21.1.11

திருநாள் எது?

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பக்திமலர்: திருநாள் எது?

முருகனுக் கொருநாள் திருநாள் - அந்த
முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக்குகொருநாள் திருநாள் -நல்ல
கார்த்திகை பெருநாள் ஒருநாள்

(முருகனுக்.....)

வைகாசி விசாக திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொரு திருநாள்
கந்தன் கருணைபொழிகின்ற பெருநாள்

(முருகனுக்.....)

சரவணன் பிறந்த திருநாள் - அருள்
சந்தனம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒருநாள்
கந்தனின்காவடி ஆடிடும் பெருநாள்
வள்ளி குமரனின் மணநாள் - நம்
வாழ்வின் சுடரொளி பெருநாள்!

(முருகனுக்.....)

பாடல் ஆக்கம்: கனக கிருஷ்ணன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
இசை: குன்றக்குடி வைத்தியநாதன்



வாழ்க வளமுடன்!

9 comments:

  1. சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று ஒளவை மூதாட்டிக்கே பாடம் புகுத்திய அந்த பால முருகனின் அருள் பெறுவோம்... வேண்டும் முருகன் அருள்..... அருமையானப் பாடல்... பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    இன்றைய உலகில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் வேதம் தெரியாது. உலகிலேயே எளிமையான மொழி சமஸ்கிருதம். இஸ்ரேலியர்கள் ஹீப்ரூவை தேசிய மொழியாக்கியதைப் போல, நாமும் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்.
    -மியூசிக் அகடமியின் செயலர் பப்பு வேணுகோபால ராவ்
    உண்மைதான்.... சமஸ்கிருதம் தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும்... நிச்சயம் நடக்கும்..
    நன்றி தினமலர்...

    ReplyDelete
  2. அருமையானப் பாடல்... பதிவிற்கு நன்றிகள் ....
    http://sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    வைகாசி விசாக திருநாள்

    இதற்குப் பின்
    அந்த வள்ளிக் குமரனின் பெருநாள்
    செந்தூர் வேலனின் திருநாள்

    அதன்பின் ஒரு வரி மறந்துவிட்டது.
    பின்னர் கந்த சஷ்டிக்கொரு திருநாள்

    தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  4. Dear Sir

    Arumai Sir....

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  5. ///"உண்மைதான்.... சமஸ்கிருதம் தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும்... நிச்சயம் நடக்கும்.."///

    இதே கருத்தைக் கூறிய சமூக,அரசியல் தலைவர் போன தலைமுறையில் இருந்தார்.நான் கூறப் போகும் பெயர்/செய்தி சிலருக்குத் தெரிந்து இருக்கலாம்.
    சிலருக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.சிலர் நம்பாமல் கூட இருக்கலாம்.
    ஆனால் அதுதான் உண்மை.அந்தத் தலைவர் அண்ணல் பாபாசாஹிப் பீமராவ்
    அம்பேத்கர்!

    ReplyDelete
  6. அய்யா . .
    அந்த்தப்பாடலுக்காக காத்திருக்கிறோம்..

    "முருகன் திருநீறில் மருந்திருக்கு தெரியுமா . ."

    வரும் என்ற நம்பிக்கையில்..
    அந்த மாமருந்தை பெற . .

    உங்களுடன் நானும்.. நாங்களும்..

    ReplyDelete
  7. நல்ல அருமையான பாடல்.

    மந்திரங்களை உச்சரிப்பு பிழையின்றி படிக்கவும் வேறு சில காரணத்திற்காகவும் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பல நேரங்களில் எண்ணியதுண்டு. சரியான வாய்ப்புதான் அமையவில்லை. பல நூல்களின் மொழி மாற்றங்கள் கிடைத்தாலும் எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதும் தெரிந்துக் கொள்ள முடிவதில்லை.

    ReplyDelete
  8. அய்யா வணக்கம்
    உங்களுடய ஜோதிடபுத்தகம் வெளிவந்துவிட்டதா?
    அது எப்பொழுது வெளிவரும்?
    vaaththiyaar.blogspot.com அய் நான் வாசிக்க என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
  9. பாடல் நன்றாக உள்ளது.

    நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com