13.7.11

குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்?

இளம்பெண் ஒருத்தி கவலை தோய்ந்த முகத்துடன், தன் மருத்துவரிடம் சென்றாள். அவள் நேரம், அன்று அவர் ஃப்ரீயாக இருந்தார். சென்றவள் பரபரப்புடன் தன் பிரச்சினையைச் சொன்னாள்:

“டாக்டர், நான் ஒரு சீரியசான பிராப்ளத்தில் இருக்கிறேன். உங்கள் உதவி தேவை”

மருத்துவர் இன்முகத்துடன் சொன்னார்,” என்னவென்று சொல்லுங்கள். சரி பண்ணிவிடலாம்.”

“என்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது. நான் மறுபடியும் கர்ப்பம் தரித்துள்ளேன். குறைந்த இடைவெளியில் மீண்டும் ஒரு குழந்தை எனக்கு வேண்டாம்”

“சரி, என்ன செய்யலாம் சொல்லுங்கள்?”

“உண்டாகியிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்துவிட வேண்டும். சிரமம் இல்லாமல் அதைச் செய்து முடிக்க நீங்கள்தான் உதவ வேண்டும்”

சற்று யோசித்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார்.  “உங்கள் பிரச்சினை தீர இன்னும் ஒரு வழி உள்ளது. அதில் உங்கள் உடம்பிற்கு அபாயம் எதுவும் ஏற்பட சான்ஸில்லை!”

அவள் புன்னகை செய்தாள். மருத்துவர் ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இப்போது உண்டானது.

அவர் தொடர்ந்து சொன்னார்.  “ இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் உங்களால் ஒன்றாக வளர்க்க முடியாது என்னும் சூழ்நிலையில், கையில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுவோம். அடுத்த குழந்தை பிறப்பதற்குள் உங்களுக்கு சற்று ஓய்வும் கிடைக்கும். கொல்வது என்று முடிவிற்கு வந்துவிட்டபின் எந்தக் குழந்தையைக் கொன்றால் என்ன? கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதன் மூலம், கருக்கலைப்பில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை, அபாயத்தை நீங்கள் தவிர்க்கலாம். யோசித்துப் பாருங்கள்”

கலவரம் அடைந்த அப்பெண் மெல்லிய குரலில் சொன்னாள்.” இல்லை டாக்டர். அது கொடுமையானது. அத்துடன் கைக்குழந்தையைக் கொல்வது பெரும் குற்றமாகிவிடுமே!”

“நானும் ஒப்புக்கொள்கிறேன். அது உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று சொன்ன மருத்துவர், தான் உண்மை நிலையை அவளுக்கு உணர்த்திவிட்டதாக எண்ணினார்.

வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும், கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும் - இரண்டும் ஒன்றுதான். இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டிலும் குற்றத்தின் அளவு ஒன்றுதான் என்பதை அப்பெண்மணி உணர்ந்தாள்!

மருத்துவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு அவள் எழுந்து சென்று விட்டாள்.

இப்போது அவள் மனம் தெளிவடைந்திருந்தது!
-------------------------------------------------------------------------
- இது இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடைய கைங்கர்யம்
--------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்







வாழ்க வளமுடன்!

11 comments:

  1. நல்ல பதிவு.
    சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. அன்புடன் வணக்கம்
    நிதர்சனமான உண்மை.!!! ஆனால் யாரும் சிந்திப்பதில்லை. கண்ணுக்கு தெரியாமல் இருபது தானே
    அழித்தால் என்ன ? என்ற மனோபாவம்?? ?சிந்திக்க வைத்துவிட்டீர்கள்..
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மிகவும் அற்புதமான விஷயத்தை
    எழுதியுள்ளார்கள்.

    இறைவனின் ரகசியத்தை அறியாது
    நிறைவாக பகுத்தறிகிறோம் என்றே எண்ணி
    கருவறையிலே கருவறுக்க வேண்டிய அப்பெணிற்கு
    அருவருப்பான அச்செயலை மறுதளித்து மனமாற்றிய
    மருத்துவரை எப்படிப் பாராட்டுவது!

    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. அற்புதம்..

    மருத்துவம் உயிர்காக்கும் தொழில் அல்லவா ?

    அந்தப் பெண்ணிற்கு மிக நாசூக்காகவும்,
    நெற்றிப் பொட்டில் அடித்தாற் போலவும் பதில் தந்த அந்த புண்ணிய ஆத்மாவை
    ( டாக்டரை ) வணங்குகிறேன்.

    ReplyDelete
  5. அந்தத் தாய்க்கு மருத்துவர் கொடுத்தது அதிர்ச்சி வைத்தியம். சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையைப் பார்க்கும் எவருக்கும் அந்த சின்னஞ்சிறிய மலர் இந்த பூவுலகில் பிறந்து வாழ்ந்து மகிழ்ந்து இருப்பதற்காக இறைவனால் அனுப்பப் பட்டது. அதன் உள் இருக்கும் ஜீவன் தன்னுடையது அல்ல, உடல் மட்டும் தன்னால் உருவாக்கப்பட்டது என்பதை உணர்ந்தால் இதுபோன்ற சுயநல எண்ணம் தோன்றாது. கரு தரிப்பதற்கு முன்பு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டியது தானே! அதற்கு ஜீவன் வந்து கருவறையில் வளரத் தொடங்கியதும் சுயநலம் எப்படியெல்லாம் கொலை பாதகத்துக்குத் துணிந்து விடுகிறது. ரயிலில் பயணம் செய்யும்போது யாரோ ஒருவருடைய பிஞ்சு குழந்தை கையைக் காலை அசைத்து விளையாடிக்கொண்டிருக்கும் போதே அதைத் தூக்கிக் கொஞ்ச துடிக்கும் மனம் எல்லோருக்கும் உண்டு. அப்படியிருக்கும்போது தன் உடலில் வளரும் மலரைக் கிள்ளி எறிய எப்படி மனம் வந்தது? அனைவரும் படித்து உணர வேண்டிய கருத்து.

