2.6.11

Astrology: நாட்டிற்கு ஒரு தத்துவஞானி எப்போது கிடைப்பான்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology: நாட்டிற்கு ஒரு தத்துவஞானி எப்போது கிடைப்பான்?

சென்ற இரு அத்தியாயங்களில் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் எதிர்பார்ப்பைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா? நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்காது. விதியின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் இதற்கு முன் விதியைப் பற்றி எழுதிய பாடங்களைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

எல்லாம் விதிப்படிதான் நடக்கும். வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்.

ஏழாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். பெண்ணாக இருந்தால் நல்ல கணவன் அமைவான்.

ஏழாம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் தங்கள் சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் நல்ல மனைவி அமைவாள் பெண்ணாக இருந்தால் நல்ல கணவன் அமைவான்.

ஏழாம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அல்லது ஏழாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீட்டில், அதாவது ஆறாம் வீட்டில் போய் டென்ட் அடித்துக் கொண்டு ஹாயாக இருந்தால் மேற்கூறியவற்றிற்கு மாறாகத்தான் அமையும்

ஆகவே கனவு காணுவதை நிறுத்துங்கள். வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதுபோல திருமணமும், அதனதன் தசாபுத்திக் காலங்களில் அல்லது அந்தரங்களில்தான் நடக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தில் பலவிதமான யோகங்களைப் பற்றிக் குறிப்பிடப்பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று திருமண யோகம்.

ஒரு ஜாதகன் அல்லது ஜாதகிக்குத் திருமண யோகம் இருக்க வேண்டும். அது இருந்தால்தான் திருமணமாகும். இல்லையென்றால் சிக்கல்தான். சிலருக்கு வயது 40 ஆகியும் இன்னும் திருமணம் நடைபெறாமலே இருக்கும். அதற்கு என்ன காரணம்? அவர்கள் வரன் தேடாமலா இருந்திருப்பார்கள்? அல்லது முயற்சி செய்யாமலா இருந்திருப்பார்கள்?

பொதுவாக எந்த யோகமாக இருந்தாலும், அதை அனுபவிப்பதற்கு முதலில் ஜாதகத்தில் லக்கினாதிபதி வலுவாக (strong) இருக்க வேண்டும்.

’திருமண யோகத்திற்கு, லக்கினாதிபதி, இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஏழாம் வீட்டிற்கு உரியவன் ஆகிய மூவரும் வலுவாக இருக்க வேண்டும்.

‘வலு’ என்பதைப் பற்றிப் பலமுறை எழுதியுள்ளேன். ஜோதிடத்தின் அடிப்படை அறிவு அது.

கிரகங்கள், உச்சம், சொந்த வீடு, நட்பு வீடு, கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளில் இருப்பது, சுயவர்க்கத்தில் அதிகமான பரல்களுடன் இருப்பது அதன் வலிமையைக் குறிக்கும்.
----------------------------------------------------------------------------------------------------
அவை எல்லாம் பொது விதிகள்.

ஆகவே கவலைப் படாதீர்கள். ஜாதகத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு நல்ல (!?) பெண்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். உரிய காலத்தில் செய்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகிற மாதிரிப் பெண் கிடைக்காவிட்டால், கிடைக்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்

எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

இரண்டுதான் முடிவு.

ஒன்று உங்களுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் அல்லது நாட்டிற்கு ஒரு தத்துவஞானி கிடைப்பான்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

7 comments:

  1. வணக்கம் வாத்தியார் ஐயா,

    ஆகா நம்ம நாட்டிலோ புதுசா எதோ ஒரு தத்துவஞானி பிறக்கப் போகிறார் போல என்று ஆவலோடு படித்தால்,

    இப்படி கலாய்ச்சிட்டீகளே ?

    //ஒன்று உங்களுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் அல்லது நாட்டிற்கு ஒரு தத்துவஞானி கிடைப்பான்//

    திருமணம் ஆகாவிட்டாலும் மட்டுமல்ல..

    திருமணம் ஆனபின்புதான் பல தத்துவ ஞானிகள் தோன்றுகிறார்கள்..!

    போகட்டும்..

    திருமணம் எப்போது நடக்கும் என்பதற்கான சோதிடக் குறிப்புகள் எளிமையாக மனதில் பதியுமாறு சுருக்கமாகத் தந்திருக்கிறீர்கள்..

    நன்றி..

    ReplyDelete
  2. காலம் மாறி வருகிறது ஐயா! மின் அஞ்சலில் உரையாடி, எல்லாம் சரி என்று ஒப்புக்கொண்டு நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டாள் ஒரு பெண். பையனுக்கு அம்மா இறந்துவிட்டார்கள். வயதான அப்பா மட்டும் தனியாக சென்னையில். பையன் அமெரிக்காவில். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் பெண் கூறினாள்
    "உங்க‌ள் அப்பா எக்காரணம் கொண்டும் அமெரிக்கா வரக் கூடாது".

    "என் அப்பாவுக்கும் அங்கு வர விருப்பம் இல்லை. ஒரு வேளை அவருக்கு உடல் நிலை சரியில்லை எனில் நான் அமெரிக்காவிற்கு அவரை அழைத்துத்தான் செல்ல வேண்டும்."

    "அந்த நிலையிலும் கூட அவர் அங்கு வர அனுமதி இல்லை." என்றாள் அம்மணி.

    திருமணம் நின்று போயிற்று.

    ReplyDelete
  3. Even If 7th house has 30 or more Bindus,Sukran and second lord is well placed,what if seventh lord in sixth place?

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயா வணக்கம் ,

    ReplyDelete
  5. தத்துவ ஞானி தோன்றுவாரா.இல்லை
    தத்துவம் சொல்ல தோன்றி விட்டாரா?

    மூன்று நிலையிலிருந்து சிந்திக்க
    முத்தாய்ப்பாக வைத்த கருத்தருமை

    அப்படியும் இல்லை. அதுசரியென்றால்
    இப்படியும் இல்லை.. ஓகோ என

    எப்படி என கேட்க தோன்றினால்
    உருப்படியான யோசனைக்கு..

    வழக்கம் போல் இந்த வகுப்பறையில்
    வள்ளுவ சிந்தனையினை தந்து

    வருகை பதிவுகளுடன்
    வணக்கமும் வாழ்த்துக்களும்

    "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை"

    ReplyDelete
  6. அய்யா,
    நீங்களானால் ஞானி கிடைப்பான் என்கிறீர்கள்.
    " பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்
    எத்தாலும் கூடி இருக்கலாம்‍ சற்றேனும்
    ஏறுமாறாக இருப்பாளே- யாமாயின்
    கூறாமல் சந்நியாசம் கொள்" என்றார் ஒளவை
    ரிஷிமூலம் பார்க்ககூடாது என்றுவேறு கூறுவார்கள்.
    அதனால் தத்துவ ஞானியாக விருப்ப படுபவர்கள் சரியான வாழ்கை துணை
    அமையாவிட்டால் அதையும் இறைவன் கொடுத்த வரம் என்றே கொள்ளவேண்டும் இல்லையா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com