11.3.11

எங்கும் மணம் பரப்புவது எது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கும் மண்ம் பரப்புவது எது?


எங்கும் மணம் பரப்புவது எது என்று ஒரு கவிஞர் அழகாகத் தன் பாடலில் சொல்லியுள்ளார். இன்றையப் பக்தி மலரில் அதைக் கொடுத்துள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே
அவன் ஈராறு கைகளாம் தாமரையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்


பாடல்: தங்க மயம் முருகன் சந்நிதானம்
பாடியவர்: திரு. சீர்காழி கோவிந்தராஜன்



வாழ்க வளமுடன்!

5 comments:

  1. மைனர் வால் ...
    நலம் தானே..

    அவர்களுக்காக பிரார்த்திக்கின்றோம்,

    ReplyDelete
  2. vanakam..
    sorry to distrub this
    platform...tsunami in japan""our co-student Mr Minarwall. is alright.. please verify..

    ReplyDelete
  3. ஐயா,
    சற்று முன்பு ஒரு தளத்தில் (http://www.livingextra.com/) ஆன்மிகம் சம்பந்தமாக சில தகவல்களைக் கண்டேன்.
    தற்செயலாக அதில் ஜோதிடப் பாடமும் தென்பட்டது.
    அச்சு அசலாக வகுப்பறையின் வசனங்கள்.
    அட்டவணைகள் அனைத்தும் அப்படியே நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
    தயவுசெய்து கவனிக்கவும்.

    ReplyDelete
  4. சீர்காழியாருக்குப் பாடல் எழுதிக்கொடுத்தது அவருடைய மைத்துனர் உளுந்தூர்பேட்டை சண்முகம் ஆவார். இந்தப்பாடலும் பெரும்பாலும் அவர் எழுதியதாகத்தான் இருக்கவேண்டும்.


    ஜப்பான் சுனாமி கலக்கத்தைக் கொடுக்கிறது.தீ வேறு பற்றி எரிகிறதாம்.மைனர் வாள் எப்படி இருக்கிறீர்கள்?


    இறந்தவர்களுக்காகப் பிரார்த்திப்போம்.மோட்சதீபம் ஏற்றுவோம்.துன்பத்தில் உள்ள ஜப்பானுக்காகப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com