19.8.11

அண்ணனும் தங்கையும் ஆட்சி செய்யும் இடங்கள்!

-------------------------------------------------------------------------------------------
அண்ணனும் தங்கையும் ஆட்சி செய்யும் இடங்கள்!

பக்தி மலர்


தென்மதுரையை ஒரு 'கன்னி' (கண்ணி) அருள் ஆட்சி செய்கிறாள். வடமதுரையை அவளுடைய சகோதரன் கண்ணன் அருள்  ஆட்சி செய்கிறான்.

தென்மதுரைக் 'கன்னி’' யார்?‌

மீனாட்சிதான் தென்மதுரைக் 'கன்னி!.மீன் போன்ற கண்களை
உடையவள் அல்லவா மீனாட்சி!அதனால் தான்  கூறினேன் 'கன்னி'
என்று! கன்னியின் சகோதரன் கண்ணன்.அவன் அருளாட்சி செய்யும்
இடமான மதுரா அவனைப்போலவே இனிமையான இடம்.அங்கே
எல்லாமுமே இனிமையாக இருக்குமாம் பக்தர்களுக்கு. அவன்  பெயரை உச்சரித்தாலே நாக்கில் தேனின் சுவைதெரியும்.அவன் குழலின் ஒலியோ இனிமையிலும் இனிமைகாதுகளுக்கு!.அவன் அலங்காரமோ கண்க‌ளுக்கு இனிமை!அவனைச் சுற்றியுள்ள சுகந்தமோ நாசிக்கு  இனிமை!அவ‌ன் மேனி எழிலோ இத‌ய‌ம் க‌வ‌ரும் இனிமை!

அங்கே எதுதான் இனிமையில்லை,இது இனிமை அது இனிமை என்று த‌னித்த‌னியாக‌க் கூறுவ‌த‌ற்கு?ச‌க‌ல‌மும்  இனிமைதான் அங்கே!

இந்த‌க் க‌ருத்தை அழ‌காக‌க் கூறினார் ஸ்ரீவ‌ல்ல‌பாச்சாரியார் என்ற‌ 13ம் நூற்றாண்டுக் க‌விஞ‌ர்.அவ‌ர் க‌விஞ‌ர்  ம‌ட்டும்தானா?ப‌க்தி மார்க‌த்தைப் ப‌ர‌ப்பிய‌ ம‌கானும் ஆவார்.  அவ‌ர் எழுதிய‌ ம‌துராஷ்ட‌க‌ம் ஓர் அழ‌கும்,  எளிமையும் இனிமையும் இய‌ல்பா‌க‌ அமைந்த‌ அற்புத‌ ஸ்தோத்திர‌ம்.

அத‌ன் வ‌ட‌மொழி வ‌டிவ‌த்தையும்,நான் அறிந்த‌வ‌ரை த‌மிழ் ஆக்க‌த்தையும் கொடுத்துள்ளேன்.
=======================================================
ம‌துராஷ்ட‌க‌ம்(ஸ்ரீ வ‌ல்ல‌பாச்சாரியார்(1478 கி பி) இய‌ற்றிய‌து
=======================================================
1.அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்    
    ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம்
 ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்
    ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்


(அவ‌ன் உத‌டுக‌ள் இனிமை;அவ‌ன் முக‌ம் இனிமை;அவ‌ன் க‌ண்க‌ள் இனிமை;அவ‌ன் புன்ன‌கை இனிமை;அவ‌ன்இத‌ய‌ம் இனிமை;அவ‌ன்
க‌ம்பீர‌ந‌டை இனிமை;ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே இனிமை )

2.வசனம் மதுரம் சரிதம் மதுரம்
    வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம்
 சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் பேச்சு இனிமை;அவன் சரித்திரம் இனிமை;
அவன் ஆடை/ஆபரணங்கள் இனிமை;அவன் நடை இனிமை‌
அவன் அசைவு இனிமை;அவன் பரந்த தன்மை இனிமை ‌
ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே இனிமை )

3வேணுர்மதுரோ ரேணுர்மதுர:
    பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
 ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் புல்லாங்குழல்(ஓசை) இனிமை; அவன் பாததூளி இனிமை;அவன் கரங்கள் இனிமை;அவன் பாதம்  இனிமை;அவன் ஆடும் நடனம் இனிமை;அவன் நட்பு இனிமை;ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே இனிமை )

