2.10.08

குட்டிக்கதை: படைப்பின் ரகசியம்


நச்' சென்று சொன்ன கதைகள்

ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தில் குருவும், நான்கு சீடர்களும்
வசித்து வந்தார்கள்.

பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்
படுத்தும் வேலையை அந்த குரு செய்து கொண்டிருந்தார்.

அவருடைய வழிகாட்டலால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் பிரச்சினையும்
இன்றி அமைதியாக வாழ்ந்தனர்.

ஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை அவர்கள் மனம் மகிழ்ந்து,
போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வந்தனர்.

குரு தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால் ஆசிரமமும்
எந்தவித இன்னலும் இன்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது.

குரு சீடர்களுக்கு வேத பாடங்கள், நல்வழிக் கதைகள், இறைவனைப்
பற்றிய கதைகள் என்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துவார்.

"படைப்பின் ரகசியம் என்ன?" என்று சீடர்களில் ஒருவன் கேட்டபோது,
"அதை நீயே ஒருநாள் உணர்வாய்" என்றார் குரு.

கேட்ட அந்த சீடன் ஒரு நாள், ஆசிரமத்தின் ஜன்னல் வழியே, வெளியே
இருக்கும் ஆள் அரவமற்ற பாதையையும், அதற்கு அருகில் உள்ள
பெரிய ஆலமரத்தையும், அதன் அருகில் இருந்த கொன்றை மரத்தையும்
அவற்றில் குடியிருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த இரண்டு மரங்களுக்கும் இடையில் இருந்த பெரிய
கரையான் புற்றில், மிகவும் நீளமான நாகப்பாம்பு ஒன்று விறு விறுவென
ஏறி, புற்றுக்குள் நுழைந்தது.

நுழைந்து மறைந்தும் விட்டது.

அடுத்த நிமிடம், அந்தப் புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான கரையான்கள்
வெளியேறி வந்து, வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன. எல்லாம் ஒரு
அவசரகதியில் புற்றைக் காலி செய்து கொண்டிருந்தன.

அதைக் கண்ட சீடன் பதறிவிட்டான். என்ன கொடுமை? இந்த சிற்றினங்கள்
கட்டி வசித்து வந்த இடத்தை ஒரு பாம்பு ஒரு நொடியில் கை பற்றிக் கொண்டு
விட்டதே!

இது அக்கிரமம் இல்லையா? கேட்க ஆள் இல்லையா?

அப்போது தற்செயலாக குரு அங்கே வர, சீடன் நடந்ததைப் பதற்றத்துடன்
சொன்னான்.

"குரு சீடனை சாந்தப் படுத்தியதோடு, "பொறுத்திருந்து பார்' என்று சொல்லி
விட்டுப் போய் விட்டார்.
+++++++++++++++++++++++++++++
அன்று மதியம் கனத்த மழை பெய்தது. அப்படியொரு அசுர மழை!

அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையின் எதிர்ப்புறம் இருந்த
பள்ளமான பகுதிகள் தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தன.

புற்றிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து புற்றும் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

அப்போதுதான் அது நடந்தது.

புற்றைவிட்டுத் தப்பி வெளியே வந்த நாகப் பாம்பு, நீரைக் கடந்து சாலைக்கு
வேகமாக நெளிந்து நெளிந்து வந்து சேர்ந்தது. ஈரமாக இருந்த சாலையைக்
கடந்து எதிர்ப்புறம் உள்ள பகுதிக்குத் தப்பிவிட அது முனைந்தது.

அப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த கிராமத்து இளைஞன் ஒருவன்,
பாம்பைக் கண்டு பதறாமல், தன் கையில் இருந்த கடப்பாரையால் பாம்பின்
மீது இரண்டு போடு போட பாம்பு இறந்து மூன்று துண்டுகளாகியது.
நீண்ட அந்தத் துண்டுகளைத் தன் கடப்பாரையின் உதவியால் தள்ளிக்கொண்டு
சென்று எதிர்ப் புறம் இருந்த பகுதியில் தள்ளி விட்டு, சாலை சுத்தமாகிவிட்டதா
என்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அவன் செல்ல ஆரம்பித்துவிட்டான்.

இவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்கு
ஒரு மன நிம்மதி ஏற்பட உள்ளே ஓடிச் சென்று, குருவை அழைத்து வந்து
இறந்து தூண்டுகளாகிக் கிடந்த பாம்பைக் காட்டிவிட்டு நடந்ததைச் சொன்னான்

குரு ஒன்றும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளே
சென்றுவிட்டார்.

"அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்".
என்று குரு அடிக்கடி சொல்லும் வாக்கியத்தின் பொருள் சீடனுக்கு இப்போதுதான்
புரிந்தது.

வாழ்க வளமுடன்!

28 comments:

  1. ***அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்".***

    ஆனால் அந்த கரையான்களின் கதி என்னவாயிற்று ஆசானே!

    ReplyDelete
  2. ஆசானே! எனது homework தங்களுக்கு கிடைத்ததா?

    ReplyDelete
  3. படைப்பின் ரகசியத்தை செல்லவில்லையே?

    ReplyDelete
  4. தனக்கு இன்னல் தராதவர்களை பாம்பும் தீண்டாது. பாம்பை கொன்றதைப் பார்த்து மன நிம்மதி அடைந்த சீடனுக்கு சரியான குருவோ, போதனையோ கிடைக்கவில்லை.

    :(

    ReplyDelete
  5. சீடன் இன்னும் கொஞ்ச நாள் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

    :-)

    ReplyDelete
  6. /////அணுயோகி said...
    ***அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்".***
    ஆனால் அந்த கரையான்களின் கதி என்னவாயிற்று ஆசானே!////

    கரையான்கள் என்ன ஆயிற்று என்று சொல்லிக்கொண்டு போனால், யாராவது வந்து மீண்டும். பாம்பு வரவில்லையா என்பார்கள்
    இது குட்டிக்கதை. ஆகவே அதற்கு உரிய இலக்கணத்துடன் கதையை முடித்துவிட்டேன்

    ReplyDelete
  7. ////அணுயோகி said...
    ஆசானே! எனது homework தங்களுக்கு கிடைத்ததா?///

    கிடைத்தது. இரண்டு நாட்களில் எழுதிய அனைவருக்கும் பதில் வரும்!

    ReplyDelete
  8. /////கூடுதுறை said...
    present sir...////

    நன்றி கூடுதுறையாரே!

    ReplyDelete
  9. ////aravindaan said...
    படைப்பின் ரகசியத்தை செல்லவில்லையே?////

    படைப்பின் ரகசியம் ஒன்றா? இரண்டா? நிறைய உள்ளன. அவற்றில் ஒன்றை இன்று சொல்லியிருக்கிறேன்.
    எளியோனை, வலியோன் வாட்டினால், அவனைத்தண்டிக்க அவனைவிட வலியவன் ஒருவன் வருவான். இதுதான் இன்றைய பாடம்!

    ReplyDelete
  10. /////கோவி.கண்ணன் said...
    தனக்கு இன்னல் தராதவர்களை பாம்பும் தீண்டாது. பாம்பை கொன்றதைப் பார்த்து மன நிம்மதி அடைந்த சீடனுக்கு சரியான குருவோ, போதனையோ கிடைக்கவில்லை.: :(///

    உண்மைதான் ஆனந்தாக்களைத் தேடிப்போய் சீடன் சேர்ந்திருக்க வேண்டும்!:_))))
    புத்தி கிடைக்கவில்லை என்றாலும் ஆனந்தமாவது கிடைக்கும்:-))))

    ReplyDelete
  11. /////தருமி said...
    சீடன் இன்னும் கொஞ்ச நாள் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பது நல்லது என்று நினைக்கிறேன். :-)////

    உண்மைதான் தருமி சார். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!
    நீங்கள் சொல்லியுள்ளபடி சீடன் ஜன்னல் வழியேதான் பார்த்துக் கொண்டிருப்பான். குருவைப்போல அவனுக்கும் முழு அனுபவம் வரவேண்டாமா? படைப்பின் ரகசியங்கள் தெரிய வேண்டாமா?

