5.4.11

Astrology நியமன உத்தரவா அல்லது நிறுத்த உத்தரவா எது வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  நியமன உத்தரவா அல்லது நிறுத்த உத்தரவா எது வேண்டும்?

இரண்டு நிலைப்பாடுகள் எதிலும் உண்டு. எப்போதும் உண்டு. அந்த இரண்டில் ஒன்று நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். மற்றொன்று துன்பத்தைத் தருவதாக இருக்கும்.

மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வை மனம் ஏற்றுக்கொள்ளும். துன்பத்தை ஏற்றுக் கொள்ளாது. மனம் துவண்டு போகும்.

“நானே நொந்துபோயிருக்கிறேன். நீ வேறு என் உயிரை வாங்காதே” என்று நம் மீது அன்பு  வைத்திருப்பவர்களைக்கூட நம்மைக் கடிந்து கொள்ள வைக்கும்.

வேலை நியமன உத்தரவு, வேலை நிறுத்த உத்தரவு என்ற இரண்டு நிலைப்பாடுகளை அதற்குப் பொது உதாரணமாகச் சொல்லலாம். அதுபோல விவாகம். விவாகரத்து. லாபம். நஷ்டம்.

இதுபோன்ற அதீதமான, நம்மால் தாங்க முடியாத நிலைப்பாடுகளைத் தவிர்க்க முடியுமா? முடியாது!

இரண்டு தீய கிரகங்கள் ஒன்று சேரும்போது, அவ்வாறான நிலைப்பாடுகளை - அதாவது நிலைமைகளை  அவைகள் சர்வசாதாரணமாக உண்டாக்கிவிடும். கேதுவும், சனியும் ஒன்று சேர்ந்து ஒரு திசை/புத்தியை நகர்த்தும்  காலம் அப்படித்தான் இருக்கும். கேது திசையில் சனிபுத்தி கேடுகள் நிறைந்ததாக இருக்கும். அதே போல  சனிதிசையில் கேதுபுத்தியும் கேடுகள் நிறைந்ததாக இருக்கும்

அவற்றின் கால அளவு 13 மாதங்கள் + ஒன்பது நாட்கள். அந்த நாட்களைப் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டி  முடிப்பதே நாம் செய்ய வேண்டிய வேலையாகும்.

அடுத்த திசைபுத்தி நன்மையைத் தரும். அதுவரை பொறுமையாக, நம்பிக்கையோடு இருப்போம் என்று இருப்பது  புத்திசாலித்தனமாகும். இறைவாழிபாட்டுடன் அக்காலத்தைத் தள்ளுவது அதிபுத்திசாலித்தனமாகும்!

அவற்றிற்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்து மனதில் வையுங்கள்

தானென்ற கேதுதிசை சனியின்புத்தி
   தாழ்வான மாதமது பதிமூன்றாகும்
நாளென்ற நாளதுவும் ஒன்பதாகும்
   நலமில்லா அதன் பலனை நவிலக் கேளு
வானென்ற வான்பொருளும் கேடுவாகும்
   வகையான மனைவியுடன் மக்களதுவும்போம்
மானென்றபதி மூன்றில் மரணமாவான்
   மனக்கவலை ரெம்ப உண்டு மாள்வான்பாரே!

ஆமென்ற காரிதிசை கேதுபுத்தி
   அருளில்லா மாதமது பதிமூன்றாகும்
போமென்ற நாளதுவும் ஒன்பதாகும்
   புகழில்லா அதன்பலனை புகலக்கேளு
தாமென்ற தலைவலியும் கண் ரோகமாகும்
   தப்பாது பாண்டுவுடன் தனப்பொருளுஞ் சேதம்
நாமென்ற சத்துருவால் முத்தண்ட முண்டாம்
   நன்மையுள்ள மாதரால் கெர்ப்பமது பாழாம்!


அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

8 comments:

  1. சனி தசா கேது புக்தி மிகச் சிறிய வயதில் போய் விட்டது.கேது தசா சனி புக்தியில் ஆன்மீகமும், சேவை மனப்பான்மையும் பிடித்துக்கொண்டது. பாடல்கள் எளிமையாக உள்ளன.நன்றி அய்யா!

    ReplyDelete
  2. Dear Sir,

    Present sir.

    Lessons are easily understood by the poem.

    Thank you

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா!

    தாங்களுக்கு தெரியாதா எது நல்லது என்று.

    எல்லாம் சித்தம் போல நடக்கட்டும்.

    ReplyDelete
  4. டியர் சார்!
    ரெடி போர் துடி.

    ReplyDelete
  5. ///இறைவாழிபாட்டுடன் அக்காலத்தைத் தள்ளுவது அதிபுத்திசாலித்தனமாகும்!///

    அப்படி குறிப்பிட்டபடி சொன்னால்
    அதிபுத்திசாலி பட்டியலில் அய்யர்

    "நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர்
    அன்று ஆங்கால் அல்லற் படுவது எவன்"
    என்ற திருக்குறளினை சிந்தனைக்கு வைத்து

    வருகை பதிவினை தருகிறேன்

    ReplyDelete
  6. ஐயா, பாடங்களும் பாடல்களும் அருமை. எனக்கு கேதுவில் சனி தசை தான் நடக்கின்றது... ஆண்டவனின் திருவடிகளைத்தான் பற்றியுள்ளேன். ஆனாலும் தாங்கள் பரிகாரங்கள் ஏதேனும் இருந்தால் கூறவும் ‍
    -ஜாவா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com