23.3.11

வாசல் தோறும் என்ன இருக்கும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாசல் தோறும் என்ன இருக்கும்?

    "ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை  உண்டு" என்று நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி சுட்டிக்காட்டுகின்றது.

    பொருட்களுக்கு மட்டுமல்ல, மனித செயல்பாடுகளுக்கும் அந்த விதி பொருந்தும். அதைத்தான்  பெரியவர்கள் நல்லதையே நினை. நல்லதையே செய் என்று சொல்லுவார்கள். முற்பகல் செயின், பிற்பகல்  விளையும் என்பார்கள்.

    நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. இரவு, பகல். உறவு, பகை. இன்பம் துன்பம். வறுமை  செழுமை. பெருமை, சிறுமை. என்று இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.

    ஆகவே இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை நமக்கு வந்துவிட்டால்  எந்தப் பிரச்சினையும் இருக்காது.

    “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்
    இறைவன் வகுத்த நியதி”

    என்றார் கவியரசர் கண்ணதாசன்

    எதற்காக இத்தனை பில்ட் அப்’ என்றால் தசா புத்திகளில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். தீமையான தசா புத்தி கடந்து செல்லும் காலத்தில் பொறுமையாக இருத்தல் அவசியம். கலங்காமல் திடமாக
இருத்தல் அவசியம். சொல்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால் கடைபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். இருந்தாலும் என்ன செய்வது தாக்குப் பிடிக்கத்தான் வேண்டும். இறைவழிபாடு அதற்கு உறுதுணையாக இருக்கும்

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
       வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வந்தாலும்
       வாடி நின்றால் ஓடுவதில்லை
       வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
       இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

    என்றார் கண்ணதாசன். நாம் வாடி நிற்பதால், எதுவும் நம்மை விட்டுப்போகாது. நாம்தான் அனுபவித்தாக வேண்டும்.

    கேது திசையில் அடுத்து வரும் சூரிய புத்தி சிலாக்கியமாக இருக்காது. அதுபோல சூரிய திசையில்,  கேதுவின் புத்தியும் நன்மையளிக்காது. அது சொற்பகாலமே என்பதால் தாக்குப் பிடிக்க வேண்டும். தாக்குப் பிடித்து அதைத் தள்ளிவிட வேண்டும். அவற்றிற்கான பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பயன்  பெறுக!

பாரப்பா கேதுதிசை சூரிய புத்தி
   பாங்கான நாளதுவும் நூத்தி இருபத்தி ஆறு
பாரப்பா அதன் பலனைச் சொல்லக்கேளு
   ஆகாத சத்துருவால் அக்கினியும் பேயும்
சேரப்பா சேர்ந்ததுமே கூடிக் கொல்லும்
   சேர்ந்து நின்ற தந்தை குரு மரணமாகும்
வீரப்பா வீண் சிலவு மிகவேயாகும்
   வீடுவிட்டு காஷாயம் பூணுவானே!

ஆமென்ற ரவிதிசையில் கேதுபுத்தி
   ஆகாத நாளதுவும் நூற்றியிருபத்தாறு
போமென்ற அதன் பலனைப் புகழக் கேளு
   பொருந்துகின்ற காரியங்கள் சேதமாகும்
நாமென்ற மனைவிதன்னை நாசம் பண்ணும்
   நலமில்லா சத்துருவும் நல்குவான் பார்
தாமென்ற இருந்தவிடம் விட்டே கலைக்கும்
   தரணிதனில் தண்டம்வரும் சார்ந்துகேளே


அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

9 comments:

  1. நியூட்டனின் விதியைச் சொல்லி நம் விதி/மதியைச் சொன்ன ஐயா அவர்களே! பாடம் அருமை.காலை வேளையில் முதல் வேலையாக வகுப்பறைக்கு வருவதை வைத்துக் கொண்டு விட்டேன்.இன்றுமுதல் 5 நாட்கள் வெளியூர் பயணம். எனவே முடிந்தால் தான் பின்னூட்டம்.நன்றி.!

    ReplyDelete
  2. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

    அனைவரும் மனதில் இருத்திக்கொள்ள
    வேண்டிய வரிகள் ஐயா ...

    ReplyDelete
  3. Dear Sir,
    Thank you for your lessons about dasa and antardasa.
    I feel that this dasa effect will be varied according to the placement of planets either in friendly or enemy or uchha or neecha signs.
    if i am wrong pl correct me.
    Thank you sir.

