Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள் பகுதி 12 புதிருக்கான விடை!!!!
ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் வருத்தப்படும்படி இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார் (அல்ப ஆயுள் என்று வைத்துக் கொள்ளுங்கள்)
ஜாதகப்படி அதற்கு (இளம் வயதிலேயே இறந்ததற்கு) என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!! என்று கேட்டிருந்தேன்
சரியான விடை:
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் சிக்கியதோடு. பாபகத்தாரி யோகத்திலும் சிக்கி கெட்டுப்போய் உள்ளார். ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.
இது அல்ப ஆயுசு ஜாதகம். அல்ப ஆயுசிற்கான எல்லா அம்சங்களும் ஜாதகத்தில் உள்ளன.
1. இரண்டு கேந்திரங்களில் தீய கிரகங்கள். 4ல் சனி, 7ல் செவ்வாய்.
2. லக்கினாதிபதியைவிட சனீஷ்வரன் வலுவாக (strong) உள்ளான்
3. சனியின் பார்வை லக்கினத்தின் மேல், அத்துடன் லக்கினாதிபதியின் மேல். சனி உச்சம் பெற்றுள்ளான்
4. செவ்வாயின் பார்வையும் லக்கினத்தின் மேல்.
5. எந்த சுபகிரகமும் கை கொடுத்து உதவக்கூடிய நிலையில் இல்லை. சந்திரன், குரு, சுக்கிரன், புதன் என்று நான்கு சுபக்கிரகங்களும் ஆறாம் வீட்டில் மொத்தமாக சிக்கிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அவை அனைத்திற்கும் பாபகர்த்தாரி யோகம் வேறு.
ஆகவே ஜாதகர் அல்ப ஆயுளில் போய்ச் சேர்ந்து விட்டார் (இறைவனடிக்குத்தான்)
புதிருக்கான பதிலை பல அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com