4கீதம் மதுரம் பீதம் மதுரம்
    புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
 ரூபம் மதுரம் திலகம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் இசைப்பாடல் இனிமை;அவன் அருந்தும் பானம் இனிமை;அவன் உண்ணும் உணவு இனிமை;அவன் உறங்குவதும் இனிமை;அவன் உருவ அழகு இனிமை;அவன் நெற்றிப் பொட்டு இனிமை;ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே  இனிமை )

5.கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
  வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் செயல்கள் இனிமை;அவன் வெற்றி இனிமை;அவன் கவ‌ர்தல்   இனிமை;அவன் காதல் லீலைகள்  இனிமை;அவன் அன்பளிப்புக்கள் இனிமை;அவன் முகவெட்டு இனிமை;மதுராநாயகனின் அனைத்துமே இனிமை!)

6.குஞ்சா மதுரா மாலா மதுரா
     யமுனா மதுரா வீசீ மதுரா
 சலிலம் மதுரம் கமலம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் குஞ்சலம் இனிமை;அவன் மலர் மாலை இனிமை;யமுனாநதி இனிமை;நதியின் அலைகள் இனிமை;நதியின் நன்னீர் இனிமை;தாமரைமலர் இனிமை;மதுராநாயகனின் அனைத்துமே இனிமை,இனிமை!)

7.கோபி மதுரா லீலா மதுரா
      யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
 த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் கோபியர் இனிமை;அவன் விளையாட்டுக்கள் இனிமை;அவன் சந்திப்பு இனிமை;அவன் மீட்பு  இனிமை;அவன் ஓரக்கண் பார்வை இனிமை;அவன் நாசூக்கு இனிமை;மதுராநாயகனின் அனைத்துமே இனிமை!)

8.கோபா மதுரா காவோ மதுரா
      யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர்மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
      மதுராதிபதேரகிலம் மதுரம்

(அவ‌ன் கோப‌ ந‌ண்ப‌ர்க‌ள் இனிமை;அவ‌ன் ப‌சுக்க‌ள் இனிமை; அவ‌ன் தார்க்கோல் இனிமை;அவ‌ன்  உருவாக்கிய‌வை இனிமை;அவ‌ன் அழிப்ப‌தும் இனிமை;அவ‌ன் அடைந்த‌வை அனைத்தும் இனிமை; மதுராநாயகனின் அனைத்துமே இனிமை!)
--------------------------------------------------------------------
அஷ்டகம் என்பது எட்டு பத்தியுள்ள கவிதை அமைப்பு. எல்லா தெய்வங்கள் மீதும் பல அஷ்டகங்கள் உள்ளன. எம் எஸ் அம்மா அவர்கள் மிக இனிமையாக மேற்படி மதுராஷ்டகத்தைப் பாடியுள்ளார்கள். யூ ட்யூப், இன்னும் பல தளங்களில் இலவசமாகக் கேட்கலாம்.யூ ட்யூப் செர்ச்சில் மதுராஸ்டகம் எம் எஸ் என்று கொடுங்கள்.

பி கு: இந்த‌க் க‌விதையை மொழி பெய‌ர்ப்ப‌து மிகக்க‌‌டின‌ம்.என் மொழி பெயர்ப்பில் த‌வ‌றுக‌ள் இருக்க‌லாம்.

பெரியவர்கள் மன்னிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அறிமுகம் செய்ய எடுத்த முயற்சியே. இது

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
கே முத்துராம‌கிருஷ்ண‌ன்,லால்குடி
முகாம்:இலண்டன் மாநகரம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
மதுரை அரசாளும் மீனாட்சி

மதுரை அரசாளும் மீனாட்சி
    மாநகர் காஞ்சியிலே காமாட்சி


தில்லையில் அவள் பெயர் சிவகாமி
    திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
     அன்னை அவள் அல்லால் ஏது கதி?