    ReplyDelete
  6. பிறர் அறியாமல் மறைவில் செய்துவிட்டால் குற்றம் இல்லை என்று எண்ணியே மனமறிந்து குற்றம் புரிகிறது மானுட வர்க்கம். அந்த மனோபாவத்திற்கு மருத்துவர் சொன்ன தீர்வு நல்ல மரண அடி. தாங்கள் ரசித்ததை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளும் உங்கள் பரந்த உள்ளத்தினை
    வணங்குகிறேன்.


    தன்மகவு என்று இரு பெண்கள் போட்டியிட்ட போது, மகவை இரு கூறாக்கி ஆளுக்குப் பாதி அளிப்போம் என்று தீர்ப்புச்சொன்ன அரசனின் சாமர்த்தியம் மருத்துவரிடமும் உள்ளது. உண்மைத்தாய் முதலில் கதறிக் கொண்டு 'குழந்தையை அவளே வைத்துக்கொள்ளட்டும், கொல்ல வேண்டாம்' என்று ஒப்புக்கொண்டாளாம்!

    ReplyDelete
  7. எல்லோரும் ஒரு பட்சமாக பேசுவதால் நான் பெண்ணிர்க்காக கமன்டறேன்.

    கஷ்டப்படுபவருக்குத் தான் வலி என்னவென்று தெரியும் மருத்துவருக்கு என்ன தெரியும்? மருத்துவம் மட்டும் தான் தெரியும்.

    ஒரு படத்தில் கவுன்டமணி சொல்லுவார், பெட்ரமாஸ் லைட்டேத் தன் வேண்டுமா?
    கூடைவெச்சிகிட்டு இருக்கரவங்களுக்கெல்லாம் பெட்ரமாஸ் லைட் தற்றதில்லை அன்று, ஏனோ அந்த நகைச்சுவை ஞபகம் வருகின்றது.

    ReplyDelete
  8. //“என்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது. நான் மறுபடியும் கர்ப்பம் தரித்துள்ளேன். குறைந்த இடைவெளியில் மீண்டும் ஒரு குழந்தை எனக்கு வேண்டாம்”//

    எத்துனை தொலைனோக்கு...
    தன் வயிர் எரிந்தாலும் பரவாயில்லை பிள்ளை நலமுடன் வாழ வேண்டி வந்தவளுக்கு இது தேவை தான்.
    தான் வயிர் காய்ந்தாலும் பிள்ளை வயிர் பட்டினிப்போடத அன்னையர் பிறந்த பூமியில் வந்தவளோ!எதனால் இதை செய்யதுனிந்தால் என்று அய்யா சொல்லவில்லை பாருங்கள்.

    வெரும் சுகத்திற்கு மட்டும் தான் பெண் என என்னும் ஆண்களுடய சமூகதில் அவளின் வருத்தத்தை எவனரிவான். மருத்துவன் மட்டும் என்ன விதிவிள‌க்கா?

    பைபிளில் யேசு, உங்களில் எவரேனும் தவரே என்னாதவரிருப்பின் அவளை கல்லல் அடிக்கலாம்.. அவளோ தனது எச்சிலால் எனது பாதங்களை தூய்மையாக்கினால் உங்களனைவரில்... என வரும் வசனங்கள் ஞபகத்திற்கு வருகின்ற‌து.
    எந்த ஆடவரும் கல்லால் அடிக்கவில்லையாம், நமது மூதாதையினரின் என்னங்கள் அவ்வளவு நல்லவைகளாம்.

    வந்ததை கவனிப்பதா, இனி வரப்போவதை கவனிப்பதா?
    முன்யோஜனை இன்றி அவளை கர்பவதியாக்கிய கனவனை நினைப்பதா? நல்வாழ்வு வேண்டி ஒருவனை கரம்பிடித்த பெண் எத்துனை சந்திக்கவேண்டியுள்ளது பாருங்கள் அய்யா?

    ReplyDelete
  9. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு தி.கு 467
    இக்குறளை நினைவு கொள்ளுவதற்கு பொருத்தமான பதிவு

    ReplyDelete
  10. குழந்தை ஒரு
    குடும்பத்தின் புது வரவு..

    பதவிகளை பிரித்துக் கொடுத்து
    பங்கு போடவே பலர் குடும்பங்களை

    பெரிதாக்கி..பிரச்சனைகளில் இருந்தபடி
    பெரியவராக்கி கொண்டிருக்கின்றார்கள்

    கொல்லச் சொல்வதும் பாவம்; அப்படி
    மெல்லச் சொல்வதும் பாவம்..

    முன்யோசனை இல்லாத செயல்களே
    முன்வந்த பின்னர் தீங்கிற்குதுணையாக

    மற்றவர்களை அழைப்பது அவமானம்
    மறுப்பதும் மறைப்பதும் கோழைதனம்

    ஆசைகளை கட்டுப்படுத்தி
    அன்போடு அளவோடு வாழந்தால்

    வருந்தி அலைய வேண்டியதில்லை
    வருத்தம்சுமந்து வாழ தேவையில்லை

    வழக்கம் போல் இன்றைய
    வகுப்பில் வலம் வரும் குறள்..

    மிகுதியான் மிக்கவை செய்தாரை
    தாம் தம் தகுதியால் வென்று விடல்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com