' பிடித்து வகுப்பறைக்கு ஓடி வந்துவிட போகிறார்,பாருங்க‌ள்...ஹிஹிஹி

    அர‌சி ஆன்னுக்கு நிக‌ழ்ந்த‌வை விதிப்ப‌ய‌ன் என்று தான் கொள்ள‌ முடியும்;அதை க‌ண்ண‌தாச‌னின் அருமையான‌ பாட‌ல் வ‌ரிக‌ளால் நிறைவு செய்துள்ளீர்க‌ள்...ந‌ல்ல‌ நிறைவான‌ ஆக்க‌ம்...ந‌ன்றி ச‌கோத‌ரி தேமொழி...

    ReplyDelete
  37. ஆலாசியம் அவர்களின் ஆக்கம் மிகவும் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனைகளை கொண்ட ஆக்கமாய் அமைந்து இன்றைய மாணவர் மலரை நிறைந்திருந்திட செய்தது...நல்ல பல கருத்துக்களைக் கொண்ட ஆக்கத்தினை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...

    ஆனந்தமுருகனின் ஆக்கம் நன்றாகயிருந்தது...நாரதர்,யமன்,கர்ணன் போர்ட்ஃபொலியோக்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தவை...

    ReplyDelete
  38. நான் பின்னூட்டம் இடும் சமயம் தேமொழியின் ஆக்கம் வலையேற்றப்பட்டிருக்கவில்லை. இப்போதுதான் மீண்டும் பார்த்தேன்.அரசி ஆன்
    தன்னுடைய தோழிக்குக்க்கொடுத்த இடமும்,பின்னர் அதனைப் பறித்ததும்
    தமிழ்நாட்டு அரசியலை நினைவு படுத்துகிறது.இதனைப்பொன்ற ஆkகங்களுக்கு கூகிள் ஆண்டவர் நல்ல துணை.நல்ல‌ தொகுப்பு.சுவாரஸ்யமான தமிழாக்கத்திற்கு
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  39. //ஆலாசியம் கட்டுரையை பத்தி ரொம்ப கேர்ஃபுல்லா விமர்சனம் பண்ணின KMRK
    தனுசு கவிதையிலே பெருசா கோட்டைவுட்டு முழுசாப் படிக்காம கமென்ட் அடிச்சு
    வெண்ணைக் கடைக் காரர் பேரு வெச்சுக் கூப்பிட்டதை உண்மையாக்குகிற முயற்சியிலே இப்படி இறங்கியிருந்திருக்க வேணாம்..//

    ஹிஹிஹி... உண்மையாகவே கொஞ்சம் அவசரத்தில் படித்ததுதான். இன்று அம்மாவின் திதி. அதற்காக அண்ணன் வீட்டில் கோவையில் உள்ளேன்.அவர்களுடன் கணினியைப் பகிர வேண்டிய சூழல்.

    கோவை வந்தும் ஐயாவை இம்முறை நேரில் சந்திக்க முடியவில்லை.மன்னிக்கவும் நாளை சதாப்தியில் காலை 7 மணிக்குக் கிளம்பிவிடுவேன்.

    ReplyDelete
  40. இன்றைய மாணவர் மலர், பல்சுவை மலராக மலர்ந்து மணம் வீசியது.
    திரு. கே.எம்.ஆர். அவர்களின் ஆக்கம், சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்கவும் தூண்டியது. தனுசு சாரின் கவிதை மிக அருமை.ரூபாய் நோட்டு கதை,மறைமுகமாக,நாம் செய்வது, நமக்கே திரும்ப வரும்' என்ற தத்துவத்தை நினைவு படுத்துவது போல் அமைந்திருந்தது. உமா அவர்களின் கதை, இன்றைய மாமியார்களின் நிதர்சன நிலை. வேலை செய்யச் சொன்னாலும் ப்ரச்னை.சொல்லாவிட்டாலும் தொல்லை. ஆனால் புரிந்துகொள்ளும் கணவர் கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
    தேமொழிக்கு ஒரு ஜே! அவர் ஒரு தகவல் களஞ்சியம். நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
    ஆலாசியம் அவர்களது பதிவு, அருமை. ஆயினும் ஒரு தகவல். அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி போன்றவை,மேல் பார்வைக்கு,அகப் பாடல் போலத் தெரியலாம்.ஆனால்,அவைகளில் மறைந்துள்ள பீஜ மந்திரங்கள்,யந்திரங்களைப் பற்றிய தகவல்கள், சாமானியர்களுக்குப் புரிவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும், உண்மையான மறைபொருள் வேறு.
    ஆனந்த முருகனின் ஆக்கமும் அருமை. நான் லேட்டா வகுப்புக்கு வந்தாலும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  41. நான் கூறிய அனைத்து செய்திகளையும் நன்கு அறிந்தவர் தஞ்சாவூரார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று ஆர்வத்துடன் காத்து இருந்தேன்.

