24.7.10

தீவினை எப்போது அகலும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தீவினை எப்போது அகலும்?

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 12

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
----------------------------------------------
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே -தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே ...

செந்தமிழ் அருள் ஞான தேசிகனை - ஞான
தேசிகனை .....தேசிகனை ......ஆஆ.......
செந்தமிழ் அருள் ஞான தேசிகனை - ஞான
செந்தில் கந்தனை வானவர் காவலனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே......

சந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை...
சந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை
சமரச சன்மார்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மார்க நெறிதனை மறந்தனை
அந்தகம் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகம் வரும்பொது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவணபவ குஹனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே........

பாடல் ஆக்கம்: கவிஞர் கே.டி. சந்தானம்
பாடியவர்: டி.எம்.எஸ்.
படம்: அம்பிகாபதி

பாடலின் ஒலி வடிவத்தை இங்கே அழுத்திக் கேட்கலாம்!

------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

12 comments:

  1. ஆஹா அற்புதமானப் பாடல்.

    சிந்தனை செய்மனமே சுந்தரியின் மகனை
    சிந்தனை செய்மனமே - நீ மனமே
    சிந்தனை செய்மனமே சூரசம்ஹார வீரனை
    சிந்தனை செய்மனமே - ஓ மனமே
    சிந்தனை செய்மனமே மனமே
    தீவினை அகற்றிடும் கந்தனை கதிர்வேலனை
    சிந்தனை செய்மனமே - நீதான் நிபந்தனை இன்றி
    சிந்தனை செய்மனமே சித்தனை செய்மனமே
    மனமே மனமே ஓ மனமே அனுதினமும்
    அணுவினும் நுண்ணியன் அகிலம் காக்கும்
    அற்புதன் அழகன் முருகன் பொற்பதம் தனியே நீ
    சிந்தனை செய்மனமே மனமே மனமே மனமே ஏ ஏ ஏ ஏ ஏ ......

    ஐயா சிந்தையுள் தேனூற்றி விட்டீர்கள்!
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. ஒரு மாற்றுக் கருத்து . . .
    (வாத்தியார் அனுமதித்தால்)

    மனதுக்கு எப்போதுமே கட்டளை தருவது சரியாக இருக்காது . .

    எப்போதுமே மனம் தான் விரும்பும் வழியிலேயே செல்லும் . .

    புத்தி தான் மனதை கட்டுப்படுத்தும் . .
    அதனால் புத்தியைத் தான் சீர் செய்ய வேண்டும்.

    இந்த உளவியல் கருத்தினைத் தான் வள்ளுவப் பெருந்தகையும் நன்றின் பால் உய்பது அறிவு என சொல்லி உள்ளார்.

    அந்த வகையில் சிந்திக்கும் போது இந்த பாடல் வரிகளை நெருடலை தருகிறது . .

    பாடலும் இசையும் நன்று . . ஆனால் பாடல் வரிகள் . . . (?)

    இது வாத்தியாரின் வகுப்பறை என்பதால் உணர்வுகளை உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் . .

    மாற்றுக் கருத்து இருந்தால் வாத்தியார் சொல்லலாம் . .

    ReplyDelete
  3. எல்லா ம‌தமும் சம்மதம் என்பது இந்தியர்கள், குறிப்பாக இந்துக்க்ள் மட்டுமே
    கூறுகிறோம். நம்முடைய பரந்த மனப்பான்மை வலிமை அற்றவர்களாகப்
    பிறர் நம்மை எடைபோட வைக்கிறது

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    முருகன் படம் மிகவும் நன்றாக உள்ளது.
    இறைவனின் புகழைப் பாடும் புகழ் பெற்ற பாடல்கள் வரிசையில் வந்துள்ள,
    " சிந்தனை செய் மனமே
    சிந்தனை செய் மனமே -தினமே
    சிந்தனை செய் மனமே
    செய்தால் தீவினை அகன்றிடுமே
    சிவகாமி மகனை ஷண்முகனை
    சிந்தனை செய் மனமே"----

    பாடல் அடிக்கடிக் கேட்டு ரசித்தமிகவும் அருமையான பாடலாகும்.என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்.தற்போது கேட்டு மகிழ்வதற்கு வாய்ப்பு அளித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.
    .வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-24

    ReplyDelete
  5. சில பழைய பாடல்கள் கேட்கும்போதே நம் மனம் அதில் லயித்துவிடுகிறது. அதிலும் இறைவன் மீது பாடப்படும் பாடலென்றால் கேட்கவே வேண்டாம். இந்தப் பாடலை எழுதியவர் இன்று பல அடைமொழிகள் பட்டங்கள் இவற்றைப் போட்டுக் கொண்ட சந்தர்ப்பவாத முகஸ்துதி செய்யும் கவிஞர்கள் போல‌ அல்ல. அவர் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். அன்றைய நாடகக் கவிஞர்களின் திறமை பிற்கால சினிமா பாடலாசிரியர்களுக்கு இல்லை. இதில் பட்டுக்கோட்டை, கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம் இவர்கள் விதிவிலக்கானவர்கள். இந்த பாடலை டி.எம்.எஸ். பாட கண்மூடிக் கேட்டால் நம் இரத்த அழுத்தம் நிதானத்துக்கு வரும். மனம் இறை உணர்வில் ஆழ்ந்து போகும். இதனை நினைவுபடுத்தியத் தங்களுக்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும். வாழ்க தங்கள் பணி!

