2.4.11

என்ன கேட்டார் மன்மோகன் சிங்?

---------------------------------------------------------------
என்ன கேட்டார் மன்மோகன் சிங்?

இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவியின் ஆசை ஒன்று....சாரி ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. உறிக்காமல், உப்புப்போடாமல் அப்படியே கொடுத்துள்ளேன். வேண்டியவர்கள் உப்போ அல்லது அஸ்காவோ (சீனி) தங்கள் விருப்பப்படி போட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெள்ளிக்கிழமை.  கைபேசி மணி அடிக்கிறது.  எடுத்துப் பார்த்தால் நம்ம மன்மோகன் சிங்ஜி.   அவரும் நானும் ஹிந்தி / பஞ்சாபியில் பேசியதன் மொழிபெயர்ப்பு கீழே:

என்ன உமாஜி எப்படி இருக்கீங்க?

ம்ம் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?  ஆமா எதுக்கு போன் பண்ணீங்க?  இந்த நேரத்துல நான் வேலையா இருப்பேன்னு உங்களுக்குத் தெரியுமில்ல?

கோச்சுக்காதீங்க.  ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன்.

சரி சரி சீக்கிரமா சொல்லுங்க.  உங்களுக்கு ஒரு பத்து நிமிஷம்தான் நேரம் கொடுக்க முடியும்.

நாளைக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டி.

ஆமா அதுக்கென்ன?

இல்ல, அரையிறுதிக்கே உங்களை நேர்ல வந்து பாக்கறதுக்குக் கூப்பிட்டேன்.  ஆனா நீங்க ரொம்ப பிசின்னு சொல்லி மறுத்திட்டீங்க.

அதனால?

நாளைக்கு இறுதிப்போட்டியவாவது நேர்ல வந்து பாருங்களேன்.

ம்ம் என்னோட schedule பார்த்துட்டுச் சொல்றேன்.

அப்படியெல்லாம் சொல்லாதீங்க.  நீங்க வந்துதான் ஆகணும்.  ஜெயிச்ச அணிக்கு உங்க கையாலதான் உலகக்கோப்பையை தரச் சொல்லலாம்னு நாங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணியிருக்கோம். உங்களுக்காக உங்களைக் கேக்காமலேயே பிரைவேட் ஜெட் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்.

ம்ம் நீங்க இவ்ளோ சொல்றதால வரேன்.  ஆனா சில conditions இருக்கு.

நீங்க வரேன்னு சொன்னதே மகிழ்ச்சி.  இல்லேன்னா சோனியாஜியைவிட்டு பேசச் சொல்லலாம்னு நினைச்சேன்.  என்ன சொல்லுங்க?

எனக்கு இந்த விளம்பரம் பிடிக்காது.  அங்க யாரும் என்னை போட்டோவோ வீடியோவோ எடுக்கக்கூடாது.

சரி நான் சொல்லிடறேன்.

அப்புறம் உங்களோட ஒரே மேடையில கிலானி மாதிரியெல்லாம் உட்கார்ந்து மேட்ச் பார்க்கமாட்டேன்.

சரி

அப்புறம் ஜெயிச்ச அணிக்கு உங்க கையாலதான் உலக்கோப்பையைத்  தரணும்னு தொந்தரவு செய்யக்கூடாது.

நீங்க முதல்ல சொன்ன இரண்டும் சரி, ஆனா இந்த மூணாவது கண்டிஷன் ஐ கொஞ்சம் விட்டுடுங்களேன்.

ம்ஹூம், இது எல்லாத்துக்கும் நீங்க ஒத்துக்கிட்டாதான் நான் மேட்ச் பார்க்க வருவேன்.

சரி எப்படியோ நீங்க வந்தா அதுவே போதும்.  அப்புறம் இன்னொரு விஷயம்.

என்ன சீக்கிரமா சொல்லுங்க.

இல்ல வர தேர்தல்ல எங்களை ஆதரிச்சு ஒரு குரல் குடுத்தீங்கன்னா, எங்களுக்கு தமிழ்நாட்டுல தனிப்பெரும்பான்மை கிடைச்சுடும்...........

ஹலோ, உங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், எனக்கு அரசியல் பிடிக்காது, எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காதுன்னு.  அதுவும் உங்க கட்சியை சுத்தமாவே பிடிக்காது.  ஏதோ உங்ககிட்ட பேசினா உடனே இப்படியெல்லாம் கேக்கறீங்க.

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க.  இந்த டொபிக்கை  இதோட விட்டுடறேன்.

சரி பை!

டிஸ்கி: என்ன ஒரே மொக்கையா இருக்கா?  அது ஒண்ணுமில்ல.  ஒரு வாரமா செம வேலை, மண்டை ரொம்ப காய்ஞ்சு போயிடுச்சு.  அது போறாதுன்னு இரண்டு பர்சனல் குழப்பங்களை சமாளிச்சு முடிவு எடுக்க வேண்டியதா போயிடுச்சு.  அதோட பாதிப்புதான் இப்படியெல்லாம். 