    நல்ல அறிவுரையுடன் நிறுத்திக்கொண்டார். மேலதிகத் தகவலாக ஏதாவது சொல்லப் போய் he will let the cat out of the bag
    என்று சற்றே அஞ்சினேன். அவருடைய அனுபவத்தினால் சமாளித்துவிட்டார்.
    அதற்காக அவருக்கு சிறப்பு நன்றி.

    ReplyDelete
  42. minorwall said... பளிச்சென்று கண்ணில் படும் கண்ணதாசனின் வரிகள்
    "காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலேஅவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி ..."
    தவிர்த்திருந்திருக்கலாம்.

    நன்றி மைனர் அவர்களே. ஆமாம் உண்மைதான் .கவனக் குறைவுதான் .

    இந்த கவிதை எழுத எனக்கு பெரிதாக சிரமம் ஏதும் வரவில்லை .என் தாயும் தாரமும் என்னை மிகவும் தூக்கியே பிடிப்பார்கள் . உங்கள் தாயாரைப் பற்றி கவிதை எழுதுங்கள் என்று என் மனைவி சொல்ல ,வேண்டாம் வேண்டாம் உன் மனைவியைப் பற்றி எழுது என்று என் தாயார் சொல்ல ,பேசாமல் ரெண்டு பேரைப் பற்றியும் எழுதிடு அப்பா என்று என் மகள் சொல்ல சிதம்பரம் to பாண்டிச்சேரி செல்லும் போது காரிலேயே சொல்லிக் கொண்டு வந்தேன் சர சர வென வந்துக் கொண்டே இருந்தது அதை என் மகள் செல் போனில் ரெகார்ட் செய்தார் .அப்படி வந்ததுதான் இக் கவிதை .

    இன்னும் கொஞ்சம் நீளமாகவே வந்தது அனைத்தையும் நீக்கி விட்டுத்தான் அனுப்பினேன் .அடுத்த முறை தாங்கள் சொல்வதையும் கவனத்தில் கொள்கிறேன் .

    இதில் கடைசி வரியை மட்டும் வாத்தியார் அட்டகாசமாக மாற்றிவிட்டார் . நான் சொன்னது
    "இவள் எனக்கு முந்தானை தந்த தாரம் "என்று .அதைவிட வாத்தியாரின் வார்த்தை இன்னும் நச்சென்று அமைந்து விட்டது .

    ReplyDelete
  43. minorwall said...
    கிழிந்த நோட்டை (பால்கார)மைனர் தலையில் கட்டி அவர் வீட்டில் மனைவி கையில் அந்த நோட்டு மாட்டி கடைசியில் கிழிந்து போன நோட்டாய் மைனரை மாற்றி விடப் போகிறாரோ தனுசு என்று கொஞ்சம் பயந்துகொண்டே படித்தேன்..நல்ல வேளை..அப்படியெல்லாம் செய்யவில்லை..
    நல்ல கான்செப்ட்..விவரித்திருக்கும் இடங்களும் அருமை..நோட்டின் தொடர்ந்த ஃப்ளோ..கடைசியில் சொன்ன மெஸ்சேஜ்.என்று கலக்கியிருந்தார் தனுசு.

    kmr.krishnan said... ரூபாய் நோட்டின் பயணக் கதையும் சுவையானது. தனுசு எல்லாத் திறமைகளும் உடையவரே.

    ஆலாசியம் said...
    பணம் பற்றிய ஆக்கம் மனமெல்லாம் மணம் பரப்பியது நண்பரே!
    வாழ்த்துக்கள்.

    Parvathy Ramachandran said... தனுசு சாரின் கவிதை மிக அருமை.ரூபாய் நோட்டு கதை,மறைமுகமாக,நாம் செய்வது, நமக்கே திரும்ப வரும்' என்ற தத்துவத்தை நினைவு படுத்துவது போல் அமைந்திருந்தது.

    அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  44. //ஆமாம்,நீங்கள் ஏதேனும் "ஸைடு பிஸினஸ்" செய்யும் முனைப்பில் இன்றைய ஆக்கத்தினை தந்துள்ளீர்களோ?...ஹிஹிஹி...நன்றி ஐயா//

    இப்போது நான் ஒய்வு பெற்றவன்.நான் இப்போது செய்தால் அது சைடு பிஸினெஸ் ஆகுமா என்று புரியவில்லை.ஓய்வூதிய‌மும் ஊதியம்தானோ?
    எங்க‌ளுடைய ஒரு சேமநலநிதியை ஓய்வுதிய நிதியில் சேர்த்து அதனுடைய பயனையே ஓய்வூதியம் ஆக அளிப்பதால் ஊதியமாக அதனைக் கொள்ளலாகுமா?
    இதனைப்பற்றி தஞ்சாவூரார்தான் கூறமுடியும்.

    கொஞ்சம் அதிகமாக தான‌ தருமங்கள் செய்ய ஏதாவது அதிகம் சம்பாதிக்க எண்ணம் வந்துள்ளது. ஒரு இன்டெர்வ்யூ கூடப் போய் வந்தேன்.இன்னும் அவர்கள் கூப்பிடவில்லை. அது ஒரு கல்வி அமைப்பு. மேலாண்மைக் கல்வி.

    ஒருமுறை நந்தகுமாரும் மைனரும் ஏற்றுமதி இறக்குமதி பற்றி இங்கே சொன்னார்கள் விவரம் கேட்டதற்கு ஒன்றும் சொல்லாமல் ஓரம் கட்டிவிட்டார்கள்.

    'சைடு பிஸினெஸ் செய்தார்கள்' என்று சொன்னேனே தவிர, அது சரியா, தவறா என்ற கருத்து ஏதும் சொல்லவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ReplyDelete
  45. எனக்கு நீண்ட நாட்களாக ஆதி சங்கராச்சாரியார் அருளிய செளந்தர்ய லஹரி பாடல்களுக்கு விரிவான விளக்கவுரை எழுத வேண்டும் என்று ஆசை.. என் முயற்சிக்கு தங்களுடைய அபிராமி அந்தாதி விளக்கவுரைகள் உதவியாய் இருக்கும். என் அன்னை தேவி அபிராமி அருளால் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. என் கட்டுரையை மாணவர் மலரில் வெளியிட்ட வாத்தியாருக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  47. தனுசுவின் கவிதை மிகவும் அருமையாக இருந்தது. இரண்டு வெவ்வேறு பெண்களா? என்ன தனுசு இது? என்று திடுக்கிட்டு படித்துக்கொண்டே வந்து பின் ஒருவர் தாய் எனத் தெரிந்ததும் மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தோன்றியது. தாயும் தாரமும் என்றபின் அவர் இருவரையும் வர்ணிக்க தேர்வு செய்த வார்த்தைகள் இன்னமும் பொருள் பொதிந்ததாக தெரிந்தது. மற்றொருமுறை மனைவியையும் உங்கள் மகளையும் இது போல் ஒப்பிட்டு எழுதுங்களேன்.

    அரிசிக்கடையை விட்டு பணம் வெளியே கிளம்பியதுமே கதையின் ஓட்டம் பிடிபட்டு விட்டது. அதை எப்படி சொல்லப் போகிறார் ஆர்வத்துடன் அரிசிக் கடை -- வாடகை பணம் -- மளிகை சாமான் -- சரக்குலாரி சத்தம் -- பால்காரர் -- அரிசிக் கடை என பணத்துடன் நானும் பயணம் செய்தேன். ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக உருவகப் படுத்தியுள்ளார். ஆனால் கதையின் நீதி எனச் சொன்னது எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. நடக்குமோ இல்லையோ, இவர் சொவது போல் நடந்தால் இந்தியாவில் எவ்வளவோ சாதிக்கலாம்.

    ReplyDelete
  48. KMRK ஐயாவின் கதை நன்றாக இருந்தது. இதுபோன்று அலுவலத்திலேயே தொழில் செய்யும் இடத்தில் வியாபாரம் செய்தால் சுலபமாக வாடிக்கையாளர்களும் பணமும் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் மதிப்பும் மரியாதையும் கிடைப்பது சந்தேகம். சில சமயங்களில் நட்பும் காணாமல் போய்விடும்.

    சிலருக்கே வியாபாரத்தில் ஈடுபடும் மனப்பாங்கு இருக்கும். அது பாராட்டப்பட வேண்டியது. உடன் பணி செய்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாமல் வெளியில் செய்து கொண்டால் எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஐயா நன்கு படம் பிடித்துள்ளார்.

