7.1.11

கந்தனுக்கு ஏற்றது எது?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கந்தனுக்கு ஏற்றது எது?
------------------------------------------------
இன்றைய பக்திமலரை, முருகப்பெருமானின் பெருமையைச் சொல்லும் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும்  படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++

கந்தனுக்கு ஏற்றமலர் எந்தமலர் அண்ணே? 
     கமகமக்கும் எம்மலரும் நல்லமலர் தம்பி
அந்தமலர் போட்டவுடன் வாடோதோ அண்ணே?
    அகமலரைத் தந்துவிடு வாட்டமில்லை தம்பி!

எந்தப்பழம் கந்தனுக்கு ஏற்றபழம் அண்ணே?
    அஞ்சுபழம் முருகனுக்கு அமுதமாகும் தம்பி,
அந்தப்பழம் ஆனைவிலை காசிலையே அண்ணே?
    அகப்பழத்தைத் தந்துவிடு செலவிலையாம் தம்பி

கந்தனருள் கிடைப்பதற்கு ஏதுவழி அண்ணே?
    கால்நடையாய் நடப்பவரைக் கேட்டிடுக தம்பி,
நீண்டவழி நடப்பதற்குத் தெம்பிலையே அண்ணே?
   நேர்மைவழி நடந்துவிடு அவன்வருவான் தம்பி!


பாடல் ஆக்கம்: செட்டிநாட்டுக் கவிஞரும், 
கவியரசர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பருமான 
பேராசிரியர், முனைவர் திரு. அர.சிங்கார வடிவேலன்  M.A,B.T, Phd, அவர்கள், கண்டனூர்
------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

12 comments:

  1. அருமையான பாடல்....


    மனமும், செயலும் நன்றாக இருந்து அவன் தாள் பணிந்தால் கந்தனருள் நிச்சயம்....


    பாடலைப் புனைந்தவருக்கும்


    தங்களின் பதிவிற்கும் நன்றிகள் ஆசிரியரே!

    ReplyDelete
  2. மிக நன்றாக உள்ளது.

    அருமை.

    அகம் மகிழிந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. ரொம்ப எளிமையான பாடல், நன்றி.

    ReplyDelete
  4. முனைவர் சிங்கார வேலரின் பாடல் எளிமை, அருமை.
    மஹாகவி பாரதியார் "சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்" என்று மிக அருமையாக எழுதியுள்ளார்.
    கையை, சக்தி தனக்கே கருவியாக்கு‍‍== அது
    சாதனைகள் யாவினையுங் கூடும்==கையைச்
    சக்தி தனக்கே கருவியாக்கு==அது
    சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்

    மேலும் கண்,செவி,வாய்,நாசி,மெய்,கண்டம்,தோள்,நெஞ்சம்,வயிறு,இடை,
    கால்,மனம், சித்தம்,மதி,அகம் என்று 46 பத்திகள். படித்து ஆனந்தியுங்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா!

    அண்ணாச்சி ஆலசியம்! கூறியது தான் முற்றிலும் உண்மை .

    நாம் ராமனைப்போல வாழ வேண்டி தவமே இருந்தாலும் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்று சிந்தித்தால் அல்லது வாழ்ந்து பார்த்தால்
    " என்றுமே தீராத அவமானம்!" தான் நமக்கு வந்து சேரும் என்பது எமது அனுபவபூர்வமான உண்மை.

    ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை சிறு வயது முதல் மனதில் பதிய வைத்தமையால் ராமாயணத்தில் காணப்படும் குடும்ப ஒற்றுமைபோல என்றுமே குடும்பம் பிரியக்கூடாது அடுத்த பெண் தமக்கு மனையாளாக வந்தால் பெரியவர்களை
    ஏறுடுத்து பார்பாலோ இல்லையோ என்று நினைத்து. சொந்த தகப்பன், சிற்றபனை பாதுகாக்க நாம் உண்டு.

    ஆண்வாரிசு அற்ற சின்ன தாத்தா மகனின் பாதுகாப்பீர்க்கு வேண்டி சின்னதாத்தாவின் மகன் கூட பிறந்த சகோதரியின் மகளிடம்
    ( முறைப்பெண்ணிடம்) தனது மனதில் உள்ள விருப்பத்தை மட்டும் கூரியதீர்க்கு "சூற்பனையாக!"
    " ராவணனின்!" அரக்க குணத்துடன் நடந்து கொண்ட உறவுகள் என்று கூறும் "அரக்கர்களை!" பற்றி என்ன வென்று கூறுவது


    >>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<
    Alasiam G
    ////ஏற்காதவர்களாக எல்லோரும் இருப்பதும்,கொடுக்கத் தயங்காதவர்களும் இருக்கக் கூடியது இராம ராஜ்ஜியத்தில்தான்.கலியுகத்தில் சாத்தியமில்ல. இர‌ண்டு வகையான சாத்தியக்கூறுகளும் இப்போது இருக்கவே செய்யும்////
    இல்லை கிருஷ்ணன் சார்...

