4.7.11

Astrology பகையாளி எப்போது உறவாகிப் போவான்?

----------------------------------------------------------------------------------------
Astrology பகையாளி எப்போது உறவாகிப் போவான்?

“இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான்”

என்று வாழ்க்கையைப் பல கூறுகளாக்கிப் பதம் பிரித்துக் காட்டிவிட்டுப் போனார் கவியரசர் கண்ணதாசன்.

அவற்றுள் உறவும், பகையும் என்ற நிலைப்பாடு முக்கியமானது. நமக்கு நெருங்கிய உறவோ அல்லது நட்போ பகையாகிப் போகும்போது மிகுந்த வருத்தத்திற்கு ஆளாவோம். அதே பகை, நமது மேன்மையை உணர்ந்து, பகையை விடுத்து, மீண்டும் நம்மை நெருங்கி வரும்போது, நிம்மதி கொள்வோம்.

அதற்கு சாத்தியம் உண்டா என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஒரு கிரகத்தின் திசையில் உங்களை அறியாமல் உண்டான பகையை, வேறொரு கிரகத்தின் திசை, சரி பண்ணிவிட்டுப் போகும். அதுதான் நவக்கிரகங்கள் சிலவற்றால் நமக்குக் கிடைக்கும் அரிதான பலன்களில் ஒன்றும் ஆகும். இன்றைய பாடத்தில் அதைப் பார்ப்போம்!
_____________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், சந்திர புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து சூரிய மகா திசையில், செவ்வாய் புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 126 நாட்கள்  (just 126 days only) - அதாவது சுமார் நான்கு மாத காலம். மொத்த காலமும் நன்மையுடையதாக, மகிழ்ச்சியுடையதாக இருக்கும்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காணவே ரவிதிசையில் செவ்வாய்புத்தி
    கனதையுள்ள நாளதுவும் நூற்றியிருபத்தாறாகும்
தேறினோம் அதன் பலனை செப்பக்கேளு
    தீங்கில்லா தனலாபம் சம்பத்துண்டாம்
ஆறினோம் வந்தபிணி தீரும்ரோகம்
    அரசரால் மகிழ்ச்சியது தானுண்டாகும்
தேறினோம் ரவிசந்திரன் பொசித்தநாளில்
     தீங்கில்லா நாளென்று தெளிந்துகாணே!


அத்துடன் இதற்கு ஈடானதொரு நன்மைகள் செவ்வாய் திசை சூரிய புத்தியிலும் நமக்குக் கிடைக்கும். இருவரும் நட்புக் கிரகங்கள். அதை மனதில் கொள்ளவும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பாரப்பா செவ்வாயில் சூரியபுத்தி
    பாங்கான நாளதுவும் நூற்றியிருபத்தியாறு
ஆரப்பா அதன்பலனை அறையக்கேளு
    ஆனதொரு சம்பத்து ஐஸ்வரியமுண்டாம்
சாரப்பா சத்துருவும் உறவாகிப்போவான்
    சஞ்சலங்கள் தானகலும் சம்பத்துண்டாம்
சேரப்பா சிவதலங்கள் சேரப்பண்ணும்
    தீங்கில்லா சிவவேடம் பூணுவானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

9 comments:

  1. Sir:

    Thanks for the quality posts.

    Please add "like" button to the posts.

    Thanks,


    Siva

    ReplyDelete
  2. ஓ .. அப்படியா..

    அதுவும் நியாயம்தான்..

    இரவும் பகலும் மாறி மாறித் தானே வரும்..

    நண்பன் பகையாவதும்..
    பகை நட்பாவதும்..

    எல்லாம் காலத்தின் கோலம்..

    நன்று வாத்தியார் ஐயா..

    ReplyDelete
  3. ஆமாம் ஐயா! இரவு பகல், உறவு பகை, இன்பம் துன்பம் என்ற இருமைகளில் இருந்து விடுபடுவதே வாழ்வின் நோக்கம்.

    சூரியதசா செவ்வாய் புக்தி, செவ்வாய் தசா சூரியபுக்தி ஆகியவை இனிதான் காணப் போகிறேன்.

    ஜப்பான் மைனர்,சிங்கப்பூர் ஆலாசியம்,டெல்லி உமா, நந்தகுமார், கண்ணன் ஏன் தஞ்சாவூர் பெரியவர் எல்லோருமே பின்னூட்டத்தில் காணப்படுவதில்லை?

    ஒருவேளை என் தொடர்ந்த 'அறுவை'அவர்களை விலக வைத்துவிட்டதோ என்றுகூட மனதில் தோன்றுகிறது.


