31.8.21

ஆன்மீகம்: அறுபடை வீடுகள்


ஆன்மீகம்: அறுபடை வீடுகள்

இன்று செவ்வாய்க் கிழமை: முருகனுக்கு உகந்த நாள். முருகனை வழிபட்டால் நமது கஷ்டங்கள் யாவும் தீரும். ஆகவே வழிபடுவோம் வாருங்கள்1111

அறுபடை வீடுகள் என்பவை தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனை வழிபடும் சிறப்பு வழிபாட்டு இடங்கள் ஆகும்.

முருகனின் திருவருளைப் பெற எங்கு சென்று வழிபட வேண்டும் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தி (வழிகாட்டியுள்ளார்) உள்ளார்.

நக்கீரரால் முன்வைக்கப்பட்ட ஆறுதிருத்தலங்கள் ஆற்றுப் படை வீடுகள் என அழைப்பட்டு பின் அறுபடை வீடுகள் என மருவி விட்டன. அறுபடை வீடுகளாவன

1. திருப்பரங்குன்றம்

2. திருச்செந்தூர்

3. பழநி

4. சுவாமி மலை

5. திருத்தணி

6. பழமுதிர்ச்சோலை 

இன்று முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் என்னும் ஸ்தலத்தைப் பார்ப்போம்!!!!



இவ்விடம் முதலாவது படைவீடாகும். இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டுக்கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இவ்விடம் சூரபத்மன் மற்றும் அவனது அரக்க சகோதரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றியதற்காக தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மகள் தேவயானையை முருகப் பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்த இடம் எனக் கருதப்படுகிறது.

ஆறுபடை வீடுகளில் இவ்விடத்தில் தான் முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்கு முருகனுக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அபிசேகங்கள் முருகனின் வேலுக்கு நடத்தப்படுகிறது.

சிவனை நோக்கி தவமிருந்த முருகனுக்கு சிவன் தை பூசத்தில் காட்சியருளினார். எனவே இங்கு தைப்பூசமும், வைகாசி விசாகமும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com