    ReplyDelete
  49. சென்றமுறை தனுசு மனைவியை மாணவி என்றுக் குறிப்பிட்டவுடன் உமாவுக்கு கதை சொல்ல ஒரு கரு கிடைத்துவிட்டது. " இந்த மனுஷருக்காகவாவது நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஆக வேண்டும்" என்று நினைக்கும் அன்பான மனைவியின் மனப்பாங்கை நன்றகப் புரிந்த கணவர்.

    ஆடுகிற மாட்டை ஆடிக் கறப்பது போல் மனைவியின் நற்குணத்தை அவருக்கே புரிய வைத்து, பொறுமையை கடைபிடிக்கச் சொல்லி பாடம் நடத்திவிட்டார். உமா கதையை சொன்ன விதம் எதார்த்தமாக இருந்தது... பாராட்டுகள்.

    ReplyDelete
  50. பொதுவாக மக்களை நெளிய வைக்கும் சங்கதியை கவனமாகாக் கையாண்டு ஆலாசியம் சொல்ல நினைத்ததை... அதை அவர் சொல்லியவிதத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. ஆலாசியம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக மாறாதது தமிழ் படிக்கும் மாணவர்களின் இழப்பு என்பது மட்டும்தான் எனக்கு நன்றாகப் புரிகிறது.

    ReplyDelete
  51. ஆனந்தமுருகன் தொகுப்பு நல்லதொரு சிரிப்பு
    Apsaras = Downloadable Viruses .....வன்மையாகக் கண்டிக்கிறேன்
    Narada = Data transfer & Yama = Reorganization & Downsizing Consultant & Karna = Contract programmer ...எனக்கு(ம்) மிகவும் பிடித்தது
    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ...
    Sakthi = power supply unit (PSU) in-charge
    இவங்க இல்லாட்டி ஒன்னுமே நடக்காதுங்க, மற்ற எல்லோரும் சுலபமா காணாம போய்டுவாங்க

    ReplyDelete
  52. //////minorwall said... ///////ஜப்பான்காரர் இதைப்படித்துவிட்டு சைடுபிஸினெஸில் வெற்றி அடையாதவனின் 'பெட்டைப் புலமபல்' என்று சொல்லக்கூடும்.சொன்னால் சொல்லட்டும்.///////

    இந்தளவுக்கு தரக்குறைவாக மைனர் யாரையும் எப்போதும் விமர்சிக்கமாட்டார் //////

    இதை ஆமோதிக்கிறேன். கைம்பெண்களை குறிக்கும் ஒரு வார்த்தை உபயோகத்தை நீங்கள் மறுத்து அதில் உங்களுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை என்று சொல்லிய பொழுது உங்கள் மீது மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. நீங்கள் விளையாட்டாக பேசி அடுத்தவர்களை வாரிவிடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    என் கட்டுரையின் வரலாற்றுப் பிழையை குறிப்பிட்டதற்கு நன்றி. அது கலாச்சார பிழையாகவும் போயிருக்கும். என்ன என் கணவர் மீதே அவதூறா? என்று அரசி ஆன் கொதித்தெழுந்து சாபம் விடாதவரை சரி.

    ReplyDelete
  53. என் கட்டுரையை பொறுமையாகப் படித்து பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.... நன்றி... நன்றி

    ReplyDelete
  54. ////kmr.krishnan said...
    ஆலாசியம் மிகவும் ஆழமான கருத்துகளை கூறியுள்ளார். கருத்துச்சொல்லும் அளவுக்கு தத்துவ விசாரமும் படிப்பும் இல்லாதவன் நான்.அவர் சொல்லியுள்ள செய்தியும் மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டியது.பள்ளி கல்லுரிகளில் அதில் வரும் சொற்களையெல்லாம் விளக்க ஆசிரியர்கள் படும்பாடு நான் அறிவேன். இங்கே ஏதாவ‌து சொல்லத் துவங்கி வாங்கிக்கட்டிக் கொள்வேனோ என்று பயமாக உள்ளது.ஆலாசியத்தின் கட்டுரையை முழுதும் பொறுமையுடன் படித்து மகிழ்ந்தேன் என்று மட்டும் கூறி அமைதி கொள்கிறேன்///

    தங்களின் பின்னூட்டம் என்னையும் மகிழச் செய்தது....:):)

    வெகுநேரம் யாருமே பின்னூட்டம் இல்லை என்ற உடன் நான் தான் சற்று துவண்டு போனேன்... இருந்தும் ஏதும் தவறாக எழுதி விட்டேனோ என்றும் கூட மீண்டும் ஏற்கனவே நாலைந்து முறைப் படித்தது போல்... வகுப்பறையிலே மூன்று நான்கு முறைப் படித்துப் பார்த்தேன்..



