19.2.11

நவீன தகப்பன் சாமி!


--------------------------------------------------------------------
நவீன தகப்பன் சாமி!

இன்றைய இளைஞர் மலரை நமது தில்லி வாசகியின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. அப்படியே  கொடுத்துள்ளென். படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++
தகப்பன் சாமி

'அப்பா இன்னிக்கு நீங்க எனக்கு bat வாங்கித் தரப்போறீங்களா இல்லையா?' காதைப்பிடித்துத் திருகிக்கொண்டே  கேட்டான் சம்பத்.

ஏங்க?  எத்தனை நாளா அவனும் கேட்டுகிட்டிருக்கான்?  நாளைக்கு
அவனோட பத்தாவது பிறந்தநாள் வேற.  வாங்கித்தந்தாதான் என்ன?
செலவு ஒவ்வொரு மாசமும் இருந்துகிட்டேதான் இருக்கும்.
இருக்கறது ஒரு பையன். அவனுக்கு வாங்கித்தராம வேற யாருக்கு வாங்கித்தரப்போறோம்?

சரிடா இன்னிக்கு கடைக்குப் போகலாம்.  ஆனா நானூறு ரூபாய்க்குள்ளதான் வாங்கித்தருவேன்.

நிஜமா?

நிஜமாதான்.

சரிங்கப்பா கன்னத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டே சொன்னான்.  ஏஏஏஏஏ என்று கத்திக்கொண்டே விளையாட  வெளியில் ஓடிவிட்டான்.

----------

சொன்ன  சொல்லைக்காப்பாற்ற  சாயங்காலம் அவனை ஒரு
நடைபாதை யோரக் கடைக்கு அழைத்துக்கொண்டு  வந்துவிட்டேன். 
என்ன செய்வது?  அவன்  கேட்கும்  எல்லாவற்றையும்  வாங்கித்தர  ஆசைதான்.  ஆனால் நான்வாங்கும் சம்பளம் அப்படி.  வாய்க்கும் 
கைக்கும் சரியாக இருக்கிறது.

என்னங்க வேணும்?

ஒரு முன்னூறு - நானூறு ரூபாய்க்குள்ள ஒரு bat காமிங்க.

கடைக்காரர் எடுத்துக்காண்பிக்கும் எல்லாவற்றையும் ஆசையாகத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தான். 

கடைசியில் அவனுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு கூடவே ஒரு பந்தையும் வாங்கினேன்.  நான்  போட்டிருந்த பட்ஜெட்டுக்குள்ளேயே அடங்கியதில் மகிழ்ச்சியுடன் கடைக்காரர் சொன்ன பணத்தைக்கொடுத்தேன். 

'வா போகலாம்!'

ஏய் கூப்பிடறது காதுல விழலையா?  அங்க என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க?

அப்போதும் அவன் திரும்பாததால் அவன் பார்க்கும் திசையில் பார்த்தேன்.  ஒரு பெண் தன் அழும் பையனைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள்.

வாப்பா,  இப்ப கையில காசு இல்ல, காசு வந்தப்புறம் இதே கார் பொம்மையை வாங்கித்தாரேன்.

தோற்றத்தைப் பார்த்தாலே அவளின் ஏழ்மை புரிந்தது.  அந்தப் பையனுக்கு ஒரு நாலைந்து வயது இருக்கலாம்.

'அப்பா' கூப்பிட்டபடியே திரும்பி என்னைப் பார்த்தான்.

என்னடா?

அந்த கார் பொம்மை அழகா இருக்குப்பா.

உன்கிட்ட என்ன சொல்லிக் கூப்பிட்டுட்டு வந்தேன்?  இப்ப அந்த பொம்மை யையும் கேட்டா என்ன அர்த்தம்?

அப்பா இந்த ஒரு தடவை மட்டும்பா.  தயவுசெஞ்சு வாங்கித்தாங்கப்பா.

அவனுடைய கெஞ்சும் முகத்தைப்பார்த்ததில் கொஞ்சம் மனம் இளகியது.

இது என்ன விலைங்க?

நூத்தி பத்துங்க.

வாங்கிக்கையில் கொடுத்தேன்.  'இனிமே வேற எதுவும் கேட்காதே'.

வாங்கியவன் நேராக அந்த குழந்தையிடம் போகவும் குழப்பத்துடன் பார்த்தேன்.

ஏய் இந்தா நீ விளையாடு!

