25.8.21

ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்!!!


ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்!!!


மேலே உள்ள ஜாதகம் கிருஷ்ண பரமாத்மாவின் ஜாதகம். என்ன, பகவானுக்குக் கூட ஜாதகமா என்று கருதாதீர்கள். ஜாதகம் என்பது ஜோதிட சாஸ்திரம். ஜோதிடம் என்பது வேத சாஸ்திரத்தின் அங்கம் என்பதால், சாஸ்திரத்தைக் கொடுத்த பகவானே, அதனை ஏற்றுக் கொள்கின்றான் என்பதற்காகத்தான், தனக்கும் ஒரு ஜாதகத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவதரித்து, செயலை முடித்துக் கொள்கின்றான். சரி, நமக்கும் ஜாதகம், பகவானுக்கும் ஜாதகம் என்ன வேறுபாடு? என்று கேட்கலாம்.

வேறுபாடு இருக்கிறது. நம் ஜாதகம் நமக்கு உரிய வினைகளின் அடிப்படையில் நன்மை, தீமை களைத் தர கிரகங்கள் விதிப்படி நிற்கின்றன. ஆனால், பகவான் தன்னுடைய செயல்களைத் தீர்மானித்துக் கொண்டு, அதற்குத் துணையாக இந்த கிரகங்களை ஆணையிட்டு நிற்க வைக்கிறார். கிரகத்தின் வசத்தில் நாம். பகவானின் வசத்தில் கிரகங்கள். இதுவே நுட்பமான வேறுபாடு. ஆன்மிக பக்குவம் உள்ளவர் விஷயத்திலே கிரகங்களின் விளையாட்டு எடுபடுவதில்லை. கிரகங்கள் அவர்களுக்குப் பாதையைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாதை அவர்களுக்கே தெரியும்.

இதோ, கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. பெரியவர்கள் சொல்லுவார்கள். இந்த கிருஷ்ணர் ஜாதகத்தை ஒரு முறை நாம் தியானித்தால், பூஜை அறையில் வைத்து வழிபட்டால், நாம் இனி பிறந்து, நமக்கு ஒரு ஜாதகம் எழுத வேண்டிய அவசியமே ஏற்படாது. இரண்டாவதாக பாண்டவர்களுக்கு எப்படிக் கண்ணன் துணையாக இருந்து காப்பாற்றினானோ, அப்படி நம் ஜாதக தோஷங்களை, கிருஷ்ணர் ஜாதகம் காப்பாற்றித் தரும் என்பதால், அந்த ஜாதகத்தைத் தந்திருக்கிறேன்

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com