எவ்ளோவோ படிக்கறீங்க, இதையும் படிக்க மாட்டீங்களா என்ன? 

நன்றி, வணக்கத்துடன்,
எஸ்.உமா, தில்லி

++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!

19 comments:

  1. 'டென்ஷன்' அதிகமாகி மண்டைக் குழப்பம் ஆகிவிட்டது என்றால், மன அமைதிக்கு ஏதாவது நல்ல விஷயங்களை நினைத்துக் கொள்வதற்கு பதில் ஏன் இப்படி? இதனால் குழப்பமும், மண்டைக் காச்சலும் அதிகமாக அல்லவா ஆகிவிடும். ஆகிவிடும் என்ன, ஆகிவிட்டது என்பதற்கு இந்த ஆக்கமே சாட்சி. அது சரி, அந்த மனிதர் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்? எல்லா பெண்களின் ஆலோசனைகளையும் கேட்டு அவர் நடந்து கொள்வார் என்று நீங்கள் நினைக்கலாமா? ஒரே ஒருவர் சொல்லை மட்டும் தான் கேட்டு நடந்து கொள்வார். இனி இது போன்ற கெட்ட கனவு வந்தால் தயவு செய்து கோயிலுக்குப் போய் இறைவன் சந்நிதியில் நல்லெண்ணையில் விளக்கு போட்டு வேண்டிக் கொண்டு வந்து விடுங்கள். எல்லாம் சரியாகிவிடும். என்ன சரியா?

    ReplyDelete
  2. கைப்புள்ள ,,, ரொம்ப ஓவராத்தான் போயிட்டோமோ ?

    போவோம் ...போயித்தான் பார்ப்போம்
    எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ணமாட்டோமா ?
    ( வடிவேல் மாடுலேசன் )


    //அப்புறம் உங்களோட ஒரே மேடையில கிலானி மாதிரியெல்லாம் உட்கார்ந்து மேட்ச் பார்க்கமாட்டேன். //

    அடிறா சக்கை ... அடிறா சக்கை ...
    என்னமா நடிக்கிறாக ?
    ( கவுண்டமனி மாடுலேசன் )

    நல்ல கற்பனை உமாஜி...

    ஆமாம் மாமிக்கு இந்தியோட பஞ்சாபியும் தெரியுமோ ?
    பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு..

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம் திருமதி உமா..
    என்ன இதுமாதிரி நடக்காமலா போகப்போகுது.. (கற்பனையல்) நல்ல கோர்வையான கற்பனை!சிறுது நேரம் சிரிக்க!!! என்ன ரூம் போட்டு யோசனை பண்ணினீங்களா??-- நல்ல இருக்கு...!!!

    ReplyDelete
  4. அன்புள்ள வகுப்பறை தோழர்களே,

    சிவயசிவ - என்று ஒரு பிளாகரை துவங்கியுள்ளேன்...

    http://sivaayasivaa.blogspot.com

    படித்துவிட்டு தங்களது மேலான ஆலோசனையை பின் ஊட்டமிடுங்கள்

    நன்றி .....

    ReplyDelete
  5. சாதாரண உமாவா இருந்தவுங்களை "உமாஜி"ன்னு எல்லோருமே கூப்பிட்டதால வந்த வினைதான் இது..
    பாவம்..எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுருக்காங்க பாருங்க..டெல்லியிலே வேற இருக்காங்களா..
    சோனியாஜி மாதிரி ஒரு கிரேட் லேடி அப்பிடின்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு..
    "நினைப்புதான் பொழப்பக் கெடுக்கும்" ன்னு சொல்வாங்க.
    கோச்சார குரு உமாவுக்கு பத்துலே இருக்கானோ என்னவோ?
    நமக்கெல்லாம் இப்படி ஒரு கால சூழல்..ஆத்துக்காரர் பாட்டை நினைச்சுப்பார்த்தால் அந்தோ பரிதாபம்..

    ReplyDelete
  6. இப்போ அந்தப் பக்கமா.. சரி சரி
    இதுவும் relaxஆ தான் இருக்கு..


    இங்கே ஜின்னு சொல்லவே
    இப்போ தைரியமில்லே..


    ஆங்கில எழுத்தில ஒன்னஎடுக்க ஆலோசனை நடக்குதுன்னு சொன்ன


    எதுவும் நடக்குந்தான்னு சொல்றீகளா..
    எல்லாம் 13க்கு அப்புறம் பாத்துக்கலாம்

    ReplyDelete
  7. பாவம் ம‌னமோஹனர்!சுவாரஸ்யமான ஆக்கம் தான்!

    ReplyDelete
  8. Really nice. paduthukku vasanam ezhuthalamey?

    ReplyDelete
  9. ஆகிவிடும் என்ன, ஆகிவிட்டது என்பதற்கு இந்த ஆக்கமே சாட்சி. //
    இப்ப நார்மல் ஆயிட்டேன். பயப்படாதீங்க.