அவன் அம்மா தயங்கியபடியே என் முகத்தைப் பார்க்க, உள்ளுக்குள் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு  சொன்னேன் 'பரவாயில்ல, வாங்கிக்குங்க'.

அந்தப் பையனின் கண்களில் சந்தோஷ மின்னல்.

--------------

திரும்ப வரும்போது பையனிடம் எதுவுமே பேசவில்லை.  அவனும்தான்.  யோசித்துப் பார்த்ததில் உள்ளுக்குள்  கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது.

அம்மாகிட்ட வாங்கினதைக் காமி!

காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் உள்ளே ஓடியவன் தன்னுடைய உண்டியலை எடுத்துக்கொண்டு ஓடிவந்தான்.

அப்பா இந்தாங்க, இதுல இருக்கிற காசை எல்லாம் நீங்க எடுத்துக்கங்க.

எதுக்குடா?

இல்லப்பா, நீங்க சொன்னதைவிட அதிகமா செலவாயிடுச்சு இல்ல அதான்.  எனக்கு அந்த பையனைப் பார்த்தா பாவமா இருந்துச்சா?  அதான் உங்ககிட்ட எனக்குன்னு சொல்லி வாங்கிட்டேன்.

மனைவி புரியாமல் இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டி ருந்தாள்.

'இல்லப்பா நீயே வெச்சுக்கோ, பரவாயில்லை' தீர்க்கமாகச் சொன்னேன்.  சற்றுமுன் இருந்த கோபமெல்லாம் பறந்து போயிருந்தது.

இந்த தகப்பன் சுவாமியிடம் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம்: திருமதி. எஸ்.உமா, தில்லி
-


வாழ்க வளமுடன்!

34 comments:

  1. குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்

    ReplyDelete
  2. /////ஏய் இந்தா நீ விளையாடு!
    அவன் அம்மா தயங்கியபடியே என் முகத்தைப் பார்க்க, உள்ளுக்குள் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன் 'பரவாயில்ல, வாங்கிக்குங்க'.
    அந்தப் பையனின் கண்களில் சந்தோஷ மின்னல். //////
    உமா அருமையான கதை...
    பாடம் கற்பிக்க வயது ஏது....
    சிறியவனாக இருந்தாலும்...
    நல்லவிசயத்தை யார் செய்தாலும்
    பாராட்ட வேண்டும்.... என்ற கருத்து
    அற்புதம்...
    உள்ளுக்குள் வந்தக் கோபம்... எதார்த்தம்...
    ஏய் இந்தா நீ விளையாடு!..... ஆத்மார்த்தம்....

    ReplyDelete
  3. நல்ல பதிவு ஐயா.
    வணக்கம்.

    ReplyDelete
  4. மனித மனங்களின் ஓட்டத்தையும், அவற்றில் ஏற்படும் தாக்கங்களையும் மனோதத்துவப் பார்வையில் எழுதியுள்ள இந்தப் பகுதி திருமதி உமாவின் எழுத்தாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. தொடர்ந்து எழுதுங்கள். வெகுஜன பத்திரிகைகளுக்கும் எழுதி அனுப்புங்கள், ஒரு நல்ல எழுத்தாளராக வருவதற்குரிய திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஐயா

    உள்ளம் கொள்ளை போகும் அளவீர்க்கு கருத்து உடன் கூடிய அருமையான கதையை தந்த பாச மலர் அக்கா விற்கு எமது தம்பியின் பாராட்டுகள்.

    ReplyDelete
  6. கடவுளும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    என்பதை நினைவூட்டியிருக்கிறீர்கள்,

    நல்ல செய்தி சகோதரி ,, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஐயா!

    யாம் வசிக்கும் "கத்தார் ", நாட்டில் நேற்று தான் ஒரு நமது பங்காளி சொந்தங்கள் ஆன மலையாள தேசத்தை சார்ந்த ஒரு " ஜோதிடரை", கண்டேன். எமது ஜாதகத்தை ஆராட்சி செய்யும் பொருட்டு.

    அவர்களிடம் வாத்தியாரின் வகுப்பறை பற்றிய தகவல்களை கூறி இணையதளம் மூலமாக காண்பித்தேன் .

    வகுப்பறையை கண்ட உடன் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தோசத்தின் அளவை இங்கு கூற வார்த்தைகள் இல்லை .

    கலி உகத்தில் கூட அதுவும் இணைய தளத்தின் மூலமாக பாடம் நடத்தும் வாத்தியாரின் பெருந்தன்மையை நினைத்து வியந்தார்கள் .

