10.4.10

நகைச்சுவை: அடப் பாவிகளா! இதுதான் பாதுகாப்புப் பரிசோதனையா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நகைச்சுவை: அடப் பாவிகளா! இதுதான் பாதுகாப்புப் பரிசோதனையா?

தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் அதிகமாகிவிட்ட நிலையில், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துவிட்டன,

ஆயிரக்கனக்கானோர் பயனிக்கும் நிலையில், ஒவ்வொருவராக நிற்கவைத்துப் பரிசோதித்துப் பார்ப்பது எவ்வளவு கடினம்? அதற்குப் பல ஸ்கேனர்கள் (உள்ளதைப் படம் பிடித்துக் காட்டும் கருவிகள்) வந்துவிட்டன. அதனால் மக்களும் பல அவஸ்தைகளுக்கு (நன்றாகக் கவனியுங்கள்..அவஸ்தைகளுக்கு) உள்ளாகிறார்கள்.

மக்கள்படும் அவஸ்தையை ஒரு புண்ணியவான் படம் பிடித்துக்காட்டியுள்ளார். உங்களுக்காக அவற்றைப் பதிவில் ஏற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டுப்போங்கள்

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரிதாகத் தெரியும்.

1

2

3

4

5

6
-----------------------------------------------------------------------------
எது நன்றாக உள்ளது?
இது வார இறுதிப் பதிவு!

வாழ்க வளமுடன்!

12 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    [Photo]2 நன்றாக உள்ளது.

    மாண்புமிகு மத்திய அமைச்சர் சிதம்பரம் அவர்கள் தெரிவித்திருப்பது போல பாது காப்பில் இருப்பவர்களால் எங்கோ தவறு நடக்கிறது. இங்கு பொது மக்கள் அவஸ்தைப் படுகிறார்கள்.

    கையூட்டுப் பெற்றுக்கொண்டு பாது காப்பில் தவறும் பாதுகாவலருக்கு (Security) கடுமையான தண்டனைகள் முறையான விசாரணைக்குப் பின்பு வழங்கப்படுதல் வேண்டும்.

    இதே போல் மருந்துகளின் காலாவதி தேதிகளை மாற்றுபவர்கள்,போலி மருந்து தயாரிப்பவர்கள்,உடந்தையாய் இருப்பவர்கள் ஆகியோருக்கும் கடுமையான தண்டனைகள் அளிக்கவேண்டும்.தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.

    அதே சமயத்தில் நிரபராதிகள் தண்டிக்கப் படாமல் பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் நீதித்துறையின் பொறுப்பாகும்.

    நன்றி!

    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-10

    ReplyDelete
  2. நான்காவது

    நான் ஒரு சிறு இணைய பத்திரிக்கை நடத்தி வருகிறேன்,. உங்களுக்கு நேரம் இருப்பின் படித்து பார்க்கவும்

    http://vezham.presspublisher.us/issue/april-i

    ReplyDelete
  3. அருமை...

    திரு.ஆசிரியர் ஜயா

    உங்கள் புகைபடம் சொல்லுது நிங்கள் நினைத்ததை.......

    ReplyDelete
  4. கப்சாவை நிறுத்த்ங்கள்,,,நான் பிரான்ஸ்
    ஏற்போர்டில்தான் வேளை செய்கிறேன்,,நீங்கள் குறிப்பிட்டுள்ள checking system Charles De Gaules(CDG) Airport--Hall Eல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது,,நீங்கள் சொன்னதுபோல் இல்லாமல் இப்போதுதான் ப்ரிசோதனை விரைவாக
    நடக்கிறது,,சில வீணான தமதங்கள் தவிற்கபடுகின்றன,, முன்னேல்லாம் கையில் ஹேண்ட் டிடக்டரை வைத்து ஆட்டிக்கொண்டிருப்பார்கள்
    பின் ஆண் என்றால் ஒரு ஆணும்,,
    பெண் என்ரால் ஒரு பெண்ணும்
    (பனியாள்) உங்கள் உடலை தடவி
    பார்பார்கள்,, அப்படி செய்யும்போது
    கூச்சசுபாவமுள்ளவர்கள் எப்படி நெளிவார்கள் என்பதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்,,
    இந்த சிஸ்டம் இங்கு வ்ந்து இரண்டுமாதங்கள் முடியபோகிறது,
    இங்கு ஒரு opinion slip தருவார்கள்
    பயைகள் சிஸ்டம் பற்றின தங்கள் கருத்தை எழுதி ஒரு பாக்ஸில் பொடலாம்,, அந்த கருத்துபடி இந்த சிஸ்டத்திற்கு 70 பர்செண்ட் ஆதரவு
    உள்ளதாக ஒரு செய்தி