(மதுரை அரசாளும் மீனாட்சி)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
    சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே
    வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே

(மதுரை அரசாளும் மீனாட்சி)

திருவேற்காட்டினிலே கருமாரி
    தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
    சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
    சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி

(மதுரை அரசாளும் மீனாட்சி)


 திருமலை தென்குமரி என்னும் திரைப்படத்தில் ஒலிக்கும் பாடல் இது.
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடலின் வரிகளை எழுதியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடி மகிழ்விப்பவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், LR.ஈஸ்வரி, விஜயா

அன்னையின் 12 திருப்பெயர்களையும், அவள் அந்தப் பெயரில் உறையும் இடங்களையும் பாடலாசிரியர் ஒரே பாடலில் கொண்டுவந்தார் அல்லவா - அதுதான் இந்தப்பாடலின் சிறப்பு

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24 comments:

  1. மதுராபுரி மன்னனும் மங்கையர் கரசியாம்
    மதுரை ஸ்ரீ மீனாட்சி இவர்களைப் பற்றிய
    மதுரமான மந்திரங்கள் தாங்கியப் பகுதி.

    மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, மொழியாக்கம் என்பர் மொழியியலாளர்கள். திருவாளர் கே.எம்.ஆர்.கே அவர்கள் கூறியதை வைத்து இதை
    மொழிபெயர்பல்ல மொழியாக்கம் (கருத்தை மனதில் வாங்கிக் கொண்டு சொந்த நடையில் தருவது) என்றேக் கொள்தல் சாலப் பொருந்தும் என்று நம்புகிறேன்.

    "தென்மதுரைக் 'கன்னி’' யார்?‌

    மீனாட்சிதான் தென்மதுரைக் 'கன்னி!.மீன் போன்ற கண்களை
    உடையவள் அல்லவா மீனாட்சி!அதனால் தான் கூறினேன் 'கன்னி'
    என்று! கன்னியின் சகோதரன் கண்ணன்"

    இதிலே தான் சற்று மாறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது...
    கன்னி என்றால் குமரி, இளமை என்ற பொருளோடு இன்னும் பலவும். அதிலும் கன்னி நாடு என்பதை கூட பாண்டிய நாடு என்றும் அறிகிறோம். கண்ணி என்பது பூமாலை, அதிலே காட்டப்படும் அடுக்குக்களையும் கூறுவர் இன்னும் சொல்வதென்றால் கயிறு என்றுக் கூட அர்த்தம் கொள்வர். ஆனால் மீன் போன்றக் கண்கொண்டதால் கன்னி என்பது சற்று வித்தியாசமாக உள்ளது.

    பாண்டிய நாட்டில் மீன்கொடி கொண்டு ஆட்சி செய்த தாலும் (அதாவது மீனாட்சி) அங்கே சிவனோடு கூடி ஆட்சி செய்பவள் அந்த சக்தி அவள் மீனாட்சியே என்பதையும் விளக்கி இருக்கிறீர்கள், நன்றி.

    மொத்தத்தில் மதுராஷ்டகம் அருமை... வேணுகானமாய், அன்னையின் கருணையில் விழைந்த அருளாய் ஹிருதயம் நிரம்பியது.
    நன்றி, நன்றி, நன்றி...

    ReplyDelete
  2. "அவன் கரங்கள் இன்மை;"

    தட்டச்சு செய்ததில் பிழைகள் ஐயா! (வயதுள்ள எனக்கே இப்படி வருகிறது!...)

    தயவுசெய்து சரி செய்துவிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  3. மனதை நெகிழ வைக்கும் பாடல்கள்..இரு நல்ல மனிதர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. ஆட்சி என்றதும் அரசியலில் மட்டுமல்ல
    ஆட்சி தானிருக்குமிடத்திலும் என

    மலர்ந்த இன்றைய பக்தி மலருக்கு
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

    வழக்கம் போல்
    வரும் வள்ளுவ சிந்தனை...

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ்வார்

    ReplyDelete
  5. பொருத்தமாக தங்கையின் பாடலையும் சேர்த்துக் கொடுத்து மேலும் இனிமை ஆக்கி உள்ளீர்கள் ஐயா!இனி எல்லாமே இனிமைதான்!

    ReplyDelete
  6. கண் என்ற பெயர்ச் சொல்லை வைத்துக் 'கண்ணன்' ஆண் பாலாகவும் 'கண்ணி'யைப் பெண் பாலாகவும் வைத்து எழுதியிருந்தேன்.
    மீனாட்சி என்பதற்கு மீன் போன்ற கண்களை உடையவள் என்று 'கேட்டு' வளர்ந்தவன் நான்.மீன்+அக்ஷி=மீனாக்ஷி‌ என்று பெரிய‌வ‌ர்க‌ள் சொல்லக் கேட்டுள்ளேன்.ச‌ரியோ த‌வ‌றோ தெரிய‌வில்லை.

