4.4.22

கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு!!!!


கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு!!!! 

சுப்புடு இந்த பெயர் அவருடைய வாழ்நாட்களில் இணைந்து பயணித்த கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு சிம்ம சொப்பனம்.தலைநகர் டில்லியை வாழ்விடமாக கொண்டிருந்த சுப்புடு அவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத சங்கீத சீசன் சமயம் சென்னை வாசி.இவரின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத ஜாம்பவன்கள் மகாராஜபுரம் சந்தனம்,காருக்குறிச்சி அருணாச்சலம் போன்றவர்கள் சுப்புடு வந்தால் கச்சேரி செய்ய மறுத்தார்கள்.

சென்னை மியூசிக் அகாடமி வாசலில் சுப்புடு நுழைய தடை என போர்டு வைத்தனர்.

சமரசம் இல்லா விமர்சகரான சுப்புடு அவர்கள் முறையான சங்கீதம் கர்றவர் இல்லை.புகழ் பெற்ற கர்நாடக பாடகி T. K. பட்டம்மாளின்  தம்பி. சிறு வயதில் அக்கா வீட்டில் சாதகம் செய்யும் போது மேல் ஸ்தாயியில் குரல் பிசுறு தட்டும் போது 'பட்டு மேலேயே நின்னுட்டுயே இறக்கி விடனுமா?'என்பாராம்.

பலரின் விரோதத்தை சம்பாதித்த சுப்புடு அவர்கள் விமர்சன உலகின் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர்.

இவரின் மூத்த சகோதரர் டில்லி செயலகத்தில் செயலாளர் பணி செய்தவர்.அவர் ஒரு பேட்டியில் 'சுப்புடு வின் குடும்பம் என்றே நாங்கள் அறியப்பட்டோம்,அதில் தான் எங்களுக்கு பெருமை 'என்றார்.
அப்துல் கலாம் ஜனாதிபதி யாக இருந்த போது மிகவும் உடல் நலம் குன்றிய சுப்புடு அவர்களை மாலை நேரம் பார்க்க சென்றார்.சுப்புட்டுவிடம் "உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்"என்று கேட்டார்கள்.சுப்புடு அவர்கள் 'நான் இறந்த உடன் உங்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மஞ்சள் ரோஜா மலர்களை என் மேல் வைக்க செய்யுங்கள் " என்றார்.

அன்று இரவு அவரின் மரண செய்தி ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிக்க பட்டதும்.மஞ்சள் ரோஜாக்களை அனுப்பி வைத்தார் மறைந்த கலாம் அய்யா.

சுப்புடு அவர்கள் எப்போதும் சொல்வது"இசையை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு, இசைத்தவனின் தனி மனிதத்தை விமர்சிப்பது நம் மன நோய்"
ஆம் படைப்பை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு. படைத்தவனை விமர்சிப்பது நாம் அறிவிலிகள் என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்.

சேதுராமன் லக்ஷ்மணன்.

--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com