14.4.22

வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!



வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

இனிய தமிழ் புத்தாண்டு சுபகிருது வருட வாழ்த்துக்கள்.

சுபகிருது வருடம் 2022 முதல் 2023*

🍏இடைகாட்டு சித்தரின் சுபகிருது வருட வெண்பா:

🍒சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமரம் விலைகுறையு மான்சாம் - சுபமாகும்
நாடெங்கும் மாரிமிகு நல்விளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்

🥝விளக்கம்: 
🍉சுபகிருது ஆண்டில் சோழ நாட்டில் பல பொருட்கள் வீணாகும். மண் பண்டங்கள் விலை குறைந்திடும். நல்ல மழை பெய்து விளைச்சல் பெருகும். மழையால் பாதிப்பு இவ்வாண்டு இருக்காது.

🌈சுபகிருது வருட பிறக்கும் நாள் விபரம்:
நாள் : 14.04.2022 வியாழக்கிழமை
நேரம் : காலை 08:48 (+5.30)

🍇🍐 சித்திரை பிறப்பிற்கு முதல் நாளன்று வீட்டை சுத்தம் செய்து, வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும். வீட்டு வாசலின் கதவுகளில் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். 

🍏🍍சுவாமி அறையில் கண்ணாடி மற்றும் மங்கள பொருட்களும் பழங்கள் காய்கறிகளை வைத்து புத்தாண்டு பிறந்ததும் மங்கள பொருட்களில் கண் விழிக்க சிறந்த பலன்களை தரும். 

🍇🫒பின்னர், தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு ஆகிய பதினாறு வகையான சமித்துகளால் காய்ச்சப்படும் மருத்து நீரை ஆலயங்களில் பெற்று தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. 

🌲🍒நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

🥝🍉சித்திரை அன்று அறுவகையான சுவை கொண்ட உணவுகள் தயாரித்து பகிர்ந்து உண்பது இந்துக்களின் மரபாகின்றன.

🍐🍒 சுபகிருது_புதுவருட நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது என்று ஒரு விளக்கம்.

🥝🚩1.ராஜா - சனி
சுபகிருது சித்திரைக்கு முன்னர் வரும் பிலவ வருட பங்குனி மாதம் சுக்கில பட்ச பிரதமை வந்த வாராதிபதி ராஜா வாக கருதப்படுவார். பிலவ வருடத்தின் பங்குனி சுக்கில பிரதமை 2022.4.02 ம் திகதி சனிக்கிழமை வந்துள்ளது. இதனால் சனி பகவானே சுபகிருது வருடத்தின் ராஜாவாக கருதப்படுகிறார். சனி ஆட்சியாகி நிற்பதால் இவ்வாண்டு நீதி துறை, சட்டம் சிறக்கும். மக்களாட்சி உண்டாகும். அநீதிக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும். 

🥝🍇2.மந்திரி - குரு
மேஷத்தில் சூரியன் புகும் போது அதாவது சித்திரை மாதம் உதயமாகும் நாளின் அதிபதி மந்திரி ஆவார். 2022.04.14ம் திகதி வியாழக்கிழமை காலை 8:48 மணியளவில் மேஷத்தில் சூரியன் புகுக உள்ளார். 

🍏🍋3.சேனாதிபதி - புதன்
சூரியன் என்று சிம்மத்திற்கு அதாவது ஆவணி மாதம் எந்த வாரத்தில் வருகிறதோ அதன் அதிபதி சேனாதிபதியாகும். ஆவணி மாதம் 17.8.2022 அன்று புதன்கிழமை சிம்மத்திற்கு பிரயாணிக்கிறார்.

🍒🥝4.அர்க்காதிபதி - புதன்
சூரியன் மிதுனத்தில் புகும் நாள் அதாவது ஆனி மாதம் பிறக்கும் வாரத்தின் அதிபதி அர்க்காதிபதி ஆகும். விலைவாசிகளை அறிய உதவும். 15.06.2022 புதன்கிழமை மிதுனத்தில் நுழைகிறார். 

🍍🍐5.ஸஸ்யாதிபதி - சனி
கடகத்திற்கு சூரியன் பிரவேசிக்கும் நாளின் அதிபதி அதாவது ஆடி மாதத்தின் ஆரம்ப நாளின் அதிபதி ஸஸ்யாதிபதி ஆவார். பயிர் விளைச்சலை சொல்லுவார். 16.07.2022 சனிக்கிழமை நள்ளிரவு 11:10க்கு சூரியன் கடகத்தை அடைகிறார். 