    சரி தலைப்பையும் பார்த்தேனா! வாத்தியார் வேறு இப்படி எதற்கும் ஜாக்கிரதையாக சொல்லி இருக்கிறாரோ! (சாரி சார்) என்று வேறு ஒரு குழப்பம்.... எப்படியோ நடப்பது நடக்கட்டும், நாம் நமக்குப் புரிந்ததை பகிர்ந்துக் கொண்டுள்ளோம், அப்படி அது தவறாக என்ன வழியில்லை என்றே இருந்தேன்.



    கோபாலன் சாரும் வந்த உடன் தான் கொஞ்சம் சாந்தமானேன். நன்றிகள் சார்,

    ReplyDelete
  55. ////Thanjavooraan said...
    இன்றும் எனக்கு வேலை அதிகம். பெருமைக்குச் சொல்லவில்லை. உண்மை. இருந்தாலும் வகுப்பறைப் பாடங்களை மேலோட்டமாவது ஒருமுறை பார்த்து விடுவது என் கடமை. அதன்படி இன்றைய பதிவுகளைப் பார்த்ததும் முதலில் என்னை இழுத்தது ஆலாசியம் அவர்களின் அன்னை பராசக்தி அபிராமி பற்றிய கட்டுரை, ////

    ஐயா! தங்களின் கருத்திற்கு பெரிதும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  56. //// Thanjavooraan said...
    அபிராமி அந்தாதி சாதாரண கவிதை அல்ல. பராசக்தியின் மூலமந்திரத்தை உச்சரிக்க உபதேசம் பெற்றுக் கொள்ளாதவர்கள் 'அபிராமி அந்தாதி'யைப் படித்தால் மூலமந்திரம் உச்சாடனம் செய்த பலன் உண்டு என்பர். படித்துப் பாருங்கள், சாதாரண கவிதையா அது? ஒரு பாட்டு எடுத்துக் காட்டு:

    உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை, ஒளிர் மதிச்செஞ்
    சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
    இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனி
    படையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!

    நூற்பயன் அனைவரும் அறிந்த பாடல்

    தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா
    மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமிலா
    இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!

    அபிராமி அந்தாதியைப் படித்து வாருங்கள். பலனைத் தெரிந்து கொள்ளுங்கள்.////



    அதன் அருமையை தார்ப்பரியம் இவைகளைப் பற்றிய ஒரு துளியைத் தெளித்து விட்டு ஆரம்பித்திருக்க வேண்டும்.... இன்னும் நீண்டுவிடுமோ என்று நேராக விசயத்திற்கு சென்றேன் அதை தங்களின் பின்னூட்டம் நேர் படுத்தி விட்டது.

    இந்த கருத்துக்களைப் பற்றிய தேடுதல் எது அகம் சார்ந்த பொருள் என்ற தேடுதலில் விழைந்தது.. அதுவும் எனது பழைய புதுக்கவிதையில் வந்தப் பின்னூட்டங்களில் இருந்து முளைத்த சிந்தனையின் பயனிது ஐயா!

    ReplyDelete
  57. /// thanusu said...

    ஆலாசியம் அவர்களின் நீண்ட ஆக்கம் நிறைய விளக்கங்கள் தந்தது .///

    மிக்க நன்றி நண்பரே!:):)

    ReplyDelete
  58. /// minorwall said...
    தமிழ்விரும்பியின் ஆக்கம் குறித்து KMRKவின் கமெண்ட்டை ரிபீட் விட்டுக் கொண்டு

    படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இதே வேளையில் ////

    மிக்க நன்றி மைனர்வாள்...:):)

    ReplyDelete
  59. ////R.Srishobana said...
    ஆலாசியம் அவர்களின் ஆக்கம் மிகவும் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனைகளை கொண்ட ஆக்கமாய் அமைந்து இன்றைய மாணவர் மலரை நிறைந்திருந்திட செய்தது...நல்ல பல கருத்துக்களைக் கொண்ட ஆக்கத்தினை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...////

    மிக்க நன்றி சகோதிரி...:):)

    ReplyDelete
  60. /////Parvathy Ramachandran said...
    இன்றைய மாணவர் மலர், பல்சுவை மலராக மலர்ந்து மணம் வீசியது.