    ReplyDelete
  12. நல்ல குட்டி கதை...

    வேலை பளு அதலால் என் மின் அஞ்ஞல் தாமதமாக வரும்...மன்னிக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  13. தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete
  14. //////hotcat said...
    I'm here....
    -Shankar//////

    I am also here Shankar:-)))))

    ReplyDelete
  15. /////மதி said...
    நல்ல குட்டி கதை...
    வேலை பளு அதலால் என் மின் அஞ்ஞல் தாமதமாக வரும்...மன்னிக்கவும்.
    நன்றி./////

    இணைய வகுப்பிற்குத்தான் கால நேரம் கிடையாதே. எப்போது வேண்டுமென்றாலும் வாருங்கள்

    ReplyDelete
  16. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    தெய்வம் நின்று கொல்லும்.////

    நின்று தண்டிக்கும். நன்றி நவநீதன்!

    ReplyDelete
  17. //நீங்கள் சொல்லியுள்ளபடி சீடன் ஜன்னல் வழியேதான் பார்த்துக் கொண்டிருப்பான்//

    வகுப்பு நேரத்திலா? பிறகு பாடத்தை எப்படி கவனிப்பது?

    ReplyDelete
  18. குட்டியா இருந்தாலும் கெட்டியா இருக்கு

    ReplyDelete
  19. /////நாமக்கல் சிபி said...
    //நீங்கள் சொல்லியுள்ளபடி சீடன் ஜன்னல் வழியேதான் பார்த்துக் கொண்டிருப்பான்//
    வகுப்பு நேரத்திலா? பிறகு பாடத்தை எப்படி கவனிப்பது?////

    நம் வகுப்பறையில் அது நடக்கும். ஆசிரமத்தில் அது நடக்காது!

    ReplyDelete
  20. ////நசரேயன் said...
    குட்டியா இருந்தாலும் கெட்டியா இருக்கு////

    நசரேயனா அல்லது நாசரே(த்) அன்பனா?

    ReplyDelete
  21. குருவே,

    விடைத்தாளை அனுப்பி விட்டேன். 5 பக்கம் தட்டச்சு செய்யவே கடினமாக உள்ளது. பல்வேறு அலுவல்களுக்கு இடையே, 120 பதிவுகளுக்கும் மேலாக தட்டச்சு செய்து எங்களுக்கு பாடம் நடத்தும் உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய போகின்றோம். அந்த கைகளை தனியாக ஒரு பதிவில் புகைப்படம் எடுத்து இடவும். கண்களில் ஒத்திக் கொள்கின்றோம்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  22. //I am also here Shankar:-)))))//

    I am also here Namakkal Shibi!

    ReplyDelete
  23. //எப்போது வேண்டுமென்றாலும் வாருங்கள்
    //

    ஆமாம்! வாத்தியார் இல்லாத நேரமா பார்த்து வந்தீர்கள் என்றால் ஜாலியாக அரட்டை அடிக்க வசதியாக இருக்கும்!

    ReplyDelete
  24. ////Rajagopal said...
    குருவே,
    விடைத்தாளை அனுப்பி விட்டேன். 5 பக்கம் தட்டச்சு செய்யவே கடினமாக உள்ளது. பல்வேறு அலுவல்களுக்கு இடையே, 120 பதிவுகளுக்கும் மேலாக தட்டச்சு செய்து எங்களுக்கு பாடம் நடத்தும் உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய போகின்றோம். அந்த கைகளை தனியாக ஒரு பதிவில் புகைப்படம் எடுத்து இடவும். கண்களில் ஒத்திக் கொள்கின்றோம்.
    அன்புடன்
    இராசகோபால்////

    அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சாமி!
    ஆர்வமும், உற்சாகமும் இருந்து ஒரு வேலையைச் செய்யும் போது கடினமாகத் தெரியாது கோபால்!வலி எங்கே வரும்?

    ReplyDelete
  25. புது மாணவன் ஏற்றுக்கொல்லுங்கள் ஐயா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com