20.1.12

என்றும் புதியது எது?


 என்றும் புதியது எது?

இந்தக் கேள்விக்கு, கவியரசர் கண்ணதாசன், எம்பெருமான் முருகனைப் பற்றிப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது என்கிறார்.

அவர் எழுதி, கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் குரலில் ஒலிக்கும் பாடல் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். வரிகளைப் படித்தும், பாடலைக் கேட்டும்
மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------


 பாடலென்றும் புதியது

புதியது பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உன்னைப் பெற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உன்னைப் பெற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது


திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது, தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது: மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது  என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்

-----------------------------------------
படம்: கந்தன் கருணை (1967)
இயக்குனர்: ஏ.பி. நாகராஜன்
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்:  கே.பி.சுந்தராம்பாள்

--------------------------------------------
கானொளி : http://youtu.be/eVTf_BSYZqo

வாழ்க வளமுடன்!

17 comments:

  1. அருமையான பாடல் ஐயா!கே பி எஸ் அவர்களின் பாடல்களை நேரிலேயே பலமுறை கேட்டுள்ளேன். ஒரு முறை தஞ்சையில் அவருடைய கச்சேரியில் குடித்து இருந்த சிலர், சினிமாப் பாட்டுப் பாடச் சொல்லி ரகளை செய்தனர்.பொறுமையாக அவர்களுக்கு அறிவுரை சொல்லித் தான் இறைவன் பாட்டுக்களாகத்தான் பாடமுடியும் என்றும், குறிப்பாகத் 'திருப்புகழ் தான் பாடுவேன்'என்று எவ்வளவோ கூறிப் பார்த்தார். அவர்கள் கேட்காமல் மேடையை நோக்கிப் பாய்ந்தனர்.அமைதியாக மேடையை விட்டு இறங்கிச் சென்றார். காரில் சென்று அமர்ந்து கொண்டு, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவரைக் கூப்பிட்டுத் தான் பெற்ற முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு அகன்றார்.

    திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்தில் தங்கித் தன் இறுதி நாட்களைக் கழித்த கிட்டப்பாவின் மூத்த தாரத்தினை மாதம் ஒரு முறை சென்று பார்த்து
    அவர்களுக்குப் பண உதவி செய்து வந்தார் கேபிஎஸ்!( கானக்குயில் எஸ்ஜி கிட்டப்பாவின் இளைய தாரம் கேபிஎஸ்)

    இந்திய சினிமா சரித்திரத்திலேயே 6 இலக்க சம்பளம் பெற்ற முதல் கலைஞர் கேபிஎஸ் தான்!

    ReplyDelete
  2. ///திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது, தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது: மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்///

    உண்மைதான் ஐயா, பாடலில் அந்த வரிகள் வரும்பொழுது இசையும் அருமைதான். நான் சிறுவயதில் இந்தக் கணீர் குரல் அம்மையார்தான் ஒளவையார் என நினைத்துக் கொண்டிருந்தேன். பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    அருமையான பாடல் ஐயா!கே பி எஸ் அவர்களின் பாடல்களை நேரிலேயே பலமுறை கேட்டுள்ளேன். ஒரு முறை தஞ்சையில் அவருடைய கச்சேரியில் குடித்து இருந்த சிலர், சினிமாப் பாட்டுப் பாடச் சொல்லி ரகளை செய்தனர்.பொறுமையாக அவர்களுக்கு அறிவுரை சொல்லித் தான் இறைவன் பாட்டுக்களாகத்தான் பாடமுடியும் என்றும், குறிப்பாகத் 'திருப்புகழ் தான் பாடுவேன்'என்று எவ்வளவோ கூறிப் பார்த்தார். அவர்கள் கேட்காமல் மேடையை நோக்கிப் பாய்ந்தனர்.அமைதியாக மேடையை விட்டு இறங்கிச் சென்றார். காரில் சென்று அமர்ந்து கொண்டு, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவரைக் கூப்பிட்டுத் தான் பெற்ற முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு அகன்றார்.
    திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்தில் தங்கித் தன் இறுதி நாட்களைக் கழித்த கிட்டப்பாவின் மூத்த தாரத்தினை மாதம் ஒரு முறை சென்று பார்த்து
    அவர்களுக்குப் பண உதவி செய்து வந்தார் கேபிஎஸ்!( கானக்குயில் எஸ்ஜி கிட்டப்பாவின் இளைய தாரம் கேபிஎஸ்)
    இந்திய சினிமா சரித்திரத்திலேயே 6 இலக்க சம்பளம் பெற்ற முதல் கலைஞர் கேபிஎஸ் தான்!///////