    ஐயாவின் 'எடிடி'ங்கில் சிறிது 'கன்னி, கண்ணி' மாற்றம் ஏற்பட்டுள்ளது.'இன்மை'என்ப‌தை இனிமையாக‌ மாற்ற‌ச் சொல்லியும் ஐயாவுக்கு ஒரு த‌னி மின்னஞ்ச‌ல் அனுப்பி இருந்தேன். ஐயா‌வுக்கு ஏற்ப‌ட்ட‌
    சூழ‌லால் அவ‌ர்க‌ள் அந்த‌ அஞ்ச‌லை க‌வ‌னிக்க‌வில்லை என்று தோன்றுகிற‌து.

    "த‌மிழ் விரும்பி எவ்வ‌ள‌வு த‌வ‌று இருக்கிற‌தோ அவ்வ‌ள‌வுக்கு ச‌ன்மான‌த்தைக் குறைத்துக் கொண்டு மீதியை அனுப்பி வைக்க‌வும்."(சும்ம‌னாச்சுக்கும் திருவிளையாட‌ல் நாகேஷ் ஜோக். அந்த‌ ஜோக் கூட‌ ம‌துரைக் கோவிலில் ந‌ட‌ந்த‌துதானே!?)

    ReplyDelete
  7. ஆசானே!
    வணக்கம் வந்தனம் நமஸ்காரம்.

    ஸ்ரீ முத்து ஐயா அவர்கள் கூறியபடி அன்னை மீனாட்சி மதுரையை ஆள்வது போல, மீனாட்சி அன்னையின் அண்ணன் மலையாள தேசம் ஆன குருவாயுரிலும், ஸ்ரீ அனந்த பத்மநாபனாக திருவனந்தபுரதிலையும், ஆந்திர தேசம் ஆன திருப்பதியில்
    ஸ்ரீ வேங்கடசலபதியாகவிம் இன்னும் சொல்லுவதற்கு எண்ணற்ற புண்ணிய தேசத்தில் இருந்து பக்தருக்கு அருள் புரிகின்றார் .

    ReplyDelete
  8. அருமை அருமை அழகான கவிதை & உரை thanks for both respected sri K.M.R.K and our vaddiyar iyya

    ReplyDelete
  9. இரண்டையும் படித்து விட்டு பக்தி பரவசம் ஆனோம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுராஷ்டகத்தை இதற்கு முன் படித்திருக்கிறேன். அதன் அர்த்தம் தெரியாமல். இதன் அர்த்தம் புரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஸ்ரீ கிருஷ்னர் சம்பந்தப் பட்ட அனைத்தும் இனிமையானதுதான்.

    ReplyDelete
  10. பத்து நாட்கள் இடைவெளி விட்டமையால் கே.எம்.ஆர். அதனை ஈடுகட்டும் விதத்தில் கலக்குகிறார். தொடரட்டும் பணி.