    ReplyDelete
  5. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    [Photo]2 நன்றாக உள்ளது.
    மாண்புமிகு மத்திய அமைச்சர் சிதம்பரம் அவர்கள் தெரிவித்திருப்பது போல பாது காப்பில் இருப்பவர்களால் எங்கோ தவறு நடக்கிறது. இங்கு பொது மக்கள் அவஸ்தைப் படுகிறார்கள்.
    கையூட்டுப் பெற்றுக்கொண்டு பாது காப்பில் தவறும் பாதுகாவலருக்கு (Security) கடுமையான தண்டனைகள் முறையான விசாரணைக்குப் பின்பு வழங்கப்படுதல் வேண்டும்.
    இதே போல் மருந்துகளின் காலாவதி தேதிகளை மாற்றுபவர்கள்,போலி மருந்து தயாரிப்பவர்கள்,உடந்தையாய் இருப்பவர்கள் ஆகியோருக்கும் கடுமையான தண்டனைகள் அளிக்கவேண்டும்.தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.
    அதே சமயத்தில் நிரபராதிகள் தண்டிக்கப் படாமல் பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் நீதித்துறையின் பொறுப்பாகும்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ////LK said...
    நான்காவது
    நான் ஒரு சிறு இணைய பத்திரிக்கை நடத்தி வருகிறேன்,. உங்களுக்கு நேரம் இருப்பின் படித்து பார்க்கவும்
    http://vezham.presspublisher.us/issue/april-i////

    ஆகா, அப்படியே செய்கிறேன் அண்ணாச்சி!

    ReplyDelete
  7. ////செந்தில்குமார் said...
    அருமை...
    திரு.ஆசிரியர் ஜயா
    உங்கள் புகைப்படம் சொல்லுது நிங்கள் நினைத்ததை.......////

    அந்தப் படம் எடுத்தபோது, நான் ஒன்றையும் நினைக்கவில்லையே சாமி!

    ReplyDelete
  8. ////moulefrite said...
    கப்சாவை நிறுத்துங்கள்,,,நான் பிரான்ஸ்
    ஏற்போர்டில்தான் வேளை செய்கிறேன்,,நீங்கள் குறிப்பிட்டுள்ள checking system Charles De Gaules(CDG) Airport--Hall Eல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது,,நீங்கள் சொன்னதுபோல் இல்லாமல் இப்போதுதான் ப்ரிசோதனை விரைவாக
    நடக்கிறது,,சில வீணான தமதங்கள் தவிற்கபடுகின்றன,, முன்னேல்லாம் கையில் ஹேண்ட் டிடக்டரை வைத்து ஆட்டிக்கொண்டிருப்பார்கள்
    பின் ஆண் என்றால் ஒரு ஆணும்,,
    பெண் என்ரால் ஒரு பெண்ணும்
    (பனியாள்) உங்கள் உடலை தடவி
    பார்பார்கள்,, அப்படி செய்யும்போது
    கூச்சசுபாவமுள்ளவர்கள் எப்படி நெளிவார்கள் என்பதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்,,
    இந்த சிஸ்டம் இங்கு வ்ந்து இரண்டுமாதங்கள் முடியபோகிறது,
    இங்கு ஒரு opinion slip தருவார்கள்
    பயைகள் சிஸ்டம் பற்றின தங்கள் கருத்தை எழுதி ஒரு பாக்ஸில் பொடலாம்,, அந்த கருத்துபடி இந்த சிஸ்டத்திற்கு 70 பர்செண்ட் ஆதரவு
    உள்ளதாக ஒரு செய்தி//////

    பதிவின் தலைப்பைப் பார்க்கவில்லையா? நகைச்சுவைக்காக என்று போட்டிருக்கிறேனே அண்ணா!பதிவில் எழுதுவதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது? படங்கள் மின்னஞ்சலில் வந்தன. ஒரு சுவைக்காக அப்படியே வலை ஏற்றியிருக்கிறேன்!

    ReplyDelete
  9. அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பாதுகாப்பு என்று சொல்லி இந்த நிலைமைக்கு வர விடாமல் போனார்களே. அது வரை நாம் தப்பித்தோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  10. /////ananth said...
    அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பாதுகாப்பு என்று சொல்லி இந்த நிலைமைக்கு வர விடாமல் போனார்களே. அது வரை நாம் தப்பித்தோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.////

    ஆமாம், வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

    ReplyDelete
  11. //பதிவில் எழுதுவதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது?//

    அதானே! வாத்தியார் பதிவில் எழுதுவதையெல்லாமா சீரியஸாக எடுத்துக் கொள்வது?

    ReplyDelete
  12. மிகவும் நன்றி அய்யா உஙகள் சேவை தொடர வழ்த்துகள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com