25.3.25

Astrology: கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

Astrology:  கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu

ராகு சாயா கிரகம். சொந்த வீடு இல்லாத கிரகம். மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஒவ்வொரு நாள் ஆதிக்க நாளாக உள்ளது. அதனால்தான் தினமும் ராகுவிற்கு 90 நிமிடங்களும் (ராகு காலம்), கேதுவிற்குத் 90 நிமிடங்களும் (எம கண்டம்) அந்த நேரங்களில் முக்கியமான செய்ல்களை மக்கள் தவிர்ப்பார்கள். நாமும் தவிர்க்க வேண்டும்

சரி சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன். சனி 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சுற்று வருவதைப் போல, நாகுவும் கேதுவும் 18 ஆண்டுகளில் ஒரு சுற்றை முடிப்பார்கள். அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் த்ங்கிச் செல்வார். அங்கே தங்கி வழக்கப்படி அந்த இடத்திற்கான சோதனைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் ஜாதகனுக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த ராசிக்குத் தன் நடையைக் கட்டிவிடுவார். அடுத்த ராசிக்கு, கடிகாரச் சுற்றுக்கு எதிர் சுற்ரில் செல்வார். ராகுவும், கேதுவும் எதிர் சுற்றில்தான் சுற்றுவார்கள் என்பது பால பாடம். அது அனைவருக்கும் தெரியும்.  Rahu and ketu rotates in anti clock wise

அவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் ராகு தங்கும்போது, தங்கிச் செல்லும்போது  ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான பலனைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------
தலைப்பு: ராகுவின் கோள்சாரப் பலன்:

1. ஒன்றாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை உண்டாகும்.
2. இரண்டாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு சொத்து, செல்வம் விரையமாகும்
3. நான்காம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு விரோதங்கள் ஏற்படும். எதிரிகள் உண்டாவார்கள்
4. ஐந்தாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு கவலைகள் ஏற்படும். மகிழ்ச்சி இருக்காது.
5. ஏழாம் வீட்டில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு மனைவியால் உபத்திரவங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் ஏற்படும். ஜாதகியாக இருந்தால் அவளுக்கு அவைகள் அவளுடைய கணவனால் ஏற்படும்.
6. எட்டில் ராகு இருக்கும் காலம் உடல் நலத்திற்குக் கேடானது.
7. ஒன்பதில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். சிலர் தூர தேசங்களுக்குச் செல்ல நேரிடும்.
8. பத்தில் ராகு இருக்கும் காலத்தில் ஜாதகனுக்குத் தொழிலில், வியாபாரத்தில், போட்டிகள், விரோதிகள் ஏற்படுவார்கள். அவர்களால் அல்லல் பட நேரிடும்.

3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய நான்கு இடங்களிலும் ராகு சஞ்சாரம் செய்யும் காலத்தில், ஜாதகனுக்கு ஒரு சிரமமும் ஏற்படாது.

இந்தப் பலன்கள் யாவும் பொதுப்பலன்கள், தசாபுத்தி சிறப்பானதாக நடைபெற்றுக்கொண்டிருந்தால், இந்தப் பலன்கள் குறையும் அல்லது இல்லாமல்
போய்விடும்!
-----------------------------------------------------------------------------------
நம் ஜாதகத்தில் (Birth Chart) கிரகங்கள் இருக்கும் இடத்தில் நடப்பு கோள்சாரப்படி  ராகு வந்து அமருவதால் ஏற்படும் பொதுப்பலன்கள்:

1. சூரியன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மன அழுத்தங்கள், பிரச்சினைகள் உண்டாகும். படுத்தி எடுக்கும்.
2. சந்திரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனின் தாயாருக்கு அது நன்மையல்ல. தாயாரின் உடல் நிலைக்குக் கேடு உண்டாகும். அதனால் ஜாதகனுக்கு மன அழுத்தம் உண்டாகும்.
3. செவ்வாய் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். அத்துடன் தேவையில்லாத வம்பு, வழக்கு, வாக்குவாதம் போன்ற விவகாரங்கள் ஏற்படும்.
4. குரு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும்.
5. சுக்கிரன் இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்குக் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.
6. சனி அல்லது ராகு இருக்கும் இடத்தில் ராகு கோள்சாரப்படி சஞ்சாரம் செய்யும்போது, ஜாதகனுக்கு அதிகமான மன அழுத்தம் (Tensions) உண்டாகும். அது எதனால் வேண்டுமென்றாலும் ஏற்படலாம்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com