15.11.24

Astrology: மேஷலக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள்

மேஷலக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள்

1
இந்த லக்கினத்திற்கு அரச கிரகங்களான சூரியனும் சந்திரனும் சேர்க்கையிலோ அல்லது பார்வையிலோ ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொண்டிருந்தால், அவர்களால் ஜாதகனுக்கு ராஜ்யோகங்கள் உண்டாகும். அந்த அமைப்பு கேந்திர திரிகோணங்களில் இருந்தால் முழுப் பயனையும் தரும். வேறு இடங்களில் இருந்தாலும், அல்லது இருவரில் ஒருவர் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலும் கிடைக்கும் பலன்களின் அளவு குறையும்

2
குருவும் சனீஷ்வரனும் சேர்க்கை அல்லது பார்வையில் ஒன்றாக இருந்தால், ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் இருக்காது. கிடைக்காது.

3
மேஷ லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டுக்காரன் ஜாதகத்தில் 12ல் அமர்ந்திருந்தால், அது இந்த லக்கினத்திற்கு மட்டும் உரிய விஷேச அமைப்பு. அதாவது இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரன் தன்னுடைய வீட்டிற்கு பதினொன்றில் அமர்ந்திருக்கும் அமைப்பு. அது சுக்கிரனுக்கு உச்ச வீட்டு. அதை மனதில் வையுங்கள். தனகாரகன் உச்சம் பெற்று தன் வீட்டிற்குப் பதினொன்றில் அமர்ந்தால் பணம் கொட்டாதா? ஜாத்கன் செல்வந்தனாக உருவெடுப்பான்.

4
இந்த லக்கின ஜாதகருக்கு சுக்கிரன்தான் முதல்நிலை மாரகன. மாரகன் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? மரணத்தைக் கொடுப்பவன் என்று பொருள்!
அவன்தான் இரண்டு மற்றும் ஏழாம் இடங்களுக்கு உரியவன். அதனால் அவனுக்கு அந்தப் பதவி!

5
மகரத்தில் குரு பகவான் நீசமாகி அமர்ந்திருந்தால், அவனும் மாரகத்தைக் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றவன். தன்னுடைய தசா புத்திகளில் அதைச் செய்யலாம்

6
மேஷ லக்கின ஜாதகனுக்கு அம்மை நோய் வந்து உபத்திரவம் செய்யலாம். அதேபோல் அடிக்கடி உடற்காயங்கள் ஏற்பட்டு அவதியுற நேரிடலாம்.

7
மேஷ லக்கின ஜாதகருக்கு, ஜாதகத்தில் செவ்வாயும் புதனும் ஒன்று சேர்ந்திருந்தால், செவ்வாயின் தசாபுத்திகளில் மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது பொது விதி. ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து அது மாறும்!

8
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருப்பது நன்மைகளையும் உண்டாக்கும். அதே சமயம் துன்பங்களையும் உண்டாக்கும்

9
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாய் இரண்டாம் இடமான ரிஷபத்தில் அமர்ந்து உடன் சுக்கிரனும், குருவும் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு பலவிதமான யோகங்களைத் தருவார்கள்.

10
அதே அமைப்பு மிதுனத்தில் இருந்தால், ஜாதகனுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது.

11
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாய் கேந்திர வீடான கடகத்தில் அமர்ந்தால், அங்கே செவ்வாய் நீசம் பெற்றிருப்பார். இருந்தாலும் குரு பகவான் அங்கே வந்து செவ்வாயுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு நீசபங்க ராஜயோகம் உண்டாகும். பலவிதமான நன்மைகள் கிடைக்கும். கடகம் குருவிற்கு உச்ச வீடு. அத்துடன் மேஷ லக்கினத்திற்கு குரு பகவான் பாக்கியாதிபதி ஆகவே அதை மனதில் வையுங்கள்.

12
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாய் சிம்மத்தில் அமர்ந்திருந்தால், அது திரிகோண வீடு. செவ்வாய் தன்னுடைய தசாபுத்திகளில் ஜாதகனுக்குப் பலவிதமான நன்மைகளை வாரி வழங்குவார்

13
இந்த லக்கினகாரர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாயுடன், புதன் சேர்ந்து இருவரும் கன்னி ராசியில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்களும், உடற்காயங்களும் உண்டாகும்

14
செவ்வாய், சுக்கிரனுடன் கூட்டாக துலாம் ராசியில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கு சுய சம்பாத்தியத்தில் அதிகமான சொத்துக்கள் சேரும்

15
செவ்வாய், சூரியன் மற்றும் சுக்கிரனுடன் சேர்ந்து விருச்சிக ராசியில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு அவன் இருக்கும் துறையில் புகழ் உண்டாகும்

16
செவ்வாய், சூரியன் மற்றும் குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் அமர்ந்திருந்தால், சிறப்பான யோகங்கள் உண்டாகும்

17
அதே போல செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனியுடன் சேர்ந்து துலாம் ராசியில் அமர்ந்திருந்தாலும் சிறப்பான யோகங்கள் உண்டாகும் 

18
இந்த லக்கினகாரகளுக்கு, சுக்கிரன் லக்கினத்தில் வந்து அமர்வதோடு, சூரியனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகங்களைக் கொடுப்பார். தனது தசா புத்திகளில் கொடுப்பார்.

19
இந்த லக்கினகாரகளுக்கு சூரியன் (5ற்கு உரியவன்) மற்றும் குரு (9ற்கு உரியவன்) ஆகிய இருவரும் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒருவர் பார்வையில் மற்றவர் இருந்தாலும் யோகங்களைத் தருவார்கள்.

20
ஆனால் சூரியனுடன், சுக்கிரனும் சேர்ந்து, இருவரும் குருவின் பார்வையில் இருந்தால் யோகங்கள் இருக்காது.

21
சூரியன், சுக்கிரன், புதன் மூவரும் கூட்டாக கும்ப ராசியில் இருந்தால் அது அதிர்ஷ்டத்தைத் தரும் கூட்டணியாகும். மூவரும் தங்கள் தசாபுத்திகளில் போட்டி போட்டுக்கொண்டு செல்வத்தைத்தருவார்கள்

22
இந்த லக்கினகாரகளுக்கு, லக்கினத்தில் சூரியனும், கடகத்தில் சந்திரனும் இருக்கும் அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் அமையும். கிடைக்கும்

23
குருவும் சனியும் பரிவர்த்தனையாகி இருந்தால், அது இந்த லக்கினக்காரகளுக்கு தர்ம கர்மா அதிபதி யோகத்தைக் கொடுக்கும். ஜாதகன் பெரும் பொருள் ஈட்டுவதோடு, பல தர்மச் செயல்களையும் செய்து புகழோடும் செல்வாக்கோடும் இருப்பான்

அடுத்த பாடம்: ரிஷப லக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள். எழுதிப் பதிவிட உள்ளேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com