    எனக்கும் அவருடைய பாடலை, அவர் பாட, நேரில் கேட்ட அனுபவம் உண்டு. அவரைப் பற்றிய முழுக்கட்டுரை ஒன்றை எனது பல்சுவைப் பதிவில் முன்பு வலையேற்றியுள்ளேன். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  4. /////Blogger தேமொழி said...
    ///திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது, தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது: மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்///
    உண்மைதான் ஐயா, பாடலில் அந்த வரிகள் வரும்பொழுது இசையும் அருமைதான். நான் சிறுவயதில் இந்தக் கணீர் குரல் அம்மையார்தான் ஒளவையார் என நினைத்துக் கொண்டிருந்தேன். பாடலை நினைவூட்டியதற்கு நன்றி./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. முத்தான பாடல் இது
    முத்தமிழ் கடவுளின் அழகது...
    முத்தையா சிந்தையில் ஊறியத்தேனது
    சுப்பையா வாத்தியாரின் வலைப்பதிவிலே
    இப்போதது ஆறெனவே ஓடுது...
    அப்பன் ஆறுமுகன் புகழது
    எப்பொதும் என்னுயிர் புகலுது!

    அற்புத பாடலை காணொளியிலும் கண்டுகளித்தேன்..
    நன்றிகள் ஐயா!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  6. காலை வணக்கம் ஐயா..

    இத்தகைய பாடல்கள் எல்லாம் தொலைக்காட்சியில் என்றாவது ஒரு நாள் தான் காண முடியும். காணொளியில் இருப்பதால் பார்க்கமுடிகிறது.

    நன்றி.

    -Sathish K

    ReplyDelete
  7. முருகப் பெருமானைப் பாடாத கவிஞர் இல்லை. முருகன் என்றால் அழகு என்கிறார் திரு வி.க. அந்த முருகனைப் பாடிப் பாடி முக்தி பெற்ற அருணகிரியும் வாழ் நாளின் முற்பகுதியில் தவறுகளைச் செய்து முருகனால் ஆட்கொள்ளப் பட்டவர். நெற்றியில் திருநீறும், கம்பீரமான தோற்றமும், சொல்லில் திண்மையும் படைத்த கவிஞர் கண்ணதாசன் சிலகாலம் "வனவாசம்" செய்ய நேர்ந்தது. அந்நாட்களில் அவர் நா உதிர்த்த கடுமையான விமர்சனங்களுக்கு ஈடு செய்யும் பொருட்டே முருகப் பெருமானும், கண்ண பெருமானும் அந்த மகா கவிஞனை வாய் ஓயாமல் தங்களைப் பிற்காலத்தில் பாடவைத்தார்கள் போலும். கவிஞரின் அற்புதமான பாடல்வரிகள், கானக்குயில் கே.பி.எஸ்.சின் தனித்துவம் வாய்ந்த குரலில் பாடுகையில் உருகாதார் யார்? நினைவு படுத்திய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. Thank you for reminding the wonderful song.

