3.9.21

Astrology ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வித்தை!!!!


Astrology ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வித்தை!!!!

Old Lesson Posted again for your use From Classroom2012 Posted on 29.2.2012

Lesson No.1

பழைய பாடம். உங்கள் பயன் பாட்டிற்காக மீண்டும் பதிவிடப் பெறுகிறது
பயிற்சிப் பாடம் எண் ஒன்று! (Practical Lesson No.1)

ஒரு ஜாதகத்தை அதன் பிறப்பு விவரம் இல்லாமல் கொடுக்கப்படும்போது, கிரகங்களை வைத்து, ஜாதகனின் பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதுதான் முதல் பயிற்சி

சமயங்களில் பிறந்ததேதியுடன் பொய்யான ஜாதகத்தை அல்லது தவறான ஜாதகத்தை ஒருவர் கொடுத்தால், அதைக் கண்டுபிடிப்பதற்கு இந்த உபாயம் உதவும்

கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஜாதகரின் பிறந்த தேதி என்ன?

1. ஜாதகத்தில், சனி, ராகு, குரு ஆகிய மூன்று கோள்களின் நிலையை வைத்து ஒரு ஜாதகரின் பிறந்த வருடத்தைச் சொல்லிவிடலாம். 2. சூரியன் இருக்கும் இடத்தைவைத்து பிறந்த மாதத்தையும், சந்திரனின் நிலையை வைத்து பிறந்த நாளையும் சொல்லிவிடலாம்.(ஜாதகரின் நட்சத்திரம் தெரிந்தால் சரியான தேதி கிடைக்கும். இல்லையென்றால் ஒரு நாள் வித்தியாசப்படும்)

அதற்கு அக்கோள்களின் இன்றைய நிலை தெரிய வேண்டும்.

ஒரு உதாரணத் தேதியில் - அதாவது 3.3.2010 அன்று  முக்கியமான 3 கிரகங்களின் நிலை:

சனி கன்னி ராசியில் (158.37 பாகைகளில்)
ராகு தனுசில் (264.23 பாகைகளில்)
குரு கும்பத்தில் (316. 23 பாகைகளில்)

பாகைகள் முக்கியமில்லை. ராசிகள் மட்டும் தெரிந்தால் போதும்.

நீங்கள் அனைவருக்கும் ஜோதிட மென்பொருள் ஒன்றை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது அதைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான விவரங்களை அதில் எடுத்துக் கொள்ளலாம்.

மேலே உள்ள கிரக நிலையை நானும் அவ்வாறு எடுத்துத்தான் உங்களுக்கு அளித்துள்ளேன்
---------------------------------------------------------------------
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சனி கடகத்தில் இருக்கிறது. இன்றையத்தேதியில் கன்னி ராசியில் இருக்கும் சனி கடகராசியின் எல்லையான 120 பாகைகளை விட்டு 40 பாகைகள் கடந்து வந்துள்ளது. சனி மதம் ஒரு பாகையைக் கடக்கும் (30 வருடம் x 12 மாதங்கள் = 360 மாதங்கள் வகுத்தல் 360 பாகைகள் = மாதம் ஒரு பாகை. அதாவது ஒரு degree)

அன்றையத் தேதியில் இருந்து (உத்தேசமாக) கடந்துவந்த 40 பாகைகளுக்கு 40 மாதங்களைக் கழித்துக்கொள்ளுங்கள். சனி கடகத்தில் இருந்த வருடம் கிடைக்கும். 4.3.2010 கழித்தால் 40 மாதங்கள் = 4.11.2006. அத்துடன் குரு நிலையைப் பாருங்கள். குரு கும்பத்திற்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது அதற்கும் இந்த 40 மாதக்கணக்கில் கழித்தால் மூன்று ராசிகளைப் பின் தள்ளிவிட்டு குரு துலா ராசியில் வந்து நிற்கும்
ஆகவே ஜாதகர் அதற்கு 30 ஆண்டுகள் முன்பாகப் பிறந்தவர். 

அதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் குருவின் நிலைமை சரியாக வராது ( இரண்டரை சுற்றில் அவர் ரிஷபத்தில் இருப்பார்) ஆகவே ஜாதகர் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். 

