1.7.11

வலம் வந்து எதைத் தேடச்சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன்?

------------------------------------------------------------------------------------
 வலம் வந்து எதைத் தேடச்சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரைக் கவியரசர் கண்ணதாசனின் பாடல் ஒன்று நிறைக்கிறது. படித்து மகிழுங்கள் என்னவொரு சொல் விளையாட்டு? அதையும் பாருங்கள்!!!!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
    கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
     ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்

 
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
      மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
      கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
     அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
     சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
     தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
     கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
      வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
      வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!

(கோதையின் திருப்பாவை)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

9 comments:

  1. அந்தக் கண்ணனுக்கே தாசன் ஆனவர் அல்லவா!
    அருமையானப் பாடல் நான் வாய்ப்புக் கிடைக்கும்
    போதெல்லாம் இந்தப் பாடலை உரக்கப் பாடுவது வழக்கம்.
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. இன்னும் ஒரு அற்புதச் செய்தி இம் மன்றத்திலே இயம்ப விழைகிறேன்

    கவியரசாய் இன்றும் என்றும் நிற்கும் இந்த அனுபவக் கவி தனது

    பதினெட்டாம் வயதில் அதுவும் திருச்சியில் இருந்தபோது திருமகள் பத்திரிகை மூலம்

    முத்தையா என்ற முத்துக் கவிஞன் கண்ணதாசன் ஆனாராம்.

    திருசிராப்பள்ளியிலே (கிருஷ்ணா பள்ளியிலே) திருமகள் மூலம்

    அறிமுகமாகி, தமிழுலகம் முழுவதும் உலா வந்தக் கவிஞன் புகழ்

    வாழ்க வளர்க.

    ReplyDelete
  3. இனிமையான மனதைக் கவரும் பாடல்

    பகிர்வுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  4. முத்ததையாவை தமிழ் கூறும்
    முத்து கவி கண்ணதாசனான்தும்

    கண்ணனை பற்றிய பாடலை அந்த
    கண்ணனின் தாசனாக்கிய நினைவும்

    சாலப் பொருந்த அமைத்த
    சுப்பையா வாத்தியாருக்கு நன்றிகள்

    இசை அரண்மனையில் கவி
    ஏறி அமர்ந்தது சிம்மாசனத்தில்

    இன்று கவி அரண்மனையில்
    இசை ஏறுது சிம்மாசனத்தில்

    எதை எங்கே வைக்க வேண்டும்
    என ரசிப்பவர்களுக்கே என்றாலும்

    ரசனை ரசமாக இருக்க வேண்டுமே
    ரசமே தண்ணீராய் போனால்

    இடு பொருளை குற்றம் சொல்லி
    இங்கு என்ன பயன்..

    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  5. நல்ல‌ பாடல். வாரணம் என்பது யானை.

    'வாரண‌ம் ஆயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி நடக்கின்றான்' என்பது

    ஆண்டாள் வாக்கியம்தான்.திருமணம் ஆகாமல் காலதாமதம் ஆகின்ற பெண்களுக்கு 'வாரணம் ஆயிரம்' பாசுரங்களைப் பாடச் சொல்லி பரிகாரம் சொல்வது உண்டு.

    இதனை கவிஞர் எடுத்து ஆண்டுள்ளது வியப்பாக உள்ளது.

    இலண்டன் தட்ப வெப்பம் ஒத்துக் கொள்ளவில்லை. இன்னும் ஒரு வாரம் சென்றுதான் வெளியில் செல்வேன்.மேலும் புது வரவான என் பேரனையும், மூத்தவளான 4 வயது பேத்தியையும் கொஞ்சுவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் மற்றவை பின்னால்தான் வருகின்றன.

    அடுத்த வார‌த்திலிருந்து ஒரு வார‌ம் ஆண்டு விடுமுறையை எடுத்துக் கொண்டு மாப்பிள்ளை ஊர் சுற்றிக் காண்பிப்பார். அதுச‌ம‌ய‌ம் க‌ண்ணிலும் ம‌ன‌திலும் ப‌ட்ட‌தை எழுதுகிறேன்.

    ReplyDelete
  6. இந்த பாடலுக்கு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  7. iyaa vanakkam.

    em perumaal kannane neril vantha oru punniyam iyaa inraiya classyai kandathey perum punniyam enathu arumai iyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!.

    ReplyDelete
  8. iyaa vanakkam.

    murukanin maaman kannanin arul thaane iyaa

    ++++++++++++++++++++

    em perumaal kannane neril vantha oru punniyam iyaa inraiya classyai kandathey perum punniyam enathu arumai iyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com