30.3.25
Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை Happy married life!
29.3.25
Astrology: கல்வியின் மேன்மை
27.3.25
Astrology: யோகங்களின் முக்கியத்துவம்
26.3.25
Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்
25.3.25
Astrology: கோச்சார ராகுவின் பலன்கள் Effects of Transit Rahu
24.3.25
Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!
23.3.25
Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்)
21.3.25
Astrology கெட்ட யோகம்! Bad yoga:
20.3.25
Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)
19.3.25
Astrology: மகாபாக்கிய யோகம்! Lessons on yogas: Maha Bagya Yoga
18.3.25
Astrology: மாத்ருநாச யோகா:
17.3.25
Astrology: பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்)
16.3.25
Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்!
15.3.25
Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga
14.3.25
Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன்
13.3.25
Astrology: ஆதி யோகம்! Adhi Yoga
12.3.25
Astrology அமலா யோகம்! Amala Yoga
10.3.25
Astrology : அமரக் யோகம்! Amarak Yoga
9.3.25
Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்)
7.3.25
Astrology: அஷ்டலெட்சுமி யோகம்!
5.3.25
Astrology: பழமையான ஜோதிட நூல்கள்
Astrology: பழமையான ஜோதிட நூல்கள்
காத்திருந்த அனைவருக்கும் வாத்தியாரின்
கனிவான வணக்கம். நன்றி!
மீண்டும் பாடங்களைத் துவங்குவோம்!
----------------------------------------------------
நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில்
சில ஆசிரியர்கள் பாடநூலை (Text Book) வைத்துப் பாடம் நடத்துவார்கள்.
பாடங்களுக்கு மற்றும் செய்யுள்களுக்கு அவர்கள் சொல்கின்ற விளக்கங்களைக் குறித்துக்
கொள்ளச் சொல்வார்கள். உரை நூல்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் சில ஆசிரியர்கள் உரைநூல்களைப் படிக்கச் சொல்லி விடுவார்கள். அப்போதெல்லாம் கோனார் நோட்ஸ் என்னும் உரைநூல்கள் மிகவும் பிரசித்தம்.
ஆனால் என்னதான் அல்லது எதைத்தான் படித்தாலும், திறமையுள்ள ஆசிரியர் சிறப்பாக விளக்கம் சொல்லி நடத்தும் பாடங்கள் அப்படியே மண்டைக்குள் போய் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டுவிடும். அதற்கு ஈடு இணை கிடையவே கிடையாது.
காலம் காலமாக பல உரையாசிரியர்கள் எழுதி
வைத்த ஜோதிட நூல்கள்தான் நமக்குக் கிடைத்துள்ளன. அவர்களின் பணி போற்றுதலுக்கு
உரியது.
பனை ஓலை ஏடுகளில் இருந்தவை அச்சுத்
தொழில் வந்த பிறகுதான் புத்தகங்களாக வெளிவந்து பரவலாகப் பலருக்கும் கிடைக்கத்
துவங்கியது.
அதிலும் குமாரசுவாமியம், கேரள மணிகண்ட ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம் போன்ற நூல்களை அப்படியே அவற்றில் உள்ள செய்யுள் வடிவிலேயே வெளியிட்டார்கள். படிப்பவனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறையாகிவிடும். அத்தனை கடினமான தமிழ்
இருந்தாலும் தமிழில் பாண்டித்யம் உள்ளவர்கள் அவற்றைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம்.
உங்கள் பயன்பாட்டிற்காக சில முக்கிய
ஜோதிட நூல்களின் பெயர்களைத் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.
----------------------------------------------------------------------------
ஜோதிட மூல நூல்கள் சிலவற்றின் பெயர்கள் - எழுதியவருடைய பெயருடன் உள்ளது!
நூலின் பெயர் - ஆசிரியர்
1.பிருஹத் பராசர ஹோரா - பராசர மகரிஷி
2.பிருஹத் ஜாதகம் - வராஹமிஹிரர்
3.உத்தர காலமிர்தம் - மகாகவி காளிதாசர்
4.சாராவளி - கல்யாண வர்மர்
5.பலதீபிகை - மந்திரேஸ்வரர்
6.ஸ்ரீபதி பத்ததி - ஸ்ரீபதி
7.ஜாதகலங்க்காரம் - கீரணூர் நடராஜர்
8.குமாரசுவாமியம் - குமாரசுவாமி தேசிகர்
9.கெளசிக சிந்தாமணி - கெளசிக மகரிஷி
10.ஜாதக கர்க ஹோரை - கர்க மகரிஷி
11.ஜாதக பாரிஜாதம் - வேதாந்த தேசிகர்
சர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர்
12.சுகர் பெருநாடி - டி.எஸ்.நாராயணஸ்வாமி
13.சுந்தர சேகரம் - அய்யாசாமி பிள்ளை
14.சூடாமணி உள்ளமுடையன் - திருக்கோட்டி
நம்பி
15.ஜோதிட ஆசான் - மா. தெய்வசிகாமணி
16.ஜோதிட கடலகராதி - நா. அரங்கசாமி பிள்ளை
17.ஜோதிட பேரகராதி - எஸ்.கூடலிங்கம்
பிள்ளை
18.வீமேசுவர உள்ளமுடையான் - இராமலிங்க
குருக்கள்
19.பெரிய வருசாதி நூல் - மார்க்கலிங்க
ஜோதிடர்
20.ஹோரா சாரம் - ஸ்ரீ பிருதுயஸ்
21.மங்களேசுவரியம் - .வைத்தியலிங்க
ஆசாரியார்
22.ஜீனேந்திர மாலை - உபேந்திராச்சரியார்
23.காலச்சக்கரம் - தில்லை நாயகப் புலவர்
இவைகளில் சில இணையத்தில் கிடைக்கும். அதே பெயரில் ஆங்கிலத்திலும் கிடைக்கும். ஆங்கிலத்தில் படிக்கும்போது கடின ஆங்கிலம் இலகுவான ஆங்கிலம் என்கின்ற பேதம் இருக்காது. அதை மனதில் கொள்ளுங்கள்1
அன்புடன்
வாத்தியார்
=====================================================