    ReplyDelete
  8. ஐயா

    மலையாள சகோதரி ஜோதிடருக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்பது மட்டும் தான் குறை .

    அவர்கள் கேட்டார்கள் தமிழை மலையாளத்தில் மொளிபெயத்து தந்தால் என்னை போன்ற நிறைய பெயருக்கு மிகவும் உபயோகமாக அதே நேரத்தில் எதீர்கால ஜோதிடதீர்க்கு ஒரு வரபிரசாதமாக இருக்கும் என்பது அவர்களின் கூற்றாக இருந்தது ஐயா.

    நமது வகுப்பறைக்கு வரும் மென்பொருள் வல்லுனர்கள் இந்த புண்ணிய காரியத்தை செய்து கொடுத்தால் வகுப்பறை ஆனது மொழி கடந்து கற்பக விருட்சமாக வளர்ந்து எண்ணற்ற மாணவ மணிகள் உருவாக வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  9. ஐயா!

    மேலே யாம் கூறி உள்ள சகோதரி ஜோதிடத்தில் ஆராட்சி படிப்பு (Phd) படிக்க போகின்றார்கள்.

    அந்நிய தேசம் ஆன கத்தார் நாட்டில் இருந்து கொண்டு enpathu சிறப்பு செய்தி.

    ReplyDelete
  10. யா!

    மேலே யாம் கூறி உள்ள சகோதரி ஜோதிடத்தில் ஆராட்சி படிப்பு (Phd) படிக்க போகின்றார்கள் அந்நிய தேசம் ஆன கத்தார் நாட்டில் இருந்து கொண்டு enpathu சிறப்பு செய்தி.

    எனக்கு தெரிந்த நபர்கள் மட்டும் இருவர் அடங்குவார்கள் ஒருவர் phd செய்தவர் மற்றவர் செய்ய போகின்றவர் . இவர்களின் மூலமாக இன்னும் எத்தனை பெயருக்கு தெரிய போகின்றது வகுப்பறையை பற்றி .

    ஒரு நல்ல காரியம் ஆரவாரம் இல்லாமல் அமைதியான நடக்கின்ற செய்தி!.

    ReplyDelete
  11. ஐயா

    நேற்று ஒரு சிறுவனை பார்த்தேன் அந்த சிறுவனின் ஜாதகத்தில் ௬ கிரகங்கள் உச்சமாக இருப்பதாக கேள்வி பட்டேன்.

    இந்த சிறுவனின் எதீர்காலம் மிகவும் சிறப்பு வாந்ததாக தானே இருக்கும் ஐயா

    ReplyDelete
  12. நன்றி தொரைராஜ்!

    ReplyDelete
  13. ஆலாசியம், உங்கள் பாராட்டுக்கு மனமுவந்த நன்றிகள்.

    ReplyDelete
  14. நன்றி ரத்தினவேல்!

    ReplyDelete
  15. கோபாலன் சார், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல. உங்கள் ஊக்குவிக்கும் குணத்திற்குத் தலைவணங்குகிறேன். கண்டிப்பாகத் தொடர்ந்து எழுதுகிறேன்.

    ஒரு நல்ல எழுத்தாளராக வருவதற்குரிய திறமை இருக்கிறது. //

    இதப்படிக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  16. கண்ணன், உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  17. எடப்பாடி சிவம், உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  18. வகுப்பறையை கண்ட உடன் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தோசத்தின் அளவை இங்கு கூற வார்த்தைகள் இல்லை//

    கண்ணன் அது இருக்கட்டும். உங்க ஜாதகத்தைப்பார்த்துட்டு என்ன நல்ல செய்தி சொன்னாரு? அதச் சொல்லுங்க.

    ReplyDelete
  19. அன்புடன் வணக்கம் திருமதி உமா - பிறர் துன்பம் கண்டு இரக்கம் கொள்வது எல்லோருக்கும் வருவதில்லை அது போன்ற ஒரு மகவை பெற.. கொடுத்து வைத்திருக்கக் வேண்டும்.. அந்த பெரிய மனிதருக்கு வணக்கம் எடுத்து எழுதிய உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. கணபதி சார், தங்களின் பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  21. iyaa!