    ReplyDelete
  6. ////ஆண்வாரிசு அற்ற சின்ன தாத்தா மகனின் பாதுகாப்பீர்க்கு வேண்டி சின்னதாத்தாவின் மகன் கூட பிறந்த சகோதரியின் மகளிடம்
    ( முறைப்பெண்ணிடம்) தனது மனதில் உள்ள விருப்பத்தை மட்டும் கூரியதீர்க்கு "சூற்பனையாக!"
    " ராவணனின்!" அரக்க குணத்துடன் நடந்து கொண்ட உறவுகள் என்று கூறும் "அரக்கர்களை!" பற்றி என்ன வென்று கூறுவது////

    கவலைப் படவேண்டாம் அருமை சகோதரா கண்ணா.... நடப்பவைகள் அனைத்தும் நன்மைக்கே... எது நல்லது என்று நம்மைப் படைத்தவனுக்கு நன்கு தெரியும்.... கிடைக்காததை.. முடியாததை நினைத்து கலங்க வேண்டாம்.... எண்ணம் என்ற நீர் மட்டம் உயர்ந்தவர்கள் வாழ்வு என்னும் மலரின் உயரத்தைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்... நிகழ்காலத்தில் நிறைய இருக்கு.... நல்லொதொரு வருங்காலம் வா! கண்ணா! வா! என்றழைக்குது... வெற்றிநடை போட்டு சிகரத்தில் ஏறு... சிகரத்தை அடைந்தாள் வானத்தில் ஏறு... என்ற வரிகள் மட்டும் மனதில் பதியட்டும்.... எங்கேயோ ஆரம்பித்து பித்து பித்து எங்கேயோ போயிருச்சு.. சரி இரண்டு நாளா ஆளக்காணோம்...

    ReplyDelete
  7. கவலைப் படவேண்டாம் அருமை சகோதரா கண்ணா.... நடப்பவைகள் அனைத்தும் நன்மைக்கே... எது நல்லது என்று நம்மைப் படைத்தவனுக்கு நன்கு தெரியும்....//////////////

    திரு. ஆலாசியம் அண்ணா அவர்கள் மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட. நமக்கு எது நல்லது என்று நம்மை விட நம்மைப் படைத்தவனுக்கு நன்றாகத் தெரியும். திரு. ஆலாசியம் மற்றும் KMRK போன்றவர்கள் அனுபவசாலிகள். உங்கள் மனசஞ்சலங்களை அவர்களிடம் சொன்னீர்களானால் அவர்கள் கூறும் அறிவுரைகள் உங்களுக்கு முடிவெடுக்கவேண்டிய தருணங்களில் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

    ReplyDelete
  8. ////திரு. ஆலாசியம் அண்ணா அவர்கள் மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட. நமக்கு எது நல்லது என்று நம்மை விட நம்மைப் படைத்தவனுக்கு நன்றாகத் தெரியும். திரு. ஆலாசியம் மற்றும் KMRK போன்றவர்கள் அனுபவசாலிகள்////

    தங்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் நன்றி சகோதரரே!
    பெரும்பாலும் வகுப்பறை அப்படி ஒரு தளத்தை அமைத்து தந்துள்ளது
    நாம் ஆசிரியருக்கு நன்றி கூறுவோம்...
    மேலும் வாத்தியாரின் கதைக் கட்டுரைகள் பூமிக்குள் பலவருடம் பெரிய அழுத்தத்தில் உருவான "குரூடாயில்" போன்றது பகுத்து பிரித்து வடித்தெடுத்தால் நிறையப் பலன் உண்டு... பௌர்ணமித் தேனடை இந்த வகுப்பறை... நன்றி சகோதரா..

    ReplyDelete
  9. திரு. ஆலாசியம் அவர்களுக்கு,

    நாமே வலிய போய் வழி கேட்டால்கூட சொல்லாத இந்த உலகத்தில், தாங்களாக முன்வந்து திரு. கண்ணனின் மனகுமரல்களுக்கு ஆறுதல் சொன்னவிதம் என் மனதைத் தொட்டுவிட்டது. ஆடுகளம் சரியாக இருந்தாலும் மட்டையாளருக்கு ஈடுபாடு இல்லாவிட்டால் ரன்கள் எப்படி எடுக்கமுடியும் திரு ஆலாசியம் அவர்களே. வாத்தியார் அவர்கள் நல்ல களம் அமைத்துக் கொடுத்துள்ளார். தாங்கள், மைனர்வாள், KMRK அவர்கள், டெல்லி உமா, தற்போது கண்ணன் போன்றோர் உட்பட இன்னும் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு விவாதிப்பதில் மற்றவர்களுக்குத் தானே அதிக நன்மைகள்.

    ReplyDelete
  10. ////ஆர்வமுடன் கலந்துகொண்டு விவாதிப்பதில் மற்றவர்களுக்குத் தானே அதிக நன்மைகள்////
    உண்மைதான் திருவாளரே,
    எத்தனையோ பிளாக் இருந்தும் இதில் தான் நம் போன்றோரின் சங்கமம்....
    இருந்தும், நன்மை என்றால் எல்லோரையும் போல் எனக்கும்; இல்லை எனக்கு கொஞ்சம் கூடுதல் என்றே சொல்லலாம்..
    நன்றிகள் நந்தகோபால் அவர்களே!

    ReplyDelete
  11. //நமக்கு எது நல்லது என்று நம்மை விட நம்மைப் படைத்தவனுக்கு நன்றாகத் தெரியும். திரு. ஆலாசியம் மற்றும் KMRK போன்றவர்கள் அனுபவசாலிகள். உங்கள் மனசஞ்சலங்களை அவர்களிடம் சொன்னீர்களானால் அவர்கள் கூறும் அறிவுரைகள் உங்களுக்கு முடிவெடுக்கவேண்டிய தருணங்களில் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.//

    Nanda Sir,

    Intha pathivu vantha naal, thaliyanga paadal enna
    "Mayakkamaa thayakkama
    Manathile kulappama"
    Sariyaa.

    Neengal sonna arivuraigal muluvathum sariye. aanal ingu velipadiyaaga anivarin munbum solla namathu anbarukku thayakkam irukkalaam allavaa?

    Anbudan,
    TSN

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com