14.1.11

சர்வமும் நீதான் சண்முகநாதா!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சர்வமும்  நீதான்  சண்முகநாதா!

இன்றைய பக்தி மலரை முருகப்பெருமானின் பெருமையைச் சொல்லும் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்.
---------------------------------------------------
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முறை கேளாயோ குறை தீராயோ
மான்மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா - மனம் - உருகாதா

மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
(முருகா)

ஜன்மபாபவினை தீரவே பாரினில்
தனமே தேடி நின்றோம்
தவ சீலா சிவ பாலா
சர்வமும் நீயே சிவசக்தி வேலா
(முருகா)


பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன் அவர்கள்!

வாழ்க வளமுடன்!

2 comments:

  1. ஆசானே வணக்கம்.

    அனைவருக்கும் இனிய போனால் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. iyaa

    நடந்தவை அனைத்தும் வாழ்கையின் பாடமாக இருக்கட்டும்.

    இனிமேல் நடப்பது அனைத்தும் நல்லவையாக அமைய
    "திரு செந்தூர் திருசெந்தில் நாதா !" அருள் புரியும் ஐயா!

    இறைவன் துநிலிம் துரிப்பிலும் உள்ளான் என்கின்றனரே ஐயா ஆனால் யாம் எழுதும் மற்றும் மனதில் உள்ள ஏக்கம், சோகம் ,வேதனை உனக்கு கேட்க வில்லையா வேலவா ?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com