    தஞ்சாவூர் பெரியவரின் இலக்கியப்பயிலகம் வலைப்பூவில் வீர வாஞ்சி பற்ற்றிய கட்டுரை வந்துள்ளது. அங்கே பின்னூடம் இடுவதில் தடங்கல் ஏற்பட்டதால் இங்கே சொல்கிறேன். அந்தக் கட்டுரை மிக அருமை.அன‌ப‌ர்க‌ள்
    அங்கு சென்று வாசிக்க‌ வேண்டுகிறேன்.ஆஷ் துரையின் பேர‌க்குழ‌ந்தைக‌ள் ச‌மாத‌ன‌க்கொடி ஏந்தி எழுதியுள்ள‌ க‌டித‌த்தை அங்கே ப‌டிக்க‌லாம்.
    http://ilakkiyapayilagam.blogspot.com/2011/07/blog-post.html

    Also see this important video:

    http://www.cbsnews.com/video/watch/?id=4586903n&tag=mncol;txt

    ReplyDelete
  4. கிருஷ்ணன் சார் நான் வகுப்பறைக்கு வந்து கொடு தான் இருக்கிறேன்.
    அதுப் புனைபெயர் என்பதால் தங்களுக்குத் தெரிந்திருக்க இல்லை போலும்.
    தமிழ் விரும்பி என்னும் பெயரிலே வருகிறேன்.
    ஜப்பான் மைனர் தற்போது புது வீடு குடி போய் (கம்பெனியும் இடமாற்றமாம்)
    இன்னும் வலை இணைப்புப் பெறவில்லை என்று அறிகிறேன்.

    சகோதிரி உமா... கொஞ்சம் வெளெய் மும்மரமாக இருக்கும்.
    கண்ணன் சுகமில்ல்லாமல் இருந்து கொளறிக் கொளறி பேசிக் கொண்டு
    இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தார் / இப்போது சுகமாகி விட்டதாகவும்
    கூறியிருந்தார். இவ்வளவு தான் நான் அறிந்தது.

    வெள்ளை மண்ணில் மனம் கொள்ளை கொள்ளும் காட்சியில்
    அன்புப் பிள்ளைகளோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தும்
    பாரதியையும் நினைவில் கொண்டு அங்கு பெக்ஹாம் தீரத்தில்
    அவன் கவிப் பாடி திரிவீர் (உலாவுவீர்) என்று நம்புகிறேன்.

    நன்றிகள் சார்.

    தமிழ் விரும்பி.
    http://tamizhvirumbi.blogspot.com/

    ReplyDelete
  5. அய்யா!
    வணக்கம்! வாழ்க வளமுடன்!
    பழைய பாடத்தில் சில சந்தேகங்கள். சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். சிம்ம இலக்கினம் 2ம்(புதன்), 3ம்(சுக்கிரன்) பரிவர்த்தனையாகின்றபொழுது, 2ல்(கன்னி)அமர்ந்த சுக்கிரனின் நீச நிலை என்னவாகும்? அதைப்போலவே, மீன இலக்கினம் 6ம்(சூரியன்), 8ம்(சுக்கிரன்) பரிவர்த்தனையாகும்பொழுதும் 8ல்(துலாம்) அமர்ந்த சூரியனின் நீச நிலை என்னவாகும்?

    நன்றி! வாழ்க வளமுடன்!
    நஞ்சை கோவிந்தராஜன்

    ReplyDelete
  6. ///ஒருவேளை என் தொடர்ந்த 'அறுவை'அவர்களை விலக வைத்துவிட்டதோ என்றுகூட மனதில் தோன்றுகிறது///

    உங்கள் பட்டியலில் இரண்டு பெயர்கள்
    உள்ளபடியே காணவில்லை..

    அறுவை என நீங்களே
    அலுத்துக் கொண்டீரோ..

    ஆணவத்தை அறுக்கும்
    அறுவை என கொள்ளவா..

    அரு(மை) (அ)வை என எழுத வந்தது
    அறுவை என எழுத்து வந்ததோ..

    இரட்டையாக அமைந்தது தானே
    இந்த வாழ்க்கையும் வகுப்பறையும்

    வழக்கம் போல் இந்த
    வகுப்பில் ஒரு குறள் சிந்தனை

    இன்னாது இனன் இல்ஊர் வாழ்தல்
    அதனினும்
    இன்னாது இனியாரப் பிரிவு

    ReplyDelete
  7. கிருஷ்ணன் சார், உங்கள் போன ஆக்கத்திற்கு பின்னூட்டம் போட்டிருக்கிறேனே (ஆனால் 'வானவில்' என்ற பெயரில்). சும்மா பிளாக்கர் செட்டிங்க்ஸ் மாற்றிக்கொண்டிருந்தபோது கமெண்ட் போட்டதில் அதே பெயரில் பதிவாகிவிட்டது.

    திடீரென்று வேலை அதிகமாகிவிட்டதால் முன்போல் அதிகமாக கமெண்ட் போடமுடிவதில்லை என்றாலும், அவ்வப்போது கமெண்ட் போட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.

    ReplyDelete
  8. ஐயா

    ரவிதிசையில் செவ்வாய்புத்தி பாடலும் ரவிதிசையில் சந்திரபுத்தி பாடலும், மூன்றாம் அடியிலிருந்து ஒன்றாகவே உள்ளதே.. இரண்டிற்கும் ஒரே பலனோ??

    ரவிச்சந்திரன் பொசிந்த நாள் என்று ரவி செவ்வாய் பாடலில் வருகிறதே??

    பாடல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com