27.7.11

Astrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும்!

----------------------------------------------------------------------------------------
Astrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி, மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த நல்ல பாடல் ஒன்று   ‘ஆனந்தஜோதி’ என்னும் திரைப்படத்தில் வரும். ஆண்டு 1963.

அந்தப் பாடலின் பல்லவி இப்படித்துவங்கும்:

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே


அது நாயகி பாடும் வரிகள். பதிலுக்கு நாயகன் இப்படிப் பாடுவான்

பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே


இந்தப் பாடலை, சற்று மாற்றிப் பாடினால், அது சனீஷ்வரனுக்குப் பொருத்தமாக இருக்கும்.

மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்த மேன்மை கொண்ட பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டார் உண்மை தெரிந்து கொண்டார் இந்தப் பூமியோர் பெருமானே!


ஆமாம். சனீஷ்வரன் கர்மகாரகன். அவன் யாரையும் வீணாகத் துன்புறுத்துவதில்லை. அவரவர் கர்மவினைப் படியே பலன்களையே அவன் அளிப்பான். அதைப் புரிந்துகொண்டால், நாம் சலனமின்றி இருக்கலாம். சங்கடமின்றி வாழ்க்கையை ஒட்டலாம். (அட்லீஸ்ட் அவனுடைய தசா புத்திக் காலங்களில்!)
---------------------------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் சந்திர மகா திசையில் குரு புத்திக்கான பலன்களைப் பார்த்தோம். திசை புத்தி வரிசைகளில் குருவிற்கு அடுத்ததாக வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர் சனி பகவான். இன்று சந்திர மகா திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

அது நடைபெறும் காலம் 19 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு 7 மாதங்கள்.

ஒருவர் சுபக்கிரகம். இன்னொருவர் தீய கிரகம். ஆகவே பலன்கள் நன்மையுடையதாக இருக்காது. இறைவழிபாடு ஒன்று மட்டுமே இந்தக் காலகட்டத்தைக் கடக்க உதவும்!

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பாரப்பா சந்திரதிசை சனியன்புத்தி
    பகர்ந்தநாள் மாதமது பத்தொன்பதாகும்
நேரப்பா அதனுடைய பலத்தைச் சொல்வோம்
    நேரிழையாள் மரணமதாம் நெஞ்சுதனில் நோவாம்
காரப்பா கனகமது சிலவேயாகும்
    கள்ளரால் சோரர்பயம் துக்கமுண்டாம்
சாரப்பா சத்துருவால் இடஞ்சலுண்டாம்
    சஞ்சலங்க ளுண்டாம் தவமேபாழாம்!


பதிலுக்கு சனி மகாதிசை சந்திர புத்தியாவது நன்மை உடையதாக இருக்கும் என்று பார்த்தால் - இருக்காது. அதுவும் பல பிரச்சினைகளை உடையதாகவே இருக்கும். அது நடைபெறும் காலமும் 19 மாதங்களே அதாவது ஒரு ஆண்டு 7 மாதங்கள். இறைவழிபாடு ஒன்று மட்டுமே இந்தக் காலகட்டத்தைக் கடக்க உதவும்!

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காணவே காரிதிசை சந்திரபுத்தி
    கனமில்லா மாதமது பத்தொன்பதாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
    தோகையருஞ் சண்டையதால் துன்பம்வருங்கேடு
பூணவே பூமிமுதல் பூணாரங்கள்
    புகன்றதொரு தனமுதல் சேதமாகும்
ஆணவே அலைச்சலது உண்டாகும்பாரு
    அளவில்லா பேயதுவுங்கூடிக்கொல்லும்


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
27.7.2011


=======================================================
வாழ்க வளமுடன்!

2 comments:

  1. சந்திரனின் நட்சத்திரங்களில் பிறந்த பூசம், அனுஷம் உத்திரட்டாதிக்காரர்களுக்கும் தசாபுத்தி பலன் இதுபோலத்தானா ஐயா?

    பாடல்கள் எளிமை. ஆனால் பயம் காட்டும் பாடல்கள். திகில் படம் பார்ப்பது போல் உள்ளது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com