21.4.11

Astrology முடிவெல்லாம் முடிவல்ல!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Astrology முடிவெல்லாம் முடிவல்ல!

நாம் முடிவு என்று நினைப்பதெல்லாம் முடிவல்ல. ஒவ்வொரு முடிவும் பிறிதொரு துவக்கத்தில் போய்த்தான் முடியும். அதாவது வேறு ஒரு புதிய அத்தியாயம் துவங்கும்.

Nothing will be an end.

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படி அழகாக வலியுறுத்திச் சொன்னார்:

"முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்தகதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே!"

அதை நான் என் மொழியில் சொல்கையில் சீட்டாடத்துடன் தொடர்பு படுத்திச் சொல்வேன். உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருக்கும். ஒரு சிட்டை நீங்கள் இறக்கினால், கீழே இருந்து இன்னொரு சீட்டை நீங்கள் எடுத்துச் சொருகிக்கொள்ள வேண்டியதிருக்கும்.

கீழேயிருந்து வருகின்ற சீட்டு நமக்கு வேண்டியதாகவும் இருக்கலாம் அல்லது வேண்டாததாகவும் இருக்கலாம்.

அதுபோலத்தான் தசாபுத்திகளும். நமக்கு நன்மைகளைத் தரும் தசாபுத்திகளும் அல்லாதவைகளைத் தரும் தசாபுத்திகளும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

நேற்று சுக்கிரதிசையில் சுக்கிரனின் சுயபுத்திப் பலனைப் பார்த்தோம். இன்று சுக்கிரதிசையில் சூரியனின் புத்திப் பலனையும், சூரிய திசையில் சுக்கிரனின் பலனையும் பார்ப்போம்

”வாழலாம் சுக்கிரதிசை சூரியபுத்தி
   வகையில்லாதமாதமது பனிரெண்டாகும்
நாளலாம் அதன்பலனை நவிலக்கேளு
   நன்மையில்லாத சுரபீடை நாய்கடிகளுண்டாம்
கேளலாம் சத்துருவும் குடிகேடு செய்வான்
   குணமான தாய்தந்தை மரணமதுவாகும்
வாழலாம் சித்தமதில் வெகு கலக்கமுண்டாம்
   மனைவிதன்னை விட்டேகி மலையாண்டியாவான்”

“கேளப்பா ரவிதிசையில் சுக்கிரபுத்தி
   கெணிதமுள்ள மாதமது பனிரெண்டாகும்
ஆளப்பா அதன்பலனை அறையக்கேளு
   ஆகாத சூரியனுடன் சூஸ்திரவாய்வு
பாளப்பா ஆகுமடா திரேகந்தன்னை
   பகையதுவுமுண்டாகும் பலனோயில்லை
வாளப்பா மனையாட்டி சிலுக்குண்டாகும்
   வகையுடனே வான்பொடுளும் கேடாம்சொல்லே!”

ஆக இரண்டு காலகட்டமுமே நன்மை உடையதாக இருக்காது. மொத்தத்தில் ஒரு உதயம் அஸ்தமனத்தில் முடியும். அஸ்தமனம் மீண்டும் ஒரு உதயத்தைக் கொடுக்கும்!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

6 comments:

  1. எனக்கு சுக்கிர தசை வருவதானால் 79 வயதாக வேண்டும். 2,9ற்குரிய சுக்கிர தசை வராதது துரதிர்ஸ்டவசமானது. இருப்பினும் மற்ற கிரக தசையில் வரும் தன் புத்தியில் கொடுக்க வேண்டியதைத் தவறாமல் கொடுத்து விடுவார் என்ற வகையில் ஆறுதல் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. good morning,

    present sir,

    paadam nanraga ulladhu.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம்
    சுக்கிர தசையல் நாய்கடி கூட படவேண்டியது வரும்.. [சுக்கிரன் கெட்டு பொய் இருந்தால் அவரது உடம்பில் ஒரு வித துர்நாற்றம் வரும் என எதிலோ படித்த ஞாப்கம் அவரை dog மிகவும் விரும்பி கடிக்கும்.???]இன்பம் துன்பம், லாபம் நஷ்ட்ம், மேடு பள்ளம் ,வாழ்க்கையல் வர வேண்டியது வந்தே தீரும்.. என்ன நம் போன்றவர்கள் சரி நமக்கு அடுத்தார் போல் இன்ன திசை வரும் இதில் இன்ன பலன் !சமாளிப்போம் !!இதில் என்ன வகை புண்ணியம் ஈட்டலாம்..எப்பிடி இறைவன் திருவடி அடையலாம்.. என்றே சிந்திக்கிறோம் !!{வகுப்பறை மூத்த மாணவர்களின் அறிவுரை }நன்றி சார்!! விசு அய்யர் சார்... என்ன ?? attendance ..மட்டும் கொடுத்தால் எப்பிடி.. ?? உங்க பாணி கமெண்ட்ஸ் உரை நடையல கொடுங்கா .... நன்றி (நீங்கள் கொடுக்க போகும் கமெண்ட்ஸ் க்கு }

    ReplyDelete
  4. "மனைவிதன்னை விட்டேகி மலையாண்டிஆவான்"
    இது கொஞ்சம் சரிதான். சுக்கிர தசா சூர்ய புக்தி காலத்தில் குடும்பத்தில் இருந்தாலும் ஒரு துறவி போன்ற வாழ்க்கைதான் வாழ்ந்தேன்.

    சூர்ய தசா சுக்ர புக்தி 2014ல்தான் வருகிறது. பார்ப்போம் என்ன செய்கிறது என்று.
    மனைவிக்கு 'சிலுக்கு"ண்டாகும் என்றால்...? சீக்கோ?அதாவது வியாதியோ?

    ReplyDelete
  5. ///////
    Blogger kmr.krishnan said...
    மனைவிக்கு 'சிலுக்கு"ண்டாகும் என்றால்...? சீக்கோ?அதாவது வியாதியோ?/////////

    எனக்குத்தெரிஞ்சதெல்லாம் அந்த
    "நேத்து ராத்திரி யம்மா....தூக்கம் போச்சுடி யம்மா" 'சிலுக்கு'தான்...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com