    ஜோதிட சகோதரி கூறினார்கள்

    இராமேஸ்வரம் கோவில் எவலவி மகத்தானது ஆனால் அதனை பராமரிப்பது மிகவும் கேவலாமா
    இருக்கு என்று வேதனை பட்டார்கள்


    வேறு ஒரு தேசத்தில் காணாத ஒரு சிறப்பு தமிழகத்தில் உள்ளது என்று

    அது தான் கரும் கற்களால் ஆன மாபெரும் கோவில்கள்.



    எம்முடைய ஜாதகத்தி பார்த்து கூறியது .

    அவர்கள் கூறியது
    ( அவர்களுடைய கணிப்பு படி )

    லக்னத்தில் இருந்து 5 இடத்தில்
    " குரு", உள்ளதால் யவர்
    " வேக பந்து" வீசினாலும் சமாளிக்கும் திறமை உண்டு என்றும் குழந்தை பாக்கியம் தாமதமாக தான் கிடைக்கும் என்றும் , அப்படி தாமதமாக கிடைக்கும் குழந்தை மிகவும் புத்திசாலியாக இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறினார்கள்

    திரு வாளர் மாந்தி அவர்கள் 11 இடத்தில உள்ளதால் எதனையும் போராடித்தான் பெற வேண்டியது இருக்கும் என்றார்கள்

    நவாம்சத்தில் 4 ல் புதன் உள்ளதால் என்ன படித்தாலும் மண்டைக்கு ஏறும் என்றார்கள் .

    அதற்க்கு உரிய திசையில் சிகரத்தை தொடுவீர்கள் என்றார்கள்

    இந்த ஜாதகத்தை பொறுத்தவரைக்கும்
    யாம் கூறுவது நடந்தே தீரும் என்றார்கள் .

    சந்நியாசம் இல்லவே இல்லை என்றார்கள்.

    முன்பாதி சந்நியாச வாழ்க்கையாகி விட்டமையால் பின் வாழ்க்கை அருமையாக இருக்கும் என்றார்கள்.

    இல்லாள் சொல்லுவதை கேட்டு நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றார்கள்.

    கல்யாணத்தில்,
    யார் எது சொன்னாலும் தனக்கு பிடித்த பெண்ணை தான் கல்யாணம் செய்வீர்கள் என்றார்கள் .


    பாவி அதாவது எதீர்காலம் முன்னொட்டு அதாவது உயர்வை நோக்கிய செல்லும் என்றார்கள்.


    கும்ப லக்னம் என்பதனால் செல்லத்தை சிக்கனம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும் என்றார்கள் .


    பொதுவாகவே கும்ப லக்னத்தில் பிறப்பவர்கள் தாராள மனப்பான்மையுடன் இருப்பார் என்பது என்னுடைய கணிப்பு என்றார்கள் .

    ReplyDelete
  22. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தகப்பன் சாமி அருமையான பதிவு.தற்காலக்குழந்தைகள் அறிவு பூர்வமாக‌
    மிகவும் விரைவில் வளர்ந்து உள்ளனர். அவர்களை நாம் ஊக்குவித்தாலே
    போதுமானது. பதிவர் சகோதரி திருமதி.உமா அவர்களுக்கு எனது மனமார்ந்த‌
    பாராட்டுக்கள்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  23. iyaa

    குரு பகவான் 5 இடத்தில இருப்பது தான் எம்முடைய ஜாதகத்தின் சிறப்பு என்றார்கள் .


    மேலும் லக்னத்தில் இருந்து 12 இடம் அல்லது சந்திரனில் இருந்து
    12 இடத்தில குரு இருந்தால் பூர்வ ஜென்ம பாவம் என்றார்கள்.

    லக்னத்தில் இருந்து 5 தில் குரு இருந்தால் மனது நன்றாக இருக்கும் என்றார்கள்.

    கண்ட்ரோல் ரூமே அவருடைய கட்டு பாட்டில் வந்து விடுவதால் எந்த சூழலையும் தாண்டி வரும் சக்தியை தருவார் என்றார்கள்.

    சங்கர நாராயணனை வணக்க சொன்னார்கள்.

    லக்னாதிபதி சனி இருப்பது 6 இல் அவருடைய சக்தியை உள்நோக்கி பார்த்து ஆராய்ந்தால் அவரின் சக்தி ஆனது விரக்தி மனப்பான்மையை தான் தரும்.

    அதனில் இருந்து நிவர்த்தி பெற சிவனால் தான் முடியும் என்றும் , ஏற்கனவே 5 தில் குரு உள்ளதால் விஷ்ணுவின் மேல் அதிகபடியான நாட்டம் தன்னாலே ஏற்பட்டு உள்ளது . சிவனும் சேர்த்தல் நன்றாக இருக்கும் என்றார்கள் .