    ReplyDelete
  9. /////Blogger தமிழ் விரும்பி said...
    முத்தான பாடல் இது
    முத்தமிழ் கடவுளின் அழகது...
    முத்தையா சிந்தையில் ஊறியத்தேனது
    சுப்பையா வாத்தியாரின் வலைப்பதிவிலே
    இப்போதது ஆறெனவே ஓடுது...
    அப்பன் ஆறுமுகன் புகழது
    எப்பொதும் என்னுயிர் புகலுது!
    அற்புத பாடலை காணொளியிலும் கண்டுகளித்தேன்..
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. /////Blogger Sathish K said...
    காலை வணக்கம் ஐயா..
    இத்தகைய பாடல்கள் எல்லாம் தொலைக்காட்சியில் என்றாவது ஒரு நாள் தான் காண முடியும். காணொளியில் இருப்பதால் பார்க்கமுடிகிறது.
    நன்றி.
    -Sathish K////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. Blogger Thanjavooraan said...
    முருகப் பெருமானைப் பாடாத கவிஞர் இல்லை. முருகன் என்றால் அழகு என்கிறார் திரு வி.க. அந்த முருகனைப் பாடிப் பாடி முக்தி பெற்ற அருணகிரியும் வாழ் நாளின் முற்பகுதியில் தவறுகளைச் செய்து முருகனால் ஆட்கொள்ளப் பட்டவர். நெற்றியில் திருநீறும், கம்பீரமான தோற்றமும், சொல்லில் திண்மையும் படைத்த கவிஞர் கண்ணதாசன் சிலகாலம் "வனவாசம்" செய்ய நேர்ந்தது. அந்நாட்களில் அவர் நா உதிர்த்த கடுமையான விமர்சனங்களுக்கு ஈடு செய்யும் பொருட்டே முருகப் பெருமானும், கண்ண பெருமானும் அந்த மகா கவிஞனை வாய் ஓயாமல் தங்களைப் பிற்காலத்தில் பாடவைத்தார்கள் போலும். கவிஞரின் அற்புதமான பாடல்வரிகள், கானக்குயில் கே.பி.எஸ்.சின் தனித்துவம் வாய்ந்த குரலில் பாடுகையில் உருகாதார் யார்? நினைவு படுத்திய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி./////

    நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா! தமிழ்க் கடவுள் முருகன். அவனைப் பாடாத கவிஞர் இல்லை! உங்களுடைய நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger C Jeevanantham said...
    Thank you for reminding the wonderful song.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. சென்ற வாரங்களிலே ஒரு நாளில் அய்யரின் பின்னூட்டத்திற்குப் பதிலாக பழனியப்பனும் இங்கே வகுப்பறைக்கு வந்து செல்கிறான் என்று நீங்கள் பதில் அளித்து இருந்தீர்கள்..அதன்பின் அவனையே படமாக்கி ஒரு நாள் ஒரு பதிவே இட்டீர்கள்..பின்பொருநாள் அய்யர் எனக்கென ஒரு முருகன் பாடலை சுழலவிட்டார்..அன்றே இந்த கந்தன் கருணை திரைப்படத்தை டிவி யில் யு ட்யூபிலே பார்த்தேன்..தெளிவான பிரிண்ட்..மிக நேர்த்தியான காட்சியமைப்பு..வசனம் . .நடிப்பு என்று நத்திகனையே பக்திப் பூர்வத்தில் திளைக்கவைத்துவிடும் ஒரு அற்புதமான படப்பிடிப்பாக உணர்ந்தேன்..அப்போதைய திரைப்படத் துறையினரின் சிரத்தை தெளிவாகத் தெரிந்தது..
    முருகன் 'சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா? 'என்று மரக் கிளை மேலிருந்து கேட்டு
    அவ்வைக்கு அருள் புரிந்து இந்தப் பாடலைக் கேட்டு ரசிப்பது கொள்ளை அழகு..
    என்னதான் இருந்தாலும் எனது லக்கினாதிபதி அவனல்லவா?

    ReplyDelete
  14. ///அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது. முதலில் முடிவது முடிவில் முதலதுமுதலில் முடிவது முடிவில் முதலதுமூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது ///

    முருகா.. முருகா..