    ஆலாசியம் அவர்களது பதிவு, அருமை. ஆயினும் ஒரு தகவல். அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி போன்றவை,மேல் பார்வைக்கு,அகப் பாடல் போலத் தெரியலாம்.ஆனால்,அவைகளில் மறைந்துள்ள பீஜ மந்திரங்கள்,யந்திரங்களைப் பற்றிய தகவல்கள், சாமானியர்களுக்குப் புரிவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும், உண்மையான மறைபொருள் வேறு.
    நான் லேட்டா வகுப்புக்கு வந்தாலும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி.////

    தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரியாரே! ஆமாம் அந்த மறை பொருளை தான் தேடி எனக்குப் புரிந்தவைகளை (சிற்றறிவுக்கு தெரிந்தவைகளை) வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்ள முயன்றுள்ளேன்...

    தங்களின் பாராட்டு என்னை இன்னும் எழுதச் செய்கிறது மீண்டும் நன்றிகள்.:):)..

    ReplyDelete
  61. ///sriganeshh said...
    எனக்கு நீண்ட நாட்களாக ஆதி சங்கராச்சாரியார் அருளிய செளந்தர்ய லஹரி பாடல்களுக்கு விரிவான விளக்கவுரை எழுத வேண்டும் என்று ஆசை.. என் முயற்சிக்கு தங்களுடைய அபிராமி அந்தாதி விளக்கவுரைகள் உதவியாய் இருக்கும். என் அன்னை தேவி அபிராமி அருளால் நிறைய எழுத வாழ்த்துக்கள்.////

    தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீகணேஷ் அவர்களே... தங்களின் விளக்க உரையை இங்கேயே வெளியிட்டு எங்களையும் இன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று வகுப்பறை சார்பாக உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  62. /// தேமொழி said...
    பொதுவாக மக்களை நெளிய வைக்கும் சங்கதியை கவனமாகாக் கையாண்டு ஆலாசியம் சொல்ல நினைத்ததை... அதை அவர் சொல்லியவிதத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. ஆலாசியம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக மாறாதது தமிழ் படிக்கும் மாணவர்களின் இழப்பு என்பது மட்டும்தான் எனக்கு நன்றாகப் புரிகிறது.///

    மிக்க நன்றிகள் சகோதிரியாரே! எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு... நான் ஏன்? தமிழாசிரியராக வில்லை என்று... இங்கும் கல்வி அமைச்சில் முயன்றுப் பார்த்தேன்... உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.... பத்து வருடங்களுக்கு பிறகு துறை மாறுவது வேண்டாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை... பொறியியல் துறையிலே தொடருங்கள் என்று கடிதம் அனுப்பினார்கள்.

    இருந்தும் எப்படியும் வேலை ஓய்வு பெற்றப் பிரகாது பகுதி நேர வேளையிலாவது சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தங்களின் பாராட்டிற்கு மீண்டும் நன்றி...

    ReplyDelete
  63. ஆலாச்சியத்தின் கட்டுரை பிரமாதம்.அவர் தந்த விளக்கங்கட்கான கேள்விகள் என்னை ஆக்கிரமித்ததுண்டு.சிறிது விளக்கம் கிடைத்தது.
    திரும்ப திரும்ப வாசிக்க மேலும் விளங்கும்.
    தம்பிக்கு நன்றிகள்.

    ///மாதர்தம் கொங்கைகள் எல்லாம் சிவலிங்கமாக.... பாரதி///
    இதற்கான பாரதி பாடலைத் தரவும்.

    ReplyDelete
  64. //// krishnar said...
    ஆலாச்சியத்தின் கட்டுரை பிரமாதம்.அவர் தந்த விளக்கங்கட்கான கேள்விகள் என்னை ஆக்கிரமித்ததுண்டு.சிறிது விளக்கம் கிடைத்தது.
    திரும்ப திரும்ப வாசிக்க மேலும் விளங்கும்.
    தம்பிக்கு நன்றிகள்.

    ///மாதர்தம் கொங்கைகள் எல்லாம் சிவலிங்கமாக.... பாரதி///
    இதற்கான பாரதி பாடலைத் தரவும்./////

    மிக்க நன்றி அண்ணா...
    .
    பாரதி அறுபத்தாறில் வரும் வரிகள் தாம் இவைகள் இதோ அப்பாடல் வரிகள்.

    ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
    அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
    சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
    சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
    மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும்
    மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ?
    காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
    கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும். 50

    கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
    கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
    மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி
    மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
    சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
    ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
    இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
    இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ? 51 .