    ReplyDelete
  11. //////////Blogger தமிழ் விரும்பி said...
    மதுராபுரி மன்னனும் மங்கையர் கரசியாம்
    மதுரை ஸ்ரீ மீனாட்சி இவர்களைப் பற்றிய
    மதுரமான மந்திரங்கள் தாங்கியப் பகுதி.
    மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, மொழியாக்கம் என்பர் மொழியியலாளர்கள். திருவாளர் கே.எம்.ஆர்.கே
    அவர்கள் கூறியதை வைத்து இதை
    மொழிபெயர்பல்ல மொழியாக்கம் (கருத்தை மனதில் வாங்கிக் கொண்டு சொந்த நடையில் தருவது) என்றே
    கொள்தல் சாலப் பொருந்தும் என்று நம்புகிறேன்.
    "தென்மதுரைக் 'கன்னி’' யார்?‌
    மீனாட்சிதான் தென்மதுரைக் 'கன்னி!.மீன் போன்ற கண்களை
    உடையவள் அல்லவா மீனாட்சி!அதனால் தான் கூறினேன் 'கன்னி' என்று! கன்னியின் சகோதரன் கண்ணன்"
    இதிலே தான் சற்று மாறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது...
    கன்னி என்றால் குமரி, இளமை என்ற பொருளோடு இன்னும் பலவும். அதிலும் கன்னி நாடு என்பதை கூட
    பாண்டிய நாடு என்றும் அறிகிறோம். கண்ணி என்பது பூமாலை, அதிலே காட்டப்படும் அடுக்குக்களையும் கூறுவர்
    இன்னும் சொல்வதென்றால் கயிறு என்றுக் கூட அர்த்தம் கொள்வர். ஆனால் மீன் போன்றக் கண்கொண்டதால் கன்னி என்பது சற்று வித்தியாசமாக உள்ளது.
    பாண்டிய நாட்டில் மீன்கொடி கொண்டு ஆட்சி செய்த தாலும் (அதாவது மீனாட்சி) அங்கே சிவனோடு கூடி ஆட்சி செய்பவள் அந்த சக்தி அவள் மீனாட்சியே என்பதையும் விளக்கி இருக்கிறீர்கள், நன்றி.
    மொத்தத்தில் மதுராஷ்டகம் அருமை... வேணுகானமாய், அன்னையின் கருணையில் விழைந்த அருளாய் ஹிருதயம் நிரம்பியது.
    நன்றி, நன்றி, நன்றி...//////

    அங்கயற்கன்னி, என்னும் பெயரில் மீனாட்சி அவதாரம் எடுத்த இடம் மதுரை. ஸ்தல புராணத்தை வேறு ஒரு நாள் பதிவிடுகிறேன்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ///////Blogger தமிழ் விரும்பி said...
    "அவன் கரங்கள் இன்மை;"
    தட்டச்சு செய்ததில் பிழைகள் ஐயா! (வயதுள்ள எனக்கே இப்படி வருகிறது!...)
    தயவுசெய்து சரி செய்துவிடுங்கள். நன்றி.//////

    சரி செய்துவிட்டேன் நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger செங்கோவி said...
    மனதை நெகிழ வைக்கும் பாடல்கள்..இரு நல்ல மனிதர்களுக்கும் நன்றி./////

    நல்லது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி செங்கோவி!

    ReplyDelete
  14. ////////Blogger iyer said...
    ஆட்சி என்றதும் அரசியலில் மட்டுமல்ல
    ஆட்சி தானிருக்குமிடத்திலும் என
    மலர்ந்த இன்றைய பக்தி மலருக்கு
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
    வழக்கம் போல்
    வரும் வள்ளுவ சிந்தனை...
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ்வார்//////

    நல்லது. நீடு வாழுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  15. /////Blogger hemvasu said...
    பொருத்தமாக தங்கையின் பாடலையும் சேர்த்துக் கொடுத்து மேலும் இனிமை ஆக்கி உள்ளீர்கள் ஐயா!இனி எல்லாமே இனிமைதான்!//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. //////Blogger kmr.krishnan said...
    கண் என்ற பெயர்ச் சொல்லை வைத்துக் 'கண்ணன்' ஆண் பாலாகவும் 'கண்ணி'யைப் பெண் பாலாகவும் வைத்து எழுதியிருந்தேன்.
    மீனாட்சி என்பதற்கு மீன் போன்ற கண்களை உடையவள் என்று 'கேட்டு' வளர்ந்தவன் நான்.மீன்+அக்ஷி=மீனாக்ஷி‌ என்று பெரிய‌வ‌ர்க‌ள் சொல்லக் கேட்டுள்ளேன்.ச‌ரியோ த‌வ‌றோ தெரிய‌வில்லை.
    ஐயாவின் 'எடிடி'ங்கில் சிறிது 'கன்னி, கண்ணி' மாற்றம் ஏற்பட்டுள்ளது.'இன்மை'என்ப‌தை இனிமையாக‌ மாற்ற‌ச் சொல்லியும் ஐயாவுக்கு ஒரு த‌னி மின்னஞ்ச‌ல் அனுப்பி இருந்தேன். ஐயா‌வுக்கு ஏற்ப‌ட்ட‌ சூழ‌லால் அவ‌ர்க‌ள் அந்த‌ அஞ்ச‌லை க‌வ‌னிக்க‌வில்லை என்று தோன்றுகிற‌து.
    "த‌மிழ் விரும்பி எவ்வ‌ள‌வு த‌வ‌று இருக்கிற‌தோ அவ்வ‌ள‌வுக்கு ச‌ன்மான‌த்தைக் குறைத்துக் கொண்டு மீதியை அனுப்பி வைக்க‌வும்."(சும்ம‌னாச்சுக்கும் திருவிளையாட‌ல் நாகேஷ் ஜோக். அந்த‌ ஜோக் கூட‌ ம‌துரைக் கோவிலில் ந‌ட‌ந்த‌துதானே !?)//////

