6.7.22

கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு பற்றி ஒரு பார்வை.- பகுதி 2





கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு பற்றி ஒரு பார்வை.- பகுதி 2

சுப்புடு இந்த பெயர் அவருடைய வாழ்நாட்களில் இணைந்து பயணித்த கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு சிம்ம சொப்பனம்.தலைநகர் டில்லியை வாழ்விடமாக கொண்டிருந்த சுப்புடு அவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத சங்கீத சீசன் சமயம் சென்னை வாசி.இவரின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத ஜாம்பவன்கள் மகாராஜபுரம் சந்தனம்,காருக்குறிச்சி அருணாச்சலம் போன்றவர்கள் சுப்புடு வந்தால் கச்சேரி செய்ய மறுத்தார்கள்.

சென்னை மியூசிக் அகாடமி வாசலில் சுப்புடு நுழைய தடை என போர்டு வைத்தனர்.

சமரசம் இல்லா விமர்சகரான சுப்புடு அவர்கள் முறையான சங்கீதம் கர்றவர் இல்லை.புகழ் பெற்ற கர்நாடக பாடகி T. K. பட்டம்மாளின்  தம்பி. சிறு வயதில் அக்கா வீட்டில் சாதகம் செய்யும் போது மேல் ஸ்தாயியில் குரல் பிசுறு தட்டும் போது 'பட்டு மேலேயே நின்னுட்டுயே இறக்கி விடனுமா?'என்பாராம்.

பலரின் விரோதத்தை சம்பாதித்த சுப்புடு அவர்கள் விமர்சன உலகின் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர்.

இவரின் மூத்த சகோதரர் டில்லி செயலகத்தில் செயலாளர் பணி செய்தவர்.அவர் ஒரு பேட்டியில் 'சுப்புடு வின் குடும்பம் என்றே நாங்கள் அறியப்பட்டோம்,அதில் தான் எங்களுக்கு பெருமை 'என்றார்.
அப்துல் கலாம் ஜனாதிபதி யாக இருந்த போது மிகவும் உடல் நலம் குன்றிய சுப்புடு அவர்களை மாலை நேரம் பார்க்க சென்றார்.சுப்புட்டுவிடம் "உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்"என்று கேட்டார்கள்.சுப்புடு அவர்கள் 'நான் இறந்த உடன் உங்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மஞ்சள் ரோஜா மலர்களை என் மேல் வைக்க செய்யுங்கள் " என்றார்.

அன்று இரவு அவரின் மரண செய்தி ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிக்க பட்டதும்.மஞ்சள் ரோஜாக்களை அனுப்பி வைத்தார் மறைந்த கலாம் அய்யா.
சுப்புடு அவர்கள் எப்போதும் சொல்வது"இசையை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு, இசைத்தவனின் தனி மனிதத்தை விமர்சிப்பது நம் மன நோய்"
ஆம் படைப்பை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு. படைத்தவனை விமர்சிப்பது நாம் அறிவிலிகள் என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்.
---------------------------------------
Post 2

31/03/2022, 17:40 - +91 94866 93630: நெஞ்சம் மறப்பதில்லை(1963) 

நவம்பர் மாதம் டில்லியில் 9 வயது சிறுமி ஷாந்தா தேவி தனது பூர்வ ஜென்மத்தை ஞாபகம் வைத்திருப்பதாகவும் . தான் மதுராவில் வசித்ததாகவும் ,தனது கணவன் யார் என்றும் , தனக்கு ஒரு குழந்தை இருந்தாதகவும் கூறினார் . இதை நம்பவில்லை என்றாலும்,  இது உண்மையா இருக்க கூடுமோ என்று மதுரா சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ….

ஆம் …. ஷாந்தா தேவி கூறியது யாவும் நிஜமே !!! அந்த கணவனும் உயிரோடு இருந்தார் அவரிடம் விசாரித்த போது அனைத்துமே உண்மை என்று நிரூபணமானது .

இந்த செய்தியை கதைக்களமாக கொண்டு இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய திரைப்படமே “நெஞ்சம் மறப்பதில்லை”

 “பூர்வ ஜென்மத்தில் சேர முடியாமல் இறக்கின்ற காதலர்கள் ..மறு ஜென்மத்தில் சேர்ந்தார்களா ?

தமிழ் சினிமா வரலாற்றில் வழக்கமான கதை களத்தில் இருந்து சற்றே மாறுபட்ட “திகில்”களம் என்றே சொல்ல வேண்டும். 

Black & White காலத்திலேயே பூர்வ ஜென்மம் / மறு ஜென்ம நிகழ்வின் வேறுபாடுகளை மிக தத்ருபமாக அமைத்திருக்கும் Art Direction .

இன்னமும் அனைவருக்கும் “நெஞ்சம் மறப்பதில்லை” பாட்டை தனிமையில் கேட்க்கும்போது ஒரு அமானுஷ்ய உணர்வே வரக்கூடும் .

இத்திரைப்படத்தில் Special Effects அபாரமாக அமைந்திருக்கும் . இந்த effectsக்கு சொந்தகாரர் வேற யாருமில்லை நம்ம வெள்ளியங்கிரி Uncle : “மீசை” முருகேசன் தான் . இவரது விசேஷமே சின்ன சின்ன junk வைத்து Effects அமைப்பது தான் .

இந்த திரைப்படத்தில் வில்லனாக கலக்கி இருப்பவர் M.N.நம்பியார் அவர்கள். பூர்வ ஜென்மத்தில் ஜமீன்தாராக வும் , Climax Twist-ல் வயோதிரகாகவும் பயமுறுத்தி இருப்பார் .

எத்தனையோ தமிழ் சினிமாக்கள் Re-Incarnation-ஐ மைய்யமாக வைத்து வந்துள்ளது எனினும் இந்த சினிமா அவற்றுக்கெல்லாம் முன்னோடி தான் …

இத்திரைப்டம் பார்த்த பிறகு கொஞ்ச நேரம் அனைவரின் காதிலும் கீழ் கொடுக்கப் பட்ட பாடல் கேட்டு கொண்டே இருக்கும் ..


சேதுராமன் லக்ஷ்மணன்.

--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com