    எல்லா பெண்களின் ஆலோசனைகளையும் கேட்டு அவர் நடந்து கொள்வார் என்று நீங்கள் நினைக்கலாமா?//
    ஹா ஹா

    இனி இது போன்ற கெட்ட கனவு வந்தால் தயவு செய்து கோயிலுக்குப் போய் இறைவன் சந்நிதியில் நல்லெண்ணையில் விளக்கு போட்டு வேண்டிக் கொண்டு வந்து விடுங்கள். எல்லாம் சரியாகிவிடும். என்ன சரியா? //
    இது கெட்ட கனவு இல்ல சார், பகல் கனவு, ஹி ஹி.

    ReplyDelete
  10. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு..//

    நன்றி, பஞ்சாபி பேசத்தெரியாது. ஏதோ பேசறது கொஞ்சம் கொஞ்சம் புரியும். எல்லாம் பில்ட் அப் தான்.

    ReplyDelete
  11. இதை வெளியிட்ட சுப்பையா சாருக்கு நன்றி!

    ReplyDelete
  12. சிறுது நேரம் சிரிக்க!!! என்ன ரூம் போட்டு யோசனை பண்ணினீங்களா??-- நல்ல இருக்கு...!!!//

    நன்றி கணபதி சார், சும்மா என்னை நானே ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான் எழுதினேன்.

    ReplyDelete
  13. உமாஜி"ன்னு எல்லோருமே கூப்பிட்டதால வந்த வினைதான் இது//

    இங்க எல்லாருமே எல்லாரையும் ஜி சேர்த்துதான் கூப்பிடுவாங்க, அதனால எல்லாரும் இப்படி ஆயிட்டாங்களா என்ன?

    பாவம்..எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுருக்காங்க பாருங்க//

    விட்டா கொண்டு கீழ்ப்பாக்கத்துல செர்த்துடுவீங்க போல.

    நினைப்புதான் பொழப்பக் கெடுக்கும்" ன்னு// ஹி ஹி

    கோச்சார குரு உமாவுக்கு பத்துலே இருக்கானோ என்னவோ?// இல்ல, விருச்சிக ராசிக்கு ஐந்தில இருக்கார்னு நினைக்கிறேன். ஒரு சந்தேகம், ஏன் பத்துல இருந்தா என்ன?

    ஆத்துக்காரர் பாட்டை நினைச்சுப்பார்த்தால் அந்தோ பரிதாபம்//

    அது உங்களுக்கு இப்பதான் தெரிஞ்சுதா? அவருக்கு முன்னாடியே தெரிஞ்சுடுச்சு.

    ReplyDelete
  14. இதுவும் relaxஆ தான் இருக்கு..//

    நன்றி விசு சார்.

    ReplyDelete
  15. சுவாரஸ்யமான ஆக்கம் தான்!//

    நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. Really nice. paduthukku vasanam ezhuthalamey?//

    நன்றி மணி! மக்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த அப்படி ஒரு வாய்ப்பு வந்தா விட்டுடுவோமா என்ன?

    ReplyDelete
  17. //////////////////
    Uma said... உமாஜி"ன்னு எல்லோருமே கூப்பிட்டதால வந்த வினைதான் இது//

    இங்க எல்லாருமே எல்லாரையும் ஜி சேர்த்துதான் கூப்பிடுவாங்க, அதனால எல்லாரும் இப்படி ஆயிட்டாங்களா என்ன?////////////////

    அவுங்களெல்லாம் அந்த ஊறு லோக்கல் ஆளுங்க..நீங்க தமிழ்நாட்டுலேருந்து imported ..அதுனாலே அப்பிடி ஒரு எஃபக்ட் இருக்கும்ன்னு நினைச்சேன்..

    ReplyDelete
  18. //////////////////
    Uma said... நினைப்புதான் பொழப்பக் கெடுக்கும்" ன்னு// ஹி ஹி

    கோச்சார குரு உமாவுக்கு பத்துலே இருக்கானோ என்னவோ?// இல்ல, விருச்சிக ராசிக்கு ஐந்தில இருக்கார்னு நினைக்கிறேன். ஒரு சந்தேகம், ஏன் பத்துல இருந்தா என்ன?//////////////
    பத்தில் குரு பதவியைக் கெடுக்கும் ன்னு ஒரு பழமொழி இருக்கு..( பதவி = பொழப்பு ) இப்போ புரியுதா?
    நீங்க இன்னும் பழைய பழமொழி என்னான்னு சொல்லவே இல்லே..

    ReplyDelete
  19. பத்தில் குரு பதவியைக் கெடுக்கும் ன்னு ஒரு பழமொழி இருக்கு..( //

    இது பழமொழி கிடையாது. சொலவடைன்னோ ஏதோ சொல்வாங்க.

    நீங்க இன்னும் பழைய பழமொழி என்னான்னு சொல்லவே இல்லே//

    நான்தான் ஒரு க்ளூ கொடுத்திருந்தேனே நீங்க பார்க்கலையா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com