    கண்ணதாசன் வாழ்ந்த
    காலத்தில் நாம் வாழ்வதே பெருமகிழ்ச்சி

    தமிழை முதன்மைபடுத்தி
    தம் இந்த பாடலில் சித்தாந்தஉட்பொருள்

    சொன்ன கவிஞரை பாராட்ட ஒரு
    "சொட்டு" போட்டு வணங்குகிறோம்

    பொருள் நிறைந்த பாடல் திரு
    அருள் நிறைந்திருப்பதால் புதியதே..

    முக்தி நிலையை முன்வைத்து
    முத்தான எழுத்துக்களால் அப்பன்

    முருக பெருமானை பாடியருளியதும்
    முன்னதாக ரசிக்க தந்தவாத்தியாருக்கும்

    முதலில் சொல்கிறோம் நன்றிகள்..
    முடிவில் தொடர்வதால் இன்னொரு

    நன்றி... நன்றி.. நன்றி..

    ReplyDelete
  15. /////Blogger minorwall said...
    சென்ற வாரங்களிலே ஒரு நாளில் அய்யரின் பின்னூட்டத்திற்குப் பதிலாக பழனியப்பனும் இங்கே வகுப்பறைக்கு வந்து செல்கிறான் என்று நீங்கள் பதில் அளித்து இருந்தீர்கள்..அதன்பின் அவனையே படமாக்கி ஒரு நாள் ஒரு பதிவே இட்டீர்கள்..பின்பொருநாள் அய்யர் எனக்கென ஒரு முருகன் பாடலை சுழலவிட்டார்..அன்றே இந்த கந்தன் கருணை திரைப்படத்தை டிவி யில் யு ட்யூபிலே பார்த்தேன்..தெளிவான பிரிண்ட்..மிக நேர்த்தியான காட்சியமைப்பு..வசனம் . .நடிப்பு என்று நத்திகனையே பக்திப் பூர்வத்தில் திளைக்கவைத்துவிடும் ஒரு அற்புதமான படப்பிடிப்பாக உணர்ந்தேன்..அப்போதைய திரைப்படத் துறையினரின் சிரத்தை தெளிவாகத் தெரிந்தது..
    முருகன் 'சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா? 'என்று மரக் கிளை மேலிருந்து கேட்டு
    அவ்வைக்கு அருள் புரிந்து இந்தப் பாடலைக் கேட்டு ரசிப்பது கொள்ளை அழகு..
    என்னதான் இருந்தாலும் எனது லக்கினாதிபதி அவனல்லவா?//////

    அந்தப் படம் பல மேதைகள் சேர்ந்து உருவாக்கியபடம். ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவன், கவியரசர் கண்ணதாசன் போன்று பலர் ஒன்று சேர்ந்து சிந்தனைக்கு விருந்தாக எடுத்த படம். பின் சிறப்பிற்குக் கேட்க வேண்டுமா? உங்களின் பின்னூட்டம் மனதை நெகிழ வைக்கிறது. நன்றி மைனர்!

    ReplyDelete
  16. ////iyer said...
    ///அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது. முதலில் முடிவது முடிவில் முதலதுமுதலில் முடிவது முடிவில் முதலதுமூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது ///
    முருகா.. முருகா..
    கண்ணதாசன் வாழ்ந்த
    காலத்தில் நாம் வாழ்வதே பெருமகிழ்ச்சி
    தமிழை முதன்மைபடுத்தி
    தம் இந்த பாடலில் சித்தாந்தஉட்பொருள்
    சொன்ன கவிஞரை பாராட்ட ஒரு
    "சொட்டு" போட்டு வணங்குகிறோம்
    பொருள் நிறைந்த பாடல் திரு
    அருள் நிறைந்திருப்பதால் புதியதே..
    முக்தி நிலையை முன்வைத்து
    முத்தான எழுத்துக்களால் அப்பன்
    முருக பெருமானை பாடியருளியதும்
    முன்னதாக ரசிக்க தந்தவாத்தியாருக்கும்
    முதலில் சொல்கிறோம் நன்றிகள்..
    முடிவில் தொடர்வதால் இன்னொரு
    நன்றி... நன்றி.. நன்றி../////

    உங்களின் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது. நன்றி விசுவநாதன்.!

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com