23.9.24

Astrology முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?


Astrology  முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?

ஜாதகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் நீசமாக இருந்தால் என்ன ஆகும்?

காரில் இரண்டு டயர்கள் பஞ்சராக இருந்தால் என்ன ஆகும்?

காருக்காவது யாராவது ஆளைப் பிடித்து பஞ்சர்களை ஒட்ட வைத்துவிடலாம்.

கிரகங்களின் நீசத் தன்மையை எப்படி மாற்றமுடியும்?

முடியாது!

என்ன ஆகும் என்று பார்க்கலாம். 

புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்களில் இரண்டு கிரகங்கள் நீசமானால் ஜாதகத்தில் 4 வீடுகள் அவுட்டாகிவிடும்.

கிரிக்கெட்டில் முதல் ஒவரிலேயே 4 விக்கெட்டுகள் சாய்ந்தால், அந்த டீம் கேப்டனின் மன நிலை எப்படி இருக்கும்? அப்படியாகிவிடும் ஜாதகனின் நிலைமை.

அந்த 5 கிரகங்களும் தலா இரண்டு வீடுகளுக்கு ஓனர்கள் (அதிபதிகள்) அதை நினைவில் வையுங்கள்.

எனக்குத் தெரிந்த மிதுன லக்கின ஜாதகன் ஒருவனின் ஜாதகத்தில் புதனும் நீசம், குருவும் நீசம்

அந்த ஜாதகத்தில் புதனுக்கு இரண்டு வீடுகள் 1. லக்கினம் 2 நான்காம் வீடு (கல்வி, சுக ஸ்தானம்)
அதே ஜாதகத்தில் குருவிற்கு இரண்டு வீடுகள் 1. ஏழாம் வீடு (மனைவி) , 2 பத்தாம் வீடு (தொழில்)

1. லக்கினாதிபதி நீசமானதால் ஆசாமி குணக்கேடான ஆள், துக்கிரிகளோடு நட்பு, எல்லா கெட்ட பழக்கங்களையும் 22 வயதிற்குள் கற்றுக் கொண்டு விட்டான். 
2..நான்காம் வீட்டதிபதி நீசமானதால் தத்தித்தத்தி பள்ளி இறுதியாண்டுவரை படித்தான். அதற்குப் பிறகு படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை
3. பத்தாம் வீட்டுக்காரன் நீசமானதால்,  சரியான வேலை கிடைக்கவில்லை,  தன்னுடைய தந்தையின் அடக்குக் கடையிலேயே வேலை
 பார்த்தான் (எடுபிடி வேலை & காவல் காக்கும் வேலை)
4. ஏழாம் வீட்டுக் காரன் நீசமடைந்ததால், கஷ்டப்பட்டு செய்து வைத்த திருமணத்தின் மூலம் கைக்குக் கிடைத்த பெண் நிலைக்கவில்லை. இவனுடைய அட்டூழியம் தாங்காமல் பிறந்த வீட்டிற்கே அவள் போய்விட்டாள். திரும்பிவர மறுத்துவிட்டாள்

சரி, சூரியனும், சந்திரனும் நீசமானால்?

ஒரு டீம் நல்ல பேட்ஸ்மேன்களே இல்லாமல் ஆடப்போவதைப் போன்றது அது!

சூரியன் தந்தைக்கு உரிய கிரகம் மற்றும் உடல் நலத்திற்கு உரிய கிரகம்
சந்திரன் தாய்க்கு உரிய கிரகம் மற்றும் மனநலத்திற்கு உரிய கிரகம்
அவை இரண்டு நீசமானால் இவை நான்கும் அமையாது. அத்துடன் ஒருவரின் ஜாதகத்தில் அவர்கள் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீடும் ஊற்றிக்கொண்டுவிடும். அதையும் மனதில் வையுங்கள்!

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

1 comment:

  1. பெரும் மதிப்பிற்குரிய குரு அவர்களுக்கு வணக்கம் . நான் இப்போதுதான் படங்களை முதல் வகுப்பிலிருந்து தொடங்கி இருக்கிறேன் . பாடங்கள் அனைத்தும் எளிதாகவும் சுவையாகவும் உள்ளது ! என்ன ஒன்று வகுப்பில் இப்போது தனி ஆளாக உள்ளேன் !!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com