குரு வருடத்திற்கு ஒரு ராசி அதை மனதில் வைத்துக்கொண்டு, கொடுக்கப்பட்ட ஜாதகத்தில், உத்தேசக்கணக்கிலேயே ஜாதகர் 1948ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது தெரிய வரும். 

ராகு பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றை முடிக்கும் என்பதால், ஜாதகத்தில் உள்ள ராகுவின் நிலை ஜாதகரின் பிறந்த வருடத்தைக் கண்டு பிடிக்க சனியுடன் சேர்ந்து உதவும்.

சூரியனின் நிலையை வைத்து மாசி மாதத்தில் ( பிப்ரவரி 14 முதல் மார்ச் 14ற்குள் பிறந்தவர்) என்பது தெரியும்.
சூரியன் மேஷத்தில் சித்திரை மாதத்தை வைத்து தன்னுடைய ஓட்டத்தைத் துவக்குவதால் மாதம் ஒரு ராசி வீதம் கும்பராசிக்கு மாசி மாதம் வந்து சேரும். இந்தக் கணக்கெல்லாம் பழக்கத்தில் மனதில் நிற்கும் பார்த்தவுடன் சொல்லத் தோன்றும்.
----------------------------------------------------------
சனி:
2010ல் - கன்னிராசி
1980ல் - கன்னி ராசி
1951ல் -  கன்னி ராசி
1921ல் -  கன்னி ராசி

நவம்பர் 2006ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1976ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1947ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1917ல்  சனி - கடக ராசியில்

சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 29.5  ஆண்டுகள். ஆகவே இரண்டு சுழற்சிகளுக்கு 59 ஆண்டுகளைத்தான் கழிக்க வேண்டும்

குரு
2010ல் - கும்ப ராசி:  2008ல் தனூர் ராசி
1998ல் - கும்ப ராசி;  1996ல் தனூர் ராசி             
1986ல் - கும்ப ராசி;  1984ல் தனூர் ராசி
1974ல் - கும்ப ராசி;  1972ல் தனூர் ராசி
1962ல் - கும்ப ராசி;  1960ல் தனூர் ராசி
1950ல் - கும்ப ராசி;  1948ல் தனூர் ராசி

மேற்கண்டவாறு ஒரு காகிதத்தில் குறித்துப்பார்த்தால் ஜாதகர் 1948ல் பிறந்தவர் என்பது தெரியவரும்
----------------------------------------------------------------
இன்னொரு குறுக்கு வழி உள்ளது. நமக்குத்தான் குறுக்குவழி என்றால் மிகவும் பிடிக்குமே:-)))

கணினி மென்பொருளில் உத்தேசமாக இன்றையத்தேதிக்கு ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இதே தேதிக்கு ஒன்று, அதற்கு 29 ஆண்டுகளுக்கு  முன்பாக இதே தேதிக்கு ஒன்று, என்று மூன்று ஜாதகப் பிரதிகளை எடுத்துப்பார்த்தால், சனி மற்றும், குருவின் நிலையை வைத்து ஜாதகரின் பிறந்த ஆண்டு மற்றும் மாதத்துடனனான கிரகநிலை (ஜாதகம்) கிடைத்துவிடும். ஜாதகரின் நட்சத்திரத்தைவைத்து ஃபைன் டியூனிங் செய்தால் தேதியும் கிடைத்துவிடும்.

இதுதான் ஜாதகத்தைவைத்து, பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாகும்!
-----------------------------------------------------------------
எனக்கு இன்னும் ஒரு சுலபமான வழி உள்ளது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்கள் உள்ளன 1926  முதல் 2000 வரை உள்ள ஆண்டுகளுக்கானது அதுபோல திரு ராமன் அவர்களின் 100 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கப் புத்தகமும் உள்ளது. 

சனியை வைத்து வருடத்தையும், சூரியனை வைத்து மாதத்தையும் கண்டுபிடித்த அடுத்த நொடி, பஞ்சாங்கத்தில் உள்ள அதற்கான பக்கத்தைப் பார்த்தால் போதும். (மாதம் ஒரு பக்கம்) எல்லாம் துள்ளியமாகத் தெரியவரும். என் சேகரிப்பில் அவை அனைத்தும் உள்ளன!

மற்றவை அடுத்த பாடத்தில்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com