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    ஆஹா அற்புதமானப் பாடல்.
    சிந்தனை செய்மனமே சுந்தரியின் மகனை
    சிந்தனை செய்மனமே - நீ மனமே
    சிந்தனை செய்மனமே சூரசம்ஹார வீரனை
    சிந்தனை செய்மனமே - ஓ மனமே
    சிந்தனை செய்மனமே மனமே
    தீவினை அகற்றிடும் கந்தனை கதிர்வேலனை
    சிந்தனை செய்மனமே - நீதான் நிபந்தனை இன்றி
    சிந்தனை செய்மனமே சித்தனை செய்மனமே
    மனமே மனமே ஓ மனமே அனுதினமும்
    அணுவினும் நுண்ணியன் அகிலம் காக்கும்
    அற்புதன் அழகன் முருகன் பொற்பதம் தனியே நீ
    சிந்தனை செய்மனமே மனமே மனமே மனமே ஏ ஏ ஏ ஏ ஏ ......
    ஐயா சிந்தையுள் தேனூற்றி விட்டீர்கள்!
    நன்றிகள் குருவே!////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. iyer said...
    ஒரு மாற்றுக் கருத்து . . .
    (வாத்தியார் அனுமதித்தால்)
    மனதுக்கு எப்போதுமே கட்டளை தருவது சரியாக இருக்காது .
    எப்போதுமே மனம் தான் விரும்பும் வழியிலேயே செல்லும் . .
    புத்தி தான் மனதை கட்டுப்படுத்தும் .
    அதனால் புத்தியைத் தான் சீர் செய்ய வேண்டும்.
    இந்த உளவியல் கருத்தினைத் தான் வள்ளுவப் பெருந்தகையும் நன்றின் பால் உய்பது அறிவு என சொல்லி உள்ளார்.
    அந்த வகையில் சிந்திக்கும் போது இந்த பாடல் வரிகளை நெருடலை தருகிறது . .
    பாடலும் இசையும் நன்று . . ஆனால் பாடல் வரிகள் . . . (?)
    இது வாத்தியாரின் வகுப்பறை என்பதால் உணர்வுகளை உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் . .
    மாற்றுக் கருத்து இருந்தால் வாத்தியார் சொல்லலாம் . ./////

    சிந்தனை நன்றாக இருந்தால் எண்ணம் நன்றாக இருக்கும். எண்ணம் நன்றாக இருந்தால் செயல் நன்றாக இருக்கும். செயல் நன்றாக இருந்தால் விளைவு நன்றாக இருக்கும். விளைவு நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருப்போம். நாம் நன்றாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருப்பார்கள். இதில் நீங்கள் சொல்லும் புத்தி எந்த இடத்தில் வருகிறது என்று சொல்லுங்கள் சுவாமி!

    ReplyDelete
  8. /////kmr.krishnan said...
    எல்லா ம‌தமும் சம்மதம் என்பது இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் மட்டுமே கூறுகிறோம். நம்முடைய பரந்த மனப்பான்மை வலிமை அற்றவர்களாகப் பிறர் நம்மை எடைபோட வைக்கிறது////////

    “தோற்றுவித்தவன் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றுதான். அதற்கு அழிவே கிடையாது.” என்று கவியரசர் சொல்வார். அடுத்தவன் எடை போட்டால் போட்டுவிட்டுப்போகிறான். இன்னும் 15 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. அப்போது பாருங்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    முருகன் படம் மிகவும் நன்றாக உள்ளது.
    இறைவனின் புகழைப் பாடும் புகழ் பெற்ற பாடல்கள் வரிசையில் வந்துள்ள,
    " சிந்தனை செய் மனமே
    சிந்தனை செய் மனமே -தினமே
    சிந்தனை செய் மனமே
    செய்தால் தீவினை அகன்றிடுமே
    சிவகாமி மகனை ஷண்முகனை
    சிந்தனை செய் மனமே"----
    பாடல் அடிக்கடிக் கேட்டு ரசித்தமிகவும் அருமையான பாடலாகும்.என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்.தற்போது கேட்டு மகிழ்வதற்கு வாய்ப்பு அளித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.
    .வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  10. /////Thanjavooraan said...
    சில பழைய பாடல்கள் கேட்கும்போதே நம் மனம் அதில் லயித்துவிடுகிறது. அதிலும் இறைவன் மீது பாடப்படும் பாடலென்றால் கேட்கவே வேண்டாம். இந்தப் பாடலை எழுதியவர் இன்று பல அடைமொழிகள் பட்டங்கள் இவற்றைப் போட்டுக் கொண்ட சந்தர்ப்பவாத முகஸ்துதி செய்யும் கவிஞர்கள் போல‌ அல்ல. அவர் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். அன்றைய நாடகக் கவிஞர்களின் திறமை பிற்கால சினிமா பாடலாசிரியர்களுக்கு இல்லை. இதில் பட்டுக்கோட்டை, கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம் இவர்கள் விதிவிலக்கானவர்கள். இந்த பாடலை டி.எம்.எஸ். பாட கண்மூடிக் கேட்டால் நம் இரத்த அழுத்தம் நிதானத்துக்கு வரும். மனம் இறை உணர்வில் ஆழ்ந்து போகும். இதனை நினைவுபடுத்தியத் தங்களுக்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும். வாழ்க தங்கள் பணி!/////

    உங்களின் பாராட்டுக்கள் அந்தப் பாடலை, எழுதி, இசையமைத்து, பாடியவர்களுக்கே உரியதாகும். மனப்பூர்வமாக எழுதப்பெற்ற உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. அற்புதமான வரிகள்.
    கவிஞருக்கு நன்றிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  12. ////ராம்ஜி_யாஹூ said...
    அற்புதமான வரிகள்.
    கவிஞருக்கு நன்றிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகள் /////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com