    இப்போது சரியாகிவிட்டது கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. //////Blogger kannan said...
    ஆசானே!
    வணக்கம் வந்தனம் நமஸ்காரம்.
    ஸ்ரீ முத்து ஐயா அவர்கள் கூறியபடி அன்னை மீனாட்சி மதுரையை ஆள்வது போல, மீனாட்சி அன்னையின் அண்ணன் மலையாள தேசம் ஆன குருவாயுரிலும், ஸ்ரீ அனந்த பத்மநாபனாக திருவனந்தபுரத்திலும், ஆந்திர தேசம் ஆன திருப்பதியில் ஸ்ரீ வேங்கடசலபதியாகவும் இன்னும் சொல்லுவதற்கு எண்ணற்ற புண்ணிய தேசத்தில் இருந்து பக்தருக்கு அருள் புரிகின்றார்////////

    அதனால்தான் பாரத தேசத்தைப் புண்ணியபூமி என்கிறோம். நன்றி கண்ணன்!

    ReplyDelete
  18. //////Blogger RMURUGARAJAN said...
    அருமை அருமை அழகான கவிதை & உரை thanks for both respected sri K.M.R.K and our vaddiyar iyya/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger ananth said...
    இரண்டையும் படித்து விட்டு பக்தி பரவசம் ஆனோம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுராஷ்டகத்தை

    இதற்கு முன் படித்திருக்கிறேன். அதன் அர்த்தம் தெரியாமல். இதன் அர்த்தம் புரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஸ்ரீ கிருஷ்னர் சம்பந்தப் பட்ட அனைத்தும் இனிமையானதுதான் .//////

    ஆமாம். அதில் சந்தேகத்திற்கும் வாதத்திற்கும் இடமில்லை. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  20. //////Blogger Thanjavooraan said...
    பத்து நாட்கள் இடைவெளி விட்டமையால் கே.எம்.ஆர். அதனை ஈடுகட்டும் விதத்தில் கலக்குகிறார்.
    தொடரட்டும் பணி.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  21. தமிழகத்தில் திருச்சில் ஸ்ரீரெங்கநாதர்,
    சென்னை திருவல்லி கேணியில்
    ஸ்ரீ பார்த்த சாரதியாகவும்,
    ஸ்ரீ வில்லி புத்தூரில் ஸ்ரீமண்நாராயணன் ஆகவும்,
    ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்
    ஸ்ரீ மகா விஷ்ணு ஆகவும், தஞ்சை மாவட்டத்தில் ஸ்ரீ ஒப்பிலியப்பராகவிம்,
    சென்னை தியாகராய நகரில் ஸ்ரீ வேங்கடாசலபதியாகவிம் , கர்நாடகாவில் உள்ள உடுப்பில்
    ஸ்ரீ உன்னி கண்ணனாகவும், கும்பகோணத்தில் கோவிந்தனாகவிம், மஹாராஷ்ட்ராவில்
    ( திருப்பத்தில் போல அமைப்பு உள்ள குட்டி திருப்பதி ) பாலாஜி பூரில்
    ஸ்ரீ பாலாஜியாகவிம் ,
    மும்பை மாட்டுங்காவில் கொட்சு குருவாயுரப்பனாகவிம், கோல்ஹாபூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண நாகவிம், (கண்டு மனம் உருகி தரிசிக்க பத்ரினாதர் அழைக்காத புண்ணிய ஸ்தலம்). பத்ரிநாத்தில் ஸ்ரீ பத்ரி நாராயணன் ஆகவும் அடியார்களுக்கு அருள் புரிகின்றார்.