    முக்கியமாக சூரிய திசை என்பதனால் சிவனை வணக்குவதால் கல்யாணம் முதல் அனைத்தும் நன்றாக இருக்கும் என்று கணித்து கூறி உள்ளார்கள்
    பாச மலர் சகோதரியே !.

    ReplyDelete
  24. சகோதரி!
    மனசைத் தொட்டுட்டீங்க...!

    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  25. பதிவு அருமை. நன்றிகள் பல.

    நன்றி,
    சே.அமுதன்

    ReplyDelete
  26. அரசு, தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  27. சகோதரி! மனசைத் தொட்டுட்டீங்க...! //

    நன்றி திருவேல் முருகன்.

    ReplyDelete
  28. அமுதன் சேகர், தங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  29. எடம்படி சிவா ச்கோதரர்,
    உஜிலாதேவில்ல குருஜி சைவ அசைவ உணவு பற்றி போட்டிருந்தார் நீங்க நல்ல் பாட்டு எழுதியிருந்தீங்க மனப்பாடமா இல்ல புக்க பார்த்து எழுதினீங்களா
    நீங்க யார் த்மிழ் வாத்தியாரா நான் இங்க தான் பேசுவேன் ஹி ஹி

    ReplyDelete
  30. இந்த கதையை ஏதோ வெளிநாட்டு பத்திரிகையில் படித்த ஞாபகம் இருக்கு..

    ஆனாலும் அழகு தமிழில் புதிய நடையில் எளிய முறையில் எடுத்துச் சொன்ன வகுப்பறையின் அன்பு சகோதரி பெண் ராஜேஷ் குமார் அவர்களுக்கு நன்றிகள்.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

    இன்றைய காலத்து பிள்ளைகள் அறிவாளிகள் மட்டுமல்ல கருணை உள்ளவர்களும் என்பதை சுட்டிக் காட்டியமைக்கு ஒரு சபாஷ்..

    அது சரி அந்த உண்டியல்ல எவ்வளோ காசு இருந்துச்சு ..

    ReplyDelete
  31. கடைசி சீன்லே உண்டியலை உடைக்கும் காட்சி..
    சம்பத் என்ற அந்தச் சிரியவரைப் பெரியவராக்கி விடுகிறது..வழக்கம் போல் சலிக்காமல் தொடர்ந்து எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  32. இந்த கதையை ஏதோ வெளிநாட்டு பத்திரிகையில் படித்த ஞாபகம் இருக்கு..//

    அவ்..... இது நானே சொந்தமா யோசிச்சு எழுதினது. நீங்க சொல்றது ஆச்சரியமா இருக்கு.

    உங்கள் வாழ்த்துக்கள் / பாராட்டுகளுக்கு நன்றிகள்.

    அது சரி அந்த உண்டியல்ல எவ்வளோ காசு இருந்துச்சு ..// என்ன ஒரு நூறு / இருநூறு ரூபா இருந்திருக்குமாயிருக்கும்.

    ReplyDelete
  33. எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்..//

    ரொம்ப நன்றி. போன தடவை நான் உங்களை ஓட்டினேன்னு இந்த தடவை சுருக்கமா முடிச்சிட்டீங்களோ? உங்க டச் சுத்தமா இல்ல. நீங்க உங்க 'வழக்கமான' பாணியிலேயே எழுதுங்க. இது யாரோ மண்டபத்தில உங்களுக்கு எழுதிக்கொடுத்த மாதிரி இருக்கு.

    ReplyDelete
  34. //////Uma said... உங்க டச்சே இல்ல.. இது யாரோ மண்டபத்தில உங்களுக்கு எழுதிக்கொடுத்த மாதிரி இருக்கு.////

    ஹா.. ஹா... கோவிச்சுக்காதீங்க மைனர் உண்மையில் உமாவின் இந்த வரி தான் சிரிக்க வைத்தது.... எனக்கும் அது தான் உண்மையாத் தெரியுது.. நேரமில்லைன்னு சொல்றது கேட்கிறது... அடுச்சுகிட்டாலும் புடுச்சிக்கிட்டாலும் (இதுவரை இல்லை இனியும் இருக்காது காரணம் எல்லோரும் வளர்ந்தவுங்கத் தானே..) நாமெல்லாம் வகுப்பறை மாணாக்கர்கள் தானே! எதார்த்தமாக சொல்றேன்.. நன்றி..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com