    ReplyDelete
  4. //தசா புத்திகளில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். தீமையான தசா புத்தி கடந்து செல்லும் காலத்தில் பொறுமையாக இருத்தல் அவசியம். கலங்காமல் திடமாக
    இருத்தல் அவசியம்.//

    அப்பட்டமான அவசியமான உண்மை அய்யா.. தாக்குப் பிடிக்க வேண்டும். இந்த தாக்குப் பிடித்தலிலேயே மனம் பதப்பட்டுவிடும்..

    அருமை.

    ReplyDelete
  5. வாத்தியாரே வணக்கம்ங்கோ!

    நீண்ட நாளைய ஆராட்சி சந்தேகத்தை விவாதம் செய்யும் அளவிற்கு இன்றைய பாடம் உள்ளது.

    சரி,

    மாணவனின் கேள்வி இதுதான் ஒருவர் செய்யும் பாவம் " ஏழு ஏழு தலை முறைக்கு" பின்தொடரும் என்று கூறுகின்றார்களே ஐயா

    அப்படி ஏழு ஏழு தலை முறைக்கு தொடர்வாது எந்த விதத்தில் தர்மம் ஐயா

    சில இடத்தில மகன் செய்யும் காரியம் தந்தைக்கு பிடிப்பது இல்லை. அதனை போலதான் தந்தை செய்யும் காரியமும் மகனுக்கு பிடிக்காமல் போகும் பொழுது, ஒருவர் செய்யும் கர்மம் அவருடைய ஜீனில் ஜனித்த ஒரு கர்மதிர்க்காக பிள்ளையையும் தொடர்வது நியாயமா ?

    முக்கியமான கேள்வி இதுதான்
    கடந்த நூறு வருட வாழ்க்கை சரித்திரத்தை பார்த்தீர்கள் என்றால் நிறைய குடும்பங்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு மற்றவருக்கு உரிமையான சொத்தை தானே தன்னோடு மட்டும் அல்லாமல் வாழை அடி வாழையாக சுகமாக எந்த வித குறைவும் இல்லாமல் உண்டு உறங்கி வாழ்கின்றார்களே அது மட்டும் எப்படி சாத்விக படுகின்றது

    சிவன் சொத்து குலநாசம் என்பது எல்லாம் வெறும் சொல் அளவில்தானா ஐயா ?
    --

    ReplyDelete
  6. :)))
    பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு அய்யா.

    ReplyDelete
  7. Where is Nandagopal? Those who give information will be rewarded.He is missing now for the past 1 month.

    Nandagopal! Please return to the classroom soon. kmr.krishnan and friends are worried. Send sms or mail
    about your welfare.

    ReplyDelete
  8. ///இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை நமக்கு வந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது///


    முள்ளால் கிழித்த பின்னும்
    முகம் சிரிக்கும் ரோஜா


    கல்லால் அடிவாங்கிய பின்னும்
    கனிதரும் அந்த பழமரங்கள்.. என


    இதைப் பார்த்தும்
    இன்புற மறந்த இவர்கள் இங்கே


    இன்பத்திற்கு தன்னை காரணமாக்கி
    துன்பத்திற்கு அடுத்தவரை கைகாட்டும்


    மனிதன் மட்டும் ஏனோ(மறைக்கிறான்)
    மறுக்கிறான் இந்த துன்பத்தை ..


    துன்பத்தை நண்பர்களிடம்
    பகிர்ந்து கொண்டால் பாதியாகுமாம்


    இன்பத்தை மற்றவரோடு
    இணைத்து விட்டால் இரட்டிப்பாகுமாம்


    சரி... இதோ சிந்தனைக்கு சில..


    அதிவீரராமன் பாடி வைத்ததை
    அப்படியே தருகிறேன்

    "வெற்றி வேர்க்கை" யில்இருந்து..

    யானைக்கு இல்லை தானமும் தவமும்
    பூனைக்கு இல்லை தவமும் தயையும்
    ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்


    என்ற சிந்தனையுடன்
    எனது ஒலிப் பெட்டியிலிருந்து வரும்
    இந்த திரைப்பாடலினை கேட்டபடியே

    "இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்


    நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்"



    இந்தப் பின் ஊட்டம்

    ReplyDelete
  9. "துன்பம் எனக்கானது, இன்பம் உனக்கானது
    எனக்கானதை நான் எடுத்தக் கொள்கிறேன்
    உனக்கானதை உன்னிடமேத் தந்துவிடுகிறேன்"

    பதிவிற்கு நன்றி சார்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com