    இருந்த இடத்தில் இருந்து கொண்டு முன்னாடி நேரில் சென்று மனம் உருகி பிராத்தனை செய்த புண்ணிய ஸ்தலத்தை முடிந்த வரைக்கும் நினைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த வாத்தியாருக்கு பல கோடிநன்றிகள்.
    --

    ReplyDelete
  22. ஐயா!

    மதுரை அழகர் கோவிலில்
    அண்ணன் ஸ்ரீ கள்ளழகர் பார்வையில் ஸ்ரீமீனாட்சி அம்மன்,
    சமய புரத்தில் ஸ்ரீ மாரி அம்மன், கன்னியாகுமரியில் பகவதியாகவிம்,
    நெல்லையில் காந்திமதி ஆகவும் , சங்கரன் கோவிலில் கோமதி அம்மனாகவிம்
    திருவனந்தபுரத்தில்
    ஸ்ரீ ஆட்டுகால் பகவதியாகவிம்,
    திரு வல்லா ஸ்தலத்தில்
    ஸ்ரீ பகவதியாகவிம்,
    சோட்டானி கரையில் ஸ்ரீ சோட்டானி கரை பகவதியாகவிம்,
    மண்டை காட்டில்
    ஸ்ரீ மண்டை காடு பகவதியாகவிம்,
    மும்பையில் ஸ்ரீ மகாலட்சுமி ஆகவும், பரச்சிநிக்கடவுல் சகோதரன்
    ஸ்ரீ முத்தப்பன் ( விஷ்ணு) துணையுடன் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் ஆகவும் இன்னும் ஏகபட்ட இடங்களில் ஸ்ரீ பார்வதி அருள் புரிகின்றாள்.

    ReplyDelete
  23. ////"த‌மிழ் விரும்பி எவ்வ‌ள‌வு த‌வ‌று இருக்கிற‌தோ அவ்வ‌ள‌வுக்கு ச‌ன்மான‌த்தைக் குறைத்துக் கொண்டு மீதியை அனுப்பி வைக்க‌வும்."(சும்ம‌னாச்சுக்கும் திருவிளையாட‌ல் நாகேஷ் ஜோக். அந்த‌ ஜோக் கூட‌ ம‌துரைக் கோவிலில் ந‌ட‌ந்த‌துதானே!?)////

    ஹா,ஹா, ஹா ....

    "பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்!
    குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்!
    இதில் நீர் எந்த வகை என்று உமக்கேத் தெரியும்..."

    என்ற இந்த வசனங்களிலிருந்து நல்லவேளை தப்பித்தேன் சார்.....

    ஆலாசியம் என்றால் மதுரை என்றப் பொருளும் உண்டு அந்த சிவனாரின் பெயரே எனது பெயரும் என்று அவரிடம் எனக்கு ஒரு தனிப் பிரியமும் உண்டு.
    நன்றிகள் சார்.

    ReplyDelete
  24. வணக்கம் ஐயா இன்றுதான் உங்கள் பள்ளியில் புதிய
    மாணவியாகச் சேர்ந்துள்ளேன் .மிகவும் பயனுள்ள
    ஆக்கங்களை அருமையாக சித்தரித்து வெளியிடும்
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும்
    தெரிவிப்பதில் நான் மிகவும் பெருமைகொள்கின்றேன் .
    உங்களைப் போன்ற தேர்ச்சிபெற்ற பெரியவர்களின்
    ஆசியைப் பெறுவதும் ஒருவகையில் எமக்கும் நன்மையே.
    சமயக் கருத்துகளை அதிகம் விருப்பும் இந்த அம்பாளடியாள்
    அன்னையின் அருளால் கவிதைகளையும் பாடல்களையும்
    எழுதிவருகின்றாள் .என் ஆக்கங்களைக்காண சந்தர்ப்பம்
    கிட்டும்போது என் தளத்திற்கு வாருங்கள் என்று அன்போடு
    அழைக்கின்றேன் .அதோடு youtube ல் amma amma kannaki amma
    என்று கொடுத்தால் அதில் என் பாடல்கள் உள்ளன .இதையும்
    கேட்க்க சந்தர்ப்பம் கிட்டினால்க் கேட்டுவிட்டு உங்கள் பொன்னான
    கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள் .மிக்க நன்றி ஐயா தங்களின்
    பகிர்வுகளுக்கு .மீண்டும் அடுத்த ஆக்கத்தில் சந்திக்கின்றேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com