    ReplyDelete
  65. என் ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றிகள் சார்!

    ReplyDelete
  66. கிருஷ்ணன் சாரின் ஆக்கங்களின் இடையே நகைச்சுவை இழையோடுவதைக்கவனித்திருக்கிறேன், இந்த ஆக்கமும் அப்படியே.

    ReplyDelete
  67. 'சகலகலா வல்லவன்'ஆக தனுசு முயற்சிக்கிறார் என்பது புரிகிறது. கவிதையின் கடைசி வரிகளைப்படித்ததும் மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து படித்தேன். அருமை!

    உங்களின் முதல் கதையும் அழகாக வந்திருக்கிறது.

    கதையின் மூலம் சொல்லும் நீதி இருக்கட்டும், நான் உங்களுக்குச் சொல்லவிரும்பும் அறிவுரை "பகலிலும் படுத்துறங்கி பேராசைகளை உள்ளடக்கிய கனவுகள் காண்பது நேர விரயத்தை ஏற்படுத்தும்".

    ReplyDelete
  68. தேமொழியின் கட்டுரை நிறைய தகவல்களை அறியத்தந்தது. பொறுமையுடன் படித்ததோடல்லாமல் மொழிபெயர்த்து எல்லாருக்கும் அறியத்தந்த முயற்சிக்குப்பாராட்டுக்கள்.

    ReplyDelete
  69. ஒரு சின்ன ரோஜா
    சுமந்திருக்குது இரு ரோஜா
    இவர் தான்
    ரோஜாவின் ராஜா .
    ++++++++++++++++++++++++++++++++++++++++++

    அதிசயத்திற்க்குள் ஓர்
    ஆண்டவன் இல்லம் -இது
    ஆண்டவன் ஆசை.

    ReplyDelete
  70. ஆலாசியத்தின் கட்டுரை வழக்கம்போல் வெயிட்டான விஷயங்களுடன். இந்தக்கோணத்தில் இதுவரை நான் சிந்தித்ததில்லை.

    கொஞ்சம் நீண்ட கட்டுரையாக இருந்தால் இரண்டு பகுதிகளாக எழுதுங்களேன், இது எனது வேண்டுகோள் மட்டுமே.

    ReplyDelete
  71. ஆனந்தமுருகனின் நகைச்சுவை நன்று.

    முருகனுக்கு எதுவும் அலாட் பண்ணலியா? ஏற்கனவே இப்படி ஒருதரம் பாரபட்சம் பார்த்துதான் கோபித்துக்கொண்டு பழனிக்குப் போனார். இப்படித் திரும்ப அவரின் கோபத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டிருப்பதை முருகபக்தை என்ற முறையில் வன்மையாகக்கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  72. வயதான காலத்தில் மனைவியின் ஆதங்கங்களை காது கொடுத்துக்கேட்க வேண்டும் என்று சொல்லும் உமாஜியின் கருத்தை நானும் கடைப்பிடிக்க விழைகிறேன்//

    ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும்!

    ReplyDelete
  73. நல்லவேளை!.... அப்போ என்னைப் படிக்காதவன்னு சொல்றேள் என்று பாயாமல் போனாள் மாமி... நல்ல மாமி :):)//

    ஆஹா நல்ல சான்ஸ் போச்சே! (மாமியின் மைண்ட்வாய்ஸ்)

    மிகவும் அருமை உமா... அசத்திட்டீங்க//

    பாராட்டுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  74. பலபிழைகளை தந்திருந்தாலும்...
    கண்ணதாசனார் என்பதில் பிழை வத்து
    பெரும் தவறு அனைவரும் பொறுத்து அருள வேண்டும்.//

    உங்க பரிட்சைத்தாளை மட்டும் நான் திருத்தியிருந்தேன்னா, ஒவ்வொரு தவறுக்கும் ஒரு மதிப்பெண் குறைத்து நெகடிவ்ல மொத்த மதிப்பெண் குடுத்திருப்பேன். அது என்ன பிழை வத்து / வாத்து அப்படின்னு.

    ReplyDelete
  75. மாமியார் என்பவர் மருமகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டுமென்பதை நயம்பட தெரிவித்திருக்கிறார். நடை சீராக அமைந்திருக்கிறது. //

    தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  76. தேமொழி said...
    தனுசுவின் கவிதை மிகவும் அருமையாக இருந்தது. இரண்டு வெவ்வேறு பெண்களா? என்ன தனுசு இது? என்று திடுக்கிட்டு .....



    இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் படிப்பவரிடம் . இரண்டு காதலியா?, அல்லது இரண்டு பெண்களா? படிக்கும் போது அவர்களுக்கு ஒரு குழப்பம் வரவேண்டும் ,என்று எதிர்பார்த்தேன் .உங்களுக்கு அது நடந்திருக்கிறது .

    ReplyDelete
  77. பதார்த்தம் பண்ணத் தெரியாத மருமகளை
    சுட்டிய உமாஅவர்களின் கதைஎதார்த்தம்.//

    தெளிவான நீரோடையாக வசனம், எழுத்து நடை அமைந்திருந்தது..
    ப்ராப்பர் ரி -என்ட்ரிக்கு வாழ்த்துக்கள்..//

    தங்களின் பாராட்டுக்கு நன்றி மைனர்!

    இன்னும் இருபது வருடம் கழித்து தான் எப்படி இருக்கவேண்டும் என்று உமா ரிகர்சல் பார்த்து எழுதியதாகத் தோன்றுகிறது..//

    அதை நாங்க ஒரு பத்துவருடம் முன்னாடியே ரிகர்சல் பார்த்திருக்கோமில்ல, ஹி ஹி!

    ReplyDelete
  78. உமா அவர்களின் மனநிறைவு தந்தது "மனநிறைவு".//

    பாராட்டுக்கு நன்றி தனுசு அவர்களே!

    ReplyDelete
  79. நடைபெறவிருக்கின்ற
    வார இறுதித் தேர்தலிலே
    வாக்காளப் பெருங்குடிமக்கள் அனைவரையும்
    'வருக..வருக நல்லாதரவு தருக' என்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருகரங்களையும் கூப்பி வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..//

    இந்த 'வருங்கால' அரசியல்வியாதிகள் தொல்லை தாங்கமுடியல நாராயணா!

    ReplyDelete
  80. உமா அவர்களின் கதை, இன்றைய மாமியார்களின் நிதர்சன நிலை.//

    நன்றி பார்வதி அவர்களே!

    ReplyDelete
  81. சென்றமுறை தனுசு மனைவியை மாணவி என்றுக் குறிப்பிட்டவுடன் உமாவுக்கு கதை சொல்ல ஒரு கரு கிடைத்துவிட்டது.//

    அதற்கும் முன்னாலேயே யோசித்துவைத்திருந்த கதை, எழுத இப்போதுதான் வேளை வந்தது.

    உமா கதையை சொன்ன விதம் எதார்த்தமாக இருந்தது... பாராட்டுகள்//

    நன்றி தேமொழி!

    ReplyDelete
  82. தேமொழி said...மற்றொருமுறை மனைவியையும் உங்கள் மகளையும் ஒப்பிட்டு எழுதுங்களேன் .



    கண்டிப்பாக எழுதுகிறேன் .

    ReplyDelete
  83. //// Uma said...
    ஆலாசியத்தின் கட்டுரை வழக்கம்போல் வெயிட்டான விஷயங்களுடன். இந்தக்கோணத்தில் இதுவரை நான் சிந்தித்ததில்லை.

    கொஞ்சம் நீண்ட கட்டுரையாக இருந்தால் இரண்டு பகுதிகளாக எழுதுங்களேன், இது எனது வேண்டுகோள் மட்டுமே.////

    சரி அப்படியே செய்கிறேன், நன்றி உமா...

    ReplyDelete
  84. //// Uma said...
    பலபிழைகளை தந்திருந்தாலும்...
    கண்ணதாசனார் என்பதில் பிழை வத்து
    பெரும் தவறு அனைவரும் பொறுத்து அருள வேண்டும்.//

    உங்க பரிட்சைத்தாளை மட்டும் நான் திருத்தியிருந்தேன்னா, ஒவ்வொரு தவறுக்கும் ஒரு மதிப்பெண் குறைத்து நெகடிவ்ல மொத்த மதிப்பெண் குடுத்திருப்பேன். அது என்ன பிழை வத்து / வாத்து அப்படின்னு.////



    ஹா..ஹா...ஹா.. நாங்க பேச்சிலே வாத்தியாரை அசத்தி வைதிருந்தோமில்ல...

    அதுக்கும் எங்க தமிழாசிரியரே ஒரு நல்லக் காரணம் சொல்லி என்னை காப்பாற்றி விட்டிருவார்...

    நல்ல வேலை நீங்கள் தமிழாசிரியராக வரவில்லை..

    கொஞ்சம் இருங்க இதிலேயும் ஏதாவது பிழை இருக்கிறதா என்றுப் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com