3.10.22

Lesson 51 Lesson on Planetary Association Part 2


Star Lessons

Lesson no 51

New Lessons

பாடம் எண் 51

 

இன்றும் கிரக சேர்க்கைகள் பற்றிய பாடம்! - பகுதி 2 

மொத்தம் உள்ள மூன்று சுப கிரகங்களில் இரண்டு சுப கிரகங்கள் குருவும், சந்திரனும் சம்பந்த படுவதால் ஜாதகனுக்கு ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும் 

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் அந்த அதிர்ஷ்டம் உண்டாகும் 

மிகச்சிறந்த கிரக அமைப்புக்களில் இதுவும் ஒன்று 

என்ன நன்மை? 

பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த அமைப்பு கொடுக்கும். 

இந்த அமைப்பு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா? 

இல்லை! 

அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும். 

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை

பெறாமலும் இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கவும் கூடாது. 

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்? 

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி! 

எப்போது பலன் கிடைக்கும்? 

குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும். 

அன்புடன்

வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com