🍐🍒6.இராஸாதிபதி - சந்திரன்
சூரியன் துலாமை அடையும் நாள் அதாவது. ஐப்பசி மாதம் பிறக்கும் வாராதிபதி இராஸாதிபதி ஆவார். அறுவகை சுவை கொண்ட பொருட்களின் விளைச்சல் மற்றும் விலைவாசி பற்றி சொல்லும். 17.10.2022 திங்கட்கிழமை அன்று இரவு 7.30 க்கு மேல் சூரியன் துலாமை அடைகிறார். 

🥝🍒7.தான்யாதிபதி - சுக்கிரன்
சூரியன் தனுசில் பிரவேசிக்கும் மார்கழி பிறக்கும் நாளின் அதிபதி தான்யாதிபதி ஆகும். 16.12.2022 வெள்ளிக்கிழமை தனுசிற்கு பிரவேசிக்கிறார். 

🍒🥝8.மேகாதிபதி - புதன்
சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரயாணிக்கும் நாளின் அதிபதி மேகாதிபதியாகும். திருவாதிரை மிதுன ராசியில் உள்ள நட்சத்திரம். அதாவது ஆனி மாதம் தான் சூரியன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு வருவார். 22.06.2022 புதன்கிழமை அதிகாலை 11:50க்கு மேல்  திருவாதிரை நட்சத்திரத்தை அடைகிறார். 

🍐🍒9.நீரஸாதிபதி - சனி 
சூரியன் மகரத்தில் நுழையும் நாளின் அதிபதி. தை மாதம் பிறக்கும் நாளின் அதிபதி நீரஸாதிபதி ஆகும். நவரத்தின பயன்பாட்டை சொல்லும். 14.01.2023 சனிக்கிழமை அன்று இரவு 8:50 மணிக்கு மேல் சூரியன் மகரத்தில் நுழைகிறார்.

🍉🫒10. பசுநாயக்கர் - கோபாலன்

இவ்வாண்டின் ராஜாவான சனி ஸாஸ்யதிபதி, நீராஸாதிபதி என மூன்று பதவிகளை வகின்றார்.

🍍மந்திரியாக குருவும்,

🍍சேனாதிபதி புதனே அர்க்காதிபதி மேகாதிபதியாகவும் உள்ளார்.

🍍இராஸாதிபதியாக சந்திரனும், 

🍍தான்யாதிபதியாக சுக்கிரனும் உள்ளார். 

🕉️சுபகிருது_வருடத்தின்_பலன்கள். 

✡️சித்திரை வருட லக்னமாக ரிஷபம் அமைந்து லக்னாதிபதி பத்தில் செவ்வாயுடன் நிற்பதால் சுய தொழில் விருத்தியாகும். விளைச்சல் நன்றாக இருக்கும். ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தங்க சுரங்கம் மற்றும் புதையல்கள் வெளியே வரும். மக்களுக்கு வருமானம் உயர்வும் உண்டாகும். கலைஞர்கள் முன்னேற்றம் உண்டாகும். உஷ்ண நோய் உண்டாகும். குருதி சோகை சார்ந்த நோய் ஒருவகை வைரஸ் மூலம் பரவ வாய்ப்புள்ளது. 

✡️ராஜாவாக சனி இருப்பதால் அந்நிய நாட்டினரின் தலையீடுகள் உள்நாட்டில் உண்டாகும். கூலி உழைப்பாளர்கள், கீழ் நிலையில் உள்ள மக்கள், பணியாட்கள் சக்தி கூடும். அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் பலம் கூடும். மதமாற்றம் அடைவோருக்கு பாதிப்பு உண்டாகும். 
 
✡️மந்திரி குரு ஆவதால், தங்க புதையல் கிடைக்கும். ஆன்மீகம் விருத்தியாகும். நாடெங்கும் நீதியும் சட்டமும் விருத்தியாகும். போதை பொருட்கள் வியாபாரம் பண்ணுபவர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். உலக அமைதி உண்டாகும். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். யாத்திரைகள் பெருகும்
---------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------.
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com